பொதிகையிலே பூத்தவளே -65

65 " ஒன் வீக்.. ஜஸ்ட் ஒன் வீக்.. டயம் தர்றேன்.. அதுக்குள்ளே மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு குடும்பத்தோட ஓடிப் போயிரனும்.. இல்லே...


65

"ஒன் வீக்.. ஜஸ்ட் ஒன் வீக்.. டயம் தர்றேன்.. அதுக்குள்ளே மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு குடும்பத்தோட ஓடிப் போயிரனும்.. இல்லேன்னா கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளிருவேன்.."
புனிதாவைப் பார்த்து அவன் விரல் சொடுக்க.. அவனது விரலை மடக்கி நெறித்துத் தள்ளி விட்டாள் மீனா.
"யாரைப் பார்த்துச் சொடக்குப் போடற..?" பத்ரகாளியாய் சீறினாள்..
"எங்கப்பாவோட ரெண்டாவது பொண்டாட்டியப் பாத்து சொடக்குப் போடறேன்.." தெனாவெட்டாகப் பதில் சொன்னான் ஆனந்தன்..
"அது மட்டுமில்லை அண்ணா.. இந்த வீட்டை அப்பாவிடமிருந்து கிரயம் பண்ணி வாங்கியிருக்கிற ஓனரைப் பாத்துச் சொடக்குப் போடற.." எகத்தாளமாகச் சொன்னாள் மீனா..
"என்னது..?"
ஆனந்தன் வாய்விட்டும்.. மற்றவர்கள் மனதுக்குள்ளும் அலறினார்கள்..
"ஆமாம்ப்பா.." மூர்த்தியிடம் சொன்னாள் மீனா..
"இது எப்ப நடந்தது..?"
"நீங்க ஹாஸ்பிடலில இருந்து டிஸ்ஜார்ஜ் ஆனப்ப, ஹாஸ்பிடல் செலவுக்காக பணம் வேண்டியிருந்தது.. அதுக்காக வீட்டுப் பெயரில பணம் வாங்கனும்னு சொல்லி உங்க ரெண்டு பேரையும் ரெஜிஸ்ட்ரர் ஆபிசுக்குக் கூப்பிட்டுக்கிட்டுப் போனேனே.. அது இதுக்காகத்தான் அப்பா.. என்ன விவரம்ன்னு கேட்டுக்காமலே நீங்க ரெண்டு பேரும் நான் காட்டின இடத்தில எல்லாம் கையெழுத்துப் போட்டிங்க.. அப்பவே உங்க பெயரில இருந்த இந்த வீட்டை கிரயப்பத்திரமா அம்மா பேருக்கு மாத்தி ரெஜிஸ்டர் பண்ணிட்டேன்ப்பா.. உங்க ரெண்டு பேருக்கும் இது தெரியாது.. கடன் வாங்க வீட்டை அடமானம் வைத்தேன்.. பின்னாலே பணம் வந்ததும் வீட்டைத் திருப்பினேன்னு நினைத்துக்கிட்டு இருக்கீங்க.."
"ஏன் மீனா..? எதுக்காக இப்படி செஞ்ச..?"
"இதுக்காகத்தான் அம்மா.. இப்படி உங்களைப் பார்த்து யாரும் சொடக்குப் போட்டு வெளியே போன்னு சொல்லிரக் வடாது.. அதுக்காகத்தான் அப்படி செஞ்சேன்.. இது நன்றி கெட்ட உலகம்மா.. நீங்க பொங்கிப்போட்ட சோற்றைத்தான் இவன் சாப்பிட்டு வளர்ந்தான்.. நீங்க துவைச்சு, அயர்ன் பண்ணி வைச்ச சட்டை, பேண்ட்டை போட்டுக்கிட்டு காலேஜ் போனான்.. இவன் இல்லாதப்ப இவன் ரூமை கூட்டித் துடைச்சு, அலமாரிகள்ல தூசி தட்டி, படுக்கையை ஒழுங்கு படுத்தி துவைச்ச விரிப்பான்களை விரித்துன்னு பார்த்துப் பார்த்து செய்வீங்க.. அதெல்லாம் இவனுக்குத் தெரியாதுன்னா நினைக்கறிங்க.. தெரியும்மா.. தெரிஞ்சுக்கிட்டே அத்தனை வசதிகளையும் அனுபவிச்சான்.. துரும்பு படாம நீங்க பார்த்துக்கிட்டதுக்கு நன்றி விசுவாசம் காட்டுவான்னு நான் நினைக்கலை.. அப்பாவுக்கு உடம்பு சரியில்லாதப்ப நீங்க ஆடிப் போயிட்டிங்க.. உங்களுக்கு எல்லாமே அப்பாதான்.. எனக்கும் மோகனாவுக்கும் எல்லாமுமா இருக்கிறது நீங்களும் அப்பாவும்தான்.. நீங்க இந்த வீட்டில உரிமையா இருக்கனும்னா இந்த வீடு உங்க பெயருக்கு மாறியாகனும்மா.. என்னை வீட்டை விட்டு வெளியே போன்னு நீங்க செல்லி விடுவீங்களா..? ஆனா உங்களைப் பார்த்து இவன் சொல்லுவான்.."
கண்ணீருடன் மீனா பேசிய பேச்சில் வாய் பொத்தித் துடித்துப் போனாள் புனிதா.. இரண்டே எட்டில் மகளை அணுகி கட்டிக் கொண்டாள்.. அவளது உடல் நடுங்கியது.. மீனா என்ன வார்த்தை சொல்லிவிட்டான்..
"என்ன வார்த்தை சொல்லிட்ட..? நீ என் மகள்டா.. நீயில்லாம நானா..?"
"நீங்க இப்படித்தான் சொல்வீங்கம்மா.. ஆனா இவன் உங்களைப் பார்த்து என்ன சொன்னான்னு கேட்டிங்கள்ல.. இவன் இப்படித்தான் பேசுவான்ம்மா.."
ஆனந்தனின் சர்வாங்கமும் துடித்துக் கொண்டிருந்தது.. இப்படியொரு திருப்பு முனையை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை..
"யாரைக் கேட்டு வீட்டை இந்தம்மா பேருக்கு கிரயம் பண்ணிக்கொடுத்த..? சட்டப்படி அது செல்லாது.. என் கையெழுத்தும் வேணும்.. நான் கோர்ட்டுக்கு போறேன்.. உங்களையெல்லாம் ஆட்டு, ஆட்டுன்னு ஆட்டி வைக்கிறேன்.."
"கிழிச்ச.." என்றாள் மீனா..
ஆனந்தன் வீசிய அணுகுண்டால் மத்தவங்கள் அச்சம் கொள்ளவேயில்லை.. எப்போது மூர்த்திக்கு ஹார்ட் அட்டாக் என்றவுடன் புனிதாவின் வாழ்க்கைப் பாதுகாப்புக்காக மீனா வீட்டையே புனிதாவின் பெயருக்கு மாற்றி எழுதி வைக்கும் அளவுக்குப் போனாளோ.. அப்போதே அதை சட்டப்படி புனிதாவின் பெயரில் எழுதி வைக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்து முடித்திருப்பாள் என்ற தைரியம் அவர்களுக்கு இருந்தது.. ஆனந்தனுக்குத்தான் மீனாவைப் பற்றித் தெரியவில்லை.. அவன் அவளை மிக எளிதாக நினைத்துச் சவால் விட்டுக் கொண்டிருந்தான்..
"உன் புத்தி தெரிஞ்சுதான் உன்னோட கையெழுத்தை யூஸ் பண்ணிக்கிட்டேன்.."
"போர்ஜரிக் கையெழுத்தைப் போட்டியா..?"
"அது உன் புத்தி.. எனக்கு அது சுட்டுப் போட்டாலும் வராது.. நீ படிச்சுக்கிட்டு இருந்த காலத்தில, வேலை கிடைக்கலேன்னா சொந்தமா கம்பெனி ஆரம்பிக்கனும்னு அப்பாவைப் போட்டுப் பாடாய் படுத்திக்கிட்டு இருந்தியே.. அப்பா கையில பணமில்லேன்னு சொன்னப்ப.. இந்த வீட்டை வித்துடச் சொல்லி இரக்கமில்லாம ஐடியா கொடுத்தியே.. அப்ப வீட்டை விற்க நீ போட்டுக் கொடுத்த 'நோ அப்ஜெக்சன்' கையெழுத்தை மறந்துட்டு, அமெரிக்காவில் வேலை கிடைச்சதும், நீ காதலிச்ச பொண்ணைக் கட்டிக்கிட்டு அமெரிக்காவுக்கு ஓடிப் போயிட்ட.. அந்தக் கையெழுத்தை யூஸ் பண்ணிக் கூடவே நானும் கையெழுத்துப் போட்டு மோகனாவையும்
கையெழுத்துப் போட வைச்சேன்.. புராப்பரா எல்லா புரசிஜரோடவும் சட்டப்படி கிரயம் ஆன வீடு இது.. நீ கிட்டக்கூட வர முடியாது.. எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும் சல்லாதுப்பா.."
"அடிப்பாவி..! நீயெல்லாம் கூடப் பிறந்தவளா..?"
"வாடி போடின்னா நடக்கிறதே வேற.. கூடப் பிறந்தவளும் பெத்த தகப்பனும் என்ன ஆனாலும் சரின்னு சொல்லிக்காம கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு நாட்டை விட்டு ஓடிப் போனவன்தானே நீ.. இந்த வாயை வைச்சுக்கிட்டு என்னைக் குறை சொல்ல வந்திருக்க..?"
"இது நம்ம அம்மாவோட நகைகளை விற்றுக் கட்டின வீடு.. உனக்கும் எனக்கும் மட்டும்தான் சொந்தம்.. இதைப் போய் அம்மாவோட சக்காளத்திக்குத் தாரை வார்த்துக் கொடுத்திருக்கியே.. உன்னை என்ன சொல்ல..?"
"எதுவுமே சொல்லாதே.. நீ பாசத்தைச் சொல்லனும்னு நான் ஒன்னும் தொன்னாந்துக்கிட்டு நிக்கலை.. அம்மாவே கண் கண்ட தெய்வம்ன்னு தினமும் நீ பூப்போட்டு கும்பிட்ட ஆளுதான் போவியா.."
"அறிவோட பேசு மீனா.. நான் உன் அண்ணன்.."
அதைக் கேட்ட மீனா ஆனந்தனை அடையாளம் பார்ப்பதைப் போல பாதாதி கேசம் பார்த்துக் கேலியாக புன்னகைத்தாள்.. ஆனந்தன் சினம் கொண்டான்..
"நம்ம அம்மா சொத்தை யாரோ ஒரு பொம்பளைக்குத் தாரை வார்த்துக் கொடுத்துட்டு என்னைப் பார்த்து எகத்தாளச் சிரிப்பு சிக்கிற.. வீட்டை இந்தப் பொம்பளையிடமிருந்து மறுபடியும் எழுதி வாங்க என்ன செய்யலாம்ன்னு பாரு மீனா.. நாம ஒரு தாய் மக்கள்.."
"அடிச்சேன்னா பாரு.. சும்மா அம்மா செண்டிமெணட் பேசிக்கிட்டு.. ஆறுவயசில் அம்மா என்னை விட்டுட்டுப் போயிட்டாங்க.. இந்த பதினேலு வருசமா எங்கம்மா இந்தம்மாதான்.. பெத்த பிள்ளைகளில இவங்க பேதம் பார்த்ததில்லை.. மகாபாரதத்தில பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பேரு.. அதில தர்மர், பீமன், அர்ஜூனன் மட்டும்தான் குந்தி பெற்ற பிள்ளைகள்.. நகுலனும், சகாதேவனும் மாத்ரியின் பிள்ளைகள்.. மாத்ரி இறந்து விடுவாள்.. குந்தி ஐந்து பிள்ளைகளையும் தான் பெற்ற பிள்ளைகளாகவே நினைத்து வளர்ப்பாள்.. ஒரு நாளும் பிரித்துப் பார்த்ததில்லை.. குந்திக்குச் செல்லப்பிள்ளை யார் தெரியுமா..? தர்மம் தவறாத தர்மரில்லை.. பலசாலியான பீமனில்லை.. வில்லுக்கு ஒர் விஜயன்னு பெயர் வாங்கிய அர்ஜூனனில்லை.. மாத்ரி பெற்ற சகாதேவன்தான் அவளோட செல்லப் பிள்ளை.. அவன் கடைக்குட்டியாம்.. அதனால அம்மாவுக்கும் மத்த நாலு அண்ணன்களுக்கும் அவன் செல்லமாம்.. இதெல்லாம் உனக்கு எங்கே தெரியப்போகுது.."
"உனக்குத் தெரிஞ்ச வரைக்கும் போதும்.. இரண்டாயிரத்து இருபதில இதிகாச காலத்தைப் பத்திப் பேசி உருப்படாம போயிட்ட.. இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை யோசிக்காம அம்மாவோட சக்களத்தி பெயருக்கு எழுதி வைச்சிருக்கிற.."
"அமெரிக்காவுக்குப் போயும் திருந்தாத ஜென்மமா வந்து நிற்கறியே.. உன்னைப் பெத்த கடமைக்கு.. நல்லபடியா வளர்த்து படிக்க வைச்சிட்டாரு நம்ம அப்பா.. அந்த படிப்பு தந்த வேலையிலதான் நீ அமெரிக்காவுக்குப் பறந்து லட்சக்கணக்கில சம்பாதிக்கிற.. இருந்தும் தங்கச்சி சம்பாதிச்ச சொத்தைப் பிடுங்கிக்கனும்னு ஆசைப்படற பார்த்தியா..? நீ எங்கேயோ போயிட்டண்ணா.."
"உனக்கும் பங்கு கொடுப்பேன் மீனா.."
"நீ யாரு பங்கு கொடுக்க..? ஒன்னைத் தெரிஞ்சுக்க அண்ணா.. இந்த வீட்டைக் கட்டியது நம் அப்பா.. அம்மாவோட நகைகள் அத்தனையும் பத்திரமா இருந்தது.. அதை வித்துத்தான் உன்னைப் படிக்க வைச்சாரு.. ஒரு ஆளோட குறைந்த சம்பாத்தியத்தில.. சோறு போட்டு, துணிமணி வாங்கிக் கொடுத்து, படிக்கவும் வைக்கிறது எவ்வளவு கஷ்டம்ன்னு உனக்குத் தெரியாது.. நீ பெத்தவரோட தலைமேல ஏறி சவாரி செய்தே பழக்கப்பட்டவன்.. பாரம் சுமக்கிற மனிதருக்குத்தான் அது தெரியும்.. நீ கொஞ்சமாவா செலவளிச்ச..? என்னவோ லார்டு லபக்கு தாஸ் போல உசந்த விலத் துணிகளை உடுத்தின.. காலேஜீக்குப் போக காஸ்ட்லி பைக் வேணும்னு அடம் பிடிச்ச.. கைசெலவுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கேட்ட.. இத்தனைக்கும் அப்பா எங்கே போவாரு..?"
ஆனந்தனுக்கு வியர்த்துக் கொட்டியது.. இப்படி மீனா பாயிண்ட் பாயிண்டாக கேட்டு வைப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.. குடும்பத்தினரை விரட்டிப் பழக்கப்பட்டவன்.. எப்போதும் போல அவர்கள் பயந்து, பணிந்து அவன் விரட்டியதும் வீட்டை விட்டு ரோட்டுக்குப் போய் விடுவார்கள் என்று நினைத்திருந்தான்.. இங்கு வந்து பார்த்தால் எல்லாம் நேர் எதிராக இருக்கிறது..
"அம்மாவோட நகைகளில எனக்கும் பங்கு இருக்குன்னா.. ஐம்பது பவுன் நகையை உனக்காக, நீ பண்ணிய ஆடம்பரச் செலவுக்காக, அப்பா வித்துக் கொடுத்திருக்காரு.. பாதிப்பங்கை நீ கொடுக்கனுமில்ல.. இருப்பத்திஐந்து பவுன் நகையை எடுத்து வை.."
"நல்லா இருக்கு உன் நியாயம்.. நான் படிச்சதும் செலவளிச்சதும் அம்மாவோட நகைகள்ன்னா, வீட்டில எனக்குப் பங்கு இல்லையா..? மிஸ்டர் மூர்த்தியோட சொத்தில எனக்கான பங்கு எங்கே..?"
"அதுக்குத்தான் நீ ரொக்கமாப் பணத்தைத் தூக்கிக்கிட்டு போயிட்டயே.. மறந்து போச்சா..? ரிசல்ட் வந்ததும் நீ கேம்பஸ் இண்டர்வியூவில செலக்ட் ஆகியிருந்த வேலையில் சேர அமெரிக்காவுக்கு பறக்க வேண்டியதா இருந்தது.. அதுக்கு முன்னாலே நீ கணக்குப் பண்ணிக்கிட்டு இருந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டியதாவும் இருந்தது.. உனக்கும் அவளுக்கும் பாஸ்போர்ட், விசா, டிக்கெட், அமெரிக்கா போனதும் சமாளிக்கக் கையில் பணம்ன்னு பெரிய தொகை தேவைப் பட்டுச்சு.. வீட்டை சரிபண்ண அப்பா வட்டிக்கு வாங்கி வைச்சிருந்த பத்துலட்சத்தை அபேஸ் பண்ணிட்டுப் போயிட்டயே.. அது என்ன உன் மாமனார் கொடுத்த பணமா..? உன்னைத் தேடி வந்து காலில் விழுந்து வீட்டுக்கு வான்னு கெஞ்சினாரே அப்பா.. நீ தூக்கிக்கிட்டுப் போன பணத்தைப் பத்தி ஒரு வார்த்தை கேட்டிருப்பாரா.. சொல்லியிருப்பாரா..? ஆயிரம் ரூபாய்க்கு அல்லாடிக்கிட்டுக் கிடந்த மனுசன்.. வீட்டைச் சரிபண்ணி  மாடியில ஒரு போர்சனைக் கட்டி வாடகைக்கு விட்டா வருமானம் கூடும்ன்னு நினைச்சு வட்டிக்குக் கடன் வாங்கினாரு.. அந்தப் பணத்தை இரக்கமில்லாம அடிச்சுக்கிட்டுப் போயிட்டு பேச வந்திருக்க பாரு.. நீயெல்லாம் ஒரு மனுசன்.. ச்சே.."
"மீனா.."
"கத்தாதே.. உனக்கெல்லாம் பேசக்கூட ரைட்ஸ் கிடையாது.. நீ பத்து லட்சத்தைத் தூக்கிக்கிட்டுப் போன போது இந்த வீட்டின் மதிப்பு வெறும் இருபது லட்சம்தான்.. இந்த ஐஞ்சு வருசத்தில விலை கூடியிருக்கலாம்.. அப்பவே நீ உன் பங்கை வாங்கிக்கிட்டுப் போயிட்ட.. உன்னை வெறுங் கையோடு இந்தக் குடும்பம் வழியனுப்பி வைக்கலை.. படிப்பு, பத்துலட்ச ரூபாய் பணம்ன்னுதான் கொடுத்து அனுப்பியிருக்கு.. அதனால உன் தொண்டைத் தண்ணியை வீணடித்துக்காம வந்த வழியைப் பார்த்துப் போய்சேரு.."
"சொத்தே இல்லேன்னு ஆனதுக்கப்புறம் இங்கே எனக்கென்ன வேலை..? உங்க கூடல்லாம் சொந்தம் கொண்டாட வேற ஆளைப் பாருங்க.."
"வெளியில இருந்து எந்த ஆளும் எங்களுக்கு வேண்டாம்.. நாங்களே எங்களுக்குள்ளே சொந்தம் கொண்டாடிக்குவோம்.. இத்தனை நாளா அப்படித்தானே இருந்தோம்..? இனியும் அப்படியே இருந்துக்குவோம்.."
மீனா வாசல்பக்கம் கைகாட்ட, ஆனந்தன் வெறுப்புடன் வெளியேறிப் போனான்.. கதவருகே போனவன் நின்று மீனாவைத் திரும்பிப் பார்த்தான்.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -65
பொதிகையிலே பூத்தவளே -65
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-65.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-65.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy