ஊமையின் ராகம் -20,21

20 அன்று இரவு உணவைத் தணிகாசலமும்.. சுந்தரியும் மகள் வீட்டிலேயே சாப்பிட்டனர்.. சாப்பிட்டு முடித்த தணிகாசலமும்.. பாலசுப்ரமணியமும்.. வெற...


20

அன்று இரவு உணவைத் தணிகாசலமும்.. சுந்தரியும் மகள் வீட்டிலேயே சாப்பிட்டனர்.. சாப்பிட்டு முடித்த தணிகாசலமும்.. பாலசுப்ரமணியமும்.. வெற்றிலை.. பாக்கை மென்றபடி.. முன்ஹாலில் அரசியலையும்.. ஊர் நிலவரத்தையும் மென்று துப்பிக்கொண்டிருக்க.. சமையலறையை ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்த சௌதாமினியிடம்.. சுந்தரி வந்தாள்..
"சௌதா.."
"என்ன அண்ணி.."
"உமாவின் உடம்பு ரொம்ப வீக்காய இருக்கிறதாம்.. டாக்டரம்மா சொன்னாங்க.."
சௌதாமினி பதறிப்போய்க் கையிலிலுந்த பாத்திரத்தைச் சமையல் மேடையிலேயே வைத்துவிட்டுச் சுந்தரியின் முகம் பார்த்தாள்..
"என்ன அண்ணி சொல்கிறீங்க.."
"ஆமாம்.. சௌதா.. நம்ம விலாசினி டாக்டரிடம்தான் செக் அப்புக்குக் கூப்பிட்டுக் கொண்டு போனேன்.. இவளுக்கு ஏற்கெனவே மெலிவான உடம்பு.. இப்போது வாந்தி.. தலை சுத்தல்ன்னு பட்டினியாய்க் கிடந்து.. அரை உடம்பாய் ஆகிவிட்டாள்.."
"அப்படின்னா.. இன்னும் கொஞ்ச நாள் உங்க கவனிப்பிலேயே உமாவை வைத்து.. உடம்பைத் தேற்றி அனுப்பி வைத்திருக்கலாமே அண்ணி.."
"என் கவனிப்பில் இருந்தால்.. அவளுடைய உடல் தேறும்.. மனம் தேறுமா.."
"அண்ணி.."
"அதது.. இருக்க வேண்டிய இடத்தில் இருக்கணும்.. அதுதான் நல்லது.. உமாவின் உடம்புதான் அங்கே இருந்தது.. மனசு பூராவும் இங்கே இருக்குது.. எப்படி நான் அவளுடைய உடம்பைத் தேற்ற...?"
சௌதாமினிக்கு இதைக் கேட்கவும் சந்தோஷமாக இருந்தது. இருந்தாலும்.. ஒரு பேச்சுக்காகச் சுந்தரியிடம் வாய் வார்த்தையாய்க் கூறினதள்..
"என்னதான் இருந்தாலும் நீங்க பெற்ற தாய்.. பெற்ற தாய்க்கு இணை ஆகுமா அண்ணி..."
"கல்யாணமான பொண்ணுக்கு மாமியார்தான் பெற்றதாய்.. உன் மருமகளை உன் பொறுப்பில் விட்டு விட்டேன்.. அவளோட உடம்பு நிலையையும் உன்னிடம் சொல்லிவிட்டேன்.. இனி உன்பாடு.. உன் மருமகள் பாடு.. வயிற்றுப் பிள்ளைக்காரி மனசைப் போட்டு உழப்பிக்கிட்டு கண்ணீர் விட்டால் அது யாரைப் பாதிக்கும்?
வயிற்றிலே இருக்கும் உன் பேரக் குழந்தையைத் தான் பாதிக்கும்.. இதுக்கு மேல நான் சொல்ல என்ன இருக்கு சௌதா.."
தணிகாசலத்துடன் சுந்தரி கிளம்பிவிட்டாள்.. அவளுக்குத் தெரியும்.. இனி சௌதாமினி உமாவின் கண்ணீரை நிறுத்தி விடுவாள் என்று..
பெண்கள் சாதுர்யமானவர்கள்.. சூட்சுமம் நிறைந்தவர்கள்... எங்கே எதைக் கொண்டு அடித்தால்.. எதைப் பாதிக்கச் செய்யலாம்.. இல்லை.. எதைச் சரி செய்யலாம்... என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்..
சுந்தரி அறிவாள்.. சௌதாமினி நினைத்தால் சிவாவின் மனத்தாங்கலைச் சரிசெய்து விடுவாள் என்பதை.. அதனாலேயே.. சௌதாமினியிடம் உமாவின் உடல்நிலையை உணர்த்தி.. இனி உன் மருமகள் உன் பொறுப்பு என்று விட்டுவிட்டு வந்தாள்..
அவளுக்குத் தெரியும்.. சௌதாமினி அதைத்தான் எதிப்பார்க்கிறாள் என்பது..
விட்டுக் கொடுப்பதை.. விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் விட்டுக் கொடுத்தால்.. வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்ற சூட்சுமத்தை உணர்ந்தவள் சுந்தரி..
தன் மகளின் நல்வாழ்விற்காக.. அவளின் மன அமைதிக்காக.. தன் மகள் மேல் இருந்த பாசத்தை விட்டுக் கொடுத்தாள் அவள்.
உமா.. மாடிக்கு போய் விட்டாள்.. டிவியில் ஆங்கிலச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்த மகனின் அருகே வந்து நின்று.. அவனை அழைத்தாள் சௌதாமினி.. பாலசுப்ரமணியம் படுக்கப் போய்விட்டிருந்த நிலையில்.. சிலநாள் பிரிவிற்குப் பின் மனைவி வந்துவிட்ட நினைவில்லாமல்.. மகன் தொலைக்காட்சியில் விழுந்து.. விழுந்து செய்தி பார்ப்பது.. சௌதாமினிக்குத் தெள்ளத் தெளிவாக அவனது கோபத்தை உணர்த்தியது..
"சிவா.."
"என்னம்மா...?"
"உமாவின் உடல் நிலை ரொம்பவும் வீக்காக இருக்கிறதாம்.. அண்ணி சொல்லிவிட்டுப் போகிறாங்க.."
சிவா சட்டென்று தொலைக்காட்சியை அணைத்து விட்டான்.. தாயைக் கவலையுடன் ஏறிட்டான்..
"எப்போது சொன்னாங்க..?"
"இப்போதுதான் சொன்னாங்க.. அவங்க டாக்டரிடம் செக் அப்புக்கு கூப்பிட்டுக் கொண்டு போனாங்களாம்.. உன் பொண்டாட்டி ஏற்கெனவே ஒல்லிக்குச்சி உடம்புக் காரி.. இப்போ மசக்கை வேற சேர்ந்துருச்சில்ல.. ரொம்பவும் பலவீனமா.. ஆகிவிட்டாளாம்.."
சிவாவின் மனதில் லேசான அச்சம் தலை தூக்கியது..

21

உமாவின் மேலுள்ள மனத்தாங்கல் சிவாவைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது.. அவளிடம் பேசக்கூடாது.. அவளைப் பார்க்கக் கூடாது என்ற வைராக்கியம் அவனுள் வேர்விட்டிருந்த நேரம் பார்த்துச் சௌதாமினி கூறிய அந்தச் செய்தி.. அவனுடைய வைராக்கியத்தை வேரோடு பிடுங்கி எறிந்தது..
"டாக்டரிடம் அழைத்துப் போகும் போது நமக்குத் தகவல் சொல்லி விட வேண்டாமா..?"
உமாவின் மேலுள்ள அக்கறையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் மாமனார்.. மாமியாரை நினைத்து எரிச்சலுடன் பேசினான் சிவா..
"அவங்க என்னத்தைக் கண்டாங்கடா.. சும்மா.. வழக்கமான செக் அப்புக்கு அழைத்துக் கொண்டு போயிருக்காங்க.. அங்கே டாக்டரம்மா இப்படிச் சொல்லவும்.. கலவரமாய் ஆகிட்டாங்க.."
"இப்ப எப்படி இருக்காளாம்..?"
"அவ மனக் கவலைப் படக்கூடாதாம், சிவா.. அவளுடைய உடப்பைத் தேற்றுவது என் பொறுப்பு.. ஆனால் மனசைத் தேத்த என்னால் முடியுமா...?"
"அவளாய்.. எதையாவது செய்துகிட்டு இருப்பா.. அதை நான் ஏன்னு கூடக் கேட்கக் கூடாதா...?"
"கேளுடா.. தாராளமாய்க் கேளு.. கேட்டுவிட்டுச் சமாதானமாய்ப் போய்விடு.. கோபத்தை வளர்த்துக் கொண்டே போகாதே.. அவ குழந்தைக்குத்தான் பாதிப்பு.. அது உன் குழந்தை.. நினைவில் வை.. எழுந்து படுக்கப் போ.."
சொல்ல வேண்டியரை நாசூக்காய்ச் சொல்லிவிட்டுச் சௌதாமினி போய்விட்டாள்..
சிவா எழுந்து மாடிப்படியேறினான்.. அறைக்கதவைத் தறிந்து உள்ளே சென்று கதவைத் தாழிட்டான்.. அறையில் மெலிதான வெளிச்சம் பரவியிருந்தது.. அவள் முதுகு காட்டிப் படுத்திருந்தாள்.. சிவா.. அருகே படுத்து.. அவளது  முடி கோதினான். அவள் உடலில் லேசான அதிர்வு தோன்றியதை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.. அவளது முகத்தில் அவன் விரல்கள் படர்ந்தன.. கண்ணீரின் ஈரம் அவன் விரல்களில் பட.. இப்போது.. அவன் அதிர்ந்தான்..
"உமா.."
அவளைத் தன்புறமாய்த் திருப்பி.. கண்ணீரைத் துடைத்து விட்டான்.. அதை எதிர்பார்க்காத அவள் ஆனந்தத் திகைப்பில் ஆழ்ந்து.. அவன் மார்பில் முகம் புதைத்தாள்..
"அத்தான்..!"
அவள் மீண்டும் விசும்ப.. அவன் அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு.. அவளது காதோரம் குனிந்து கடிந்த குரலில் கூறினான்...
"ச்சு.. அழக் கூடாது.."
"நீங்க கோபித்துக் கொள்கிறீங்களே..."
"நீ.. நான் கோபித்துக் கொள்வதைப் போல நடந்து கொள்கிறாயே.."
"அம்மா கூப்பிட்டால்.. நான் என்ன செய்யட்டும்..?"
"இதுதான் எனக்குப் பிடிக்கவில்லை.. சும்மா உன் அம்மாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டே அலைகிறவள் எனக்கு ஏன் கழுத்தை நீட்டின..."
"ம்ம்.. நீங்கள் கட்டும் தாலியை வாங்கிக் கொள்ளத்தான்.."
உமா.. மனம்விட்டுக் 'களுக்'கென்று சிரித்தாள்.. அந்த மெல்லிய வெளிச்சத்தில் மின்னல் கீற்றுப் போல் தெரிந்த அவளது பல் வரிசை அவனை மயக்கியது.. அவன் தாகத்துடன் அவளது இதழ்களில்.. தன் இதழ் பதித்தான்.. அவள் பேச்சிழந்தாள்..
கூடல் என்பது சுகம்.. ஊடலுக்குப் பின் கூடல் என்பது பரமசுகம்.. உமா அதை ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தாள்..
விழிமூடிக் கிடந்த மனைவியின் மூடிய இமைகளின் மேல் முத்தமிட்டு விலகிய சிவா.. மன நிறைவுடன் அவளைப் பார்த்தான்..
"உமா.."
"ம்ம்.."
"என்ன யோசனை...?"
"இல்லை.. ஒரு முறை டிவியில் 'உயர்ந்த மனிதன்' ன்னு பழைய படம் ஒன்றைப் பார்த்தேன்.. சிவாஜிகணேசன்.. சௌகார் ஜானகி நடிச்சிருப்பாங்க..."
"அதுக்கென்ன இப்ப..?"
"அதில் சிவாஜி சார்.. சௌகார் மேடத்ததைக் கோபமாய் அடித்து விடுவார்.."
"ம்ம்.. அப்புறம்.."
"சொஞ்ச நேரம் கழித்து.. சௌகார் மேடத்திற்குப் பூ வாங்கிக் கொண்டு வருவார்.. அவங்க தலையைக் காண்பிக்க வைத்து விடுவார்.. அந்த சீனை நினைத்துப் பார்த்தேன்.."
மனைவியின் மனநிலை புரிந்தவனாக.. அவளை அருகே இழுத்துக் கொண்டு ஆதரவாய் அணைத்துக் கொண்டான் சிவா.. கணவனின் கைகளுக்குள் எல்லையற்ற நிம்மதி கிடைக்கப் பெற்றவளாய் விழிமூடி உறங்கினாள் உமா..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஊமையின் ராகம் -20,21
ஊமையின் ராகம் -20,21
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s320/IMG-20191217-WA0035.jpg
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s72-c/IMG-20191217-WA0035.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-20.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-20.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy