ஊமையின் ராகம் -2

2 உமா மகேஸ்வரியின் மனம் வருந்தியது.. ஒரு நாளின் இருபத்து நான்குமணி நேரத்தின் ஓவ்வொரு மணித் துளியிலும் எவன் நினைவு அவளது நெஞ்கில் நீந்திக...

2
உமா மகேஸ்வரியின் மனம் வருந்தியது.. ஒரு நாளின் இருபத்து நான்குமணி நேரத்தின் ஓவ்வொரு மணித் துளியிலும் எவன் நினைவு அவளது நெஞ்கில் நீந்திக் கொண்டிருக்கிறதோ... அந்த அவன் அவளைப் பார்த்துக் கேட்கிறான்...
'வேறு யாரையாவது கல்யாணம் பண்ணிக் கொள்ளும் கனவு ஏதாவது உன் மனதில் இருக்கிறதா...' என்று...
இதைவிடக் கொடுமையான கேள்வி ஒன்று இந்த உலகில் இருக்க முடியாது என்பது அவனுக்குத் தெரியவில்லையே என்று அவளுக்குத் துக்கமாக இருந்தது...
அவளுக்கு அவனிடம் பேச ஆசைதான்.. வெறும் ஆசையில்லை.. கொள்ளை ஆசை.. அவனின் அருகாமையில் அமர்ந்திருக்கும் இந்த நேரத்தின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து அனுபவித்தாள் அவள்.. இந்த நிகழ்வை அவள் மனதில் பூட்டி வைத்து... மீண்டும்... மீண்டும் இதை நினைத்துப் பார்த்து ரசிப்பாள் என்பதை அவன் ஏன் உணராமல் போனான்... என்று இருந்தது உமாவிற்கு..
அவன் உணர மறுக்கிறான் என்று நினைப்பவளுக்கு அவனை உணரவைக்கத் தான் முயலாதது கவனத்தில் படவில்லை.
அவளைச் சந்திக்க விரும்பி அவன் கோவிலுக்கு அருகில் உள்ள இந்தக் கடற்கரைக்கு வரச் சொன்ன நாளில் இருந்து இந்த நிமிடம் வரை அவனைச் சந்திக்கப்போகும் ஆவலில் மனம் பரபரக்க அவள் சாப்பாடு தூக்கம் இன்றித் தவித்தது அவனுக்குத் தெரியுமா...?
அவனுக்குத் தெரியாது என்பது அவளுக்குத் தெரியவில்லை... அவள் தொண்டை அடைக்கக் கடலை வெறித்தாள்... அலை வேகமாய் ஓடி வந்து... கரையைக் கடக்காமல் மோதிச் சிதறியது..
இந்த அலையைப் போல்தான் அவளும்.. சிவகைலாசம் என்ற கரைக்குள் அடங்கியவள்.. அவனைக் கடக்க அவள் நினைக்க மாட்டாள்.. அவனைக் கடந்து அவளுக்கு எதுவும் இல்லை.. அப்படிக் கடக்க வேண்டிய சூழ்நிலை நேர்ந்தால்.. சுனாமியைப் போல்.. பேரழிவை உண்டு பண்ணி விட்டு மீண்டும் கடலுக்குத் திரும்பி.. கரைக்குள்தான் அடக்கி விடுவாள்.. அவனில்லாமல் அவளுக்கு எதுவும் இல்லை.. இருக்கவும் முடியாது...
'பெரிதாய்ப் பேச வந்து விட்டான்...' அவள் மனம் பொருமியது...
இவனுக்காக அவளுடைய வீட்டில் அவள் நடத்திய சாத்வீகப் போராட்டம் பற்றி இவனுக்கென்ன தெரியும்..?
பெண் பார்க்க என்று யாராவது வந்துவிட்டால்... அவர்களின் முன்னால் சபைக்கு வந்து நிற்காமல் இருக்க என்னவெல்லாம் வெளியே தெரியாத சாகசங்களை
அவள் செய்ய வேண்டியதிருக்கிறது. இல்லை... செய்ய வேண்டியதிருந்தது என்று அவன் அறிவானா...?
இதுவரை பல இடங்களில் இருந்து அவளைப் பெண் கேட்டு வந்தார்கள்.. இதுவரை யார் முன்னாலும் அவள் காட்சிப் பொருளாக வந்து நின்றதில்லை... நிற்கும் சூழ்நிலை வராமல் தன்னைத்தானே அவள் தனி மனுஷியாய் நின்று காத்துக் கொண்டாள்.
முதல் முறை மாப்பிள்ளை வீட்டில் ஹாலில் காத்திருந்தபோது.. அவள் காபி கலக்க வைத்திருந்த சுடு பாலைத் தன் பாதங்களில் ஊற்றிக் கொண்டாள்..
பாதம் கொப்புளிக்க.. வலி தாங்க முடியாமல் துடித்தவளைத் தன் கரங்களில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு நடக்கத்தான் அவளுடைய தந்தை தணிகாசலத்திற்குத் தோன்றியது... மகளைப் பெண் பார்க்க வந்திருப்பவர்களைப் பற்றி அவர் மறந்தே போனார்...
மாப்பிள்ளை வீட்டாரின் மனதில் என்ன தோன்றியதோ... அபசகுனம் என்று அவர்கள் நினைத்துவிட்டது ஊடே பாலமாய் இருந்தவர்கள் மூலம் தெரிய வந்த போது தணிகாசலம் கொதித்துப் போனார்...
"இந்த சம்பந்தமே நமக்கு வேண்டாம் சுந்தரி... என்ன பொண்ணு கால் கொப்புளிக்கக் கிடக்கிறா... அதைப் பெரிதாக நினைக்காமல் சகுனத்தைப் பெரிதாக நினைப்பவர்களின் வீட்டில் நாம் பெண் கொடுக்கக் கூடாது... இன்றைக்கே இப்படி இரக்கமில்லாமல் இருப்பவங்க.. நாளைக்கு நம்ம பொண்ணு அவங்க வீட்டுக்கு மருமகளாப் போயிட்டா கரிசனமாய்க் கவனிச்சுக்குவாங்கன்னு எப்படிச் சொல்ல முடியும்...? அவங்களே திரும்பப் பெண் கேட்டு வந்தாலும்... நான்
என் பெண்ணை அவங்க வீட்டில் கொடுக்க மாட்டேன்..."
தணிகாசலத்தின் கொதிப்பை... சுந்தரி... இன்று.. நேற்றா பார்க்கிறாள்...? இருபத்து நான்கு வருடங்களாய் அதைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறாள்...?
சுந்தரியைப் பெண் கேட்டு வந்தபோது... தணிகாசலத்தின் வேலையைப் பற்றிச் சுந்தரியின் தந்தை துருவித் துருவி விசாரிக்க... தணிகாசலம் கொதிப்புடன்... நீயும் வேண்டாம்... உன் பெண்ணும் வேண்டாம் என்று கிளம்பிவிட்டார்...
பெண் பார்க்க வந்திருந்தவர்களின் முன்னால் அடக்க ஒடுக்கமாய்.. சபையில் நின்றிருந்த சுந்தரி... சட்டென்று விழியுர்த்தித் தணிகாசலத்தை இறைஞ்சும் பார்வையுடன் பார்க்க... அந்தப் பார்வையால் தாக்கப்பட்ட தணிகாசலம்... அந்தப் பார்வையின் இறைஞ்சலுக்குக் கட்டுப்பட்டார்... சுந்தரியின் தகப்பனாரிடம் தன்மையாகப் பதில் சொன்னார்.
 அன்றிலிருந்து இன்றுவரை அவரைப் பார்வையாலேயே சிறைப்பிடித்துத் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் சுந்தரி... தன் பார்வையின் வீச்சை அப்போது பயன்படுத்த முனையவில்லை...
ஏனேன்றால் அவள் மனதிற்குள் ஒரு சந்தேக விதையின் வித்து விழுந்திருந்தது...
காபி கலக்கப் பாலைக் காய்ச்சி இறக்கி வைத்த சுந்தரி மகளைக் காபி கலக்கச் சொல்லவேயில்லை.. பால் இருந்த பாத்திரத்தை இறக்கிக் கை படாத தூரத்தில் தள்ளி வைத்திருந்தாள் சுந்தரி...
அங்கே போய்ப் பாத்திரத்தை எடுத்து.. தானாகக் காலில் ஊற்றிக் கொள்ளாமல் அதுவாகக் கொட்டிக் கவிழ்ந்து உமாவின் கால்களில் படும் சாத்தியக் கூறு இல்லை... அப்படியெனில்...? உமாவாகத்தான் காலில் பாலை ஊற்றிக் கொண்டிருக்கிறாள் என்பதுதான் உண்மை....
உமாவின் கால் ஆறச் சில நாள்கள் ஆயின.. அந்த நாள்களில் மகள் பட்ட வேதனையைப் பார்த்துத் தாய் மனம்  தவித்தது...
'எதற்காக இப்படிச் செய்தாய்...? யாருக்காக இந்த ரணத்தை நீ ஏற்றுக் கொண்டாய்...?
அடுத்துச் சில மாதங்கள் கழித்து... மீண்டும் ஒரு பெண் பார்க்கும் படலம் நடந்தபோது... சுந்தரி மனதிற்குள்  பதைத்தாள். கணவனிடம் பகிர்ந்து கொள்ளவும் முடியாமல்.. தானே மனதிற்குள் மறகிக் கொண்டிருந்தாள்... அவள் பயந்தது போலத்தான் நடந்தது...
பெண் பார்க்க வந்திருந்தவர்கள்... வீட்டிற்குள் நுழையும் போதே.. பூஜையறையில் சாமி விளக்கேற்றிக் கொண்டிருந்த உமாவின் சேலை முந்தானை விளக்கின் திரியில் பட்டு சேலை பற்றிக் கொண்டது..
"அம்மா...!" என்று உமா அலறிய சத்தம் தெருக்கோடி வரை கேட்டது...
பழைய கதை மீண்டும் தொடர்ந்தது... சுந்தரியின் மனதில் விழுந்த சந்தேகம் ஊர்ஜிதமாகி விட்டது...
ஆனால் மகளின் மனதில் இருப்பது யார் என்றுதான் அவளுக்குத் தெரியவில்லை... அதைக் கண்டு பிடிப்பதும் அவ்வளவு சுலபமானதில்லை...
ஏனென்றால்.. உமா மகேஸ்வரி... தன் மனதிலிருப்பதை எப்போதுமே வெளிப்படையாய்ப் பேச மாட்டாள்.. சிறுவயதிலிருந்தே அவளுக்கு அந்த வழக்கம் வந்து விட்டதற்கு.. எதற்கெடுத்தாலும் கொதிக்கும் தணிகாசலத்தின் சுபாவமே முக்கிய காரணமாய் அமைந்து விட்டது.
தகப்பனாரின் கோபத்திற்க்கு அஞ்சி... எதைப் பேசினால் தந்தை கோபித்துக் கொள்வார்... எதைப் பேசினால் கோபித்துக் கொள்ள மாட்டார்.. என்று அறியாதவளாய்... தன் மனதிலிருந்த எண்ணங்களை வெளியே சொல்லாமல் மனதிற்குள் பூட்டி வைத்துக் கொள்ள ஆரம்பித்தால் உமா... மெல்ல...மெல்ல... அதுவே அவளுடைய சுபாவம் ஆகிவிட்டது.. இன்றுவரை வாய் திறந்து தன் மனதிலிருப்பதை வெளியே அவள் சொல்லியதில்லை...
மகளின் இந்த குணம் சுந்தரிக்கு வேதனையை அளிக்க, தணிகாசலமோ.... மகிழ்ந்து போனார்.
"எங்க உமா சாது.. பேசவே மாட்டாள்..." என்று அவர் பெருமை பேசிப்பேசி... கொஞ்ச நஞ்சம் அவள் வாய் திறந்து பேசியதையும் குறைத்து அவளை ஊமையாக்கி விட்டார்.
அடுத்து நடந்த திருமணப் பேச்சுக்களைச் சுந்தரியே தன் சக்தியைப் பயன்படுத்தித் தடுத்து விட்டாள்.
"ஏங்க.. மாப்பிள்ளைப் பையன் என்னவோ சொங்கித் தனமாய்த் தெரிகிறானே.. உங்களைப் போல் வீரமான பையனாகப் பார்த்துப் பெண் கொடுங்க..."
"என்னங்க... அந்த மாப்பிள்ளையின் அக்கா என்ன சொல்கிறாளோ.. அதற்குத்தான் அந்த மாப்பிள்ளைப் பையன் தலையை ஆட்டுவானாம்... அந்த அக்காவோ.. புருசன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறான்னு சொல்லிக் கொண்டு பிறந்த வீடே கதின்னு கிடக்கிறாளாம்...
நம்ம பொண்ணு பாவம் சாது.. காலமெல்லாம் புருசன் வீட்டுக்குப் போகாமல் பிறந்த வீட்டைக் காவல் காக்கும் நாத்தியிடம் பிடுங்குப் படணும்னு அவளுக்கு என்ன தலையெழுத்தா...?"
"ஏங்க.. இந்த மாப்பிள்ளைக்குக் குடிப்பழக்கம் இருக்குதாமே..."
"இந்த மாப்பிள்ளையா...? இவன் தூணுக்குச் சேலை கட்டி விட்டாலும் திரும்பிப் பார்ப்பானாமே..."
வருகின்ற மாப்பிள்ளைகளைப் பற்றிச் சுந்தரி... அவர்கள் வருமுன்னரே தன் வாயிலிருந்து அபிப்பிராய முத்துக்களை உதிர்க்க.. வருமுன்னரே தன் மகளைக் காத்து அந்த மாப்பிள்ளைகளைப் பெண் பார்க்க வரவிடாமல் தடுத்து விட்டார்... தணிகாசலம்..
எத்தனை மாப்பிள்ளைகளைப் பற்றி இப்படி இல்லாததும்.. பொல்லாததும் பேச வேண்டியிருக்குமோ... என்று சுந்தரி மனதிற்குள் நொந்து கொண்டாள்... ஆனால் அவளுக்கும் வேறு வழி இருக்கவில்லை.. உயிரைப் பணயம் வைத்தாவது திருமண ஏற்பாடை நிறுத்த அவள் பெற்ற மகள் துணிவதை அறிந்து கொண்ட பின்னால் விசப் பரிட்சையில் இறங்க அவளால் முடியவில்லை..
நல்ல வேளையாக ஒருநாள் கோவிலுக்குப் போயிருந்த

 போது... சிவாவின் தாயாருடன் சிவாவைச் சுந்தரி காண 

நேர்ந்தது. அவனைக் கண்டதும் மகளின் முகத்தில் தோன்றிய 

மலர்ச்சியையும்... அவளது விழிகளில் தெரிந்த 

மின்னல்களையும் சுந்தரி இனம் கண்டு கொண்டாள்



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஊமையின் ராகம் -2
ஊமையின் ராகம் -2
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s320/IMG-20191217-WA0035.jpg
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s72-c/IMG-20191217-WA0035.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-2.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-2.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy