ஊமையின் ராகம் -7

7 இரவின் தனிமையில்... தணிகாசலத்திடம் சாதாரணமாகக் கூறுவது போல் உருவேற்றினாள் சுந்தரி.. " நமக்கு இருக்கிறது ஒரே பொண்ணு... அதுவும் ...


7
இரவின் தனிமையில்... தணிகாசலத்திடம் சாதாரணமாகக் கூறுவது போல் உருவேற்றினாள் சுந்தரி..
"நமக்கு இருக்கிறது ஒரே பொண்ணு... அதுவும் வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசக் கூலி கேட்கும் சாதுப் பொண்ணு... அதன் மனதைப் புரிந்து கொண்ட வாழ்க்கை நடத்தும் குணசாலியான மாப்பிள்ளை எங்கே கிடைப்பார் சொல்லுங்க... கண்ணுக்கு முன்னால் நீங்கள் தூக்கிவளர்த்த பையன் வந்து பெண் கேட்கிறார்... இதற்குப் போய் இவ்வளவு யோசித்தால் நன்றாகவா இருக்கிறது...?"
"எல்லாம் சரி, சுந்தரி.. ஆனால் அந்த பாலசுப்பிரமணியம்..."
"ஏன்... அவருக்கென்ன... பாகம் பிரிப்பதில் அவருக்கு எந்தச் சொத்தின் மீது ஆசையோ... அதை வாய் விட்டுக் கேட்டார்... அது ஒரு பெரிய தப்பா...?"
"அதில்லை சுந்தரி..."
"என்னவோ... என் மனதிற்குப் பட்டதை நான் சொன்னேன்... கேட்பதும்.. கேட்காததும் உங்கள் இஷ்டம்..."
அந்த வார இறுதியில் சிவா மீண்டும் வந்தான்.. வரும் போது.. கை நிறையப் பழங்கள் வாங்கிக் கொண்டு வந்தான்...
"இது எதுக்குப்பா...?" என்றார் தணிகாசலம்...
"சாப்பிடத்தான் மாமா..." என்று சிரிக்காமல் சொன்னான்..
"இந்த வீட்டில் இல்லாத பழங்களா...?"
"அது நான் வாங்கியவை இல்லையே.. பெரியவங்களை பார்க்கப் போகும் போது பழங்கள் வாங்கிக் கொண்டு போக வேண்டும்... என்பது ஒரு பார்மாலிட்டி மாமா..."
"ஓஹோ..."
அன்று இரவு சுந்தரியிடம்...
"பயலுக்கு மரியாதை நிறையத் தெரிந்திருக்கிறது சுந்தரி... அவனுடைய அப்பா போல இல்லை..." என்றார் தணிகாசலம்.
"அதைத்தானே நானும்.... படித்துப் படித்துச் சொல்கிறேன்..." என்று அலுத்துக் கொள்வது போல் சொல்லி வைத்தாள் சுந்தரி...
அடுத்த வாரம் சிவா வரும் போது உல்லன் சால்வை ஒன்றைக் கொண்டு வந்தான்..
"இது எதுக்குப்பா...?"
"நீலகிரியில் என் பிரண்ட் ஒருத்தன் இருக்கிறான் மாமா... அவன் கொண்டு வந்தான்.. குளிர் காலம் ஆரம்பித்து விட்டதே... உங்களுக்கு உபயோகப்படும்ன்னு கொண்டு வந்தேன்..."
வழக்கம் போல் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்த போது...
"நமக்கு மகன் இல்லை, சுந்தரி... மருமகனைத்தான் மகனாக நினைத்துக் கொள்ள வேண்டும்... உமாவுக்கு வருகிற மாப்பிள்ளை எப்படி இருப்பானோ...." என்று கூறினார் தணிகாசலம்...
"அந்நியத்தில் பெண்ணைக் கொடுத்தால் அப்படித் தான்... துரும்பைக் கிள்ளி மாப்பிள்ளைன்னு வைத்தாலும்... அது நிமிர்ந்து நிற்கும்... அதுபோல பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளும் மாப்பிள்ளை... நிமிர்ந்துதான் நிற்பார்.. நாம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்.. பணிந்துதான் போக வேண்டும்.. நீங்கள் வேறு சுடுதண்ணியைக் காலில் ஊற்றிக் கொள்கிற ஆள்... உங்கள் கோபத்தைத் தப்பித்தவறு மாப்பிள்ளை கிட்ட காட்டி விட்டால்... அவர் அப்படியே... நம் உமாவிடம் அதைத் திருப்பிக் காண்பித்து விடுவார்.. பாவம்.. நம்ம பெண் வாயில்லாப்பூச்சி.. ஊம்... எங்கே போய் வாழ்க்கைப் பட்டு எப்படி இம்சைப் படப் போகுதோ..."
ஓரக் கண்ணால் கணவனைப் பார்த்துக் கொண்டே இதைச் சொல்லி விட்டுச் சுந்தரி எழுந்து போய் விட்டாள்... அவளுக்குத் தெரியும்... மகளின் மேல் தணிகாசலம் உயிரையே வைத்திருக்கிறார் என்பது...
சற்று நேரம் கழித்துச் சுந்தரி.. வந்து பார்த்த போது தணிகாசலம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்..
அந்த முறை சிவா வந்த போது தணிகாசலம் சாதாரணமாகக் கேட்பது போல் பேச்சை ஆரம்பித்தார்...
"எனக்கும் உன் அப்பாவுக்கும் ஆகாதுன்னு உனக்குத் தெரியாதா?"
"இப்போதுதான் ஆகாதுன்னு தெரியும்..."
"அந்தப் பகையுணர்வு என் மனதில் அப்படியே இருக்கிறது..."
"அதை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீங்க... தூக்கி வெளியில் போட்டு விடுங்க..."
"என்னால் சட்டுன்னு அப்படியெல்லாம் செய்து விட முடியாது சிவா..."
"இப்போது நடக்கக் கூடாதது எதுவும் நடந்து விடவில்லையே, மாமா... அப்பா என்னவோ.. அவர் விரும்பிய ஒன்றைக் கேட்டார்.. நீங்கள் நாசூக்காய் முடியாதுன்னு மறுத்திருக்கலாமே.. அதை விட்டுவிட்டு... வார்த்தைகளைக் கொட்டியது.. நீங்கள்தானே.. நீங்கள் தப்பாக நினைக்காவிட்டால் நான் ஒன்று சொல்லவா மாமா..."
"சொல்லுப்பா..."
"நீங்க பெரியவங்க... வார்த்தைகளைக் கொட்டினால் அள்ள முடியாதுன்னு உங்களுக்குத் தெரியும்... ஆனாலும் அன்றைக்கு வார்த்தைகளை.... நீங்கள்தான் கொட்டினீங்க.. அப்பா உங்களிடம் அது போல் பேசவில்லை...."
சிவா கூறிவதில் இருந்த உண்மை உறைத்ததால்... தணிகாசலம் மௌனமானார்.. சிவா தொடர்ந்து பேசினான்..
"அதனால்தான் சொல்கிறேன்.. வீண்பகையுணர்ச்சி உங்களால் ஏற்பட்டு விட்டது எனும் போது அதை விட்டு விட்டால்தான் என்ன? மாமா... அம்மா ஒரு விசயத்தை அடிக்கடி சொல்வாங்க.. அவங்க கல்யாணம் நடக்காமல் நீங்க கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு சொல்லிட்டிங்களாம். அம்மா கல்யாணத்திற்கு உங்களுடைய சொந்தச் சேமிப்பிலிருந்துதான் நகை வாங்கிப் போட்டிங்களாம்... அதற்குப் பின்னாலும் அம்மாவிற்கு எல்லாச் சீர்வரிசைகளையும் உங்கள் சம்பளப் பணத்தில் இருந்துதான் செலவழித்தீங்களாம்... அந்தப் பணத்திற்கு நீங்கள் கணக்குப் பார்த்து ஏன்...
பாகப் பிரிவினையின் போது உங்கள் பங்கை அதிகமாகக் கேட்கவில்லை...?"
"என்ன சிவா இப்படிச் சொல்கிறாய்...? சௌதாமினி என் கூடப்பிறக்காவிட்டாலும்... என்னுடனே ஒரே வீட்டில் வளர்ந்த தங்கையில்லையா...? அவளுக்குச் சீர்செய்ததை நான் கணக்குப் பார்ப்பதா...?"
"அதைக் கணக்குப் பார்க்காத நீங்கள் வீட்டு விசயத்தில் மட்டும் ஏன் கணக்குப் பார்த்தீங்க, மாமா...?"
"சிவா... நடந்தது நடந்து விட்டது..."
"அதை மாற்றலாம்.."
"எப்படி...?"
"நீங்கள் ஒன்றும் அப்பாவிடம் என்னை மாப்பிள்ளை கேட்கவில்லையே.. அப்பாதானே உங்களிடம் பெண் கேட்டு வரப்போகிறார்...? அப்புறம் என்ன, மாமா....?"
இந்த வார்த்தைகள் தணிகாசலத்திற்குப் பிடித்துப் போக... ஒரு வழியாய் அவர் சம்மதித்து விட்டார்..
"நீ இவ்வளவு தூரம் சொல்வதால் நான் இதற்கு ஒப்புக் கொள்கிறேன்... ஆனால் உன் அப்பாதான் என் வீட்டுப் படியேறிப் பெண் கேட்டு வர வேண்டும்..."
"ஏன் மாமா... படிகளில் ஏறித்தானே வீட்டுக்குள் வர முடியும்? அவர் வருவார்.."
சிவா தணிகாசலத்தின் பிடிவாதத்தை வெற்றி கொண்ட பின்னால் பாலசுப்பிரமணியத்திடம் பேசினான்...
"ஏன்டா.. போயும்.. போயும்.. அந்தக் குணம் கெட்டவனின் பெண்தானா உனக்குக் கிடைத்தாள்...?"
"என்னப்பா செய்வது..? நான் மனதை வைத்து விட்டேனே..."
"வைத்திருந்தால் எடுத்துக் கொண்டு வா..."
"முடியவில்லையே, அப்பா..."
"அதற்காக..? என்னை அவன் வீட்டுப் படியேறிப் பெண் கேட்கச் சொல்சிறாயா...? என்னாலும்தான் அது முடியாது..."
"ஏனப்பா.. அவர்கிட்டப் பெண் கேட்டுப் போகிறதைப் பத்தியே யோசிக்கிறீங்களே.. அவர் வீட்டிலா நான் போய் வாழப்போகிறேன்...? உங்கள் வீட்டில்தானே அவருடைய பெண் வந்து வாழப் போகிறாள்...? மகளை நினைத்து உங்களிடம் பணிந்து அவர் நடந்துதானே ஆகவேண்டும்.. காலம் பூராவும் அவர் குடுமி உங்கள் கையில்தானே அப்பா இருக்கும்...?"
"ஓ.. நீ அப்படி வருகிறாயா...? ம்ம்ம்... இதுவும் சரியான யோசனைதான்...."
பாலசுப்ரமணியம் இளகிய மனம் படைத்தவர்... மிகமிக நல்லவர். அவர் மருமகளைக் கொண்டாடுவார் என்பது சிவாவிற்கு நன்கு தெரியும்.. அவராவது... மருமகளைப் பணையம் வைத்து.. மைத்துனனின் குடுமியைப் பிடிப்பதாவது... எனவேதான் துணிந்து அவரைத் தூண்டி விட்டான்..
ஒரு நல்ல நாளில் பாலசுப்பிரமணியமும்... சௌதாமினியும். சிவாவுடன்.. தணிகாசலத்தின் வீட்டிற்கு உமாவைப் பெண் கேட்டுப் போனார்கள்..
"வாங்க..." பொதுவாக வரவேற்றார் தணிகாசலம்... பாலசுப்பிரமணியமும் பொதுவாகத் தலையசைத்தார்... அவர்கள் பொதுவாகவே பேசி.. திருமணத்தை முடிவும் செய்துவிட்டனர்... ஊரை அழைத்து நிச்சயதார்த்தம் நடத்தி... திருமண நாளையும் உறுதி செய்து விட்டார்கள்.. திருமணத்திற்கு இன்னும் பதினைந்து தினங்கள்தான்
பாக்கி இருந்தன.. திருமணப் பத்திரிகை அச்சிட்டு வந்து... ஊரெல்லாம் விநியோகிக்கப்பட ஆரம்பித்து விட்டது.
ஆனால் சிவாவின் மனதில்தான் சஞ்சலம் ஓய்ந்தபாடில்லை.. உமாவின் மனதில் அவன் இல்லையோ என்று அவன் நினைத்தான். எப்போது அவளைப் பார்த்தாலும்.. அமைதியாய்... உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன்.. அவள் நகர்ந்து விடுவாள்...
'ஏன்..?' அவன் மனதில் கேள்வி எழுந்தது...
'என்னை அவளுக்குப் பிடித்திருக்கிறதா... இல்லையா...' அதை அறியத்தான் அவளை அவன் கடற்கரைக்கு வரச் சொன்னான்... அப்படி வந்தவள்தான்... அருகில் உட்காராமல் ஆறடி தள்ளி அமர்ந்திருந்தாள்...
"ஏன்டி... அவ்வளவு தூரம் தள்ளிப் போய் உட்கார்ந்து இருக்கிற....?"
"எனக்கு இதுதான் வசதி, அத்தான்...."
"எனக்கு வசதியில்லையே..."
"ச்சு... யாராவது பார்த்தால் தப்பாக நினைப்பார்கள்..."
"உன்னைப் பார்த்துக்கூடத் தப்பாக நினைக்கும் பிராணி இந்த உலகத்தில் உண்டா...? சரியான பட்டிக்காடு..."
உமாவிற்கு மனதில் முள் தைத்தது... சிவாவிற்குத் அவளைப் பிடிக்கவில்லையோ என்று அவள் நினைத்தாள்...
'அத்தான் கூட வேலை பார்க்கும் பெண்கள் ஸ்டைலாய் டிரஸ் பண்ணியிருப்பாங்க போல... என்னைப் பார்த்தால் பட்டிக்காடு போலத் தோன்றுகிறது என்றால் என்னைப் பிடிக்கவில்லைன்னுதானே அர்த்தம்...'
அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு எழுந்து நின்றாள்... அவளுடன் ஒரு நாள் முழுவதும் அங்கே உட்கார்ந்தாலும் ஒரு வார்த்தைக் கூட அவளது வாயிலிருந்து பெயராது என்பதை உணர்ந்த சிவாவும் சலிப்புடன் எழுந்து கொண்டான்.




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,126,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,43,எண்ணியிருந்தது ஈடேற,245,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,25,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,11,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,5,ஜனனி... ஜெகம் நீ..,1,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஊமையின் ராகம் -7
ஊமையின் ராகம் -7
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s320/IMG-20191217-WA0035.jpg
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s72-c/IMG-20191217-WA0035.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-7.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-7.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy