ஊமையின் ராகம் -12

12 வண்ண வண்ண மலர்கள்... ஒவ்வொன்றும் ஒருவித அழகுடன் இருக்க அந்தப் பூக்களுக்கு மத்தியில் ஒரு பூவைப் போலச் சுற்றி வந்து கொண்டிருந்தாள் உமா...


12
வண்ண வண்ண மலர்கள்... ஒவ்வொன்றும் ஒருவித அழகுடன் இருக்க அந்தப் பூக்களுக்கு மத்தியில் ஒரு பூவைப் போலச் சுற்றி வந்து கொண்டிருந்தாள் உமா... அவளது தோள். மீது சிவாவின் கரம் படிந்து  நின்றது... அதைப் புன்னகையுடன் உணர்ந்து ரசித்தபடி...  அவனுடன்  இணைந்து நடந்தாள்... சளசளவென்று பேசிக் கொண்டிருந்த சிவாவிற்குப் பதிலாக... அமர்த்தலான பார்வையுடன் கூடிய அமைதியான புன்னகை ஒன்றைத் தந்தபடி அவள் நடந்து கொண்டிருந்தாள்..
"உமா... இங்கிருக்கும் பூக்களிலேயே ரொம்பவும் அழகான பூ எது...? சொல்லு, பார்ப்போம்..."
"தெரியுமே..."
"தெரிந்தால் சொல்லுடி..."
"ம்ம்... என்னைத்தான் சொல்வீங்க..."
"ஹைய்யோ... எப்படிடீ...?"
"ம்ம்... ஹனிமூனில் எல்லோரும் புதுப் பெண்டாட்டியிடம் இப்படித்தான் சொல்வாங்களாம்..."
"அட... இப்படியெல்லாம் யார் உன்னிடம் சொன்னது...?"
"என் பிரண்ட்ஸ்தான்..."
"உனக்கு பிரண்ட்ஸ் கூட இருக்கிறாங்களா...?"
"என்னங்க இது... எனக்கு பிரண்ட்ஸ் இருக்கமாட்டாங்களா?"
"இருக்கலாம்.. இருக்கலாம்... இருந்தால் தப்பில்லை.."
"ஹ... என்ன ஒரு தாராள மனசு..."
"என் மனசைப் பற்றி உனக்குத்தான் தெரியவே மாட்டேன்கிறதே... ம்ஹூம்...."
"என்ன தெரியணுமாம்..."
"எவ்வளவோ தெரிய வேண்டியிருக்கு... என்ன செய்வது... நீதான் உன் காதை எனக்குக் கொடுக்கவே மாட்டேன் என்கிறாயே...."
உமா வாயைப் பொத்திக்கொண்டு 'களுக்' என்று சிரித்தாள். அவள் சிரிக்கும்போது.. அவளுடைய கண்களும் சேர்ந்து சிரிப்பதை வியப்புடன் ரசித்தான் அவன்.
"அது எப்படி உமா... நீ சிரிக்கும்போது கண்களும் சேர்ந்து சிரிக்கிறதே..."
"நான்தான் சொல்லி விட்டேனே... இந்தச் சமயத்தில் அப்படித்தான் இருக்கும்.."
"எந்தச் சமயத்தில்...?"
"இந்த ஹனிமூன் சமயத்தில்..."
"ஓ... நீ அப்படி வருகிறாயா...?"
"போங்க அத்தான்.. உங்களுக்கு எல்லாமே கிண்டல்தான்..."
"அது சரி.. ஆமாம்... நீ எதற்கு அப்படி ஒரு சிரிப்பு சிரித்தாய்...?"
"அதுவா...?"
"அதுதான்..."
"என் காதை எப்படி உங்களிடம் கழட்டிக் கொடுப்பதாம்?"
"அட..ஊட்டிக்கு வந்த பின்னால்.. என் பொண்டாட்டி வாயைத் திறந்து இந்தப்போடு போடுகிறாளே... எல்லாம் இந்த மலைகளின் மகாராணி செய்த மாயமா...?"
"மலைகளின் மகாராணியா...?"
"ஆமாம்... ஊட்டியை மலைகளின் மகாராணின்னும்... கொடைக்கானலை... மலைகளின் இளவரசின்னும் சொல்வாங்களே... அது தெரியாதா, என் மக்குப் பெண்டாட்டிக்கு...?"
"நான் ஒண்ணும் மக்கில்லை... டிகிரியில் காலேஜ் பர்ஸ்ட் நான்தான் தெரியுமா...?"
"ஊம்... என் பெண்டாட்டிக்கு ரோசம் வந்து விட்ட தாக்கும்..."
"இப்படி மட்டம் தட்டினால் எனக்கு ரோசம் வராதாக்கும்..."
அவள் செல்லச் சிணுங்கலுடன் பேசுவதைக் கண்டு பலத்த சிரிப்புடன் அவளை இன்னும் அணைத்துக் கொண்டான் சிவா..
அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குத் திரும்பியதும் உமா... ஜன்னலோரம் சென்று வெளியே தெரிந்த இயற்கை அழகை ரசிக்க... பின்னாலேயே வந்த சிவா.. அவளது தோள் தொட்டு அணைத்து... அவளது உச்சந் தலையில் தன் முகவாயைப் பதித்தான்...
"என்ன பார்க்கிற உமா...?"
"ம்ம்... அந்த மலை முகட்டில் மேகம் இறங்குகிறதே.. அதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.. எவ்வளவு அழகாக இருக்கிறது, பார்த்தீங்களா...?"
"உன்னை விடவா... அது அழகு...?"
"நான்தான் சொல்லி விட்டேனே... நீங்கள் இப்போது இப்படித்தான் பேசுவீங்கன்னு..."
"எப்போதும் இப்படித்தான் பேசுவேன்.. இவ்வளவு நேரமும் வெளியே சுற்றி விட்டுத்தானே வந்தோம்..? இங்கே வந்தும்... இயற்கையை ரசிக்கக் கிளம்பி விட்டாயே..."
"இங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் இயற்கையை ரசிப்பேன், அத்தான்... இந்த மாசு மருவில்லாத அழகும்... சுத்தமான காற்றும் நம் சென்னையில் கிடைத்து விடுமா...?"
"நீ வேற... ஊட்டியும்... கொடைக்கானலும்... தன் ஒரிஜினல் அழகைக் கொஞ்சம்... கொஞ்சமாய் இழந்து கொண்டு வருகின்றன... போட்டி போட்டுக் கொண்டு இங்கே கட்டடங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன... பிஸினெஸ்ன்னு வந்துவிட்டால் இயற்கை அழகைப் பற்றி யார் கவலைப்படப் போகிறாங்க..."
அவன் பேசுவதைக் கவனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தவளின் கன்னத்தில் சிறு முத்தம் பதித்தான் அவன்... அவள் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்...
சூரியன்... மேற்கில் இறங்கிக் கொண்டிருக்கிறது... அந்தி வானின் பொந்நிறக் கதிர்கள்... தண்ணீரின் மேல் விழுந்து பளபளத்தன... அந்த ஏரியில் ஆங்காங்கே மிதந்து கொண்டிருந்த படகுகள் பார்ப்பதற்கு ஓவியம் போல் இருந்தன..
உமா பின்னலை முன்னால் விட்டுக் கொண்டு... சிவாவின் எதிரே அமர்ந்திருக்க.. சிவா படகைத் துடுப்பைப் போட்டுச் செலுத்திக் கொண்டிருந்தான்... உமா கையால் தண்ணீரைத் தொட்டு அளைந்து கொண்டிருந்தாள்... அவளது குதூகலம் சிரிப்பாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது...
"ஏன் உமா... எனக்கொரு சந்தேகம்..."
"அதைப் போய் என்னிடம் கேட்கறீங்களே..."
"உன்னிடம் கேட்டால் என்ன...?"
"நீங்க தான் வாயைத் திறந்தாலே என்னை 'மக்கு'ன்னு சொல்கிறீங்களே... மக்கிடம் போய்... யாராவது சந்தேகம் கேட்பாங்களா...?"         
"சமயம் பார்த்துப் போட்டுத்தாக்குகிற.. ஊம்... நீ யாரு...?"
"உங்க பெண்டாட்டி..."
"ஹா ஹா..."
"உண்மையைச் சொன்னதற்கு இவ்வளவு சந்தோசமா...?"
"சொல்வது என் பேசா மடந்தைப் பெண்டாட்டியாயிற்றே..."
"இப்படியே எனக்குப் பெயர் வையுங்கள்... ஆமாம்.. எதுவோ சந்தேகம் கேட்டிங்களே..."
"அதுவா...? அது ஏன் உமா... ஹனிமூன்னு சொன்னாலே இப்படி கொடைக்கானல்.. ஊட்டி... டார்ஜிலிங்... சிம்லான்னு கிளம்பி வருகிறாங்க..."
உமாவிற்கு மெலிதான வெட்கம் வந்து விட்டது... அவளது முகச் சிரிப்பை ரசித்துக் கொண்டிருந்தவனின் கண்கள்... கள்ளச் சிரிப்பைச் சிரித்தன...
"என்னைக் கேட்டால்... எனக்கென்ன தெரியுமாம்..."
"உனக்கு உண்மையிலேயே தெரியாதா...?"
"பொய்யாகவும் தெரியாது..."
"ஊம்... எனக்குத் தெரியும்.. நான் சொல்லவா...?"
"வேண்டாம்..."
"இல்லை... சொல்வேன்..."
"நான் காதைப் பொத்திக் கொள்வேன்..."
"இங்கே துடுப்பை போட்டு விட்டு நான் கிட்ட வர மாட்டேன்கிற தைரியம்தானே..."
"ஆமான்னு வைத்துக் கொள்ளுங்களேன்..."
"ரூமிற்கு வா... பேசிக் கொள்கிறேன்..."
இப்போதே... காதோரம் அவனது மீசை குறுகுறுக்கும் உணர்வில் ரகசியமாய்ச் சிலிர்த்துக் கொண்டாள் உமா.. அவனது பார்வை அதைக் கண்டு கொண்டதை உணர்ந்தவள்.. மனதை மறைக்க வாய்க்குள் ஏதோ பாடலை 'ஹம்' செய்தாள்...
"உன் மனதுக்கு மட்டும் நீ பாடும் பாடல் கேட்டால் போதுமா உமா... எனக்கும் கேட்க வேண்டாமா...?"
"அதற்கு நான் என்ன செய்வது...?"
"வாய் விட்டுப் பாடுவது..."
"நானா..."
"நீதான்..."
"மாட்டேன்..."
"நான் கேட்டால் நீ பாட மாட்டாயா?"
"எனக்குப் பாட வராது, அத்தான்..."
"அதை நான் சொல்ல வேண்டும்... நீ பாடு..."
"அத்தான். பிளீஸ்..."
"உமா... ப்ளீஸ்..."
தவிப்புடன் அவனைப் பார்த்தாள்.. அவன் பிடிவாதமான பதில் பார்வை பார்த்தான்... வேறு வழியின்றி அவள் பாட ஆரம்பித்தாள்...
"உன்னை ஒன்று கேட்பேன்...
             உண்மை சொல்ல வேண்டும்...
    என்னைப் பாடச் சொன்னால்...
             என்ன பாடத் தோன்றும்...?"
சிவாவிற்கு அவளது புத்திசாலித்தனம் கண்டு ஆச்சரியம் வந்தத.. அவன் பார்க்க... கண் முன் வளர்ந்தவள் அவள்... சிவாவின் முன்னால் வாயைத் திறக்கவே பயப்படுவாள்... இன்று பாட்டிலேயே கேள்வி கேட்கிறாள்...
"நிலவில்லா வானம்...
             நீரில்லா மேகம்...
    பேசாத பெண்மை...
             பாடாது உண்டை...
    கண்ணை மெல்ல மூடும்...
             தன்னை எண்ணி வாடும்..
         பெண்ணைப் பாடச் சொன்னால்...
             என்ன பாடத் தோன்றும்.....?"
அவளுடைய சுபாவத்தை அவன் முன் பிட்டு வைத்தாள் அவள்... அவளது குரலினிமையில் கவரப்பட்டவன்.. அந்தப் பாடலின் இசையில் மயங்கினான்... பாடல் சொல்லிய சேதியைக் கேட்கத் தவறினான்...
தேநிலவின் போது... அவர்கள் ஊட்டியில் தங்கியிருந்த அந்தப் பதினைந்து  நாள்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள நிறைய நேரமும்... தருணமும் இருந்தது...
ஆனால்... அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டனர்.. புதிரான அவள் சுபாவத்தை விட்டு... கூட்டுக்குள் இருந்து வெளிவந்த நத்தையாய் உமா இருந்த போதே சிவா அவளை முழுமையாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்... தவறி விட்டான்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஊமையின் ராகம் -12
ஊமையின் ராகம் -12
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s320/IMG-20191217-WA0035.jpg
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s72-c/IMG-20191217-WA0035.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-12.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-12.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy