ஊமையின் ராகம் -9

9 அவன் கண் விழித்த போது , அறைக்குள் வெளிச்சம் பரவியிருந்தது... அருகில் பார்த்தான்... உமா இல்லை.. ' ம்ம்... எழுந்து போய் விட்டாளா....


9
அவன் கண் விழித்த போது, அறைக்குள் வெளிச்சம் பரவியிருந்தது... அருகில் பார்த்தான்... உமா இல்லை..
'ம்ம்... எழுந்து போய் விட்டாளா...?' அவனும் எழுந்து அறையை விட்டு வெளியே வந்தான்... எதிரே மாடிப் படிகளில் தலைக்குக் குளித்து... ஈரத்தலையைத் துண்டினால் இறுக்கிக் கட்டி, கையில் காபிக் கோப்பையோடு வந்து கொண்டிருந்தாள் உமா...
எப்படித்தான் இவளால் இப்படி இயல்பாய் இருக்க முடிகிறதோ என்று ஆச்சரியப் பட்டவனாய் மீண்டும் அறைக்குள் போய் விட்டான் சிவா...
"இந்தாங்க காபி...." அவனிடம் நீட்டினாள் உமா....
வாங்கிப் பருகியபடி அவளைப் பார்வை இட்டான் சிவா...
மங்களகரமான அழகோடு... முகத்தில் ஓர் அறியாமையோடு இருந்தவளை அள்ளிக் கொள்ள வேண்டுமென்று தோன்றியது.. நினைத்ததைச் செயலாற்ற.. காலிக் காபித் தம்ளரை வாங்கக் கை நீட்டியவளின் கையைப் பிடித்து அருகே இழுத்தான் சிவா.. அவன் பதறி விலகினாள்...
"என்ன அத்தான் இது...?"
"எது...?"
"நீங்கள் செய்வது உங்களுக்கே நியாயமாய்ப் படுகிறதா...?"
"ஏன்டி... நியாயம் கேட்க வேண்டியது நீயா.. இல்லை நானா?"
"இப்படி பட்டப் பகலில் கையைப் பிடித்து இழுக்கலாமா...?"
"அட... அப்படியா... அப்போ நேற்று ராத்திரி நான் உன் கையைப் பிடித்து இழுக்க.. நீ உன் கையைக் கொடுத்தாயாக்கும்...? நேரம்... காலம் பற்றி உன்னைப் போல் மரமாய்ப் பிறந்த பிறவிகள் பேசக்கூடாது..."
அவளுக்கு நாணம் வந்தது.. சிவா தயக்கமில்லாமல் பேசிய வார்த்தைகள் அவளால் பேச முடியவில்லை....
'உன்னை யார் தூங்கச் சொன்னது...?' என்று தன்  மனதிற்குள் கேட்டபடி... தன் வெட்கத்தை மறைக்க முகம் திருப்பிக் கொண்டாள்..
அதுதான் உமாவிற்குப் பாதகமாய் அமைந்தது.. அந்த நாணப் பார்வையை அவள் மறைக்காமல் இருந்திருந்தால் சிவா அவளுடைய மனதைப் புரிந்து கொண்டிருப்பான்... ஆனால் அவள் அதைச்  செய்ய விடாமல் வெட்கம் தடுத்தது... அவளது முகம் திருப்புதலை... 'வெறுப்பு' என்று நினைத்து விட்டான் சிவா.... அவளது கையை விட்டு விட்டான்...
'கையை ஏன் விட்டு விட்டான்...' உமாவிற்கு அவனை விட்டுப் போக மனமில்லை... ஆனாலும் லஜ்ஜையுடன் அறையை விட்டு வெளியே ஓடி விட்டாள்.
'என்னடா வாழ்க்கை இது..' முதல் நாள் காலை திருமணமானவன் இப்படிச் சலித்துக் கொண்டான்..
குளித்து.... வேறு உடை உடுத்தி... மாடிப்படிகளில் இறங்கும் போது... பாலசுப்பிரமணியம் எதிரே வந்தார்..
"சாப்பிட்டவுடன் நீ கிளம்ப வேண்டும், சிவா.."
"எங்கேப்பா...?"
"இது என்னடா இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிற...? மறு வீட்டிற்குத்தான்.."
"ஓ..."
ஒற்றைச் சொல்லுடன் டைனிங் ஹாலை அடைந்தான்.. தணிகாசலம் சாப்பிட்டுக் கொண்டிருக்க... அருகே நின்று பார்த்துப் பார்த்துப் பரிமாறிக் கொண்டிருந்தாள் சௌதாமினி. அவள் எதையோ நகைச்சுவையாய்க் கூற... தணிகாசலம் வெடிச்சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்தார்... சிவா அவர் அருகில் சென்று அமர்ந்து.. சௌதாமினியின் அருகே நின்று கொண்டிருந்த உமாவைக் பார்த்தான்.. அவள் தன் வழக்கமாய் முகச் சிவப்பை மறைத்துக் கொண்டு வீட்டுக்குள் நகர்ந்து விட்டாள்... சிவா திரும்பித் தணிகாசலத்தின் சிரிப்பைக் கவனித்தான்... அவருடைய சிரிப்பு யாரையும் தொற்றிக் கொள்ளவில்லை.. அவனுக்கு யாரோ உடம்பில் மிளகாயை அரைத்து அப்பினாற் போல இருந்தது...
'ம்ஹும்... கடைசியில் நான் பட்ட பாடு.. என்னையும் உமாவையும் சேர்ப்பதற்காக இல்லை.. என் அம்மாவையும் அவங்க அண்ணனையும் சேர்த்து வைப்பதற்காக என்று ஆகிவிட்டது...
உமா பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வர... சௌதாமினி புன்னகையுடன் மருமகளைப் பார்த்து...
"நீயே சிவாவுக்குப் பரிமாறும்மா..." என்றாள்...
உமாவின் கரங்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன... தணிகாசலத்தின் எதிரில் சிவாவுக்கு அவள் பரிமாறுவதா...? பாத்திரத்தைச் சௌதாமினியிடம் கொடுத்து...
"நீங்களே பரிமாறி விடுங்கள், அத்தை..." என்று சொல்லிவிட்டு... ஏதோ வேலையிருப்பது போல் சமையல் கட்டிற்குள் ஓடிவிட்டாள்...
மகளின் செய்கையில் மனம் நிறைந்து போய்விட்ட தணிகாசலம் வாய் நிறையச் சிரிப்போடு மருமகனைப் பெருமையாகப் பார்த்துக் கொண்டார்...
'என்ன பார்வை வேண்டிக் கிடக்கு... 'உங்க மகள் என்னைத் திரும்பிப் பார்க்க மாட்டேன் என்கிறாள்... நீங்க என்னைப் பார்த்து என்ன செய்ய...?' சிவா மனம் கடுகடுக்கச் சாப்பிட ஆரம்பித்தான்...'
"அப்புறம்... மாப்பிள்ளை...?" தணிகாசலம் கேட்டு வைக்க,
'என்னத்தைச் சொல்லச் சொல்கிறீங்க...' எரிச்சலுற்றான் சிவா...
"சொல்லுங்க, மாமா....
"நீங்க நினைத்ததைச் சாதிச்சுட்டிங்க..."
'ம்ஹும்... நான் நினைத்தது ஒன்று... இங்கு நடந்தது ஒன்று...'
"பிடிவாதமாய் என் மகளைக் கைப்பிடிச்சுட்டிங்க..."
'அதற்குத்தான்... நீ செய்வது நியாயமான்னு...' என்னிடம் நியாயம் கேட்டு விட்டு வந்திருக்கிறாள் உங்கள் மகள்...'
"எனக்கு மனசு பூரா சந்தோசம் நிரம்பி வழியுது, மாப்பிள்ளை..."
'எனக்கு என்னென்னவோ செய்து தொலைக்கிறது... பேச்சை விடுங்க மாமா....'
இன்னும் அவர் அருகில் அமர்ந்திருந்தால், அவர் பேசியே கொல்லுவார் என்று தோன்றியதால், சிவா சட்டென்று கை கழுவ எழுந்து விட்டான்...
 "என்ன மாப்பிள்ளை... இப்படிக் குருவி கொறிப்பது போல் கொறிக்கறீங்க..."
'உங்க மகளுடன் நான் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய லட்சணத்திற்கு இவ்வளவுதான் சாப்பிட முடியும்....'
சிவா மரியாதையின் நிமித்தம்.. ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு... அங்கிருந்து நகர்ந்து விட்டான்.. அவன் கை கழுவி முடிக்கவும் சௌதாமினி அவன் கை துடைக்கத் துண்டைக் கொண்டு வந்து தந்தாள்... அதை அவனிடம் கொடுக்கச் சொல்லிச் சௌதாமினியிடம் கொடுத்து விட்ட உமா அவளின் தோளுக்குப் பின்னாலிருந்து எட்டிப் பார்த்தாள்...
'ஏன்... இதை அவள் கொடுக்க மாட்டாளாமா...?' அவன் பார்வையால் அவளை எரித்தான்...
வெட்கத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த உமா துணுக்குற்றாள்...
'ஏன்... அத்தான் இப்படி வெறுப்பாக என்னை பார்க்கிறார்... அவருக்கு என்னைப் பிடிக்கவில்லையா...? அவள் மனம் குழம்பித் தவித்தது...
அவள் சமையலறைக்குள் போய்விட... அவள் பின்னாலேயே வந்த சௌதாமினி...
"என்ன உமா... நீ சாப்பிடவில்லையா...? சாப்பிடவா.." என்று அழைத்தாள்...
"அத்தை..."
"என்னம்மா..."
"அவருடன் வேலை பார்க்கும் பெண்களில் யாரும் நம் அத்தானைக் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படவில்லையா...?"
"இவன் அடிக்கும் லூட்டிக்கு... ஆசைப்படாமல் எப்படி இருப்பார்கள்...? அது நிறையப் பேர் ஆசைப் பட்டார்கள்... ஆனால் இவன்தான் பிடி கொடுக்க மாட்டேன்னு சொல்லிவிட்டான்..."
"ஏன்... அவர்களில் யாரையும் அத்தானுக்குப் பிடிக்கவில்லையா...?"
"அப்படியில்லை உமா.. எல்லாப் பெண்களும் நன்றாகப் படித்தவர்கள்... கைநிறைய நம் சிவாவிற்குச் சமமாகச் சம்பளம் வாங்குபவர்கள்... நம் குடும்பங்களை விட வசதி அதிகமான குடும்பப் பின்புலம் வாய்ந்தவர்கள்... ஆனால் சிவாதான் மறுத்துவிட்டான்..."
"ஏன்...?"
'உனக்காகத்தான்...' என்று சௌதாமினி ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் உமாவின் மனத்தை அரிக்க ஆரம்பித்திருந்த கவலை நீங்கியிருக்கும்...
ஆனால் சௌதாமினி அதைச் செய்யவில்லை... மாறாக அண்ணனின் உறவு திரும்பவும் கிடைத்து விட்ட நிறைவில்,
"ஏன்னா... எனக்கு என் அண்ணனின் சொந்தத்தை மீட்டுக் கொடுக்கணும்னு என் பிள்ளை நினைத்தான்... அவன் நினைத்ததைச் செய்தே விட்டான்..." என்று பெருமையுடன் கூறிக் கொண்டே மருமகளின் தலையை வருடினாள்...
மனம் கொந்தளிக்க கண்களை மூடி... மாமியாரின் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள் உமா...
சற்று நேரத்தில் மறுவீடு கிளம்பிய புதுமணத் தம்பதி இருவரின் மனத்திலும் புயல் அடித்துக் கொண்டிருந்தது...
மனைவியைப் பார்த்த சிவாவின் விழிகளில் மையல் இல்லை...
'ஸோ... குடும்பப் பகை மறைவதற்காக... என்னை நீ கல்யாணம் செய்து கொண்டிருக்கிறாய்...'
கணவன் பார்க்காதபோது... அவனைப் பார்த்த உமா மனம் கலங்கினாள்..
'ஆக... அத்தையும்.. அப்பாவும் ஒன்று சேர்வதற்காக என்னை நீங்கள் கல்யாணம் செய்து கொடிருக்கிறீங்க....'



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஊமையின் ராகம் -9
ஊமையின் ராகம் -9
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s320/IMG-20191217-WA0035.jpg
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s72-c/IMG-20191217-WA0035.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-9.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-9.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy