ஊமையின் ராகம் -8

8 கோலாகலமாய் அவர்களது திருமணம் நடந்து முடிந்தது.. பணத்தைத் தண்ணீராய் வாரி இறைத்து இரு வீட்டாரும் திருமணத்தை நடத்தி முடித்திருந்தனர்... ...


8
கோலாகலமாய் அவர்களது திருமணம் நடந்து முடிந்தது.. பணத்தைத் தண்ணீராய் வாரி இறைத்து இரு வீட்டாரும் திருமணத்தை நடத்தி முடித்திருந்தனர்... ஆனால் தாலிகட்டிய மணமகன் சிவாதான் களையிழந்த முகத்தோடு காணப்பட்டான்...
'பொம்மை மாதிரி வந்து உட்காருகிறாளே.. ஓர் பார்வை... ஓர் நாணம்... எதுவுமில்லையே...'
அவன் மனம் அலைக்கழிந்தது.. அறையின் கதவு திறக்க, திரும்பிப் பார்த்தான்.. கையில் பால் சொம்போடு உமா உள்ளே வந்தாள்...
"ஏன் வெறும் பால் செம்போடு நிறுத்திக் கொண்ட உமா... பால் குடம் தூக்கி வர வேண்டியதுதானே..." அவன் இடக்காகக் கேட்டான்...
"நான் என்ன செய்வது அத்தான்... அத்தை என் கையில் கொடுத்து... கொண்டு போகச் சொல்லி விட்டாங்க..."
"அதையும் உன் அத்தைதான் சொன்னாங்களா? உன் மண்டையில் எதுவும் தானாய் உதிக்கவில்லையா...?"
'நான் என்ன தவறு செய்தேன்...?' உமாவிற்கு விளங்கவில்லை... மலங்க.... மலங்க விழித்தாள்...
"அதை ஏன்டி நேர்த்திக் கடன் போலக் கையில் ஏந்திக் கொண்டு இருக்கிற..."
"வேறு என்ன செய்ய...?"
"அதைக்கூட நான்தான் சொல்ல வேண்டுமா...?"
"எனக்குத் தெரியவில்லையே, அத்தான்..."
அவள் அறியாமையுடன் விழி விரியக் கூறிய விதத்தில் சிவாவின் மனம் மென்மையுற்றது... அவள் கையிலிருந்த பால் செம்பை வாங்கிப் பக்கத்தில் வைத்தான்... அவளது கைபிடித்துக் கட்டிலில் அமர வைத்தான்... அவள் நடுக்கத்துடன் கையை உருவிக் கொண்டாள்...
அவனுக்குள் மீண்டும் கோபம் மூண்டது....
"ஏண்டி..." என்று சீற்றுத்துடன் கேட்டான்...
அவள் நாணம் கலந்த பரபரப்புடன் தரையைப் பார்த்தாள்.. உணர்ச்சி மிகுதியில் உடல் நடுங்க வெகு பிரயத்தனப் பட்டுத் தன் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தாள்...
"உமா..."
"ம்ம்..."
"நான் கேட்பது காதில் விழுகிறதா... இல்லையா...?"
"ம்ம்..."
"இங்கே பார்..."
அவள் குனிந்த தலையை நிமிரவில்லை... அவனுக்கு எரிச்சல் அதிகமாகியது...
"என்னடி பாருடி..."
அவனது கோபத்தில் அவள் உடல் தூக்கிப்போட்டது... கலவரமாய்த் தலை நிமிர்ந்தாள்.. அவனுக்குள் இரக்கம் சுரந்தது..
"ஏன்டி.. என்னை இந்தப் பாடு படுத்துகிற...?"
"நான் என்ன செய்தேன், அத்தான்..."
'எதுவும் செய்துதான் தொலைக்க மாட்டேன் என்கிறாயே... ஓர் ஓரப்பார்வை... ஒரு கள்ளச்சிரிப்பு... ஒரு நாணத் தொடுகை... ஊஹும்... இது எதுவுமில்லாமல் ஜடம் போல் உட்கார்ந்து இருக்கிறாயே...'
அவன் நகர்ந்து அவளருகில் நெருங்கி அமர்ந்தான்.. அவசரமாய் அவள் தள்ளி அமர்ந்தாள்..
"ஏன்டி...?" மீண்டும் அவன் கோபப்பட்டான்.
அவள் என்னவென்று சொல்வாள்? அவன் கரம் பட்டதும் அனல் மேல் மெழுகு போல் அவள் உருகி விடுகிறாளே... அவனுடைய முகம் பார்க்க விடாமல் வெட்கம் வந்து தடுக்கிறதே...
"சொல்லேன்டி..."
அவள் பதில் சொல்ல முயன்றாள்... நா எழும்பவில்லை...
"உமா... என்னை உனக்குப் பிடித்திருக்கிறதா... இல்லையா...?"
'உன்னைத்தவிர... வேறு யாரை எனக்குப் பிடிக்கும்...?' நினைவுகளை வார்த்தையில் சொல்லி விடவேண்டும்... இல்லாவிட்டால் பார்வையிலாவது உணர்த்தி விட வேண்டும்... உமா... இந்த இரண்டையும் செய்யவில்லை... அவளால் அவற்றைச் செய்ய முடியவில்லை..
"இந்தக் கல்யாணத்தில் உனக்கு விருப்பமா.. இல்லையா...?"
"இது என்ன அத்தான் இப்படிக் கேட்டு விட்டிங்க... பிரிந்து நின்ற நம்ம இரண்டு குடும்பமும் ஒன்று சேர்ந்திருக்கிறது... அது இந்தக் கல்யாணத்தால்தானே நடந்தது? அப்புறம் எப்படி எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லாமல் போகும்...?"
இந்த லட்சணத்தில் தன் விருப்பத்தை மறைமுகமாக உணர்த்துவதாக நினைத்து உமா பதில் சொல்லிவிட்டாள்... ஆனால் அந்தப் பதிலால் அவளது வாழ்வே தலைகீழாக மாறிப்போனது..
சிவாவின் முகம் இருண்டு போனது...
'அப்படியானால்... இவள் என்னை விரும்பி இந்தக் கல்யாணத்திற்குச் சம்மதிக்கவில்லை... குடும்பங்களின் ஒற்றுமைக்காக... தியாகம் பண்ணியிருக்கிறாள்...'
அவன் சட்டென்று அவளுக்கு முதுகு காட்டிப் படுத்து விட்டான்... அவளுக்கு என்ன செய்வதென்று புரிய வில்லை... அவனது கோபத்திற்கான காரணமும் அவளுக்கு விளங்கவில்லை... அவனை எழுப்பிக் கேட்க விடாமல் நாணம் தடுக்க அவளும் பேசாமல் கட்டிலில் ஓரமாய்ச் சுருண்டு படுத்தாள்...
சிவாவினால் மனதை அமைதிப் படுத்திக் கொள்ள முடியவில்லை... இந்த முதலிரவை எவ்வளவு ஆவலாக எதிர்பார்த்தான்... கடைசியில் இப்படி ஆகிவிட்டதே...
வேதனையுடன் மெல்லப் புரண்டு படுத்தான்... அலுப்பினாலும்.. களைப்பினாலும்.. உமா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்... அதைப் பார்த்தவனுக்கு இன்னும் கோபம் வந்தது...
'எப்படித் தூங்குகிறாள்... இது முதலிரவு அறை என்பது கொஞ்சமாவது இவளுக்கு நினைவு இருக்கிறதா...? கும்பகர்ணி... என் அப்பா.. அப்போதே சொன்னார்... போயும் ... போயும் அந்தப் பெண்ணையா கட்டிக் கொள்ளப் போகிறாய்ன்னு... நான் மடையன்.. காதில் போட்டுக் கொள்ளவில்லை... இப்போது அவஸ்தைப் படுகிறேன்...
அவன் மனதிற்குள் புலம்பித் தீர்த்தான்... தாகம் எடுத்தது... எழுந்து சென்று பால் செம்பை மடமடவென்று காலி செய்தான்.. கண் மூட முயன்று தோற்று... கொஞ்ச நேரம்... அறையில் குறுக்கும்.. நெடுக்குமாய் நடந்தான்... அவன் காலடியோசை கேட்டுக் கண் திறந்த உமா.. அவசரமாய் எழுந்து அமர்ந்தாள்... சிவா மகிழ்ந்து போய் விட்டான்...
'பாவம்... கல்யாண அலுப்பில் தூங்கிப் போயிருப்பாள்.. இப்போது நான் விழித்திருப்பதைக் கண்டதும் எழுந்து கொண்டு விட்டாள்...'
அவள் நாணத்தோடு அவனைப் பார்வையில் அழைப்பாள் என்று நம்பி... அவன் அவளைப் பார்க்க... அவள்...
"என்ன அத்தான்... விடிந்து விட்டதா...?" என்று கேட்டுக் கொண்டே எழுந்து கதவைத் திறக்கச் சென்றாள்...
சிவாவிற்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது... நொந்து போனவனாய் அவளைப் பார்த்துத் தலையைப் பிடித்துக் கொண்டான்...
"ஏய்... கதவுகிட்ட ஏன்டி போகிற...?"
"கதவை திறக்கத்தான்..."
"இப்போது போனால் வெளியே இருப்பவங்க என்னடி நினைப்பாங்க...?"
"வேறு எப்போது போவது...? ஓ... குளித்துவிட்டுப் போகச் சொல்கிறீங்களா...? அதுவும் சரிதான்..."
"ஆமாண்டி... இப்ப குளியல் ஒன்றுதான் குறைச்சல்... பேசாமல் அடங்கிப் படுத்து... விட்ட தூக்கத்தை கன்டினியூ பண்ணு..."
"ஏன் அத்தான்....?"
"ஏனா...? ஏன்டி உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கிறதா... இல்லை, அறிவைக் கடன் கொடுத்து விட்டாயா...?"
"நீங்க ஏன் என்னைக் கோபித்துக் கொள்வதிலேயே குறியாய் இருக்கீங்க..."
அவனுக்கு அவளது கேள்வியைக் கேட்டுச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை...
"மணி என்னன்னு பாருடி...."
"மணி என்ன...?"
"நடுராத்திரி பன்னிரண்டு மணிடி... இந்நேரம் பேய்கள் தான் குளிக்கும்... காலையில் கல்யாணமான புதுப் பொண்ணு குளிக்க மாட்டாள்..."
அவன் ஜாடையாய்க் கூறியது அவளின் புத்திக்கு எட்டியதாகவே தெரியவில்லை...
"ஓ. அப்படியா... அப்புறம் ஏன்... நீங்கள் தூங்காமல் ரூழுக்குள் குட்டி போட்ட பூனைபோல் சுற்றிக் கொண்டு இருக்கீங்க...?"
"உன்னைப் போன்ற ஒரு மகராசியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கிறேனே... அதற்காகத்தான்... நீ தூங்கும்மா... தூங்கு..."
"நீங்க இப்படி ரூகுக்குள் நடை பழகினால் நான் எப்படி அத்தான் தூங்க முடியும்....?"
"ஓ... நான் ரூமுக்குள் நடப்பது அம்மணியின் தூக்கத்திற்கு இடைஞ்சலாகப் போய் விட்டதாக்கும்... நான் வேண்டுமானால் வெளியே போய் விடவா....?"
"வேண்டாம்... வேண்டாம்..."
அவள் அவசரமாய்த் தடுத்தாள்... அவன் ஆசையுடன் நின்றான்.
'ஆஹா தடுக்கிறாள்... புத்தியில் இது முதலிரவு என்று உறைத்து விட்டது போல...'
"ஏன்டி வேண்டாம்கிற...?"
"இந்நேரம் வெளியே போனால் பார்க்கிறவங்க என்ன சொல்வாங்க...?"
"ஓ! அதுதான் உன் கவலையா...?"
"ஆமாம்... அத்தான்.. பேசாமல் படுத்துத் தூங்க டிரைபண்ணுங்க... பால் இருக்குமே... அதைக் குடித்துவிட்டுப் படுத்தால் உங்களுக்கு உடனே தூக்கம் வந்து விடும்..."
அவள் எழுந்து பால் செம்பைப் பார்த்தாள்... அது காலியாக இருந்தது.. அவள் யோசனையுடன் விழித்தாள்...
"இதிலிருந்த பால் எங்கே அத்தான்...?"
"மாயமாய் மறைந்து விட்டது... ஆக என்னைத் தூங்க வைக்கத்தான் பால் செம்பைத் தூக்கிக் கொண்டு வந்தாயா...? அருமையான திட்டம்டி... ம்ம்.. நீ தூங்கும்மா... தூங்கு..."
"நீங்க...?"
"நானும் தூங்கறேன்... வேறு வழி....?"



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஊமையின் ராகம் -8
ஊமையின் ராகம் -8
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s320/IMG-20191217-WA0035.jpg
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s72-c/IMG-20191217-WA0035.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-8.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-8.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy