பொதிகையிலே பூத்தவளே -58

58 ' நானா ஒன்னும் போய்ப் பார்க்கனும்னு நினைக்கலையே.. அம்மாதானே பார்க்கச் சொல்கிறாங்க.. ' மீனாவின் மனம் நொண்டிச் சமாதானம் சொன்...


58
'நானா ஒன்னும் போய்ப் பார்க்கனும்னு நினைக்கலையே.. அம்மாதானே பார்க்கச் சொல்கிறாங்க..'
மீனாவின் மனம் நொண்டிச் சமாதானம் சொன்னது.. மனதுக்குள் கிரி சேகரித்து வைத்திருக்கும் போட்டோ ஆல்பத்தைப் பார்த்தே தீர வேண்டும் என்ற வேகம்.. மீனா வேகமாகப் படியேறினாள்.. மாடியிலிருந்த கிரியின் அறைக் கதவைத் திறந்து உள்ளே பிரவேசித்தபோது அவளும் விஷ்வாவும் அங்கே தனித்திருந்த நினைவு வந்து அவளைத் தாக்கியது.. அவளுடைய விஷ்வா இப்படியொரு கொடூரத்தைச் செய்திருப்பானா..? அப்படி நினைத்துப் பார்ப்பது கூடத் தவறில்லையா..?
'ஆனால்.. என் மனதுக்குப் பிடித்தவன் என்கிறதுக்காக என் காதில் விழுந்த செய்தியைப் பற்றி நான் ஆராயாமல் விடலாமா..?'
கேட்ட செய்தி ஒன்றும் சாதாரணமானதல்ல.. மேகி சொல்வதை மீனா அலட்சியப்படுத்தலாம்.. அவளுடன் விஷ்வா தொடர்பில் இருந்ததை மீனா அறிவாள்.. புதிதாக எதையும் தெரிந்து கொள்ளவில்லை.. வினோத் சொல்வது அப்படி அலட்சியப்படுத்தக் கூடியதாக இல்லையே.. வினோத் அயோக்கியன் என்பதற்காக அவன் சொல்வதில் உண்மை இருக்கக்கூடாது என்று ஒன்றும் சட்டமில்லையே.. அவன் பேசும் அனைத்தும் பொய்யாகத்தான் இருக்க வேண்டுமா..? அவனுக்கு மீனாவையும் விஷ்வாவையும் பிடிக்காதுதான்.. அவர்களைப் பிரிக்க சதி செய்கிறான் என்று சந்தேகப் படலாம்தான்.. அப்படி ஒரேயடியாக ஒதுக்கி வைத்து விட்டால் மீனா நியாயம் தவறியவளாக ஆகிவிட மாட்டாளா..? அவளுடைய சுயநலத்திற்காக அவளுக்குத் தெரிய வந்த உண்மையை கண்டு கொள்ளாமல் கடந்து விட்டாள் என்று அவளுடைய மனச்சாட்சி அவளை எள்ளி நகையாடாதா..? விஷ்வாவின் மீதுள்ள மயக்கத்தால் அவனுடைய கொடூரத்தைப் பற்றி ஆராயாமல் அலட்சியப்படுத்திவிட்டாள் என்று குற்றம் சாட்டாதா..?
வினோத் சொல்லும் குற்றம் சாதாரனமானதல்ல.. மீனாவால் விஷ்வாவுக்கு மேகியுடன் இருந்த பழக்கத்தை மன்னித்து விட முடியும்.. வனமலரை அவன்தன் கொன்றான் என்பது உண்மையாக இருந்தால் ஒரு போதும் அந்தக் குற்றத்தை மன்னித்து அவனை ஏற்றுக் கொள்ள முடியாது.. 
கிரியின் அறையிலிருந்த அலமாரியின் கதவு மூடப்பட்டிருந்தது.. அதைத் திறக்கும் போது மீனாவின் மனம் உறுத்தியது.. எங்கே வந்து அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள்.. கிரியின் அறையில் அனுமதியின்றி பிரவேசித்ததே தவறு.. இதில் அவனுடைய அலமாரிக் கதவையும் திறந்து சோதனையிடுவதா..? தவறுக்கு மேல் தவறு செய்கிறாளா..?
'அம்மாதானே அனுப்பினாங்க..'
மனம் மறுபடியும் நொண்டிச் சமாதானத்தை துணைக்கு அழைத்தது.. மனதை திடப்படுத்திக் கொண்டு அலமாரியின் கதவைத் திறந்து விட்டாள்.. கிரியின் அம்மா சொன்ன போட்டோ ஆல்பம் மேல் தட்டிலேயே இருந்தது..  தினமும் கிரி அதை எடுத்துப் பார்ப்பான் என்று கிரியின் அம்மா சொல்லியிருந்ததில் அவளது மனம் கனத்தது.. கிரியின் ஆத்மார்த்த காதலின் நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் போட்டோ ஆல்பத்தைப் பொக்கிசம் போல மிருதுவாகத் தூக்கி அதை விட மென்மையாக ஒவ்வொரு பக்கத்தையும் ஊன்றிப் பார்த்தாள்..
டைரிகள் மட்டுமல்ல.. நாம் சேகரித்து வைத்திருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் கதை பேசும்.. அந்த காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.. கிரியின் புகைப்பட ஆல்பத்திலும் அது போலதான்.. வனமலருடன் அவன் கழித்த நாள்களை அந்தப் புகைப்படங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்தின.. அவளது குழந்தைப்பருவம் முதல் யௌவனப் பருவம்வரை ஒவ்வொரு காலகட்டத்தையும் புகைப்படம் பதிவு செய்திருந்தது..
மலைவாழ்மக்கள் இயற்கையுடன் இணைந்து வாழ்பவர்கள்.. அவர்களிடம் கேமரா எப்படி வந்தது என்று யோசித்தாள் மீனா..
"எல்லாமே கிரி எடுத்ததுதான் மீனாம்மா.."
அறைவாசலில் குரல் கேட்டது.. மீனா நிமிர்ந்து பார்த்தாள்.. சூடான தேநீர் நிரம்பிய குவளையுடன் உள்ளே வந்தாள் கிரியின் அம்மா..
"அவனுக்கு போட்டோ எடுக்கிறதுன்னா பித்து.. மலையில இருந்து கீழே இறங்கறப்ப உனக்கு என்ன வேணும்னு கிரியோட அய்யன் கேட்டப்ப கேமரா வேணும்னு சொன்னான்.. அப்ப அவனுக்கு ஆறுவயசு.. அவன் கேட்டா அவங்கய்யன் ஏறாத மலையில கூட ஏறி தேனைக் கொண்டு வந்திருவாக.. கேமராவைக் கொண்டு வர மாட்டாகளா.. அதில அவன் எடுத்துத் தள்ளின போட்டோவில ஒன்று போட்டியில ஜெயிச்சு பரிசுகூட வாங்குச்சு.. போட்டோ எடுக்கிறதுன்னா அம்புட்டுப் பித்து.." பெருமையுடன் பேசினாள்..
கிரி எடுத்திருந்த போட்டோக்கள் அத்தகைய கலைநுட்பம் வாய்ந்தவைகளாகத்தான் இருந்தன.. மலைவாழ் மக்களின் இருப்பிடங்கள்.. சமய விழாக்கள்.. பண்டிகைகள்.. இல்லங்களில் நடைபெறும் விழாக்கள் என்று அவர்களின் வாழ்க்கை முறையையும் கலாச்சார நிகழ்வுகளையும் புகைப்படங்கள் விவரித்தன..
"இப்புடி போட்டோ எடுக்கிறதில பித்தா இருந்தவன்தான் இப்பக் கேமராவைத் தொடறதே இல்லம்மா.. செல்போனில கூட போட்டோ பிடிக்க மாட்டான்.. வெறுத்துப் போயிட்டான்.."
கிரியின் அம்மா சேலையின் முந்தானை கொண்டு முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.. அவள் சேலை கட்டும் விதம் வித்தியாசமாக இருக்கும்.. முந்தானை போர்த்தியதைப் போல முதுகுப் புறத்தை மறைத்துத் தோளில் மூடி போடப் பட்டிருக்கும்.. அதிகக் குளிரினால் மலைவாழ் இனப் பெண்கள் இதுபோல சேலை கட்டுகிறார்களோ என்று யோசித்தாள் மீனா..
கிரியின் அம்மா பக்கத்தில் இருக்கும் போது புகைப்படங்களை பார்ப்பது வசதியாக இருந்தது மீனாவுக்கு.. அவள் மனதில் கிரியின் அனுமதியில்லாமல் புகைப்படங்களை பார்க்கும் குற்ற உணர்வு மறைந்து போனது.. அவள் ஒர்விதமான விடுதலையுணர்வுடன் புகைப்படங்களைப் புரட்டினாள்.. வனமலர் இருக்கும் படங்களைக் கூர்ந்து பார்த்தாள்..
அடர்ந்த புகை போன்ற பனியின் ஊடே ஆடுகளைத் துரத்திக் கொண்டு ஓடிவரும் வனமலரின் புகைப்படம் அவளை ஈர்த்தது.. இயற்கையின் மொத்த அழகையும் தன்னுள்ளே பொதித்துக் கொண்டிருக்கும் காட்டுப் பூக்களின் வனப்பு வனமலரிடம் இருந்தது.. மாசு மறுவில்லாத இயற்கையழகு.. இந்த அழகு விஷ்வாவையும் ஈர்த்திருக்குமோ..?
'அப்படி ஈர்த்திருந்தா விஷ்வா இவளைக் காதலித்திருக்கலாமே..'
வேதனையுடன் நினைத்துக் கொண்டாள் மீனா.. அவளுடைய காதலன்தான்.. அவளுக்கு உயிரானவன் தான்.. ஆனாலும்கூட காணக்கிடைக்காத ஓர் வன தேவதையின் மீது ஆசைவந்தால் அவளைக் காதலித்திருக்கலாம்..
கசக்கி முகர்ந்திருக்க வேண்டும் என்ற வேதனை நெஞ்சில் வருவதை அவளால் தடுக்க முடியவில்லை..
'என்ன இது..?'
அவளது சிந்தனையின் போக்கில் திடுக்கிட்டாள் மீனா.. விஷ்வா வனமலரைக் கசக்கி முகர்ந்து அருவியிலிருந்து தள்ளி விட்டான் என்று அவள் நம்பி விட்டாளா..? ஏன் இப்படியெல்லாம் நினைக்கிறாள்..?
மீனாவுக்கு அழுகையே வந்து விட்டது.. இது போன்ற நினைவுகள் விசம் போன்றவளை.. மனதில் கலந்து அடியாழத்தில் படிந்து விட்டால் அதை மாற்றுவது மிகக் கடினமாகி விடக் கூடும்.. மீனா மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.. இல்லையென்றால் விபரீதமாகி விடும்..
இப்படி உருப் போட்டுக் கொண்டே புகைப்பட ஆல்பத்தைப் புரட்டிக் கொண்டிருந்த மீனா அதிர்ந்தாள்.. அந்த புகைப்படத்தின் மீது பதிந்த பார்வை நிலை குத்தி நின்றது.. மலைவாழ் மக்களின் விழா போல இருந்தது.. அதில் கிரியும் விஷ்வாவும் இருக்க கூட வனமலரும் இருந்தாள்.. அவர்களது வழக்கப்படி புடவையைக் கட்டியிருந்தாள்.. நடனம் ஆடியிருக்கக்கூடும் என்று யூகித்தாள் மீனா.. வனமலரின் கூந்தல் அலங்காரம் அப்படி இருந்தது.. மற்ற புகைப்படங்களில் பாவாடை தாவணியுடன் கூந்தலைப் பின்னலிட்டோ, விரிய விட்டோ காட்சியளித்த வனமலர், இந்த புகைப்படத்தில் கூந்தலைத் தூக்கிக் கொண்டையிட்டு அதில் பறவையின் இறகுகளைச் செருகியிருந்தாள்.. கழுத்து, காது, கைகளில் பாசி மணிகளால் ஆண அணிகலன்கள்.. கால்களில் தண்டை..
அந்தப் புகைப்படத்தில் கிரியும் வனமலரும் கேமராவைப் பார்த்துக் கொண்டிருக்க, அவர்களுடன் இருந்த விஷ்வா மட்டும் வனமலரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.. ரசித்துப் பார்க்கும் பார்வை.. முதன் முதலில் மீனாவைப் பார்த்தபோது பார்த்தானே.. அதே பார்வை..
'இதுக்கு மேலே காட்சி வேணுமா..?'
அதற்கு மேலும் பார்க்க முடியாமல் போட்டோ ஆல்பத்தை மூடி விட்டாள் மீனா.. மனது தடதடத்தது.. நண்பனின் காதலி.. அவனை மணக்கப் போகிறவள்.. அவள் பக்கத்திலிருக்கும் போதே இப்படியொரு கள்ளப்பார்வையை பார்த்திருக்கிறானே..
'வினோத் சொல்வதில் உண்மை இருக்குமோ..'
சஞ்சலம் கொண்டாள் மீனா.. இப்படியொரு பழி போட்டால் அதை மீனா நிச்சயமாக விஷ்வாவிடம் சொல்லி விடுவாள் என்று தெரிந்திருந்தும் ஏன் வினோத் தைரியமாக மீனாவிடம் சொன்னான்..?
'நெருப்பில்லாமல் புகையுமா..?'
விஷ்வா திரும்பி வந்தவுடன் மீனா அவன் முகம் பார்த்து நேர் கொண்ட பார்வையுடன் இந்தக் கேள்வியைக் கேட்டாள்.. அவனது முகம் பயங்கரமாக மாறியது.. சிவந்த கண்களுடன் மீனாவை உறுத்துப் பார்த்தவன்..
"இது கானாடுகிரி மலைடி.. மதுரையில்ல.. இங்கே நெருப்பில்லாமலே புகைமூட்டம் வரும்.. கண்ணுக்கு முன்னாலே என்ன இருக்குன்னு தெரியாத பனிப்புகை.. அது உண்மையை மறைக்கும்.." என்று உறுமினான்.
மீனா உன்னை நம்ப மாட்டேன் என்ற மனக்குமுறலுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.. அந்தப் புகைப்படத்தை பார்த்த நொடியிலிருந்து அவளது மனம் படும் பாட்டை விஷ்வா அறிவானா..? கிரியின் முகம் பார்த்துப் பேச முடியாமல் அவள் அன்று வீட்டுக்கு ஓடி வந்தாளே.. அப்போது அவளது மனதில் பொங்கிய பேரலையை விஷ்வா அறிய மாட்டான்..
மீனா விஷ்வாவைக் காதலித்தாள்.. அவனுக்காக அவள் என்ன வேண்டுமானலும் செய்வாள் ஏன்..? அவனுக்காக அவனையே அவள் விட்டுக் கொடுப்பாள்.. ஆனால் வினோத் சொன்னது மட்டும் உண்மையாக இருந்தால் அவனை வெறுத்து ஒதுக்கி விடுவாள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,6,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,89,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,24,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,6,எண்ணியிருந்தது ஈடேற,229,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,20,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,5,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -58
பொதிகையிலே பூத்தவளே -58
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/saathakapparavai-58.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/saathakapparavai-58.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy