ஊமையின் ராகம் -4

4 சிவாவிற்குப் பித்துப் பிடித்தது போல் ஆகிவிட்டது... வீட்டில் அவனுக்குப் பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்... பாலசுப்பிரமணியத்திடம் ப...


4
சிவாவிற்குப் பித்துப் பிடித்தது போல் ஆகிவிட்டது... வீட்டில் அவனுக்குப் பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்... பாலசுப்பிரமணியத்திடம் பேசத் தயங்கிய சிவா.. சௌதாமினியைத் தஞ்சம் அடைந்தான்.
"அம்மா.. எனக்கு இப்போது கல்யாணம் வேண்டாம்..."
"பின் எப்போது கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறாய்? தடியூன்றி... தொண்டுக் கிழவனாய் நடக்கும்போதா...?"
"நீங்கள் இப்படி வெளி இடத்தில் பெண் பார்ப்பதாக இருந்தால் எனக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணம் வேண்டாம்..."
சௌதாமினி சட்டென்று கை வேலையை நிறுத்தி விட்டு மகனின் முகம் பார்த்தாள்... அவளது விழிகள் அவன் முகத்தில் எதையோ தேடின...
"சிவா... நீ என்னடா சொல்கிறாய்...?"
"ஏம்மா... அவள் பிறந்தபோதே.. அவள்தான் உன் பொண்டாட்டின்னு என்கிட்ட சொல்லிட்டு... இப்ப என்னம்மா மாற்றிப் பேசுசிறீங்க...?"
சௌதாமினியின் மனம் ஆனந்தப் பரவசத்தில் ஆழ்ந்தது.. மகன் சொல்ல வருவதைப் புரிந்து கொண்டாலும் அவன் வாயாலேயே.. இன்னும் தெளிவாக உண்மையை வரவழைக்க அவள் விரும்பினாள்..
"யாரைடா சொல்கிற...?"
"ஏம்மா.. உங்களுக்கு அவள் யார்ன்னு தெரியாதா?"
"தெரியாதுடா.."
"அப்பாதான் வீம்பு பிடிக்கிறாருன்னா.. நீங்க அவரை விட வீம்பு பிடிச்சவங்களா இருக்கீங்களே..."
"நீதான் வீம்பு பிடிக்காத ஆளாச்சே.. நீதான் சொல்லேன்..."
"அவளைத்தான் சொல்கிறேன்ம்மா..."
"எவளைடா....?"
"உமாவைத்தான் சொல்கிறேன்... நீங்க அவளைத் தானே பிறந்தவுடன் என்னிடம் தூக்கிக் காட்டி.. உன் பொண்டாட்டின்னு சொன்னீங்க...?"
தணிகாசலம் பெரியப்பா மகனாக இருந்த போதிலும்.. ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வளர்ந்ததால்... சௌதாமினியைத் தன் சொந்தத் தங்கை போலவே பாவித்தார்... அதனால்.. தான்  முதலில் கல்யாணம் செய்து கொள்ள மறுத்தவிட்டார்...
"கல்யாண வயசில் தங்கச்சியை வீட்டில் வைத்துக் கிட்டு நான் முதலில் கல்யாணம் பண்ணிக்கிட்டால் நல்லாயிருக்காதுப்பா.."
அதன்படி சௌதாமினி... பாலசுப்பிரமணியத்தின் கல்யாணம் முதலில் நடந்தது.. அதன் பின்னும்... தங்கையின் தலைத் திபாவளி... முதல் பிரசவம்... பிறந்த குழந்தைக்குக் காதணி விழா நடத்த தாய்மாமனாகச் சீர் செய்தல் என்று தணிகாசலம் தன் கல்யாணத்தை மறந்து நிற்க... சௌதாமினி அருணகிரியோடு சண்டை போட்டாள்...
"ஏன் பெரியப்பா.. அண்ணனுக்குக் கல்யாணம் பண்ணணும்கிற எண்ணமே உங்களுக்கு இல்லையா...?"
"எனக்கிருந்து என்னம்மா பிரயோசனம்... அவனுக்கு அந்த எண்ணமே இல்லாமல்... தங்கையைச் சீராட்டிக் கிட்டு இருக்கிறானே..."
இதைக் குறை போல்... மிகப் பெருமையாய்க் கூறிச் சிரித்த அருணகிரியையும்... அதைப் பெருமையுடன் கேட்டுக் கொண்டிருந்த பெரியன்னை சரஸ்வதியையும் நினைக்கும் போது இப்போதும் சௌதாமினியின் நெஞ்சம் நெகிழ்ந்தது...
அவளுக்குத் தாய் இல்லை... சௌதாமினி சிறு வயதாக இருக்கும் போதே வேதகிரியின் மனைவி மரகத வள்ளி இறந்து விட்டாள்.. தாயில்லாத குறை தெரியாமல் சௌதாமினியை வளர்த்து ஆளாக்கியது சரஸ்வதி தான்... பெற்றவளுக்கும் மேலாக இருந்த அந்தப் பெரியன்னையின் பேத்தியைத் தன் மகனுக்குத் திருமணம் செய்து வைக்க முடியாமல் போய்விடுமோ... என்ற கவலை அவளது நெஞ்சைச் சமீப காலமாக அரித்துக் கொண்டிருந்தது...
தணிகாசலத்தின் திருமணம் முடிந்தபோது... சிவா நான்கு வயதுக் குழந்தையாக இருந்தான்... தணிகாசலம்... சுந்தரி தம்பதியினருக்கு உமா மகேஸ்வரி பிறக்கும் போது.. சிவாவின் வயது ஆறு..
பாலசுப்ரமணியம்.. சௌதாமினி தம்பதியினருக்குச் சிவா மட்டுமே ஒற்றை மகனாய் இருந்த போது.. தணிகாசலம் - சுந்தரி தம்பதியினருக்கும் உமா மகேஸ்வரி ஒற்றை மகளாய் இருந்தாள்...
அந்தக் கணக்கீட்டில்தான் பாலசுப்பிரமணியம் என்றைக்கு இருந்தாலும்... உமாமகேஸ்வரிக்குச் சீதனமாய் வரும் சொத்துத்தானே... சிவாதான் உமாவைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறானே என்ற எண்ணத்தில்... முதலிலேயே டவுனுக்குள் இருந்த வீட்டைக் கேட்டு விட்டார்...
வார்த்தை முற்றிப் பிரிந்து வந்த பின்னாலும்.... அடிக்கடி சௌதாமினியிடம் அதைக் கூறுவார்.
"ஏண்டி... அந்தப் பெண் உமாவைத்தான் நம்ம சிவாவுக்குக் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறோமே.. அந்த வீடு எங்கே போய் விடப் போகிறது... உன் அண்ணன் மகள்தானே அந்த வீட்டில் வாழப் போகிறாள்...? அந்த நினைப்பு உன் அண்ணன் மனதில் இருந்தால்... இப்படி ஒரு வார்த்தையை என்னைப் பார்த்துக் கேட்பானா...?"
சௌதாமினிக்கும் அந்த வருத்தம் இருக்கும்... டவுனில் ஒன்றும்... புறநகரில் ஒன்றும்.. பரம்பரை வீடுகள் உள்ள  அந்தக் குடும்பத்தில்.... எந்த வீடு யாருக்கு வந்து சேர்ந்தாலும் அதில் இசைந்து வாழப் போகிறவர்கள் தாங்கள் பெற்ற பிள்ளைகள்தானே என்ற நினைவு கொஞ்சமாவது.. பெரியப்பாவின் மகனுக்கு இருந்திருந்தால் சௌதாமினியின் கணவரைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தையைக் கேட்டிருக்க மாட்டார்தான்... ஒரு வேளை... தன் வீட்டில் பெண் கொடுக்கத் தமையன்  நினைக்கவில்லையோ...?
சௌதாமினியின் சந்தேகத்தை உறுதிப் படுத்துவது போல, தணிகாசலம் பகையுணர்வு மிகுந்தவராய்ப் பிரிந்தே இருந்தார்... அவரது விருப்பப்படி டவுனில் இருந்த
வீட்டை அவருக்கே சௌதாமினி விட்டுக் கொடுத்து விட்டு... புறநகர் வீட்டைப் பெற்றுக் கொண்ட பின்பும்... அவரது கோபம் குறையவில்லை... உறவினர் விட்டு விசேஷங்களில் சௌதாமினியையும்... அவளுடைய கணவரையும் பார்க்க நேர்ந்தாலும்... பாராதது போல் போய் விடுவார்...
உமா மகேஸ்வரி கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்த  பின்பு சௌதாமினி... இரு வீட்டினருக்கும் பொதுவான உறவினர் மூலம் உமாமகேஸ்வரியைப் பெண் கேட்கத் தான் செய்தாள்... ஆனால் தணிகாசலம் ஒரேயடியாய் முடியாது என்று சொல்லிவிட்டதாகத் தூது போன உறவினர்கள் வந்து சொன்னார்கள்...
'அவர் அது மட்டுமா சொன்னார்....?' சௌதாமினி பெருமூச்சு விட்டாள்...
"கை நழுவிப் போன டவுன் வீட்டைத் திரும்பவும் கைப்பற்றிக் கொள்ளலாமுன்னு புருசனும் பெண்டாட்டியும் திட்டம் போட்டுப் பெண் கேட்கிறாங்களா...?" என்று கேட்டாராம்...
பாலசுப்பிரமணியத்திற்கு இது தெரிய வந்தபோது என்றைக்கும் கை நீட்டாத மனிதர்... தன் மனைவியைக் கைநீட்டி அடித்து விட்டார்...
"உன் அண்ணன் அன்றைக்கே எனக்கு ஊரான் சொத்துக்கு ஆசைப்படுகிறவன்னு பெயர் கட்டி விட்டான்டி. நீ இன்னும் அந்தப் பெயரை நிலைக்க வைக்கப் பார்கக்கிறாயா..." என்று கொதித்து விட்டார்.
அதன் பின் சௌதாமினி... கணவனுக்குத் தெரியாமல் உமாவைப் பெண் கேட்கும் முயற்சியைக் கைவிட்டு விட்டாள்... பாலசுப்ரமணியம் சிவாவுக்கு வெளியே பெண் தேட ஆரம்பித்தபோது அவள் தடுக்கவில்லை... ஆனால் அவளது அடிமனதில் பெரியப்பா மகனின் மகனைத் தன் மருமகளாக்கிக் கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம்.. அப்படியே இருந்தது...
அவள் எதிர்பாராமல் சிவா... உமாவைப் பற்றிப் பேச ஆரம்பித்ததும் அவள் மனதிற்குள் நம்பிக்கை துளிர் விட்டது...
"சிவா... உடம்பெல்லாம் எண்ணெயைப் பூசிக் கொண்டு மண்ணில் உருண்டு புரண்டாலும்... ஒட்டுகிற மண்தான் ஒட்டும்..."
"ஆஹா.. என்ன ஒரு தத்துவம்.. என்ன ஒரு தத்துவம்..."
"ஏன்டா, என் வேதனை உனக்குக் கிண்டலாகப் போய்விட்டதா?"
"சும்மாயிருங்கம்மா... எத்தனை நாள்தான் இதே பல்லவியைப் பாடுவீங்க்... கொஞ்சம் மாத்தி யோசிக்க மாட்டீங்களா...?"
"என்னடா சொல்கிற...?"
"எதுக்கு வீணாய் உடம்பில் எண்ணெயைப் பூசிக் கொண்டு மண்ணில் உருண்டு புரளணும்...? கொஞ்சம் பசையை நுனி விரலில் தடவிக் கொண்டு... எந்த மண் தேவையோ... அந்த மண்ணில் விரலை வைத்தால்... அது பாட்டுக்கு ஒட்டிக் கொள்ளாதா?"
சௌதாமினி சிரித்து விட்டாள்.
"பிழைத்துக் கொள்வடா மகனே..."
"உமாவை எனக்குக் கல்யாணம் பண்ணி வைத்தால் இன்னும் நன்றாகப் பிழைத்துக் கொள்வேன்..."
"இதை உன் அப்பாவிடம் யாருடா சொல்வது?"
"ஏன்... நீங்கள் சொல்ல வேண்டியதுதானே..."
"வேறு வினையே வேண்டாம்... ஏற்கெனவே... வைஜெயந்தி அத்தை மூலம் அண்ணன்கிட்ட உன் அப்பாவுக்குத் தெரியாமல் பெண் கேட்டு விட்டதற்கு... உன் அப்பா என்னைக் காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சி எடுத்துவிட்டார்..."
"அப்போ... எனக்கென்ன வழி...?"
"ம்ம்... யோசிக்கிறேன்..."
சௌதாமினி யோசித்தாள்... வைஜெயந்தி அத்தையிடம் தணிகாசலம் வீட்டில் என்ன நடக்கிறது என்று விசாரித்தாள்..
"அதையேன் கேட்கிற சௌதா... உன் அண்ணன் மகள் இப்பத்தான் மூன்றாவது வருசம் டிகிரி படித்துக் கொண்டிருக்கிறாள்.. அவள் படிப்பை முடிக்கிறதுக்குள்ள உன் அண்ணன் மாப்பிள்ளை தேடி அலைய ஆரம்பித்து விட்டார்..."
"எதுக்கு இத்தனை அவசரமாம் அத்தை...?"
"வேறு எதுக்கு... எல்லாம் நீ பெண் கேட்டு விட்ட பயம் தான்... பொண்ணு படிப்பு முடிந்து வீட்டில் ஒருநாள் கூட உட்காரக் கூடாதாம்.. அதனால்... காலில் சுடு தண்ணியை ஊற்றிக்கிட்டு பறக்கிறான்..."
"சம்பந்தம் அமைந்ததா அத்தை...?"
"அமையாமல் என்ன செய்யும்...? தணிகாசலம் இப்ப தாசில்தார் ஆகிவிட்டான். டவுனில் இரண்டு வீடுகள் கட்டிப் போட்டிருக்கிறான்... கிராமத்தில் தோப்பு... துரவு... எல்லாம் உமாவுக்குத்தானே... அவளைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள நீ.. நான்னு போட்டி போட்டுக் கொண்டு வரத்தானே செய்வாங்க..."
"அதுக்காக.. என் சொந்தத்தை அண்ணன் தள்ளி வைக்கலாமா?"
"அது உனக்குத் தெரியுது... எனக்குத் தெரியுது... அவனுக்குத் தெரியலையே..."
"எதுவும் முடிவாகி விட்டதா அத்தை...?"
அதற்கு வைஜெயந்தி சொன்ன பதில் கேட்டுச் சௌதாமினியின் நெற்றியில் சிந்தனை ரேகை படிந்தது...
இன்றைய நடுவயதினர் எல்லாம் ஒருநாளில் இளம் பருவத்தைத் தாண்டி வந்தவர்கள்தானே... அவர்களுக்குத் தெரியாதா... இளையவர்களின் ஆழ்மனதைப்பற்றி....?



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஊமையின் ராகம் -4
ஊமையின் ராகம் -4
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s320/IMG-20191217-WA0035.jpg
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s72-c/IMG-20191217-WA0035.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-4.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-4.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy