ஊமையின் ராகம் -10

10 இரு மனங்கள் ஒன்றாய் இணைவதுதான் திருமணம் இங்கே உமாவின் மனதில் சிவா மட்டும் இருந்தான்... அவன் மேல் உயிரையே வைத்திருந்தாள் அவள்... சி...


10
இரு மனங்கள் ஒன்றாய் இணைவதுதான் திருமணம் இங்கே உமாவின் மனதில் சிவா மட்டும் இருந்தான்... அவன் மேல் உயிரையே வைத்திருந்தாள் அவள்...
சிவாவின் மனத்திலும் உமாவே நிறைந்திருந்தாள்... அவளுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தான் அவன்..
ஆனால்.. உமாவின் வாய் திறந்து மனதிலிருப்பதை வெளியே கொட்டத் தெரியாத ஊமை சுபாவம்... அவளின் காதலை வாய்விட்டுச் சிவாவிடம் சொல்ல முடியாமல் தடுக்க... அவள் தன் காதலை மூடி மறைத்து... மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டாள்...
காதலித்தவளின் இந்தச் சுபாவத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் கோபத்தை வெளியில் கொட்டிய சிவாவின் கொதிப்பைக் கண்ட உமா... அவன் மனதில் தான் இல்லையென்ற முடிவுக்கு வந்து விட்டாள்...
திருமணத்திற்கு முன்பு... மற்றவர்கள் பார்த்து விடுவார்களோ என்று அஞ்சி விலகி... விலகிப் போன உமாவின் சுபாவத்தை... இன்று தவறாகப் பொருள் கொண்டு விட்டான் சிவா...
அவள் மனதில் நான் இல்லை... பிடிக்காமல்தான் அவள் விலகிப் போயிருக்கிறாள் என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.
மொத்தத்தில் ஒருவரையொருவர் காதலித்து மறைத்த அந்த இரு மனங்களும் திருமணத்தில் ஒன்று படாமல் வேறுபட்டு நின்றன...
மாப்பிள்ளைக்கும்... பெண்ணிற்கும் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்துக் கொண்ட சுந்தரியின் மனம் நிறைவடைந்திருந்தது... மகளின் மனதிற்குப் பிடித்தவனையே அவளுக்குக் கணவனாக்கி விட்ட நிம்மதியுடன் அவர்களை ஓடி.. ஓடி... உபசரித்தாள்...
அன்று இரவு... உமா மாடியேறப் போகும் போது அவளருகில் வந்த சுந்தரி.. மகளின் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள்... அதிலிருந்த கிலேசம் கண்டு.... அவளுக்கு மனக் கிலேசம் ஏற்பட்டது...
"உமா..."
"என்னம்மா...?"
"ஏன் ஒரு மாதிரியாக இருக்கிற...?"
"ஒன்றுமில்லை..."
"எதுவாக இருந்தாலும் மனம் விட்டுப் பேசிவிட வேண்டும் உமா... என்னிடம் இல்லை... சிவாவிடம்..."
"அம்மா..."
"எனக்கு உன் குணம் தெரியும்.. ஆனால் சிவாவிற்கு என்ன தெரியும்..? இனி நானும்... உன் அப்பாவும் உனக்கு அன்னியர்கள்தான்... சிவாதான் இனி உனக்குத எல்லாமும்... அதைப் புரிந்து கொள், உமா..."
"சரிம்மா..."
உமா மௌனமாக மாடியேறினாள்... சிவா அவளுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தான்... அவனது புறக்கணிப்பு தெளிவாய்த் தெரிய அவள் தயங்கி நின்றாள்... பின் கதவை தாழிட்டாள்...
"அத்தான்..."
"ம்ம்ம்..."
"பால்... அம்மா குடுத்து விட்டாங்க..."
"நேற்று உன் அத்தை கொடுத்துவிட்டாங்க... இன்றைக்கு உன் அம்மா கொடுத்து விட்டாங்களா..? ஏன்... உனக்குத் தானாய் எனக்குப் பால் எடுத்து வர வேண்டுமென்று தோன்றவே தோன்றாதா...?"
"அத்தான்..."
"எனக்கு வேண்டாம்.. நீயே குடி..."
உமாவிற்குத் துக்கம் தொண்டைணை அடைத்தது அவனது உதாசீனமான பேச்சைக் கேட்டு... உள்ளம் துடித்தாள் அவள்..
'பிடிக்காத பெண்டாட்டி..! வேறு எப்படிப் பேசுவான்..' அவள் கண் கலங்கினாள்...
அவளிடமிருந்து பதில் வராததால் அவன் திரும்பிப் படுத்து அவளைப் பார்த்தான்...
"ஏன்டி.. கண்ணில் என்ன டேமா வைத்திருக்கிற...? சரக்கென்றால் அது எப்படிடீ.. பொலபொலவென்று அழுது தொலைக்கிற...?" 
தான் அழுவது அவனுக்குப் பிடிக்கவில்லையென்ற எண்ணத்தில் உமா முகத்தைத் திருப்பிக் கொண்டாள்...
'அழுகிறாளே... அப்போதாவத் நான் அவள் கண்ணீர் துடைக்க வேண்டும் என்று அவள் எதிர்பார்க்கிறாளா... இப்போதும் கூட நான் யாரோ ஒருவன் போல.. என்னிடமிருந்து முகம் திருப்பிக் கொள்கிறாளே....' அவனுக்குள் சினம் மூண்டது...
"ஏய்... அழுவதா இருந்தால் வெளியில் போய் ஆசை தீர அழுது முடித்துவிட்டு உள்ளே வா... அழுமூஞ்சி..."
உமா அவசரமாய் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு கணவனிடம் பால் தம்ளரை நீட்டினாள்...
"எனக்கு வேண்டாமென்று சொன்னேனில்லையா..."
'நான் கூடத்தான் உனக்கு வேண்டாம்... அதற்காக என்னை வேண்டாமென்று தள்ளி வைத்து விடுவாயா...?' தன் மனதிற்குள் கேட்டுக் கொண்டே அவனை ஒரு முடிவோடு பார்த்தாள் உமா...
"என்னடி பார்க்கிற...?"
"உங்களுக்கென்று கொடுத்து விட்டதை நீங்கள் குடித்துத்தானே ஆக வேண்டும், அத்தான்... நீங்கள் வேண்டாமென்று மறுத்தால்... இதற்கு என்ன வழி? கீழே ஊற்றி விட மாட்டார்களா...?"
"ஏன் நீ குடிக்க வேண்டியதுதானே..."
தன் வார்த்தைகளில் இருந்த மறைபொருளை அவன் உணர்ந்து கொள்ள மறுக்கிறானே என்று இருந்தது உமாவிற்கு...
"இல்லைஅத்தான். நீங்கள்தான் குடிக்கவேண்டும்.."
"பிடிவாதமா...?"
"இல்லை... இது என் தரப்பு வாதம்..." வாயே திறக்காதவள் இவ்வளவு பேசியது சிவாவிற்கு ஆச்சரியத்தைத் தந்தது...
'இவள் கூட இவ்வளவு பேசுவாளா...?'
அவன் எழுந்து உட்கார்ந்து... மடியில் ஒரு தலையணையை வைத்துக் கொண்டான்... அதில் கையை ஊன்றிக் கொண்டு அவளைப் பார்த்தான்..
"குடிங்க அத்தான்..."
அவள் நீட்டிய பாலை வாங்கி அருந்திக் கொண்டே அவளைப் பார்த்தான் சிவா.. அவள் தலையைக் குனிந்து கொண்டாள்... அவனது பார்வை... தன் மனதில் உள்ளதைச் செயலாற்றி விடலாம் என்ற நம்பிக்கை உமாவிற்கு கொடுத்தது...
மெலிதான... சின்தெடிக் போன்ற... பிரிண்டெட் வேலை செய்த பட்டுச் சேலை ஒன்றைக் கட்டியிருந்தாள் உமா.. அது அவளது மேனியில் நிற்காமல் நழுவியது... கண்களில் அளவாய் அழகாய்... வெளியே தெரியாத வகையில் மை தீட்டியிருந்தாள்... நெற்றியில் வட்ட வடிவமான அரக்கு நிற ஸ்டிக்கர்... அவளது தலையில் நிறையச் சூடியிந்த மல்லிகைப் பூவின் மணம் அந்த அறையெங்கும் நிறைந்து பரவியது... சிவாவின் மனம் மயங்கியது... பாதிப் பாலை மீதம் வைத்து அவளது
மனதை அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் அவளிடம் நீட்டினான்..
"எனக்கு இவ்வளவு போதும்..."
பதில் பேசாமல் வாங்கிக் கொண்டவள்.... மீதப் பாலைக் குடித்தாள்... சிவா ஆச்சரியத்துடன் இமைக்க மறந்து அவளைப் பார்த்தான்...
'அப்படியானால்.. இன்றைக்கு இவள் என்னை ஏமாற்ற மாட்டாள்..'
அவளையே அவன் பார்த்த பார்வையில் தாபம் இருந்தது.. அழைப்பு இருந்தது... லேசாக விழியுயர்த்தி அவனைப் பார்த்தாள் உமா... அவளது மேனி சிலிர்த்தது... அவனது அழைப்பு அவளுக்குப் புரிந்து போனது...
"உமா..."
"ம்ம்ம்.."
"பேசு.. உமா.."
"என்ன பேச...?"
"எதையாவது பேசு..."
"எதையாவது என்றால்...?"
"எதையாவது பேசு.. இல்லை பாடு..."
பேசுவதை விடப் பாடுவது எளிதான வழியாகத் தோன்றியது உமாவிற்கு... மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தாள் அவள்...
"உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்...
             உன்னை... உள்ளமெங்கும்...
    அள்ளித் தெளித்தேன்...
             உறவினில் விளையாடி...
         வரும் கனவுகள் பலகோடி..."
சிவா கிளர்ச்சியடைந்தான்.. அவள் கைகளைப் பற்றினான்.. அவள் விரல்கள் நடுங்குவதை உணர்ந்தான்... மெல்ல அவள் விரல் நீவிப் பயத்தைப் போக்க முயன்றான். அவள் நடுங்கினாலும் தன் கரத்தை உருவிக் கொள்ளவில்லை... அவன் முன்னேறினான்.. அவளைத் தன் அருகில் இழுத்தான்.. பூ மாலையாய் அவன் மேல் விழுந்தாள் உமா... அவனது கரங்கள் அவளைச் சுற்றி வளைத்துக் கொண்டன.. தாகத்துடன் அவளது இதழ் தேடிக் குனிந்தான் அவன்... அவள் அவன் மார்பில் முகம் புதைத்துத் தலை தூக்க மறுத்தாள்..
"ஏன்டி..." அவன் வேட்கையுடன் அவளது காதோரம் முணுமுணுத்தான்...
"விளக்கு அத்தான்.." அவன் வெட்கத்துடன் அவன் மார்பில் இன்னும் ஒன்றிக் கொண்டாள்..
"இவ்வளவுதானா...." அவன் மன நிம்மதியுடன் விளக்கை அணைத்தான்..
ஏஸியில், மெல்லிய வெளிச்சத்தில்.. அவள் கோட்டோவியம் போல் வரி வாடிவமாய்த் தெரிய அவன் அவளை ஆவலுடன் நெருங்கினான்.. உமா தன் நாணத்திற்கு அன்று விடுதலை கொடுத்தாள்... சிவாவின் மனைவியாக முழுமையாய் அவனுடன் கலந்து விட்டாள்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஊமையின் ராகம் -10
ஊமையின் ராகம் -10
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s320/IMG-20191217-WA0035.jpg
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s72-c/IMG-20191217-WA0035.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-10.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-10.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy