ஊமையின் ராகம் -6

6 " அறியாதவங்க வீட்டில் பெண் கொடுத்தால் தானே... இந்த அவதி... என் வீட்டு மருமகளாக என் அண்ணன் மகளை அனுப்பக் கூடாதா அண்ணி... ? என் கண்...

6
"அறியாதவங்க வீட்டில் பெண் கொடுத்தால் தானே... இந்த அவதி... என் வீட்டு மருமகளாக என் அண்ணன் மகளை அனுப்பக் கூடாதா அண்ணி...? என் கண்ணுக்குள் வைத்து நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா...?" சௌதாமினி கேட்டே விட்டாள்...
"இதைக் கேட்க என் மனதுக்கு எவ்வளவு ஆறுதலா இருக்குன்னு... உனக்குத் தெரியாது சௌதா... ஆனால் உன் அண்ணன் கோபத்தை யார் தணிப்பது...? நீ பெண் கேட்டு விட்டதற்கு அவர் பேசிய சுடுவார்த்தைகளை நினைவில் வைத்திருக்கும் உன் கணவரிடம் யார் பேசுவது...?" சுந்தரி நியாயமான கவலையுடன் கேட்டாள்.
"நான் பேசுகிறேன், அத்தை..." என்றான் சிவா...
சுந்தரி ஆச்சரியத்துடன் தன் ஒன்றுவிட்ட நாத்தனாரின் மகனின் முகத்தைப் பார்த்தாள்...
சிறுவயதிலிருந்து... அவள் சிவாவைப் பார்த்திருந்தாலும் சிவா வளர்ந்து வாலிபனாகி விட்ட பின்... அவனுடன் பேசியதில்லை... அதுவும் அவனுக்குச் சௌதாமினி பெண் கேட்டு.... தணிகாசலம் அதை மறுத்து விட்ட பின்னால் சுத்தமாக அவன் முகம்பார்த்துப் பேச அவளால் முடிந்ததில்லை...
இன்று மகள் தன் மனதில் வரித்து வைத்திருக்கும் மணாளன் அவன்தான் என்பதை அறிந்து கொண்டதால் அவள் அவன் முகம் பார்த்துப் பேச முயன்றாள்...
"உங்களால் எப்படி முடியும், தம்பி..."
"முடியாது என்பது முட்டாள்களின் அகராதி... நான் முட்டாள் என்பது உங்களின் எண்ணமில்லையே..."
கேள்வியைச் சுந்தரியிடம் கேட்டுக் கொண்டே.... உமாவின் முகத்தைப் பார்த்தான் சிவா... அவளது பார்வை உயர்ந்து அவன் மேல் ஒரு நொடி தன் வீச்சை வீசியது...
எதிர்பார்த்தது நடந்து விட்ட மகிழ்வில் அவனது கண்கள்பளபளத்தன... உமா சட்டென்று பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்...
"நீங்கள் கெட்டிக்காரர் என்பது எனக்கு இன்று... நேற்றுத் தெரிந்த விசயமில்லையே... அதேபோல உங்களின் மாமாவின் கோபம் பற்றியும் உங்களுக்குப் புதிதாய்த் தெரிய வேண்டியதில்லையே..."
"பிறந்ததிலிருந்து தெரியும் என்பதால் அதைப் போக்கும் வழிமுறை பற்றியும் எனக்குத் தெரியும்... நான் நாளைக்குச் சாயங்காலம் உங்கள் வீட்டிற்கு வருகிறேன், அத்தை..."
"வந்து..."
"முதலில் மாமாவைச் சரிப்படுத்தப் பார்ப்போம்... அதற்குப் பிறகு... அப்பாவிடம் நான் பேசுகிறேன்..."
சுந்தரியின் மனதில் இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது.. முதலாவதாக... மகளின் மனதுக்குப் பிடித்தவனைக் கண்டுபிடித்துத் திருமணப் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்து விட்டது... இரண்டாவதாக.... மகளின் மனதிற்குப் பிடித்தவனுக்கு... மகளைப் பிடித்திருப்பது...
உமாவின் மீது சிவா கொண்டிருந்த மையலை அவனது முகம் வெளிப்படையாகத் தெரிவித்தது... அவன் உமாவைப் போல் ரகசியப் பார்வை பார்க்கவில்லை... அவளை விழுங்கி விடுவது போல் பார்த்து வைத்தான்... திருமணம் பற்றி யார் தணிகாசலத்திடம் பேசுவது... என்று எல்லோரும் பயந்து கொண்டிருந்தபோது... தான் பேச முன் வந்திருக்கிறான்... திருமணம் ஆன நாள் முதலாய்... தன் கண்ணிசைவில்... கணவனைக் கட்டிப் போட்டிருந்த சுந்தரியாலேயே செய்ய முடியாத ஓர் காரியத்தைச் செய்து முடிப்பதாய் மிக எளிதாக்ச் சொல்கிறான்... இதை அவன் செய்ய நினைப்பது தன் மகளுக்காக என்பதை நினைத்துப் பார்த்தபோது... சுந்தரிக்கு அவன் மேல் பரிவு ஏற்பட்டது...
மறுநாள் சொன்னபடியே மாலை நேரத்தில் சிவா தணிகாசலத்தின் வீட்டிற்கு வந்தான்... காலையிலிருந்தே பரபரப்பாக நகம் கடித்துக் கொண்டு... சாப்பாடு உள்ளே இறங்காமல் வாசலைப் பார்த்துக் கொண்டிருந்த மகளின் பரிதவிப்பைக் காணாதது போல் கண்டு கொண்டிருந்த சுந்தரிக்கு... எதிர்பார்ததது போல் எல்லாமும் நடக்க வேண்டுமே... என்று கவலையாக இருந்தது...
வாசலில் அழைப்பு மணியின் ஒலி கேட்டதும்.. உமா பதட்டமாக எழுந்து நின்று வாசலைப் பார்க்க... சுந்தரி அவசரமாய் வாசலுக்குச் சென்று கதவைத் திறந்தாள்...
"அத்தை..." என்றபடி சிவா அங்கு நின்றான்...
"உங்களுடைய மாமா ஹாலில்தான் இருக்கிறார்... பார்த்துப் பேசுங்கள்... இருக்கிற பகையை அதிகப் படுத்தி விட்டு விடாதீர்கள்..."
"நீங்கள் கவலையே பட வேண்டாம் அத்தை... அதை நான் பார்த்துக் கொள்கிறேன்..."
சுந்தரி மாடிப்படியின் வளைவில் ஒளிந்து நின்று கொண்டு, விரல்கள் நடுங்கப் பார்த்துக் கொண்டிருந்த மகளைக் கவனித்தாள்..
'எல்லாம் நல்லபடி நடக்கவேண்டும்' என்று மனதிற்குள் கவலை எழுந்தது...
"வாங்க..."
சுந்தரி முன்னால் செல்ல... டிவி பார்த்துக் கொண்டிருந்த தணிகாசலம்...
"வாசலில் யார் வந்திருக்கிறது சுந்தரி?" என்று வினவினார்..
சுந்தரி பதில் பேசாமல் சமையலறைக்குள் போய்விட.. அவளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த சிவா.. முன்னால் வந்து தணிகாசலத்திடம் கை கூப்பினான்...
"வணக்கம் மாமா..."
அவனை அங்கே எதிர்பார்க்காத தணிகாசலம் சட்டென்று எழுந்து நின்றுவிட்டார்... பின் சுதாரித்துக் கொண்டவராய்..
"நீ எங்கே இங்கே வந்த...?" என்று கேட்டார்...
"ஏன் மாமா.. நான் இங்கே வரக் கூடாதா...? எனக்கு அந்த உரிமை இல்லையா...?"
"உரிமையைப் பற்றிப் பேசச் சொல்லி உன் அப்பா சொல்லி அனுப்பி வைத்தாரா....?"
"நான் சொத்து உரிமையைப் பற்றிப் பேசவில்லை.. சொந்தபந்தம் என்ற உரிமையைப் பற்றிப் பேசுகிறேன், மாமா... யாருக்கு வேண்டும் உங்கள் சொத்து...? இன்றைக்கு நான் ஒரு பெரிய வேலையில் இருக்கிறேன்... என் சம்பாத்தியத்தில் வாங்கிய கார்... சொந்த பிளாட்... கை நிறையச் சம்பளம் என்று வசதியாக இருக்கிறேன்...
எனக்கு என் அப்பாவின் சொத்தே தேவையில்லை... என்று நினைப்பவன் நான்... உங்கள் சொத்து எனக்கு எதற்கு...? எனக்கு வேண்டியது என் மாமாவின் சொந்தம்... நான் பிறந்தவுடன் கையில் தூக்கி... அவர் மடியில் என்னை உட்கார வைத்து மொட்டையடித்து.. காது குத்தி விட்ட மாமாவின் சொந்தம் எனக்கு வேண்டும்... அதைக் கூட உங்களால் கொடுக்க முடியாதா...?"
சமையலறையில் காபி கலந்து கொண்டிருந்த சுந்தரி மனதிற்குள் சிவாவின் அணுகுமுறையை மெச்சி 'சபாஷ்' போட்டுக் கொண்டாள்.
தணிகாசலம் சிவாவின் பேச்சில் அயர்ந்து போய் நின்றார்..
இப்படி அவன் பேசிக் கொண்டு வீட்டுக்குள் வந்து நிற்பான் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை....
"உட்கார்..." என்றபடி அமர்ந்தார்...
முதல் அடியை வெற்றிகரமாக எடுத்து வைத்து விட்ட சிவா... வெற்றிக் களிப்புடன் அமர்ந்தான்...
உள்ளேயிருந்து அவனுக்குக் காபி கொண்டு வந்து கொடுத்த சுந்தரி... மெச்சுதலான பார்வை ஒன்றை அவனை நோக்கி வீசி விட்டுச் சென்றாள்.
"அப்புறம்.. எங்கே வேலை பார்க்கிறாய்...?"
சொன்னான்....
"எவ்வளவு சம்பளம்...?"
சொன்னான்....
எல்லாவற்றையும் விசாரித்துக் கொண்டு வந்த தணிகாசலம்... இயல்பாக அந்தக் கேள்வியையும் கேட்டுவிட்டார்.
"எப்போ கல்யாணம் பண்ணிக் கொள்வதாக இருக்கிறாய்..?"
"நீங்கள் உங்கள் மகளை எப்போது எனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுப்பீர்களோ... அப்போதுதான் நான் கல்யாணம் பண்ணிக் கொள்வதாக இருக்கிறேன்..."
தணிகாசலம் அவனது தைரியத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனார்... எதிர்த்து நிற்கிறவனிடம் கொதிப்பைக் காட்டலாம்... உறவைக் கொண்டாடி... பாசத்தைக் காட்டி... 'நீயாக உன் பெண்ணை எனக்கு எப்போது கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறாயோ... அப்போது நான் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன்...என்று தன் விருப்பத்தைத் தெரிவித்து... வேண்டுகோள் வைப்பவனிடம் எப்படிக் கொதிப்பைக் காட்டுவது?
தணிகாசலம் தாடைளைத் தடவி யோசித்தார்... சிவா எழுந்து கொண்டான்...
"அப்போ... நான் போய் வரவா, மாமா...."
திரும்பவும் வருவேன் என்பதைச் சொல்லாமல் சொல்லி விட்டு அவன் போய்விட... சுந்தரி தன் வேலையை ஆரம்பித்தாள்..
"என்னங்க...அந்தத் தம்பி சிவா போன பாதையையே பார்த்துக் கொண்ட உட்கார்ந்திருக்கீங்க..."
"இல்லை... சுந்தரி.. இவன் அப்பன் ஒரு மாதிரி என்றால்.... இவன் வேற மாதிரி இருக்கானே...."
"உங்க தங்கச்சி வளர்த்த மகன் வேறு எப்படியிருப்பார்..." சுந்தரி பாசக் கனலை மூட்டிவிட்டாள்... நீரு பூத்த நெருப்பாக மனதின் அடி ஆழத்தில் தணிகாசலம் அமிழ்த்தி வைத்திருந்த பாசம் மேலே எழுந்து வரப் பார்த்தது... அவர் அதை மீண்டும் அமிழ்த்தப் பார்த்தார்.
"சௌதாமினி ஒன்றும்... என் கூடப் பிறந்த தங்கை இல்லையே..."
சுந்தரியா விடுகிறவள்.. கணவனின் கண்களைப் பார்த்தே அதில் உள்ள பாசத்தின் சலனத்திக் கண்டு பிடித்து விட்டவள்... அதை அறியாதது போல் பேசினாள்...
"ஆனால்... உங்கள் அம்மாவின் வளர்ப்பாயிற்றே..."
சுந்தரி எடுத்துக் கொடுத்தாள்.. அவள் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை....
"அதைச் சொல்லு... நாங்க இரண்டு பேரும் அடிச்சக்கிட்டாலும் அப்பாவுக்கு... சித்தப்பாவின் மேல் பாசம் போகவில்லை... கோவிலுக்கு இவர் சாமி கும்பிடவா போகிறார்? சித்தாப்பாவைப் பார்க்கத்தானே போகிறார்...!"
சமீப காலமாய்ச் சௌதாமினியுடன் ரகசிய ஆலோசனை 

நடத்தக் கோவிலுக்குச் சென்று வந்து கொண்டிருந்த சுந்தரி... 

தன் எண்ணவோட்டத்தைக் கணவன் கண்டு கொள்ளாமல் 

இருக்க.. முகத்தைத் திருப்பிக் கொண்டாள்



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஊமையின் ராகம் -6
ஊமையின் ராகம் -6
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s320/IMG-20191217-WA0035.jpg
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s72-c/IMG-20191217-WA0035.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-6.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-6.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy