ஊமையின் ராகம் -3

3 சிவ கைலாசத்தின் தாய் சௌதாமினி... தணிகாசலத்தின் ஒன்று விட்ட தங்கை... தணிகாசலத்தின் தாத்தா முத்தையாவிற்கு இரண்டே மகன்தான்... மூத்தவர்...


3

சிவ கைலாசத்தின் தாய் சௌதாமினி... தணிகாசலத்தின் ஒன்று விட்ட தங்கை... தணிகாசலத்தின் தாத்தா முத்தையாவிற்கு இரண்டே மகன்தான்... மூத்தவர் தணிகாசலத்தின் தந்தையான அருணகிரி.. இளையவர் சௌதாமினியின் தந்தையான வேதகிரி... கூட்டுக் குடும்பமாக ஒரே வியாபாரம் செய்து வந்த அருணகிரியும்... வேதகிரியும் அவர்களது பெற்றோர்களின் மறைவிற்குப் பின்னாலும் சொத்தைப் பங்கிட்டுக் கொள்ள விரும்பவில்லை..
ஆனால்... அருணகிரியின் மகன் தணிகாசலம்.. படித்து சர்விஸ் கமிசன் பரிட்சை எழுதி... தாலுகா ஆபிஸில் வேலைக்குச் சேர்ந்து ரெவின்யூ இன்ஸ்பெக்டர் ஆகிவிட... வேதகிரியின் ஒரே மகளான சௌதாமினி வெட்டினரி டாக்டரான பாலசுப்பிரமணியத்திற்கு மனைவியாகி விட்டாள்.
இரு சகோதரர்களின் வாரிசுகளும் வியாபாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கிவிட.. அவர்களின் பணத் தேவைக்காக அருணகிரியும்.. வேதகிரியும் சொத்தைப் பங்கிட்டுக் கொள்ள நேர்ந்தது..
சொத்து பகிரும்போது டவுனில் உள்ள வீட்டைச் சௌதாமினியின் கணவர் கேட்க.. தணிகாசலம் வழக்கமான கொதிப்புடன்..
"நீ யார் அதைக் கேட்க...? நீ இந்தச் சொத்திற்கு உடந்தைப் பட்டவனா...?" என்று கேட்டு விட்டார்...
தன்மானம் மிகுந்த பாலசுப்பிரமணியம் அப்போதே அந்த இடத்தை விட்டு வெளியேறி விட.. சௌதாமினி.. தமையனுடன் மல்லுக்கு நின்று விட்டாள்..
வார்த்தை தடித்து... இரு குடும்பங்களுக்கும் நடுவே பேச்சு வார்த்தை நின்று விட்டது.. ஒற்றுமைக்குப் பெயர் பெற்ற அருணகிரியும்.. வேதகிரியும்.. கோவிலில் சந்தித்து உரையாடிக் கொள்ளும் அளவிற்குப் பகை முற்றிவிட்டது...
குடும்பத்திற்குள் சண்டை நடந்து... இருவீட்டாரும் பிரியும்போது... உமாமகேஸ்வரியின் வயது பதினைந்து... சிவகைலாசத்தின் வயது இருபத்தொன்று...
சிறு வயதிலிருந்தே.. இன்னார்க்கு.. இன்னார் என்று வளர்ந்து வந்தவர்கள் திடீரென்று பிரிவு நேரவும் துடித்துப் போய் விட்டார்கள்...
வாய் பேசாத உமா மகேஸ்வரியிடம் யாருமில்லாத தனிமையில் அவள் சிக்கிக் கொண்டால்..
"ஏய்ய்.. இங்கே வாடி..." என்றுதான் உரிமை எடுத்துப் பேசுவான் சிவகைலாசம்...
எட்டு வயதில் அறியாச் சிறுமியாய் அவளிருக்கும் போதே... "ஏன்டி... உன் கிளாஸ்மேட் ரமேஷ் கிட்டப் பேசின...? நீ என் பெண்டாட்டி... நினைவிருக்கட்டும்.. மீறி அவன் கிட்டப் பேசினால் பல்லை உடைத்து விடுவேன்.. உன் பல்லை இல்லை... அவன் பல்லை..." என்று மிரட்டி வைத்திருந்தவன் சிவகைலாசம்...
மற்றவர்களுக்குத் தன்னால் துன்பம் நேர்ந்து விடக் கூடாது என்ற கொள்கை படைத்த சாதுப் பெண் உமா மகேஸ்வரி என்பது அவனுடைய கணிப்பு... அதனால் ரமேஷின் பல்லைக் காப்பாற்ற அவனுடன் பேச மாட்டாள் என்று எதிப்பார்த்தான்.. அவனது எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை.. உமா ரமேஷுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டாள்...
"ஏய்ய்... தண்ணீர் கொண்டு வாடி..."
"ஏன்டி... முகம் கழுவிக் கொண்டு வந்தால் டவல் எடுத்துத் தர மாட்டாயா...?"
"ஏய்ய்... டிபன் எடுத்து வைடி..."
தணிகாசலம் அருணகிரி, வேதகிரி குடும்பத்துடன் சொந்தமான பரம்பரை வீட்டில் வசித்து வந்து கொண்டிருந்த போது... தாத்தாக்களைப் பார்க்க என்று... சௌதாமினியுடன் வாரத்திற்கு நான்கு நாள்கள் அங்கே வந்து விடும் சிவகைலாசம்... உமா மகேஸ்வரியைத் தனிமையில் உரிமையோடு அதட்டுவான்...
அவளுக்கு அவனின் அந்த உரிமை கலந்த அதட்டல் மிகவும் பிடிக்கும்.. மிரள.. மிரள விழித்துக் கொண்டு அவன் கேட்பதையெல்லாமல் உடனே செய்து கொடுப்பாள்...
அவளை ஓட... ஓட... விரட்டுவதில் அவனுக்குத் தனிச் சுகம் கிடைக்கும்... அப்படி ஓர் கணவன்.. மனைவி பந்தத்தில் சிறு வயது முதல் பிணைக்கப்பட்டு வளர்ந்த சிறிசுகள்... பிரிவு நேரவும் அதிர்ந்து நின்றார்கள்..
சிவகைலாசம், உமாமகேஸ்வரி படிக்கும் பள்ளிக்குப் போய், அவளைப் பார்த்தான்.. அவள் பயந்தாள்...
"அத்தான்.. இங்கேயெல்லாம் வராதீங்க..." என்று பட்டென்று சொல்லியும் விட்டாள்...
"வரக்கூடாதா... நான் உன்னைப் பார்க்க வரவே கூடாதா...?" என்று அவளின் விழிகளை ஊடுருவிப் பார்த்துக் கேட்டவன்.. சட்டென்று போய் விட்டான்..
அன்று இரவு முழுவதும் உமா தூங்கவில்லை... இருளின் கனத்த போர்வையில்.. எவரும் அறியாமல் மௌனமாய்க் கண்ணீர் விட்டுத் தலையணையை நனைத் தாள் அவள்...
அதற்குப் பின் அந்தப் பள்ளிக்கு அவளைப் பார்க்கச் சிவா வரவேயில்லை.. எதிர்பார்த்த கண்கள் பூத்தப் போக... ஏன் அப்படிச் சொன்னோம் என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள் உமா...
ப்ளஸ் டூ முடிந்து அவள் கல்லூரியில் சேர்ந்தாள்... கல்லூரியில் இருந்து அவள் திரும்பிக் கொண்டிருந்த ஓர் மழைநாளில்... அவள் அவனை மீண்டும் சந்தித்தாள்...
மழையில் சுடிதார் நனைந்து விட... பஸ் நிறுத்தத்தில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தவளின் அருகே தன் காரை நிறுத்தி விட்டு இறங்கி வந்தான் அவன்.
"வா... உன்னை வீட்டில் டிராப் பண்ணுகிறேன்..."
மூன்று ஆண்டுகள் கழித்துத் திடீரென்று தன் முன் தோன்றிய அவனைக் கண்ட பரவசத்தில் பார்த்தை வராமல் தவித்தாள் உமா.. தன் மனதின் படபடப்பை மறைக்கத் தலையைக் குனிந்தும் கொண்டாள்.. அவன் முகம் கடுத்தான்...
"ஏய்.. நான் கேட்பது உன் காதில் விழுகிறதா இல்லையா..? அக்கம் பக்கத்தில் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் வயதுப் பெண்ணிடம் நான் வம்பு பண்ணுகிறேன்னு நினைத்து எனக்குத் தர்ம அடிவாங்கிக் கொடுக்க.. மனதில் திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறாயா...?"
அவளுக்குக் கண்கள் கரித்தன... 'நான் அப்படிச் செய்வேனா...?' என்று கேட்க நினைத்தாள். வார்த்தைகள் வெளிவராமல் தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்டன.
தேவர் மகன் திரைப்படத்தில் கமல்ஹாசன் கேட்ட போது...'இஞ்சி இடுப்பழகா...' என்று பாடிய ரேவதிக்குத் தொடர்ந்து பாட வார்த்தைகள் வராமல்... ஏன் காற்று வந்தது என்பதை உணர்வு பூர்வமாய் அன்று அவள் உணர்ந்து கொண்டாள்..
அதை அறியாத சிவா பல்லைக் கடித்தான்...
'இவ்வளவு சொல்கிறேன்... அசைகிறாளா பார்... அப்படியே அப்பனின் திமிரை மொத்தமாய் குத்தகை எடுத்துக் கொண்டு பிறந்து வந்திருக்கிறாள்... கல்லூளி மங்கி...'
"இப்ப வரப் போகிறாயா... இல்லையாடி.."
அவன் குரலை உயர்ந்த.. அக்கம் பக்கத்தினர் லேசாகத் திரும்பிப் பார்த்தார்கள்.. உமா கிலேசம் அடைந்தாள்...
"எல்லோரும் பார்க்கிறாங்க..."
அவள் மெல்லிய குரலில்தான் முணுமுணுத்தாள்... ஆனால் அவன் என்னவோ.. அவனைத் தொட்டுத் தழுவிக் காதல் சொல்லி விட்டது போல் சிவா மகிழ்ந்து போய்விட்டான்...
"பார்த்தால் என்ன...?"
"உங்களுக்கு ஒன்றுமில்லை... எனக்குத்தான் எல்லாமும்.." காலம்.. காலமாய் மனதின் உணர்வுகளைத் தங்களுக்குள்ளே புதைத்துக் கொண்டு வாழ நேர்ந்த பெண்களின் தலைவிதியை நினைத்துத் துயரத்துடன் கூறினாள் உமா...
அவனோ பேச்சை வளர்த்த விரும்பினான்... மூன்று ஆண்டுகள் கழித்து வாய்திறந்து அவள் சிந்தும் வார்த்தை முத்துக்களை விட்டுவிட அவன் தயாராக இல்லை...
"உனக்குத்தான் என்ன வந்துவிட்டது...? என்னோடு பேசினால் உன் கல்யாணம் நின்று போய்விடுமா...?"
அவள் செல்லக் கோபத்துடன் முறைப்பாள் என்று அவன் எதிர்பார்த்து நிற்க... அவளோ...
"எனக்கு பஸ் வந்து விட்டது..." என்று ஓடிப்போய் வந்து நின்ற பேருந்தில் ஏறிக் கொண்டாள்...
கண் பார்வையிலிருந்து பேருந்து மறையும் வரை அதை வெறித்துப் பார்ததுக் கொண்டு நின்ற சிவாவிற்கு மனதில் கோபம் கொந்தளித்தது.
மறுநாள் அவளது கல்லூரிவாசலில் காருடன் நின்று கொண்டிருந்தான் சிவா.. அவனைக் கண்டதும்... தோழிகளுடன் பேசிக் கொண்டே கல்லூரியை விட்டு வெளியே வந்த உமா கால்கள் பின்ன நின்று விட்டாள்..
அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு கைகளை முன்புறம் மடித்துக் கட்டிக்கொண்டு... காரில் சாய்ந்த வண்ணம் அசையாமல் நின்றான் சிவா...
அவனைக் கடந்து செல்ல முடியாமல்.. தலை கவிழ்நது.. மனம் சிறகடிக்க அவனருகில் வந்து நின்றவள்.. வாயை வைத்துக் கொண்டு சும்மாயிருக்க மாட்டாமல்...
"இங்கேயெல்லாம்... ஏன் வருகிறீங்க, அத்தான்..." என்று கேட்டு வைத்தாள்...
"ஏன்.. வந்தால் என்ன...?" அவன் அமர்த்தலாகக் கேட்டான்...
"என் பிரண்ட்ஸ் என்னைத் தப்பாக நினைப்பார்கள்..."
"நான் என்ன உன்னையா பார்க்க வந்தேன்..?"
"பின் வேறு யாரைப் பார்க்க வந்தீங்களாம்..."
"கலர் பார்க்க வந்தேன்டி..."
"கலர் பார்க்கவா...?"
"ஆமாம்டி... இங்கே பார் எத்தனை பிகர்... கலர்... கலராய் அழகாய் வருகிறார்கள்... அவர்களைப் பார்ப்பதை விட்டு... உன்னைப் பார்க்க நான் ஏன் வரப்போகிறேன்..."
இப்போதும் அவள் கோபமாய் முறைக்கவில்லை... அவன் அவளுடைய முறைப்பை எதிர்பார்த்து நிற்க.. அவளோ அமைதியாய் அங்கிருந்து நகரப் போனாள்...
"ஏய்... எங்கேடி போகிறாய்...?"
"நீங்கள்தான் என்னைப் பார்க்க வரவில்லையே... வேறு யாரையோ பார்க்க வந்திருக்கீங்க போல இருக்கே..."
"அந்த 'வேறு யார்'... யார் என்றுதான் நீயே அடையாளம் காட்டேன்."
"நான் காட்டவா...?"
"வேறு யார் காட்டுவது..? உனக்குத்தானே உன் காலேஜ் பெண்களின் குணநலன்கள் பற்றித் தெரியும்..."
உமா மகேஸ்வரியின் மனம் சிணுங்கியதை... அவளது முகம் உணர்த்தியிருந்தால் சிவா மிகவும் சந்தோசப்பட்டிருப்பான்... அவளோ மௌனமாகக் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள்...
"என்னடி... நேரமாகி விட்டதா...? போ... போ..."
"நீங்கள் போகவில்லையா...?"
"ம்ம்.. எல்லாம் என் நேரம்டி... நிம்மதியாய் சாப்ட்வேர் என்ஜினியர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் என்னை...ரோட்டோர ரோமியோ போல்... வுமன்ஸ் காலேஜ் வாசலில் நிற்க வைத்து விட்டு... கேள்வி வேறு கேட்கிறாயா...?"
"நானா உங்களை வரச் சொன்னேன்...?"
"அப்படிச் சொல்லியிருந்தால்தான் பரவாயில்லையே.. நீ அப்படிச் சொல்கிற ஆளா?"
 "எனக்கு நேரமாகிறது அத்தான்..."
"அத்தான்... கேட்கவே காது குளிர்கிறது..நான் உனக்கு அத்தான் என்பது உனக்கு நினைவு இருக்கிறதா...?"
அவள் உதடு கடித்துத் தன் உணர்வுகளை அடக்கிக் கொள்ள... அவன் காரில் ஏறிப் போய் விட்டான்..
'நீயும் காரில் வா என்று ஏன் என்னைக் கூப்பிடவில்லை...?
முதல்  நாள் அவனது வேண்டுகோளை மறுத்து.. பஸ்ஸில் ஏறிச் சென்றதை மறந்துவிட்டு.. இரவு முழுவதும் அழுது தலையனையை நனைத்தாள் உமா...
அடுத்த நாள் கல்லூரி வாசலில் அவனை அவளது விழிகள் தேடின.. ஆனால் சிவா வரவில்லை...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஊமையின் ராகம் -3
ஊமையின் ராகம் -3
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s320/IMG-20191217-WA0035.jpg
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s72-c/IMG-20191217-WA0035.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-3.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-3.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy