ஊமையின் ராகம் -11

11 காலையில் கண் விழித்த போது சிவாவிற்குள் ஆனந்த அயர்வு இருந்தது.. அவனது கை அருகில் உமாவைத் தேடியது... அதிசயமாய் அவள் தட்டுப்பட்டாள்... ...


11
காலையில் கண் விழித்த போது சிவாவிற்குள் ஆனந்த அயர்வு இருந்தது.. அவனது கை அருகில் உமாவைத் தேடியது... அதிசயமாய் அவள் தட்டுப்பட்டாள்...
'இவள் இன்னும் எழுந்து கொள்ளவில்லையா....?' ஆச்சரியத்துடன் அவள் மேல் கைபோட்டு நெருங்கிப் படுத்து அவளது முகம் பார்த்தான்... அவள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்...
முதல் நாள் இரவின் நினைவில் அவளது முகம் பார்த்தவனின் மனதில் இனிமை நிலவியது.. அவள் அவனது விருப்பத்திற்கு இசைந்து கொடுத்தது.. அவன் மனதில் நிழல் படமாய் ஓடியது..
மையலுடன் அவளது நெற்றியில் மெலிதாக முத்தமிட்டான்.. அவளிடம் லேசாக அசைவு தோன்றியது...
"அத்தான்..." என்று தூக்கக் கலக்கத்தில் முணுமுணுத்தாள்..
'தூங்குகிறாள்.. எழுப்ப வேண்டாம்...' என்ற நினைவில் அவன் அவளது தூக்கத்திற்கு இடையூறு விளைவிக்காமல் விலகிப் படுத்துக் கொண்டு அவளையே பார்த்தான்...
களங்கமில்லாத அவள் முகம்... தூக்கத்தில் மலர்ந்திருந்தது.. அழகான மலர் ஒன்று இதழ் விரித்து அழைப்பதைப் போல் இருக்க.. தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் ஆசையுடன் அவளை மீண்டும் நெருங்கி... முத்தமிடப் போனான் அவன்... அந்த நேரம் பார்த்து அறைக்கதவு தட்டப்பட, விழித்து எழுந்த உமா... வெகு அருகாமையாய் தெரிந்த சிவாவின் முகத்தைப் பார்த்ததும்... மலர்ந்து சிரித்தாள்...
அந்தச் சிரிப்பில் குதூகலம் கொண்டவனாய் அவள் மேல் முகம் புதைத்து இறுகக் கட்டிக் கொண்டு முத்தமிட்டான் சிவா.. அறையின் வெளிச்சத்தை அப்போது தான் கவனித்த உமா... அவசரமாய் அவனின் கரத்தை விலக்கி எழுந்தாள்...
"ஏன்டி..."
"விடிந்து விட்டது அத்தான்..."
"விடியட்டுமே..."
"ச்சு.. பகலில் போய்..."
"பகலில் உன்னைச் சும்மாகூடத் தொடக்கூடாதா...?"  மீண்டும் அவன் குரலில் எரிச்சல் தென்படவும் அவள் மறுப்பைக் கைவிட்டாள்... மௌனமாய் அவன் கரங்களுக்குள் புகுந்து கொண்டாள்..
'அட... இவளுக்கு இது கூடத் தெரியுமா...'
அவளின் அருகாமையைக் கண்டு மனதிற்குள் அதிசயப்பட்டுக் கொண்டே... அவன் அவளது கன்னத்தில் முத்தமிட்டான்... அறைக்கதவு மீண்டும் தட்டப்பட... இப்போது உமா அவனிடமிருந்து முற்றிலும் விலகி... அறைக் கதவின் அருகே ஓடினாள்.. கதவைத்திறந்தாள்... சுந்தரி காபிக் கோப்பைகளுடன் நின்றிருந்தாள்...
"ஸாரிம்மா... தூங்கிவிட்டேன்... குற்ற உணர்வுடன் உமா கூறவும், சுந்தரி சிரித்து விட்டாள்.."
"பைத்தியம் போல பேசாதே..." மகளிடம் காபியைக் கொடுத்து விட்டு அவள் போய்விட்டாள்..
அறைக் கதவைத் தாழிட்டுவிட்டு... சிவாவின் அருகே வந்து அமர்ந்து காபிக் கோப்பையை நீட்டினாள்... அவன் எழுந்து அமர்ந்து.. அவளைப் பருகுவது போல் பார்த்துக் கொண்டே காபியைப் பருகினான்.. அவனது பார்வையில் முகம் சிவந்த உமா தலையணையைத் தூக்கி அவனைச் செல்லமாக அடித்தாள்...
"ஏய்ய்... நீ அடிக்கவெல்லாம் செய்வாயாடி..."
"ம்ம்ம்... சொன்ன பேச்சு கேட்கவில்லையென்றால் இப்படித்தான் செய்வேன்..."
"நான் சொன்ன பேச்சை நீ கேட்காவிட்டால் நான் என்ன செய்வேன் தெரியுமா...?"
சிவா அவளை அருகே இழுத்துக் காதோடு சொன்னான்.. அவள் முகம் சிவந்து.. அவன் மார்பில் கை வைத்துத் தள்ளிவிட்டாள்... அவன் சிரித்துக் கொண்டே அவளது கைப் பிடித்து இழுக்க முனைய... அவள் அவனது கைகளுக்குள் அகப்படாமல் விலகி ஓடி... குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்..
சற்று நேரத்தில் அவள் உடைமாற்றிக் கீழே சென்று விட.. சிவா... எழுந்து கொள்ள மனமில்லாமல் எழுந்து குளிக்கப் போனான்..
அன்று மாலை... அவளை அஷ்டலட்சுமி கோவிலுக்கு அழைத்துக் கொண்டு போனான்... வெளியே போய் வரலாம் என்று அவன் அழைத்ததும்.. அவன் எங்கே அழைத்துச் செல்கிறான் என்று கூடத் தெரியாமல் கூட வந்த உமா.. கோவிலைக் கண்டதும் சந்தோசப்பட்டாள்...
"தேங்க்யு அத்தான்.. நீங்க இங்கே என்னைக் கூப்பிட்டுக் கொண்டு விடுவீங்கன்னு நான் நினைத்தே பார்க்கவில்லை..."
"இப்போது பார்த்து விட்டாயா.. வா..."
அவள் அவனை விட்டு விலகி நடக்காமல் சேர்ந்து நடந்தது அவன் மனதிற்கு இதமாக இருந்தது.. அஷ்டலட்சுமிகளையும் வணங்கிவிட்டு.. கடற்கரையோரம் சென்று அமர்ந்தார்கள்.. இப்போது அவள் விலகி அமராமல் அவனுடன் ஒட்டியே அமர்ந்தாள்..
"என்னடி இன்றைக்கு.. ஆச்சரியத்திற்கு மேல்... ஆச்சரியமாய் அள்ளித் தருகிற...?"
"ஏன் அத்தான் இப்படிக் கேட்கறீங்க?"
"கோவிலுக்கு வந்தால் நூறடி தள்ளி வருவ... கடற்கரையில் உட்கார்ந்தால்.. பத்தடி தள்ளி உட்காருவ.... இன்றைக்கு என்ன இவ்வளவு தாராளம்...?"
"ச்சு.. உளறாதீர்கள்..."
"உளறுகிறேனா... நானா...?"
"ஆமாம்.. இது உளறல் இல்லாமல் வேறு என்னவாம்..?"
"நீ தெளிவாய்ப் பேசுகிற ஆள்தான்... நீயே ஏன்னு சொல்லிவிடும்மா..."
"அன்றைக்கும்... இன்றைக்கும் வித்தியாச மில்லையா?"
"அன்றைக்கு வெள்ளிக்கிழமை.. இன்றைக்கு வியாழக்கிழமை... நீ அதைச் சொல்கிறாயா...?"
"மக்கு.. மக்கு..."
"யார்... நானா...?"
"ஆமாம்... வேறு யாராம்...?"
"எல்லாம் என் நேரம்டி..."
"நேரம்தான்... அன்றைக்கு நீங்கள் யாரோ... நான் யாரோ..."
"அடிப் பாவி..."
"இன்றைக்கு நீங்கள் என் ஹஸ்பெண்ட்... நான் உங்களுடைய வொய்ப்..."
"ஆஹா... என்ன ஒரு கண்டுபிடிப்பு..."
"அன்றைக்கு நாம் சேர்ந்து நிற்கக் கூடாது... இன்றைக்கு விலகி நிற்கக் கூடாது இரண்டுமே மற்றவர்கள் பார்வைக்கு வித்தியாசமாகத்தான் படும்..."
சிவாவிற்குச் 'சுருக்' கென்றது...
'அப்படியானால்... மற்றவர்களுக்காகத்தான் இவள் என்னுடன் இசைந்து பழகுகிறாளா...? எனக்காக இல்லையா...? என்னை விரும்பி இல்லையா...
அவன் மௌனமாய்க் கடலை வெறித்தான்... அமைதியடைந்த அவன் மனம் மீண்டும் அலைகடலாய்ப் பொங்கியது...
அவனது முகமாற்றத்தை உமா கவனித்து விட்டாள்.. கணவன்.. மனைவி.. பந்தத்தை நினைவு படுத்தியதும் அவன் முகம் சிணுங்குகிறான் என்று நினைத்தாள்.
'இது விடுபட முடியாத பந்தம் என்பதால் திகைக்கிறானா... இனிக் காலம் முழுவதும் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று மலைக்கிறானா...'
அவள் மனதிற்குள் ஆயாசப்பட்டாள். அவன் மனதை மாற்ற என்ன வழியென்று யோசித்தாள்...
"நேற்று வரை....
             நீ யாரோ... நான் யாரோ...
    இன்று முதல்
             நீ வேறோ.. நான் வேறோ..."
அவள் சன்னக் குரலில் அவனை நோக்கிப் பாட... சட்டென்று மனதின் அலைகள் மறைத்து.. மனம் சமனப் பட்டு விட்டதாய் உணர்ந்தான் சிவா...
அவளது தோள் மீது அவனது கரம் படிந்தது... அவள் அவனருகில் நகர்ந்து உட்கார்ந்து கொள்ள.. அவன் இன்னும் மயங்கிப் போனான்... அவளது காதோரம் குனிந்து கிசுகிசுப்பாய்ப் பேசி... அவளை முகம் சிவக்க வைத்தான்..
சிவாவின் முகச் சிணுக்கம் காணாமல் போய்விட்டதைக் கவனித்தாள் உமா... அவளுக்கு ஆறுதலாக இருந்தது.. அவனது மனம் ஆடாமல் இருக்க வேண்டுமானால்... அவனை நெருங்கி நிற்க வேண்டும்... விலகி நிற்கக் கூடாது என்பது புரிந்து கொண்டிருந்தாள் அவள்...
எழுந்து நடக்கும் போது.. அவளது விரல்களோடு அவனது விரல் பிணைய... அவள் தன் கைகளை விலக்கிக் கொள்ளாமல்... அவன் கையோடு கோர்த்துக் கொண்டாள்.. வீட்டிற்குத் திரும்பியதும்... சற்று நேரம் டிவி பார்த்தார்கள்.. உமா சுந்தரிக்கு உதவி செய்யச் சமையலறைக்குப் போய்விட்டாள்..
இரவு உணவை அவர்கள் பேசிக் கொண்டும்.. சிரித்துக் கொண்டும்.. சாப்பிட்டு முடித்தனர்.. வீடு கலகலப்பாக இருப்பதை உணர்ந்த தணிகாசலம் மனநிறைவுடன் சிவாவைப் பார்த்துவிட்டுச் சுந்தரியைப் பார்க்க அவள்
'நான்தான் சொன்னேனில்லையா...' என்பது போல் பதிலுக்குப் பார்த்தாள்...
அன்று இரவு... முதல் நாளை விட அதிகமான நெருக்கத்தைக் கணவனுக்கு வழங்கினாள் உமா...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஊமையின் ராகம் -11
ஊமையின் ராகம் -11
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s320/IMG-20191217-WA0035.jpg
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s72-c/IMG-20191217-WA0035.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-11.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-11.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy