உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே.. -8

8 நீ அவள் முகத்தைப் பார்க்காமல்.. என் முகத்தை ஏன் தேடினாய்.. ? அர்ச்சனா அவனை வியப்புடன் பார்த்தாள்.. நீபா அவனிடம் பழக முயன்றதை ...


8
நீ அவள் முகத்தைப் பார்க்காமல்..
என் முகத்தை ஏன் தேடினாய்..?


அர்ச்சனா அவனை வியப்புடன் பார்த்தாள்.. நீபா அவனிடம் பழக முயன்றதை அவன் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்க முடியாது.. அந்த அளவுக்கு அவன்  வார்த்தைப்படி அவன் ஒன்றும் பப்பா அல்ல.. அவன் அவளைக் கவனித்திருக்கிறான்.. அவளின் குணாதிசியத்தை கணித்திருக்கிறான்.. இருந்தும் அவள் பெயரைத் தெரிந்து கொள்வதில் அவனுக்கு ஆர்வமில்லை யென்பதில் அவள் மனம் சிறகடித்தது..
"நான் தோட்டத்துக்கு வருவேன்னு எப்படித் தெரியும்..?" அவள் மனம் குறுகுறுக்கக் கேட்டாள்..
அவள் வருவதற்காக அவன் காத்திருந்ததாகச் சொல்லியதில் அவள் மனதுக்குள் பரவிய உணர்விற்குப் பெயர் தெரியாமல் அவள் தடுமாறினாள்..
"ம்ம்ம்.. நீ வருவேன்னு தெரியும்.. எப்படின்னு கேட்டா அது அப்படித்தான்.. உன் அப்பா இருக்கிற வீட்டுக்குள்ளே இருக்கிறவங்களுக்கு மூச்சு முட்டாமல் இருக்காது.. ஆசுவாசத்துக்கு தோட்டத்துப் பக்கம் வந்துதான ஆகனும்..?"
அவன் நிதானமாக விளக்கம் சொன்னதில் அவளுக்கு சுள்ளென்று கோபம் வந்துவிட்டது..
அது எப்படி அவளிடமே அவளுடைய அப்பாவை அவன் கிண்டல் செய்யலாம்..?
"ஹலோ.. அவர் என்னோட அப்பா.." என்று படபடத்தாள்...
"ம்ம்ம்.. யாரு இல்லைன்னு சொன்னது..? அவர் உன்னோட அப்பா தான்... என்னோட அத்தைக்கு ஹஸ்பெண்ட்தான். அதுக்கு என்னவாம்..?"
'ஏன்.. இவன் அப்பாவை 'மாமா'ன்னு கூப்பிட மாட்டானா..?'
அர்ச்சனாவுக்கு அது பிடிக்கவில்லை.. ஏனோ பிரகாசத்தை அவன் மாமா என்று அழைக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள்.. அத்தோடு.. பிரகாசம் அவனுக்கு மாமாதானே.. மாமாவை 'மாமா' என்று அழைப்பதில் அவனுக்கு என்ன பிரச்னை..?
"அத்தையோட ஹஸ்பெண்ட்டா.. அப்படின்னா..?" இமை கொட்டி அவள் வினவினாள்..
அவன் விழிகளில் தெரிந்த சுவராஸ்யத்தில் அவள் கன்னம் சிவந்தது.. மயக்கும் அந்த மாலைப் பொழுதில் இவன் இப்படி பொருள் விளங்காப் பார்வைகளை அவளுக்கு பரிசளிக்க வேண்டாமே என்று அவள் கன்னி மனம் தவித்துப் போனது..
"அப்படின்னா.. அப்படித்தான்.."
அவன் பேச்சில் அவளுடன் உரையாடுவதில் அவனுக்கு ஏற்பட்டிருக்கும் உல்லாசம் அப்பட்டமாக தெரிந்தது.. அதில் அவள் மனம் இனம் விளங்காத இன்ப வெள்ளத்தில் நீந்திக் கரையேற முடியாமல் தத்தளித்தது..
"அப்படித்தான்னா என்ன அர்த்தம்..? அத்தையோட ஹஸ்பெண்டை எப்படிக் கூப்பிடறதுன்னு உங்க வீட்டில் சொல்லிக் கொடுக்கலையா..? நீங்க ஊருக்கே பாடம் சொல்லிக் கொடுக்கிற ஆளாச்சே.. உங்களுக்கே இது தெரிந்திருக்கனுமே.."
"எது..?"
"அத்தையோட ஹஸ்பெண்ட் நிச்சயமா சித்தப்பா முறையாக மாட்டார்ன்னு.."
"ஷ்யூர்.. ஷ்யூர்.." அவன் ஆமோதித்தான்..
"அவர் சித்தப்பா முறையாகித் தொலைத்தா.. நீ தங்கை முறையாகித் தொலைப்பாயே.. அதை நினைச்சுப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குது.. ஸோ.. நிச்சயமா அவர் எனக்கு சித்தப்பா இல்லை..."
"வேற யாராம்..?"
"என் அத்தை மகளுக்கு அப்பாவாம்.."
என்னதான் ரங்கராட்டினம் சுற்றினாலும் அவன் பிரகாசத்தை மாமா என்று அழைக்க மாட்டான் என்பது புரிந்து விட.. அவள்
"ஏன்..?" என்று விசாரித்தாள்..
"விட்டு விடு.." ஒரே வார்த்தையில் முடித்து விட்டான் கதிர்வேலன்..
அவன் புருவங்களின் சுளிப்பில் அவன் மனதின் போராட்டம் வெளிப்பட்டதில் அவள் மௌனமானாள்.. அவளுடைய அப்பாவின்மீது அவன் கொண்டிருக்கும் துவேசத்தில் அவள் மனம் சிணுங்கியது..
அதை உணர்ந்து கொண்டவனைப் போல அவன் முகம் மாறி பழைய உல்லாசத்திற்கு வந்தது.. புருவங்களை உயர்த்தி லேசாக இமை சிமிட்டினான்.. அவளுக்கு குப்பென்று வியர்த்து வைத்தது..
அதைப் போல அதற்கு முன்பு அவளிடம் யாரும் இமை சிமிட்டிப் பேசியதில்லை.. அவள் அதைப் பற்றி அறியாதவள்.. அதனால் விளைந்த இதமான இம்சையுடன் அவள் கிளர்ந்த மனவுணர்களைக் கட்டுக்குள் கொண்டு வர போராடியவளாக முகம் சிவந்து வேறுதிக்கில் நோக்கினாள்..
"உனக்கு கால் வலிக்கலையா..?" அக்கறையுடன் அவன் வினவினான்...
'எனக்குக் கால்வலித்தால் இவனுக்கென்ன வந்ததாம்..?'
அவள் நினைத்துக் கொண்டிருந்த போதே அங்கிருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்தான்.. அவளையும் அருகில் அமரச் சொன்னான்.. மறுக்க மனமின்றி அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள் அர்ச்சனா..
"அப்ப ஏதோ சொல்ல வந்தியே.. அது என்ன..?" மெதுவான குரலில் கேட்டான்..
"எப்ப..?" கேள்வியுடன் அவனைப் பார்த்தாள் அர்ச்சனா..
"'அப்ப'ன்னா.. உன் அப்பா வந்த சமயத்தில.." அவன் விளக்கம் சொன்னான்...
"அதுவா..?"
அவள் என்ன சொல்ல வந்தாள் என்ற நினைவில் அவளுக்கு மூச்சுத் திணறியது..
அப்போது அந்தக் கேள்வியைக் கேட்பதில் அவளுக்கு எந்தவிதமான சிரமமும் ஏற்படவில்லை.. இப்போதோ 'மனது படக்.. படக்'கென்று அடித்துக் கொள்கிறதே..
"அதுவேதான்.. சொல்லு.. சொல்லு.." அவன் ஊக்கப் படுத்தினான்..
"இல்லை.." அவள் தடுமாறினாள்...
"எது இல்லை..?"
"அது.. வந்து.. வந்து.."
"அதுதான் வந்துட்டயே.. அப்புறமென்ன..?"
"நான் வந்து.."
"நீ வந்து..?"
"உங்க அத்தை மகளாய் இருக்கிறதாலே.."
"அதில எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லையே.. சந்தோசம்தான இருக்கு..?"
"நான் அதைச் சொல்லலை.."
"வேற எதைச் சொன்ன..?"
"நான் உங்க அத்தை மகள்ங்கிற உறவில் இருக்கிறதினாலே தானே நீங்க இப்படியெல்லாம் பிஹேவ் பண்றீங்க..?"
"புரியலை..."
அவன் புருவங்கள் முடிச்சிட்டன.. அவளது அந்த வார்த்தைப்பிரயோகத்தை அவன் ரசிக்கவில்லை-யென்பதை அவன் முகம் பிரதிபலித்தது..
"நான் அப்படியென்ன பிஹேவ் பண்ணிட்டேன்.."
அவன் கேள்வியில் அவனது பார்வைகளையும்.. உல்லாசப் பேச்சுக்களையும்.. இமை சிமிட்டலையும் கோடிட்டுக் காட்ட முடியாமல் அவள் கைகளைப் பிசைந்தாள்.. அதில் அவனது கோபம் மெதுவாக குறைந்தது..
"ஓகே.. நீ எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லிக்கிட்டு இருக்கேன்னு புரியுது.. என்ன சொல்ல நினைக்கறேங்கதை.. நிறுத்தி.. நிதானிச்சு.. தெளிவாச் சொல்லு..."
"அது வந்து.. நான் என்ன சொல்ல வர்றேன்னா.. நான் உங்க அத்தையோட மகளா இருக்கிறதினால தானே நீங்க எக்ஸ்ட்ராவா பேசிப் பழகறிங்க..?"
"எக்ஸ்ட்ரான்னா..?"
"ஐ மீன்.. ஐ மீன்.."
"சும்மா சொல்லு..."
"அது.. அது.. சைட் அடிக்கறிங்க.."
அவள் சொல்லியே விட்டாள்.. அவள் முகத்தில் ரத்தம் பாய்ந்ததைப் போல முகம் சிவந்து போனதை ரசனையாகப் பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது.. அவன் மெதுவான.. மிக மெதுவான.. ரகசியக் குரலில் பேசினான்..
"அத்தை மகனா இருந்தா மட்டும் சைட் அடிக்க தோணிருமா..?"
"என்னது..?!"
"ஸ்ஸ்.. சத்தம் போசாதே.. உன் அப்பா என் மகளை என்ன பண்ணினேன்னு துப்பாக்கியைத் தூக்கிக்கிட்டு வந்திரப் போறாரு.. நான் சொல்ல வந்ததே வேறம்மா.."
"அம்மாவா..?"
"த்ச்சு.. பேச்சு வாக்கில் வந்துருச்சு.. மத்தபடி நானாவது.. உன்னை அம்மான்னு நினைக்கிறதாவது... அதை விட்டுத் தள்ளு.. நான் சொல்ல வர்றது என்னன்னா.. நீ சொல்கிற எக்ஸ்ட்ரா பிஹேவியரும்.. சைட்டும்.. மனதுக்குப் பிடித்திருந்தாத்தான் வரும்.. நீ என் அத்தை மகளாய் இருக்கிறதினால மட்டும் இது வந்து விடலை.. உனக்குப் பதிலா நீபா அத்தை மகளா இருந்திருந்தா இந்த எக்ஸ்ட்ரா பிஹேவியர் வந்திருக்குமா..? எனக்குத்தான் சைட் அடிக்க தோணியிருக்குமா..?"
அவனது கேள்வியில் அவளுக்கு மூச்சை அடைத்தது.. இது போன்ற விளக்கத்திற்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் அவள் மௌனித்தாள்.. தொடர்ந்து அவன் ஒரு கேள்வியை அவள் முன் வைத்தான்..
"இவ்வளவு ஏன்..? என்னைத் தவிர வேறு யாராவது ஒருத்தன்.. உன் மனதுக்கு பிடிக்காதவனா இருந்து.. உன் அம்மாவுக்கு அண்ணன் மகன்ங்கிற உறவுடன் இந்த வீட்டுக்குள்வந்து.. இதைப் போல உரிமையுடன் பேசிப் பழகினா நீ அதை அலோவ் பண்ணுவியா..?"
"சீச்சி.." என்று சொல்லும் போதே.. அவன் அவளது மனதை மிக நன்றாக கணித்து வைத்திருக்கிறான் என்பதில் அவளுக்கு வெட்கமாகி விட்டது..
அவன் அவள் மனதைப் புரிந்து கொண்டவனாக மெல்லச் சிரித்தான்...
"ஸோ.. இதுதான் உன் மனதைக் குடைஞ்சிருக்குன்னா.. இதை முதலில் தெரிந்து கொள்.. பத்மா அத்தையை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் தான்.. அந்த அத்தையின் மகளாக வேறு யார் இருந்திருந்தாலும் அந்தப் பெண்ணின் மேலே எனக்குப் பாசம் வந்திருக்கும் இதுபோல ஈர்ப்பு வந்திருக்காது.."
அவனது வெளிப்படையான விளக்கத்தில் அவள் முகம் நிமிர்த்தி அவனைப் பார்த்தாள்.. அவள் விழிகளில் தெரிந்த சலனத்தில் அவன் ஒரு கனம் அவளை ஊன்றிப் பார்த்தான்.. பின்பு.. அதே மெதுவான குரலில் அவளிடம் சொன்னான்...
"வாழ்க்கை என் முன்னால் மலர் பாதையைப் போடலை அர்ச்சனா.. முள்ளைத்தான் பரத்தியிருக்கிறது.. இங்கே நான் வந்திருக்கிறது அந்த முள்ளை அகற்ற என் நண்பர்களிடமிருந்து உதவி கேட்டுத்தான்.. அவங்க இந்த ஊரில்தான் இருக்காங்க.. மத்தபடி.. காதலிக்க.. எனக்கு நேரம் கிடையாது.. உன் மேல் எனக்கு காதல் வரவும் கூடாது.."
இது என்ன வகையான பேச்சு என்று அவள் திகைத்தாள்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே.. -8
உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே.. -8
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s320/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s72-c/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/uyirtheneunaaleuyirthene-8.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/uyirtheneunaaleuyirthene-8.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy