ஊமையின் ராகம் -24

24 " நீயும் உட்கார் , உமா..." சரஸ்வதி உமாவைச் சிவாவின் அருகே அமர வைத்துக் கொண்டாள்.. பெரியவர்கள் தங்களின் பேரப் பிள்ளைகள்...


24

"நீயும் உட்கார், உமா..." சரஸ்வதி உமாவைச் சிவாவின் அருகே அமர வைத்துக் கொண்டாள்..
பெரியவர்கள் தங்களின் பேரப் பிள்ளைகள் ஒன்று சேர்ந்து அமர்ந்திருப்பதைக் கண்டு மனம் பூரித்தனர்.. அவர்களது பூரிப்பு வார்த்தைகளில் வெளிப்பட்டது...
"என்னவோ... போ... வேதா... அண்ணனும்... தங்கையும் அடிச்சுக்கிட்டுப் பிரிந்து நின்று விட்டாங்களேன்னு மனதிற்குள் வேதனைப்பட்டேன்.. இப்போது அந்த வேதனை தீர்ந்து... மனதிற்கு நிறைவாக இருக்கிறது...." என்றார் அருணகிரி...
"சௌதாவின் மனசு பூராவும்.. அண்ணன் மகளைத் தன் வீட்டிக்கு மருமகளாய்க் கொண்டு வரணும் என்கிறதில்தான் இருந்தது... ஆனால் ஊடே பேசப் போனவங்களை... தணிகாசலம் விரட்டியடிச்சுக்கிட்டு இருந்தான்.. உமாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கவும் ஆரம்பித்து விட்டான்.. நல்ல வேளையாக... உமா... மனது வைத்து... இரண்டு குடும்பத்தையும் ஒன்று சேர்த்துவிட்டாள்..." பேத்தியின் தலை கோதியவாறு சரஸ்வதி கூறவும்... சிவா துணுக்குற்றான்...
'பாட்டி பேசுவதில் ஏதோ செய்தி இருப்பது போலத் தோன்றுகிறதே...' அவன் மனதைப் போட்டு உழப்பிக் கொண்டு இருந்த போது... வேதகிரி அதை அதிகப் படுத்துவது போல் பேசி வைத்தார்.
"ஆமாம் அண்ணி.. சிவா ஒரு வழியாய் உமாவைக் கல்யாணம் பண்ணிக் கொளள்ச் சம்மதித்து விட்டான்.. ஆனால் உமா என்ன சொல்வாளோ என்று என் மனதிலும் வதக்... வதக்கென்று இருந்தது... வாய் பேசாத குழந்தை.. பெரியவங்க மனசு போல நடந்து... நம்மை ஒன்று சேர்த்திட்டா..."
சிவாவிற்கு அந்தப் பேச்சு பிடிக்கவில்லை... அவன் எழுந்து கொண்டான்....
"என்ன சிவா...?" என்று வினவிய சரஸ்வதியிடம்...
"தலை வலிப்பது போல் இருக்கு பாட்டி.. போய்க் குளித்து டிரஸ் சேன்ஜ் பண்ணினால் சரியாகி விடும்ன்னு நினைக்கிறேன்... நீங்கள் பேசிக் கொண்டிருங்கள்..." என்று கூறிவிட்டு.. அறையை நோக்கிப் போய்விட்டான்...
உமா அவன் சொல்வதைக் கூடக் கவனிக்கமால்.. பாட்டியிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டு உட்கார்ந்திருப்பதைக் கண்டு அவனுக்கு என்னவோ போல் இருந்தது...
அறைக்குள் சென்று உடையை மாற்றிக் கைலிக்குள் புகுந்தவன்.. குளியலறைக்குள் நுழைந்தான்.. குளித்து முடித்துக் கட்டிலில் விழுந்து... யோசனையுடன் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்...
எவ்வளவு நேரம் அப்படியே படுத்திருந்தனோ... அவனுக்கே தெரியவில்லை... வெகு நேரம் கழித்து அறைக் கதவைத் திறந்து கொண்டு உமா உள்ளே வந்தாள்.. அவள் முகத்தில் சந்தோசம் நிறைந்திருந்தது....
"என்னடி.. முகம் பூராவும் மத்தாப்பூ கொளுத்திப் போட்டது போல்... சந்தோசம் தாண்டவமாடுது... உன் சொந்த பந்தம் வந்திருக்கிற சந்தோசமா...?" அவன் ஒரு மாதிரியான குரலில் வினவினான்...
அதை உணராதவளாய் வெள்ளையாய்ச் சிரித்தாள் உமா... அவன் அருகே கட்டிலில் சுவாதீனமாய் அமர்ந்து கொண்டு... விழி விரியப் பேசினாள்...
"பின்னே... இருக்காதா... பெரியவங்க ஒன்று கூடியிருப்பது எவ்வளவு சந்தோசமாய் இருக்கிறது தெரியுமா....?"
"ஓ... நம்ம கல்யாணம் நடந்ததால்தான் அவங்க ஒன்று கூடி இருக்கிறாங்க.. இல்லையா...?"
அவன் மனதில் ஓடிய சிந்தனையின் ஓட்டத்தை அறியாதவளாய் அவள் பின்னலில் விரல்விட்டு நீவியவாறு பதில் சொல்லி விட்டாள்...
"ஆமாம் அத்தான்... அதிலென்ன சந்தேகம்...?"
"உமா..." அவன் ஆழ்ந்த குரலில் அழைத்தான்...
"ம்ம்.." அவள் அழைப்பிலிருந்த குரல் வேறுபாட்டை உணராமல் அவள் விழியுயர்த்தினாள்...
"ஒரு வேளை நம் கல்யாணம் நடந்திராவிட்டால்...?"
அவள் சட்டென்று அவன் இதழ்பொத்தினாள்.. அவன் மனதில் திருப்தி உதயமானது... மூடியிருந்த அவளது கையில் அவன் முத்தமிட்டான்... ஆனால்... அந்த திருப்தி அடுத்த நொடியில் மறைந்து போனது...
"ஏன் அத்தான் அச்சானியமாகப் பேசுகிறீங்க.. நானே நம் கல்யாணத்தால் பெரியவங்களை ஒன்றுசேர்க்க முடிந்ததே என்று மன நிறைவாக இருக்கிறேன்... இப்போது போய் இப்படிப் பேசுகிறீங்களே..."
"ஓ.. அப்படியானால்.. நம் கல்யாணத்தால்.. இவர்கள் ஒன்று சேர்ந்ததுதான் உனக்கு நிறைவாக இருக்கிறது இல்லையா...?"
"என்ன அத்தான் இப்படிக் கேட்டு விட்டிங்க.. நீங்க பிறந்ததில் இருந்து.. அம்மா.. அப்பான்னு மட்டும் வாழ்ந்தவங்க.. நான் அப்படியில்லை.. அம்மா... அப்பா... தாத்தா.. பாட்டி... சின்னத் தாத்தான்னு பெரிய குடும்பத்தில்... கலகலன்னு வளர்ந்தவள்... நம் இரு குடும்பங்களுக்கும் இடையே சண்டை முற்றிபோய்ப் பேச்சு வார்த்தை இல்லாமல் போய் விட்ட பின்பு.. சின்னத் தாத்தா வீட்டை விட்டுப் போய் விட்டார்... என் தாத்தா...
பாட்டியின் முகத்தில் சிரிப்பு என்பதே இல்லாமல் மறைந்து விட்டது.. இப்போது இவங்க ஒன்று சேர்ந்து சிரிக்கிறதைப் பார்க்கும் போது.. இது என்னால் நடந்த விசயம்ன்னு மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது... என் ஒருத்தியால் இவர்களை ஒன்று
சேர்க்க முடிந்திருப்பதை நினைத்துப் பெருமையாக இருக்கிறது..."
யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது போல்.. உமா.. தன் பேச்சால் கெட்டாள்...

25
தவளை தன் வாயால் கெடும்.. உமாவும்.. அதைப் போல வார்த்தைகளைக் கொட்டி... தன் வாழ்வைத் தானே கெடுத்துக் கொண்டாள்..
சிவாவின் மனதில் புயல் அடிக்க ஆரம்பித்து விட்டதை உணராமல் அவள் மேலே தான் நன்றாகப் பேசிக் கொண்டிருக்கிறோமென்ற நினைவில்.. தன் பெருமைகளைக் கொட்டி அளந்து கொண்டிருந்தாள்..
"நமக்கு நம்மைப் பெற்றவங்க ஆயிரம் செய்திருப்பாங்க, அத்தான்.. நம்மால் அந்தக் கடனையெல்லாம் கழிக்க முடியுமா? ஏதோ.. என்னால் முடிந்தது... இது ஒன்றுதான்... என்னைப் பெற்றவங்களையும்.. தாத்தா பாட்டியையும்.. அவங்களோட சொந்தபந்தத்தோடு சேர்த்து வைத்துவிட்டேன்... எனக்கு இது ஒன்றே போதும்..
வேறு எதுவும் வேண்டாம்.."
"ஓ... வேறு.. எ..து..வு..மே.. வேண்டாமா?"
சிவாவின் ஆழ்ந்த குரலில் ஒலித்த கேள்வியின் பின்னால் அடங்கியிருந்த புயலைக் கவனிக்கும் அளவிற்கு உமாவிற்குச் சூட்சும புத்தி இருக்கவில்லை...
அவள் எளிதான சுபாவம் கொண்டவள்.. வெள்ளை மனம் கொண்டவள்.. மனதில் இருப்பதை வெளிப் படுத்தத் தெரியாத பேதை... அதனால்.. அன்றைய விழாச் சூழல் தந்த இனிமையான மனநிலையுடன்.. செல்லமாக.. தன் காதுகளில் உள்ள ஜிமிக்கிகள் அசைந்தாட.. கணவனின் தலையோடு லேசாய் முட்டி.. அவன் முடி கலைத்து.
"ஊம்.. வேண்டாம்.." என்றாள்..
தன் முடி கலைத்த உமாவின் கரத்தை விலக்கி விட்டுச் சிவா எழுந்து கொண்டான்.. அப்போதும் கணவனின் மனநிலை புரியாதவளாக உமா.. உடன் எழுந்து நின்று...
"என்ன அத்தான்.. பசிக்கிறதா...? நான் ஒரு மக்கு... அம்மா உங்களைச் சாப்பிட அழைத்து வரச் சொன்னாங்க... அதை மறந்து விட்டு... நான் வேறு பேசிக் கொண்டிருக்கிறேன்... வாங்க.. சாப்பிடப் போகலாம்..." என்று அழைத்தாள்..
"ம்ம்.." என்று முணுமுணுத்த சிவா.. உமாவிற்கு முன்னால்.. அறையை விட்டு வெளியேறி... மடமடவென்று மாடிப்படிகளில் இறங்கிப் போய்விட்டான்..
உமாவினால்.. அந்த நிலையில் அவனது வேகத்திற்கு ஈடு கொடுத்து இறங்க முடியவில்லை.. மெல்ல.. படியிறங்கி அவள் டைனிங் டேபிளுக்கு வந்தபோது... சௌதாமினி பரிமாறிக் கொண்டிருக்க.. சிவா சாப்பிட ஆரம்பித்திருந்தான்..
உமாவின் மனம் சிணுங்கியது.. அவள் பரிமாறித் தானே அவன் தினமும் சாப்பிடுவான்.. இன்று மட்டும் என்ன..? மனதில் இருப்பதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அவள் நின்றபோது ஹாலில் இருந்த சரஸ்வதி அவளை அழைத்தாள்...
"உமா..."
"இங்கே.. வா..."
உமா.. சாப்பிட்டுக் கொண்டிருந்த சிவா ஏதாவது கேட்பானா என்று தயங்கி நின்று பார்த்தாள்.. அவன் தலையை நிமிரவே இல்லை... வேறு வழியின்றிச் சரஸ்வதியிடம் சென்றாள்...
"ஏன் டைனிங் டேபிளுக்கு பக்கத்தில் நின்று கொண்டே இருக்கிற...?"
"அவர் சாப்பிட வந்தார், பாட்டி..."
"அதுதான் சௌதாமினி டிபன் வைத்துக் கொண்டிருக்கிறாளே.. சிவா சாப்பிட்டுக் கொள்வான்... நீ இப்படி உட்கார்.. உனக்குக் கால் வலிக்கவில்லையா...? எவ்வளவு நேரம்தான் நின்று கொண்டே இருப்பாய்..."
உமா.. சரஸ்வதியின் அருகே அமர்ந்து கொண்டாள்.. சாப்பிட்டுக் கொண்டே.. மெதுவாய்த் திரும்பிச் சிவா.. உமாவைப் பார்த்தபோது... அவள் சரஸ்வதியின் தோள் மேல் தலை வைத்துச் சிரித்துக் கொண்டிருந்தாள்...
சிவாவிற்கு நெஞ்சம் கசந்தது.. கடைசியில் இவள் குடும்பத்திற்காகத் தியாகம் பண்ணினாளா...? எனக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லையா...?
'உமா...' சிவாவின் மனம் அரற்றியது...
'உன்னை உயிருக்குயிராய்க் காதலித்தேனேடி... கடைசியில் நீ என் காதலைக் கண்டு கொள்ளவேயில்லையேடி....உனக்காக.. நான்... என் அப்பாவின் மன வருத்தத்தை நினைத்துப் பார்க்காமல் உன் வீட்டுப் படி மிதித்தேனே... மலையேறி நின்று கொண்டிருந்த உன் அப்பாவிற்கு மாதக்கணக்கில் வேப்பிலை அடித்து மலை இறக்கினேனேடி.. உன் மனதில் அது எதுவும் பதியவில்லையா...? என்னை... என் காதலை.. ஒரு பொருட்டாகவே நீ நினைக்கவில்லை.. உன் மனதில் நான் இல்லை.... உன் வீட்டுப் பெரியவர்களின் மன நிம்மதிதான்.. உனக்குப் பெரிதாகத் தோன்றியிருக்கிறது.. நான் உனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை... இதை நான் உன்னிடம் எதிர்பார்க்க வில்லை, உமா...'
சிவா எழுந்து கை கழுவி விட்டு.. மாடிக்குப் போய் விட்டான்.. உமா இரவு உணவு முடிந்து.. மாடிக்கு வந்தபோது.. சிவா அயர்ந்து தூங்குவது போல்.. கண்களை மூடி... பாவனை செய்து கொண்டிருந்தான்... உமா அவனருகில் படுத்து உறங்க ஆரம்பித்ததும்.. விழி திறந்து... விட்டத்தை வெறித்தான்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஊமையின் ராகம் -24
ஊமையின் ராகம் -24
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s320/IMG-20191217-WA0035.jpg
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s72-c/IMG-20191217-WA0035.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-24.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-24.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy