உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -5

5 மழைவாசம் சுமந்த மண்வாசம்தனை.. நுகர்ந்த போது உன்னை நினைத்தேன்.. "அர்ச்சனா..." கல்லூரியின் நீண்ட வராண்டாவில் நடந்து ...


5
மழைவாசம் சுமந்த மண்வாசம்தனை..
நுகர்ந்த போது உன்னை நினைத்தேன்..

"அர்ச்சனா..."
கல்லூரியின் நீண்ட வராண்டாவில் நடந்து கொண்டிருந்த அர்ச்சனா நீபாவின் குரல் கேட்டதும் நின்றாள்.. ஓடிவந்து அவளுடன் சேர்ந்து கொண்டாள் நீபா..
"எக்ஸாம் எப்படி எழுதியிருக்க..?"
"அஸ் யூசுவல்.. நீ..?"
"ம்ப்ச்.. சரியா எழுதலை.."
எப்போதும் சொல்லும் பதிலையே அப்போதும் சொன்ன நீபாவின் முதுகில் நான்கு மொத்துக்களை மொத்தினால் என்ன என்ற ஆசை மேலிட்டது அர்ச்சனாவிற்கு..
"ஏண்டி குரங்கே.. ஒழுங்கா படிக்கிறதுக் கென்ன..?" என்று சிடுசிடுத்தாள்..
"விடுடி.. இந்த செமஸ்டர் இல்லைன்னா வார செமஸ்டர்.." வெகு சுலபமாக சொன்னாள் நீபா..
"உன்னையெல்லாம் மாத்தவே முடியாதுடி.."
"தெரியுதில்ல.. அதை எதுக்காக செய்யனும்னு நினைக்கிற..? ஆமா.. காலையில ஏண்டி லேட்டா வந்த..?"
"எக்ஸாம்க்கு கரெக்ட் டயத்துக்கு வந்துட்டேனே.."
"அதுக்கு முன்னாடியே வந்துருவியே.. அதனால கேட்டேன்.."
"ஊரில இருந்து ஒரு கெஸ்ட் வந்திருக்கான்.."
"உங்க வீட்டுக்கா..?"
"ம்ம்ம்.."
"யாருடி..?"
"என் அம்மாவோட அண்ணன் மகனாம்.."
"அப்ப அத்தான்னு சொல்லு..."
நீபா கண்சிமிட்ட.. அர்ச்சனாவுக்கு இவளும் என்ன இப்படியே சொல்கிறாள் என்ற எண்ணம் வந்தது..
"மாமா மகன்னா அத்தான்னுதான் அர்த்தமாகுமா..?" அவள் நீபாவுடன் சண்டைக்குப் போனாள்..
"பின்னே...? அண்ணன்னா அர்த்தமாகும்..?" நியாயம் கேட்டாள் நீபா..
அதுதானே என்று தோன்றிய போது முறைத்துக் கொண்டிருந்த அவனின் திருமுகத்தின் நினைவில் முகம் சுளித்தாள் அர்ச்சனா..
"என்னடி இது.. விளக்கெண்ணையைக் குடித்ததைப் போல முகத்தை வைச்சுக்கற..? அவன் முகம் என்ன அந்த அளவுக்கா சகிக்க முடியாம இருக்கு..?" கவலையுடன் கேட்டாள் நீபா..
"சேச்சே.." அவசரமாக அதை மறுத்த அர்ச்சனா..
"அதெல்லாம் ஆள் பார்க்க அட்டகாசமா.. ஹேண்ட் சம்மாத்தான் இருந்து வைக்கிறான்.." என்று சொல்லி விட்டாள்...
அவ்வளவுதான்... "ஏய்ய்.." என்று கண்களை விரித்த நீபா...
"நானும் உன் வீட்டுக்கு வருகிறேன்.." என்று ஒட்டிக் கொண்டாள்..
"எதுக்குடி..?" அர்ச்சனா அவளைக் கழட்டி விட முயன்றாள்..
"அதெல்லாம் முடியாது.. உன் அத்தானை பார்த்துட்டுத்தான் வேற வேலையை நான் பார்ப்பேன்.." நீபா ஒற்றைக் காலில் நின்றாள்...
"சும்மா.. அத்தான்.. பொத்தான்னு சொல்லி வைக்காதே.. ஹி இஸ் ஜஸ்ட் எ ரிலேடிவ்.. தட்ஸ் ஆல்.. அன்டர்ஸ்டாண்ட்.." அதட்டினாள் அர்ச்சனா..
"தங்கமாப் போச்சு.. உனக்குத்தான் உன் அத்தானை அத்தான்னு கூப்பிடவே பிடிக்கலையே.. அப்ப அவனை நான் பார்க்கக் கூடாதுன்னு ஏண்டி சொல்ற..?" நீபா அதிலேயே நிலையாக நின்றாள்..
"ஏய்ய்.. நீயேண்டி அவனைப் பார்க்கனும்கிற..?"
"நான் பார்த்தா உனக்கு என்ன..?"
"எனக்கு எதுவும் இல்லைதான்.. அதுக்காக என் வீட்டுக்கு வந்திருக்கிற கெஸ்டை பார்வையிட்டுட்டுப் போன்னு உன்னை என் வீட்டுக்கு கூப்பிட்டுக்கிட்டு போகனுமா..? நெவர்.. நீ உன் வீட்டைப் பார்த்து நடையைக் கட்டு.."
நீபாவைத் துரத்தி விட்டு காத்திருந்த காரில் ஏறிய அர்ச்சனா தப்பித்து விட்ட நிம்மதியுடன் 'அப்பாடி' என்று மூச்சு விட்டாள்..
கதிர்வேலனைப் பார்க்க நீபா அதிகப்படியான ஆர்வம் காட்டியதில் அவளுக்கு எரிச்சலாக இருந்தது..
'இவ எதுக்காக இந்த குதி குதிக்கிறா..'
அந்தக் கடுப்புடனே வீட்டுக்குப் போனவளுக்கு வாசலிலேயே அதிர்ச்சி காத்திருந்தது..
அங்கே நீபாவின் கார் நின்றிருந்தது..
"இது நீபாம்மா காரில்ல..?" வியப்புடன் டிரைவர் கேட்டான்..
"அந்தப் பிசாசோட காரேதான்.." பல்லைக் கடித்தபடி சொன்னாள் அர்ச்சனா..
"இப்பத்தானே காலேஜில் இருந்தாங்க.. நமக்கு முன்னாலேயே எப்படி இங்கே வந்தாங்க..?" டிரைவர் ஆச்சரியப்பட்டுப் போனான்...
"ஆகாய வழியில பறந்து வந்திருப்பா.." பற்றியெரிந்த எரிச்சலுடன் சொன்ன அர்ச்சனா வீட்டுக்குள் போனாள்..
அங்கே பத்மாவிடம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள் நீபா..
"அம்மா.." என்ற அர்ச்சனாவின் அழைப்பில் திரும்பிய பத்மா..
"பார்த்தியா.. உன் பிரண்டுக்கு படிப்பு மேல எத்தனை இன்ட்ரெஸ்ட் இருக்குன்னு.." என்று கேட்டு வைத்தாள்..
'இவளுக்கு படிப்பு மேல இன்ட்ரெஸ்டா..? இந்தக் கொடுமையை வேற நான் கேட்கனுமா..?' நொந்தே போனாள் அர்ச்சனா..
"எதனாலம்மா இப்படியொரு முடிவுக்கு வந்தீங்க..?" பொறுக்க முடியாமல் தாயிடம் விளக்கமும் கேட்டு விட்டாள்..
"பின்னே.. சும்மாவா சொல்லுவேன்..? நீயும் இவளும் ஒன்றாய்த்தானே பரிட்சை எழுதினீங்க..?"
"ஒரே ஹாலில் எழுதினோம்.. ஆனா ஒன்னா எழுதலை.."
"என்னவோ ஒன்னு.. நீ பரிட்சை முடிஞ்சதும் மத்த பிரண்ட்ஸ்கிட்ட அரட்டையடிச்சுக்கிட்டு இருந்திருக்க.."
"நான்..? அரட்டை அடிச்சேன்..? அப்படின்னு இவ சொன்னாளா..?"
"ஆமாம் அர்ச்சனா.. பின்னே.. நீ காலேஜீல அடிக்கிற லூட்டியைப் பத்தி எனக்கெப்படித் தெரியும்..?"
"அதுசரி.. அதுக்கும்.. இவளைப் பத்தின உயர்ந்த முடிவுக்கு நீங்க வர்றதுக்கும் என்னம்மா சம்பந்தம்..?"
"இருக்கே.. இவ என்னடான்னா உன்கூட குருப் ஸ்டடி பண்ணனும்னு உனக்கு முன்னாலேயே உன் வீட்டுக்கு வந்து உனக்காக காத்திருக்கான்னா படிப்பு மேல இவளுக்கு இருக்கிற இன்ட்ரெஸ்டைப் பத்தி நான் என்னத்தைச் சொல்ல..?"
புல்லரித்துப் போய் விட்டாள் பத்மா.. அதிகமாக அவள் மெய் சிலிர்த்தால் போர்வை போர்த்தி விட வேண்டிய அவசியம் வந்துவிடும் போலத் தோன்றியதில்.
"நீங்க எதுவும் சொல்ல வேணாம்.." என்று பட்டுக் கத்தரித்தாள் அர்ச்சனா..
"என்னவோ போடி அர்ச்சனா.. நீபாவைப் போல உனக்கு நாலு பிரண்ட்ஸ் இருந்தாப் போதும்.. நீ எங்கேயோ போய் விடுவே.." பத்மா நிம்மதியுடன் சொல்ல..
"நாலு பேர் எதுக்கும்மா..? என்னை எங்கேயோ அனுப்பி வைக்க இவ ஒருத்தி மட்டுமே போதுமே.." என்று பல்லைக் கடித்தாள் அர்ச்சனா...
"ஆண்ட்டி பசிக்குது.. லன்ச்சுக்கு வீட்டுக்குப் போனா படிக்க வர லேட்டாகிரும்ன்னு காலேஜில இருந்து அப்படியே ஓடி வந்திட்டேன்.." வயிற்றைத் தடவினாள் நீபா..
"அடடா.. இந்தப் பெண்ணுக்கு படிப்பு மேல இருக்கிற இன்ட்ரெஸ்டைப் பாரேண்டி அர்ச்சனா.." திரும்பவும் மெய் சிலிர்த்தபடி ராஜாத்தியை அழைத்து சாப்பாட்டு மேஜையை தயார் செய்யச் சொல்லியபடி எழுந்து போய் விட்டாள் பத்மா..
தாயின் தலை மறையும் வரை காத்திருந்த அர்ச்சனா நீபாவின் முதுகில் ஓங்கி ஒரு போடு போட்டாள்.. அவளோ..
"வலிக்குதுடி குரங்கே.." என்றபடி மகிழ்ந்து போய் சிரித்தாள்..
"உனக்கு.. படிப்பு மேல இன்ட்ரெஸ்டா..? நீ எக்ஸாம் எழுதிட்டு வந்திருக்கிற லட்சணத்தை நான் அம்மாகிட்டச் சொல்ல மாட்டேன்கிற தைரியம்தானேடி உனக்கு..?"
"ஏண்டி கோவிச்சுக்கிற..?"
"நீ லன்ச்சை முடிச்சவுடன் என்கூட குருப் ஸ்டடி பண்ணப் போகிறயாக்கும்..? குப்புறப் படுத்து குறட்டை விட்டுத் தூங்குவ.. இது தெரியாம அம்மா உனக்காக உருகுறாங்க..."
"அதப்பத்தியெல்லாம் நீயேண்டி கண்டுக்கிற.. நீ உன் வேலையைப் பாரு.."
"நீ..?"
"என் வேலையைப் பார்க்கிறேன்.."
"எது அது..?"
அது எது என்பதை நீபாவின் விழிகள் சுழன்று ஹால் முழுவதும் துழாவி அர்ச்சனாவுக்கு உணர்த்தின.. அவள் தன் கையிலிருந்த புத்தகப் பையால் நீபாவின் தலையில் ஒரு போடைப் போட்டாள்.. அவர்களை சாப்பிட அழைக்க வந்த பத்மா அதைப் பார்த்து விட்டு..
"ஏண்டி..?" என்று மகளைக் கடிந்து கொண்டாள்..
"பாருங்க ஆண்ட்டி.. சாப்பிடவுடனே படிக்க ஆரம்பிச்சுடலாம்ன்னு சொன்னா இவ குட்டியாத் தூக்கம் போடலாமேங்கிறா.. அது தப்புடி அர்ச்சனான்னு ஒரு வார்த்தைதான் சொன்னேன் ஆண்ட்டி.. அதுக்குப் போய் பையாலேயே வெளுத்துக் கட்டறா.."
நீபா இமைகளைக் கொட்டிக் கொட்டி.. பத்மாவிடம் பொய் புகாரைக் கொடுத்து அர்ச்சனாவின் கடுப்பைக் கிளப்பி விட்டாள்..
"உனக்குத் தூக்கம் வந்தா நீ தூங்கு.. படிக்க நினைக்கிறவளை எதுக்கு அடிக்கற..?" பத்மா நெற்றிக் கண்ணைத் திறந்தாள்..
"ம்மா.. உங்களுக்கு இவளோட சுயரூபம் தெரியாது.." தலையில் அடித்துக் கொண்டாள் அர்ச்சனா..
"சரி.. சரி.. அடிச்சுக்காம சாப்பிட வாங்க.." பத்மா அவர்களை டைனிங் ஹாலின் பக்கமாக தள்ளினாள்...
"நாங்க மட்டுமா ஆண்ட்டி..?" ஏமாற்றத்துடன் கேட்டாள் நீபா..
"அர்ச்சனாவோட அப்பாவுக்கு லன்ச் ஆபிசுக்கே போயிரும்.. அதனால அவரை எதிர்பார்க்காம நீங்க சாப்பிட்டு முடிச்சிருங்க.." என்று பத்மா சொல்லியதில் நீபாவின் முகம் விழுந்து விட்டது...
"உன் அப்பா முன்னாலே உட்கார்ந்து சாப்பிட்டா ஒரு கவளம் சாதமாவது என் தொண்டையில் இறங்குமாடி.. நான் யாரைக் கேட்கிறேன்னு தெரியாம இவங்க பாட்டுக்கு உன் அப்பாவைச் சொல்றாங்களே.." அர்ச்சனாவிடம் குறை பட்டுக் கொண்டாள்...
"நீ என்ன சொல்கிறேன்னு என் அம்மாவுக்கு மட்டும் தெரிஞ்சதுன்னு வை.. உன்னை வீட்டுப் பக்கமே சேர்க்க மாட்டாங்க.." என்றாள் அர்ச்சனா..
முகத்தை தூக்கியபடி டைனிங் ஹாலுக்குப் போன நீபா.. ஏதோ யோசனையாக தட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளுக்கு எதிரே யாரோ அமர்வதைப் போல இருக்கவும் அர்ச்சனாவின் அப்பாதான் ஆபிஸில் சாப்பிடும் சாப்பாட்டை வீட்டில் சாப்பிடுகிறேன் பேர்வழியென்று வந்து விட்டாரோ என்ற பயத்துடன் அலறியடித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் பல்ப் எரிந்தது...
அங்கே அர்ச்சனாவை முறைத்தபடி அமர்ந்திருந்தான் கதிர்வேலன்..
"இவன்தானாடி..?" கிசுகிசுத்தாள் நீபா...
"ஆமாம்... கொஞ்சம் அடக்கியே வாசி... இவன் ஏற்கனெவே மண்டைக்கனம் பிடிச்ச மலையேறி மகாதேவன்.. நீ விடுற ஜொள்ளுமழையைக் கண்டுக்கிட்டா மலையிறங்கவே மாட்டான்.." எச்சரித்தாள் அர்ச்சனா..
என்னதான் அவள் படித்துப் படித்து அடக்கி வாசிக்க சொன்னாலும் நீபா அதைக் காதில் போட்டுக் கொள்வதாகவே இல்லை.. அவள் பாட்டுக்கு நொடிக்கொரு தரம் கதிர்வேலனை பார்வையிட்டபடிதான் இருந்தாள்...
அவன் அதையெல்லாம் விட்டு விட்டான்.. நீபாவைக் கண்காணித்துக் கொண்டிருந்த அர்ச்சனாவையே முறைத்து முறைத்து பார்த்தபடி சாப்பாட்டைக் காலி செய்தான்...
"இவன் எதுக்குடி உன்னை இந்த முறை முறைக்கிறான்..?" சந்தேகம் கேட்டாள் நீபா..
"ஊம்..? சாருக்கு அப்படியொரு வேண்டுதலாம்.." பல்லைக் கடித்தாள் அர்ச்சனா..
"ஒருவேளை இவனுக்கு உன்னைப் பிடிக்கலையோ.." மகா சந்தோசமாக சொன்னாள் நீபா..
"பிடிச்சுத்தான் என்ன ஆகப் போகுது..?" கொலை வெறியுடன் கேட்டாள் அர்ச்சனா..
"ம்ம்ம்.. சும்மாதான் கேட்டேன்.."
"சும்மா இருந்தா இப்படித்தான் சும்மா.. சும்மா கேள்விகள்ளாம் வரும்.. எதையாச்சும் உருப்படியா செய்.. அப்பத்தான் நீயும் உருப்படுவ.. மத்தவங்களையும் உருப்பட விடுவ.."
எரிச்சலுடன் கை கழுவ எழுந்து சென்றவள்.. முறைத்துக் கொண்டிருந்த கதிர்வேலனின் மீது குத்தீட்டி போன்ற வெட்டும் பார்வை வீச்சை அனுப்பி விட்டுத்தான் சென்றாள்..
அவளுக்குப் பின்னாலேயே கை கழுவ வந்த நீபா..
"நீ சொன்னது நிஜம்தாண்டி.. எதைச் சொன்னாலும் நீ சரியாத்தான் சொல்லுவ.." என்று சிலாகித்தாள்...
"நீ பாராட்டினா நிச்சயமா அது வில்லங்கமாத்தான் இருக்கும்... எதைடி சொல்லித் தொலைக்கிற..?" கலவரமானாள் அர்ச்சனா..
"ஆள் பார்க்க அட்டகாசமா.. ஹேண்ட்சம்மாத்தான் இருக்கான்னு சொன்னியே.. அதைத்தான் சொல்றேன்.. நீ சொன்னது நிஜத்திலும் நிஜம்.." ஜொள்ளினாள் நீபா..
"ஏய்ய்.." அர்ச்சனா பதறினாள்..
"அவன் காதில விழுந்து வைக்கப் போகுதுடி.."
"அதெல்லாம் விழுகாது.. ஆமாம்.. இவனைப் போய் அத்தான்னு சொன்னா நீயேண்டி அடிக்க வர்ற..? ஆள் பார்க்க பெர்ஸணல்ட்டியாத்தான இருக்கான்..?"
"அடிதாண்டி வாங்கப் போற.. முதல்ல இந்த இடத்தைக் காலி பண்ணு.. நீ வாயைத் திறந்தாலே எனக்கு பக்கு.. பக்குன்னு இருக்குது.. வாடி அந்தப் பக்கம் போகலாம்..."
"பொறு.. நான் இன்னும் கையைக் கழுவலை.."
"அதைச் சொய்யாம வாஷ் பேசின் குழாயை ஏண்டி திறந்து விட்டிருக்கிற..? தண்ணி வேஸ்டாகுதுங்கிற அறிவு வேணாமா..?"
அர்ச்சனா கடிந்து கொண்டிருந்த போது..
"எனக்கும் வழி விடலாமே.." என்ற கதிர்வேலனின் குரல் கேட்டது..
"அதுக்கென்ன.. ஜென்ட்ஸ் பர்ஸ்ட்.. இல்லேடி அர்ச்சனா.." என்றபடி ஆனந்தமாக அவனுக்கு வழி விட்டு விலகி நின்றாள் நீபா..
"ஆக மொத்தம் நீ கையைக் கழுவவே கூடாதுங்கிற முடிவோட இருக்கிற.." என்று முறைத்தாள் அர்ச்சனா..
அர்ச்சனாவின் முறைப்பை ஒரு மார்க்கமாக பார்த்தபடி கதிர்வேலன் கைகழுவியதில் அர்ச்சனாவுக்கு தூக்கி வாரிப் போட்டது.. அவ்வளவு நேரமும் டைனிங்ஹாலில் வாயில் வைத்த சாதத்தை தொண்டையை விட்டு இறங்க விடாமல் அந்த முறைப்பை முறைத்துக் கொண்டிருந்தவன் இப்படியொரு பார்வையை பார்த்து வைப்பது ஏன் என்ற மர்மம் விளங்காமல் அவள் புருவங்கள் முடிச்சிட்டன...
கையைக் கழுவி முடித்த கதிர்வேலன் நீபாவைப் பார்த்து..
"இன்னைக்குள்ள கை கழுவிருவீங்கள்ல..?" என்ற சந்தேகம் கேட்டு விட்டுச் சென்றதில் அர்ச்சனாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது..
வாயை நாசுக்காக விரல்களால் மறைத்தபடி சிரித்தவளை அவன் நின்று.. நிதானமாக பார்த்து விட்டுத்தான் நகர்ந்தான்.. அவன் பார்வையில் அர்ச்சனாவின் சிரிப்பு நின்று முகம் சிவந்து விட்டது..
'இவன் என்னத்துக்கு இப்படிப் பார்த்து வைக்கிறான்..?'
அவன் அவளுக்குப் புரியாத புதிராக இருந்தான்.. ஹாலுக்குப் போய் கொண்டிருந்தவனை யோசனையுடன் அவள் பார்க்க அவனோ அவளை சட்டென்று திரும்பிப் பார்த்து விட்டான்.. அர்ச்சனா அவசரமாக பார்வையை விலக்கிக் கொண்டாள்.. 'கண்டுக்கிட்டானோ..' உதட்டைக் கடித்தாள்..
அவன் முகத்தில் வந்த குறுஞ்சிரிப்பு அவன் கண்டு கொண்டான் என்பதை அறிவித்தது.. இது எதையும் கண்டு கொள்ளாமல் "சிரிக்கச் சிரிக்கப் பேசறானில்ல.." என்றபடி கையைக் கழுவி முடித்தாள் நீபா..
இவளை என்னதான் செய்வது என்று அவளை முறைத்தாள் அர்ச்சனா...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -5
உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -5
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s320/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s72-c/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/uyirtheneunaaleuyiththene-5.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/uyirtheneunaaleuyiththene-5.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy