ஊமையின் ராகம் -14

14 உமா தர்ம சங்கடத்துடன் தாயைப் பார்த்தாள்... " அம்மா... அவர் வரவும் சொல்லி விட்டு வருகிறேனே...." இதையே மகளுடைய சம்மதமாய்...


14
உமா தர்ம சங்கடத்துடன் தாயைப் பார்த்தாள்...
"அம்மா... அவர் வரவும் சொல்லி விட்டு வருகிறேனே...."
இதையே மகளுடைய சம்மதமாய் எடுத்துக் கொண்ட சுந்தரியின் முகம் மலர... சௌதாமினியின் முகம் விழுந்து விட்டது...
'என்னதான் பார்த்துப் பார்த்துச் செய்தாலும்... மாமியார்... மாமியார்தான்... பெற்றதாய்... பெற்றத்தாய்தான் போல...' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் அவள்...
ஹாலில் தங்கையின் கணவரிடம் வெகு பாசமாகத் தணிகாசலம் பேசிக் கொண்டிருக்க.... பாலசுப்ரமணியம் அவரைவிடப் பாசத்துடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்..
"நம்ம ரத்தினவேலை ஒரு கல்யாணத்தில் பார்த்தேன்..."
"அப்படியா...?"
"பணம் ஏறிவிட்டது போல.. ஆள் பவிசாத் தெரியறான்..."
"ஆமாம் மச்சான்... ஐந்து விரல்களிலும் மோதிரம் போடுவாங்கன்னு கேள்விப் பட்டிருக்கிறேன்... அப்படிப்பட்ட ஆள் இவன் ஒருவனாகத்தான் இருப்பான்.. அது எப்படி மச்சான் பெருவிரலுக்குக் கூட மோதிரம் செய்து போட்டிருக்கிறான்...?"
பாலசுப்ரமணியம் அப்பாவியாய்ச் சந்தேகம் கேட்க, தணிகாசலம் இடி முழங்குவதைப் போல சிரித்து வைத்தார்... சௌதாமினியுடன் பேசிக்கொண்டிருந்த சுந்தரி...
"உன் அண்ணனுக்குக் கோபம் வந்தாலும் அடக்கி வாசிக்கத் தெரியாது... சிரிப்பு வந்தாலும் அடக்கி வாசிக்கத் தெரியாது... அவர் சிரிப்பைக் கேட்டாயா..? எட்டு ஊருக்குக் கேட்பது போல் சிரிக்க இவரால்தான் முடியும்...." என்று தாழ்ந்த குரலில் நாத்தனாரிடம் சொன்னாள்...
வெகு நேரம் தங்கை கணவருடன் பேச்சு வார்த்தை நடத்தியும் மருமகன் வராததைக் கண்ட தணிகாசலம் கைக்கடிகாரத்தைப் பார்த்தார்... உள்ளே திரும்பிக் குரல் கொடுத்தார்...
"சுந்தரி..."
"என்னங்க..."
"இன்னும் மாப்பிள்ளையைக் காணோமே..."
"உமா போன் போட்டாள்... சுவிட்ச் ஆப்ன்னு வருது..."
"சரி... அவர் வரும்போது வரட்டும்... நாம் உமாவைக் கூப்பிட்டுக் கொண்டு கிளம்பலாம்..."
"அப்படியா சொல்கிறீங்க...?"
"ஆமாம்.. நேரமாகிவிட்டது... கர்ப்பிணிப் பெண்ணைக் காலா காலத்தில் வீட்டிற்குக் கூப்பிட்டுக் கொண்டு போய்விட வேண்டும்..."
"உமா.. மாப்பிள்ளையிடம் சொல்லிவிட்டுத்தான் வருவேன்னு சொல்கிறாளே..."
"அப்படியா சொன்னாள்...? உமா...உமா..."
உமா அவசரமாய் தந்தையின் முன்னால் வந்து நின்றாள்...
"என்னங்கப்பா..."
"நாம் கிளம்புவோம்மா... மாப்பிள்ளையிடம்... சௌதாவும்.. அவருடைய வீட்டுக்காரரும் சொல்லிக்கு வாங்க...."
தணிகாசலத்தின் வார்த்தையை மறுத்துப் பேசி அறியாத உமா... தலையை ஆட்டினாள்...
அன்று இரவு வெகு நேரம் கழித்து  வீடு திரும்பிய சிவா... தன் வழக்கப்படி... உமாவை அழைத்துக் கொண்டே வீட்டிக்குள் வந்தான்...
"உமா... உமா..."
அவனுக்காகக் கதவைத் திறந்து விட்ட சௌதாமினிக்குச் சலிப்பாக இருந்தது...
"ஏன்டா.. கண்ணுக்கு முன்னால் நிற்கிற பெற்ற தாயை உனக்குத் தெரியாது... நேற்று வந்த பெண்டாட்டி மட்டும் நினைவில் இருக்கும்..."
"ஏம்மா.. இப்ப நான் என்ன தப்பாக் கேட்டுவிட்டேன்... உமாவைக் கூப்பிட்டேன்... அவ்வளவுதானே... அது ஒரு பெரிய குற்றமா? ஏன்... நான் அவளைக் கூப்பிடக் கூடாதா...?"
"கூப்பிடப்பா.. தாராளமாகக் கூப்பிடு... ஆனால் வீட்டில் இல்லாதவள்.. எப்படி.. நீ கூப்பிட குரலுக்கு ஓடோடி வருவாள்...?"
மாடிப்படியில் ஏறிக் கொண்டிருந்த சிவா... வேகத்தடை வந்தது போல்.... அப்படியே நின்றான்... தாயைத் திரும்பிப் பார்த்தான்..
"வீட்டில் இல்லையா...? வீட்டில் இல்லாமல் எங்கே போனா...?"
அவளுடைய அம்மா வீட்டிற்குப் போய்விட்டா..."
சிவாவுக்கு முகம் கருத்து விட்டது... அவனிடம் சொல்லாமல் உமா பிறந்த வீட்டிற்குப் போய் விட்டது அவனது மனதைப் பாதித்தது.
"என்னிடம் சொல்லமால் போய் விட்டாளா...?"
"என்னிடா செய்வது? அவளுடைய அம்மா பிடிவாதமாய்க் கூப்பிட்டாங்க.. நான் சிவாவரட்டும்ன்னு சொன்னதுக்கு என்மேல் கோபப்பட்டாங்க... சரி.. உமாவின் வாய் மொழியால் அவளே வரமாட்டேன்னு சொல்லி விட்டால்... பிரச்னை தீர்ந்ததுன்னு பார்த்தால்... அவள் என் எதிரிலேயே வருகிறேன்னு சொல்லிவிட்டாள்... அப்புறமும் நான் தடுத்தால் எனக்குத்தானே கெட்ட பெயர்... இருந்திருந்து இத்தனை வருசம் கழித்து உன் கல்யாணத்தால்... இரண்டு குடும்பமும் ஒன்று சேர்ந்திருக்கு... அதில் போய் முகம் முறித்துப் பேசுவது எப்படி சிவா.. ?"
சிவா பதில் சொல்லமல் மடமடவென்று மாடியேறி விட்டான்.. அறையைத் திறந்தான்... உமா இல்லாத வெறுமை அவனைத் தாக்கியது.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,11,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,94,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,29,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,11,எண்ணியிருந்தது ஈடேற,234,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,25,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,10,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஊமையின் ராகம் -14
ஊமையின் ராகம் -14
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s320/IMG-20191217-WA0035.jpg
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s72-c/IMG-20191217-WA0035.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-14.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-14.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy