ஊமையின் ராகம் -5

5 " அதையேன் சௌதாமினி கேட்கிற... முதன் முதலாய் உமாவைப் பெண் கேட்டு வந்த இடம் பெரிய இடம்... மாப்பிள்ளையின் அப்பா ரிட்டயர்டு ஜட்ஜ்......


5
"அதையேன் சௌதாமினி கேட்கிற... முதன் முதலாய் உமாவைப் பெண் கேட்டு வந்த இடம் பெரிய இடம்... மாப்பிள்ளையின் அப்பா ரிட்டயர்டு ஜட்ஜ்... ஆனால் பாரு... அவங்க வந்த சமயம் பார்த்து... உன் அண்ணன் மகள் காலில் சுடுபால் கொட்டி... பெரிய களேபரமாகி விட்டது..."
"அப்புறம்....?"
"அப்புறம்... உன் அண்ணன்காரன் பொண்ணை மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட காட்ட முடியாமல்.... டாக்டரிடம் காட்ட ஓடினான்..."
"அடப் பாவமே..."
"அந்தப் பேச்சு அப்படியே நின்னு போச்சு... அடுத்து ஒரு சம்பந்தம் முன்னதை விடப் பெரிதா வந்தது... மாப்பிள்ளையின் குடும்பம்.. கோடீஸ்வரக் குடும்பம்..."
"ஓஹோ..."
"ஏன் சுரத்தில்லாமல் பேசுகிற....?"
"ஒன்றுமில்லை அத்தை..."
"கவலையே படாதே... இந்த இடமும் உன் அண்ணன் மகளுக்கு அமையவில்லை..."
"ஏன்... என்ன ஆச்சாம்?"
"இப்போ... பொண்ணோட சேலையில் விளக்கின் திரியில் இருந்த நெருப்பு பட்டு... பற்றிக் கொண்டதாம்..."
சௌதாமினி திகைத்து விட்டாள்..
'இது என்ன கதையாய் இருக்கு... பொண்ணு பார்க்க ஆள் வந்தால்... பெண்ணுக்கு ஏதாவது நடக்கிறதே...'
அவள் மனம் விழித்துக் கொண்டது...
'ஆஹா...' என்று மகிழ்ந்து போனாள் அவள்...
"அப்புறம் நிறைய இடத்தில் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கிறாங்க... உன் அண்ணன் பெண்டாட்டிக்கு யாரையும் பிடிக்கவில்லை... அது சொத்தை... இது சொத்தைன்னு தட்டிக் கழிக்கிறாளாம்..."
"அண்ணன் ஒன்றும் சொல்லவில்லையா...?"
"யாரு தணிகாசலமா? அவன் உன்கிட்டயும்... என் கிட்டயும்தான் வாய் பேசுவான்... பெண்டாட்டிகிட்டப் பேசவானா...? சுந்தரி 'எள்' ளுன்னு சொன்னால்... இவன் எண்ணெயாய் நிற்பானே..."
வைஜெயந்தி போய்விட்டாள்...  அன்று மாலை சிவா வந்ததும் சௌதாமினி அவனுக்குக் காபியைக் கொடுத்தபடி வினவினாள்..
"உமா படிப்பை முடித்து விட்டாளாடா...?"
"ம்ம்... அதெல்லாம் இரண்டு மாதங்களுக்கு முன்னாலேயே எக்ஸாம் எழுதி முடித்து விட்டாள்.."
"சிவா.. உன் மாமா வீட்டில் நான் பேசணுமின்னா... நீ ஒரு காரியம் செய்யணும்..."
"என்னம்மா செய்யணும்..."
"இது இரண்டு வீட்டுக்கும் இடையில் எரிகிற பிரச்சனை... அதை முதலில் தண்ணியை ஊற்றி அமர்த்து... அதுக்குப் பின்னாலதான் அவங்க வீட்டில்... நான் பெண் கேட்டுப் படியேற முடியும்..."
"தண்ணியை ஊற்றித் தீயை அணைக்க.. நான் என்ன பயர் சர்வீஸா...?"
"எனக்கு அதெல்லாம் தெரியாது... அந்தப் பெண்தான் உனக்கு வேண்டும்ன்னா... நான் சொன்னதைச் செய்..."
"முதலில் யாரிடமிருந்து ஆரம்பிக்க...?"
"நம்ம வீட்டில்... உன் அப்பாவை நாம் எப்போது வேண்டுமானாலும் சமாதானப் படுத்திக் கொள்ளலாம்... ஆனால் உன் மாமாவை முதலில் சமாதானப் படுத்த வேண்டுமே..."
"நான் போய் அவரிடம் பேசவா...?"
"இப்போது வேண்டாம்..."
"வேறு எப்போது பேசுவது...?"
"நான் சொல்லும்போது பேசு..."
"அம்மா... அவள் கழுத்தில் தாலி கட்ட வேண்டுமானால்... நான்.. நாள் நட்சத்திரம் பார்க்கலாம்.. அவருடைய அப்பனிடம் சமாதானம் பேசவும் நாள் நட்சத்திரம் பார்க்கணுமா..?"
"பொறுடா... என் அண்ணன் கோபக்காரர்..."
"நானும் கோபக்காரன்தான்..."
"அந்த வீரத்தை உன் அப்பா பதிலுக்குக் காட்டித்தான்... நம்ம இரண்டு வீட்டுக்கும் பகையை உண்டாக்கிட்டாரே... இப்ப நீ வேற ஆரம்பிக்கிறாயா...? போ... போய் உன் மாமனிடம் மல்லுக்கட்டு... ஆனால்.... அதற்குப் பின்னால்... அவருடைய பெண்ணைக் கட்டலாமுன்னு மட்டும் கனவில் கூட நினைக்காதே...."
"இப்போ ஏம்மா... அவ பேச்சை இழுக்கறீங்க..."
"ஏன்டா... பெரிசா தாலிகட்டிவிட்டவன் போல்... அவள்.. இவள்ன்னு உரிமை கொண்டாடுகிற...."
"என்னை விட்டு வேறொருத்தன அவள் கழுத்தில் தாலி கட்டி விடுவாளா...?"
"பார்க்கலாம்.. நாளைக்கு நான் கோவிலுக்குப் போகும் போது என் துணைக்கு வருகிறாயா...?"
"இது என்னம்மா புதுசா இருக்கு..."
"புதுசுதான்... நீ கூட வா. சொல்கிறேன்.."
சௌதாமினி அருகில் இருக்கும் கோவில்களை விட்டு... ஏன்... தணிகாசலத்தின் ஏரியாவில் இருக்கும் கோவிலுக்குப் போக அடம் பிடித்தாள் என்று புரியாதவனாய்... தன் காரை எடுத்துக் கொண்டு... அவளுக்குத் துணையாகக் கோவிலுக்கு போனான்
சிவா...
கோவிலின் பிராகாரத்தைச் சுற்றிவரும் போதுதான் ஏன் சௌதாமினி... அந்தக் கோவிலுக்கு வர வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தாள் என்பது அவனுக்குப் புரிந்தது...
எதிரே சுந்தரியுடன் உமா மகேஸ்வரி வந்து கொண்டிருந்தாள்... ஆண்கள் மோதிக்கொண்ட குடும்பப் பகையில்.. பெண்கள் அமைதி காத்து...அவரவர் குடும்பத்தில் ஒதுங்கிக் கொண்டாலும்... எதிர்ப்படும் நேரங்களில் லேசாகச் சிரித்து... நலம் விசாரித்துக் கொள்வது உண்டு. அதுபோல் இப்போதும் இரு பெண்மணிகளும்... நடை தளர்ந்து நின்று நலம் விசாரித்துக் கொண்டார்கள்...
"எப்படியிருக்கீங்க அண்ணி?" என்று கேட்ட சௌதாமினியின் விழிகள் உமாமகேஸ்வரியின் மீதே இருக்க... சுந்தரியும் அதே சமயம் உமாவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்...
சிவாவைக் கண்டதும்.. தாய்ப்பசுவைக் கண்டு விட்ட கன்று போல் அவள் முகத்தில் தோன்றிய நிறைவு... எதையோ சொல்லத் துடிக்கும் தவிப்பு... வேதனையின் நிழல்... அவளது உதடுகள் துடித்து... கண்களில் தோன்றிய மின்னல்... அனைத்தும் ஒரு நிமிடத்திற்குள் தோன்றி மறைந்து விட... வழக்கம் போல் மனதை அடக்கி... மறைந்து தலை குனிந்து கொண்டாள் உமா...
அந்த ஒருநிமிடமும்... ஆச்சரியமாய்ச் சௌதாமினியை நோக்கிக் கொண்டிருந்த சிவா... உமாவைப் பார்க்கும் போது அவள் தலை கவிழ்ந்திருந்ததால் எரிச்சல் ஏற்பட.. மனதின் கோபத்தை அடக்கிக் கொண்டு... கோவில் கோபுரத்தை வெறித்தான்...
"எப்படியிருப்பேன் சௌதாமினி... மனசு பூரா கவலை நிரம்பியிருக்கும்போது என்னால் சிரித்துக் கொண்டா இருக்க முடியும்...?"
எப்போதும் ஒரு சின்னச் சிரிப்புடன் நகர்ந்து விடும் சுந்தரி... இன்றைக்கு இவ்வளவு நீளமாகப் பேசியதற்குக் காரணம்... உமாவின் முகத்தில் ஒரு நிமிடத்திற்குள் தோன்றி மறைந்த ஓராயிரம் உணர்ச்சிகள்தான் என்பதைப் புரிந்து கொண்ட சௌதாமினி மனதிற்குள் லேசாக நம்பிக்கை வரப் பெற்று நிமிர்ந்து நின்றாள்...
உமாவின் முகம் பிரதிபலித்த உணர்வுகளைச் சௌதாமினியுடன் சேர்ந்து சுந்தரியும் பார்த்துக் கொண்டிருந்ததையும் மகளின் உணர்வுகளை இனம் கண்டு கொண்டு விட்ட விதமாய் அவளது கண்கள் சுருங்கியதையும்... சட்டென்று சௌதாமினியின்  பார்வையை... அவளது பார்வை சந்தித்ததையும்... அதைத் தொடர்ந்து சௌதாமினியுடன் அவள் பேச்சை வளர்த்தியதையும் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டாள் சௌதாமினி...
சுந்தரியின் போக்கிலேயே... தன் பங்குக்குப்  பேச்சைத் தொடர்ந்தாள் சௌதாமினி...
"என்ன அண்ணி இது...? கவலை வரும்போது சாய்ந்து கொள்ளத் தோள் கொடுக்கத்தான் சொந்தபந்தம் இருக்கு... நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்...?
நீங்க தனியாக் கவலையைச் சுமந்துக்கிட்டு அல்லாடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கா இருக்கிறோம்...?"
"நீங்க இருந்து எனக்கு என்ன ஆகப் போகிறது சௌதா... உன் அண்ணன் கோபத்தில் ஒரு வார்த்தை சொன்னாருன்னு ஓடியே போய் விட்டாய்... கொஞ்சமாவது என்னைப் பற்றியும்... உமாவைப் பற்றியும் நீ யோசிச்சுப் பார்த்தாயா...?"
"நீரடிச்சு நீர் விலகிப் போய் விடுமா, அண்ணி... விலகி நின்றாலும் நம்ம சொந்தம் விலகி விடுமா...?"
இந்த வார்த்தைகளை மனதிலிருந்து உண்டையாகச் சொன்னாள்  சௌதாமினி... சொல்லும்போதே அவள் கண்களில் நீர் நிரம்பி விட்டது...
சட்டென்று சௌதாமினியின் கையைப் பிடித்துக் கொண்ட சுந்தரிக்கு... மனதிற்குள்  ஆயிரம் யானை பலம் வந்தது போல் இருந்தது... மகளின் மனதில் இருப்பது யார் என்று கண்டு கொண்டு விட்ட தெம்பு... அவள் மனதின் பிரகாரம் திருமணம் நடத்தி வைப்பதில் சௌதாமினி உதவிக் கரம் நீட்டுவாளென்ற நம்பிக்கை... இவ்வளவும் சேர... அவள் மனதில்... மகளின் திருமணத்தைப் பற்றி இருந்த கவலை மறைந்தது...
"வா சௌதா... அப்படி உட்கார்ந்து பேசலாம்..."
சௌதாமினியின் கையைப் பிடித்துக் கொண்டு சந்தரி கூறியதும்... சௌதாமினிக்குள் இருந்த கொஞ்ச நஞ்ச அவ நம்பிக்கையும் போய் விட்டது... குதூகலத்துடன் தமையனின் மனைவியைத் தொடர்ந்து சென்று அமர்ந்தாள் அவள்....
உமா... தூண் மறைவில் மறைந்து அமர்ந்து கொண்டு... சிவாவின் முகம் பார்ப்பதும்... அவன் பார்க்கும்போது நிலம் பார்ப்பதுமாக இருந்தாள்...
சிவாவோ... அவளை ஆவலுடன் பார்ப்பதும்... அவனது ஆவல் கலந்த பார்வைக்கு அவளிடமிருந்து பதில் கிடைக்காவிட்டால்... கோபமாய் முறைப்பதுமாக இருந்தான்...
மகனின் மனம் அறிந்த தாயும்... மகளின் மனம் அறிந்த தாயும்... பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்...
"உமாவிற்குப் படிப்பு முடிந்து விட்டதா அண்ணி...?" பேச்சை அழகாக ஆரம்பித்து வைத்தாள் சௌதாமினி....
"ம்ம்... படிப்பு முடிந்து விட்டது... இவள் மேல
படிக்க ஆசைப்படுகிறாள்.. அவளுடைய அப்பா கல்யாணத்தை முடித்து இவளை இன்னொருத்தர் வீட்டிற்கு அனுப்பிவதிலேயே... குறியாய் இருக்கிறார்." சௌதாமினி ஆரம்பித்து வைத்த பாதையில் அழகாய் அடியெடுத்து வைத்துத் தொடர்ந்தாள் சுந்தரி..
"அதை ஏன் அண்ணி இவ்வளவு கவலையாய்ச் சொல்கிறீங்க...?"
"கவலைப் படாமல் என்ன செய்வது சௌதா... ஒற்றைப் பெண்ணைப் பெற்றவள்... அவளைக் கண்ணுக்குள் வைத்த வளர்த்தேன்... வாழப்போகும் வீட்டில்... இவளுடைய அருமையைத் தெரிந்து வைத்து வாழ வேண்டுமே... உனக்கே தெரியும்... இவள் ஒரு சொல் தாங்க மாட்டாள்... ஆனால் போகிற இடத்தில் இவள் மனமறிந்து யார் நடந்து கொள்வார்க்ள்...?"
எப்படி சௌதாமினி... மனதிலிருந்து பேசினாளோ... அப்படியே... சுந்தரியும் இந்த வார்த்தைகளை உண்மையான கவலையுடன் சொன்னாள்.




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஊமையின் ராகம் -5
ஊமையின் ராகம் -5
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s320/IMG-20191217-WA0035.jpg
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s72-c/IMG-20191217-WA0035.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/uumaiyinraagam-5.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/uumaiyinraagam-5.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy