பொதிகையிலே பூத்தவளே -64

64 அது ஒரு ஞாயிற்றுக் கிழமையின் காலைப் பொழுது.. மற்ற நாள்களைப் போல பரபரப்பாக இயங்காமல் சோம்பலாக நகரும் ஓய்வு நாள்.. மோகனாவுக்கு பள்ளி...


64

அது ஒரு ஞாயிற்றுக் கிழமையின் காலைப் பொழுது.. மற்ற நாள்களைப் போல பரபரப்பாக இயங்காமல் சோம்பலாக நகரும் ஓய்வு நாள்.. மோகனாவுக்கு பள்ளி விடுமுறை என்பதால் அவள் ஹாலின் தரையில் குப்புறப் படுத்துக் காலாட்டிக் கொண்டிருந்தாள்.. சோபாவில் குத்துக்காலிட்டு உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த மீனா..
"பார்த்தீங்களாப்பா இவளை.." என்று பக்கத்தில் உட்கார்ந்து பேப்பரைப் படித்துக் கொண்டிருந்த மூர்த்தியிடம் பஞ்சாயத்து வைத்தாள்..
"என்னை அப்பா பார்க்கிறது இருக்கட்டும்.. அப்பாவை நீ பாரு.. டிவியில் நியூஸ் பார்க்க வேண்டிய பீரியடில், இன்னும் பேப்பரை கரைச்சுக் குடிச்சுக்கிட்டு இருக்காரு.. அது என்னவோ அக்கா, அப்பாவுக்கு காலைக் காப்பியை பேப்பரைப் பார்த்துக்கிட்டேக் குடிச்சாத்தான் ருசிக்குது.. ஏன் அப்படியாம்..?" மோகனா தலையைக் கூடத் திருப்பாமல் குரல் கொடுத்தாள்..
"இவ பண்ற அட்ராசிட்டி இருக்கே.. ஸ்அப்பா.." புவனா சமையலறையில் இருந்து சப்தம் போட்டாள்..
"இதப் பாருடா.. கொயட் அலமேலு, சவுண்டு சரோஜாவா மாறி சவுண்டு விடறத.. ம்மா.. உங்க பேரு புனிதாவா இல்ல சந்திரமுகியா..?"
"மீனா.. அவ வாயிலயே ஒன்னு போடு.. என் பேரையே கிண்டல் பண்றா.."
"ஞாயித்துக்கிழமை காலையில சிக்கன் பிரியாணியையும் அவிச்ச முட்டையையும் வாயில போடுவீங்களா.. அத விட்டுட்டு அடி போடச் சொல்றீங்க.. இதெல்லாம் அனியாயம் மாம்.."
மோகனாவின் பேச்சை ரசித்துச் சிரித்தபடி குனிந்து கையிலிருந்த டிவி ரிமோட்டினால் அவளை ஒரு போடு போட்ட மீனா..
"அடங்கவே மாட்டியாடி.." என்று செல்லமாக கடிந்து கொண்டாள்..
சமையலறையிலிருந்து கையில் கரண்டியுடன் அங்கே வந்த புனிதா சிரிக்க, கையிலிருந்த பேப்பரிலிருந்து நிமிர்ந்த மூர்த்தி சிரிக்க,
"அக்கா.. வலிக்குது.." என்று போலியாக சிணுங்கியபடி மோகனா சிரிக்க என்று அங்கே சிரிப்பு களை கட்டிக் கொண்டிருந்த போது..
"என்ன..? சிரிப்பும், கும்மாளமுமா கூத்தடிக்கறிங்க போல.." என்று சிவந்த கண்களுடன் ஆனந்தன் வந்து நின்றான்..
முதலில் வந்திருப்பது ஆனந்தன்தான் என்பதை நம்ப முடியாமல் குடும்பமே இமைகொட்டி விழித்தது.. உண்மையிலேயே ஆனந்தன் வந்து நிற்கிறான் என்பதில் ஆனந்தப்பட்டுப் போன மீனா..
"அண்ணா.." என்று பாசத்துடன் பாய்ந்து அவனைக் கட்டிக்கொண்டாள்..
பதிலுக்குப் பாசமாக தங்கையின் உச்சி முகராமல் அசையா மரமாக நின்றான் ஆனந்தன்.. நெஞ்சில் கை வைத்து மூர்த்தி தீனமாக..
"ஆனந்தா.. என் மகனே.." என்று நாத்தழுதழுத்த போது மீனா பதறி விலகி மூர்த்தியிடம் ஓடினாள்.. புனிதாவும் ஓடி வந்தாள்..
"அப்பா.."
"என்னங்க.. என்ன செய்யுதுங்க.."
தாயும் மகளும் ஒருமித்த குரலில் பதற.. ஆனந்தன் கேலிப் புன்னகையுடன்..
"அட..அட..அட.. என்னமா ஃபிலிம் காட்டறிங்க.. பிளாக் அண்ட் வெயிட் சினிமாவெல்லாம் பிச்சை வாங்கனும்.. செம செண்டிமெண்ட் சீன்.. இவரு நெஞ்சைப் பிடிக்கிறதும், ரெண்டாவது பொண்டாட்டி ஓடி வர்றதும், காணக் கண் கொள்ளாக் காட்சியா இருக்கு.. என்ன..? செய்கிறதையெல்லாம் செஞ்சுட்டு சீஃப் டிராமாவா போடறிங்க..?" என்று கை தட்டினான்..
ஆனந்தனின் குரலைக் கேட்டதுமே வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்த மோகனா அவனைப் பாசத்துடனும் பார்க்கவில்லை.. வியப்புடனும் பார்க்கவில்லை.. இத்தனை வருடங்கள் கழித்து இவன் எங்கே வந்தான் என்ற யோசனையுடன்தான் பார்த்தாள்.. மூர்த்தி நெஞ்சைப் பிடித்ததும் அவரருகில் விரைந்தவள் ஆனந்தனின் பேச்சில் வெறுப்பாகி அவனை முறைத்தாள்.. அதை ஆனந்தன் பார்த்து விட்டான்..
"ஏய்ய்.." சினத்துடன் ஒற்றை விரலை உயர்த்தினான்..
"எங்கே நின்று, யாரை முறைக்கிற..? நீயெல்லாம் என் நிழல்கிட்டக் கூட வரமுடியாது.. இதில முறைப்பு வேறயா..?"
மோகனா உதட்டைச் சுழித்தபடி உனக்கெல்லாம் நான் பதில் சொல்வதா என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.. புனிதா குன்றிப் போனாள்.. நெஞ்சைப் பிடித்துக் கொண்டிருந்த மூர்த்தி, நீண்ட நாள் கழித்துச் சந்திக்கும் தன் மகனைக் கட்டித் தழுவ முடியாத அதிர்ச்சியுடன் முகம் கோணினார்.. மீனா மட்டும் ஆத்திரத்துடன் நிமிர்ந்தாள்..
"அண்ணா.. மோகனாவை இப்படிப் பேசாதே.. அவள் நம் தங்கை.."
"பல்லை உடைத்துக் கையில் கொடுத்துவிடுவேன்.. யாருக்கு யார் தங்கை..? இவ மிஸ்டர் மூர்த்தியின் ரெண்டாவது பெண்டாட்டிக்குப் பிறந்தவள்.."
"நீ யார் அண்ணா..? நீ சொல்லும் மிஸ்டர் மூர்த்திக்கு மகன்தானே..? அவரோட இனிஷியலைத்தானே கோட் பண்ணிக்கிட்டு இருக்கிற..? எம்.ஆனந்தன்.. சன் ஆஃப் மூர்த்தி.. இதுதானே உன் ஐடெண்ட்டி..? இல்லைன்னு உன்னால் சொல்ல முடியுமா..?"
"மீனா.."
"கத்தாதே.. நீ மோகனாவை ட்ரீட் பண்ற விதம் சரியில்ல.. அப்பாவோட பிள்ளைகள் மூனுபேர்.. அது நீ, நான், மோகனா.. இது கடவுள் கொடுத்த வரம்.. அவர் போட்ட கணக்கு.. உறவு வேண்டாம்ன்னு நீ தள்ளி வைக்கலாம்.. உறவே இல்லைன்னு நீ சொல்ல முடியாது.. அவ உடம்பிலும் உன் உடம்பிலும் ஒரே ரத்தம்தான் ஓடுது.. உன் அப்பாவின் மகள் உனக்குத் தங்கை.. அதை மறந்து விடாதே.."
மீனா பாயிண்ட் பாயிண்டாக பேசிய விதத்தில் புனிதாவின் மனம் ஆறுதலடைந்தது.. மோகனா தமக்கையை பாசத்துடன் பார்த்தாள்.. மீனா மூச்சுக்களை இழுத்து விட்டுத் தன்னை சமன் படுத்திக் கொண்டாள்..
"நீ எப்படி இருக்க அண்ணா..? எங்கேயிருக்க..? தனியா ஏன் வந்திருக்க..? அண்ணியையும் கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கலாமில்ல.. குட்டிப் பாப்பா பொறந்திருக்காளாமே.. ஸ்கூல் போகிற வயசாகியிருக்குயில்ல.. அவளையாவது தூக்கிக்கிட்டு வந்திருக்கலாமில்ல..? எல்லாத்தையும் உன் பிரண்ட்ஸ்ககிட்ட இருந்துதான் நான் கேட்டுத் தெரிஞ்சுக்கனுமா..?" பாசத்துடன் பேசினாள்..
அவள் காட்டிய பாசத்தில் துளியளவும் இல்லாமல் வறண்டு போன குரலுடன் எரிச்சலாகப் பேசினான் ஆனந்தன்..
"என் பிரண்ட்ங்ககிட்ட என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு..? அவங்கள்ல யாரைப் பார்த்தாலும் என்னைப் பத்தி தூண்டித் துருவி விசாரிக்கிறாயாமே.. என்ன..? வேவு பார்க்கிறயா..?"
"உன்னை ஏன் நான் வேவு பார்க்கனும்.. அண்ணன் எப்படியிருக்கான்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டது ஒரு குத்தமா..?"
"ஆஹா..! அண்ணன் மேல உனக்கு ரொம்பத்தான் பாசம்.. அப்படி பாசமிருக்கிறவதான் என் வீட்டை மொங்கான் போட்டுக்கிட்டு இருக்கியா..?"
அவன் கேட்ட கேள்வியில் அவன் எதற்காக வந்திருக்கிறான் என்று மீனாவுக்குப் புரிந்து விட்டது.. கலவரமான புனிதாவைப் பார்த்தாள்.. அவளது முகத்தில் தெரிந்த பயத்தில் வெகுண்டாள்.. அந்த வீடு மட்டும்தான் மீனாவின் குடும்பத்திற்கான ஒரே சொத்து.. இருக்க வசதியான ஆடம்பரக் குடியிருப்பு.. மாதச் சம்பளம் போல வாடகை கிடைக்கும் மூன்று வீடுகள்.. மூர்த்தியும், மீனாவும் வெளியில் சென்று வேலைபார்க்க வேண்டிய அவசியமில்லாமல் சொந்தமாக வியாபாரம் செய்ய இரண்டு கடைகள்..
கடைகளில் வியாபாரம் சூடு பிடித்திருந்தது.. எப்போதும் கூட்டம் நிரம்பி வழிந்தது.. டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் காய்கறிகளும் கிடைத்ததில் பெண்களின் கூட்டம் அலை மோதியது.. மீனாவின் ஷாப்பில் டெய்லரிங் செக்சனும் இருந்ததால் உடைகளைத் தைக்கக் கொடுக்கும் பெண்களின் கூட்டம் அதிகரித்திருந்தது.. டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு வருகிறவர்கள் மீனாவின் ஷாப்புக்குப் போவார்கள்.. மீனாவின் ஷாப்புக்கு உடைகள், மற்ற சாமான்கள் வாங்க, தைக்கக் கொடுக்க என்று வரும் பெண்கள் பக்கத்தில் டிபார்ட்மெண்டல் ஸ்டோரும் இருக்கிறதா என்று மூர்த்தியின் கடையில் நுழைவார்கள்..
இப்படி ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து செழித்து வளரத் தொடங்கிய கடைகளில் கிடைத்த வருமானத்தில் புனிதா சந்தோசப் பட்டுக் கொண்டிருந்தாள்.. கானாடுகிரியில் வாழ்ந்த வாழ்வுக்குக் குறைவில்லாமல் வாழ முடிகிறதே என்ற நிம்மதியுடன் இருந்தவளின் தலையில் தான் ஆனந்தன் இடியை இறக்கிக் கொண்டிருந்தான்..
புனிதாவால் மூர்த்தியிடம் நியாயம் கேட்க முடியாது.. அத்தனை வருட கால இல்லறவாழ்வில், எனக்கென்று நீ என்ன செய்து வைத்திருக்கிறாய் என்று அவள் மூர்த்தியிடம் ஒருநாள், ஒரு பொழுது கூடக் கேட்டதேயில்லை.. அன்றாடம் என்ன கிடைக்கிறதோ அதை வைத்து வாழ்வை ஓட்டியவள்.. மீனாவால் திடிரென்று வாழ்வு மாறியது.. வசதியான வாழ்வு கிடைத்தது.. அதற்கும் கேள்வி கேட்க ஆனந்தன் வந்து நின்றிருக்கிறான்..
"உன் வீடா..? எது உன் வீடு..?"
பாசத்தை மறந்து இறுக்கமான குரலில் கேட்டாள் மீனா.. தடுத்துப் பேசப் போன மூர்த்தியை கையமர்த்தித் தடுத்தாள்..
"நீங்க சும்மா இருங்கப்பா.. இவனிடம் நான் பேசிக்கறேன்.."
மகளின் அதட்டலில் மூர்த்தி அதிர்ந்தார்.. அதுவரை மீனா அவரிடம் அப்படிப் பேசியதில்லை.. எதுவாக இருந்தாலும் அனுமதிதான் கேட்பாள்.. அதிகாரமாக ஆணையிட மாட்டாள்.. அதை ஆனந்தனும் கவனித்தான்..
"என்ன ஆட்டம் பலமா இருக்கு..? புதுசா வசதியைப் பார்த்த திமிரா..?"
தங்கையென்றும் பாராமல் ஏளனமாகப் பேசியவனை அவன் போக்கிலேயே எதிர்கொண்டாள் மீனா.. அவனை விட ஏளனமாகப் பதில் சொன்னாள்..
"ஆமாண்ணா.. நாங்க புதுசா வசதியைப் பார்த்தவங்கதான்.. நீ பெரிய டாட்டா பிர்லா பாரு.. பிறக்கும் போதே வைரத்தை வாயில் கவ்விக்கிட்டு பிறந்த கோடிஸ்வரனில்ல நீ.."
"வக்கத்த வீட்டில பிறந்த என் தலைவிதியைச் சொல்லிக் காட்டறியா..?"
"வக்கத்த வீட்டில பொறந்ததினால உனக்கு என்ன குறைஞ்சு போச்சு..? சோத்துக்கு வழியில்லாம, டீக்கடையில கிளாஸ் கழுவி வயித்தைக் கழுவினியா..? இல்ல.. விடியறதுக்கு முன்னால வீடு, வீடாப் பேப்பரப் போட்டு அந்தப் பணத்தில படிச்சியா..? சொல்லு.. என்ன செஞ்ச..?"
"இந்தாளுக்கு மகனாப் பொறந்ததுக்கு அதை வேற செய்யனுமா..? பெத்த மகனுக்கு சோறு போட வக்கில்லாதவரு பிள்ளையைப் பெத்திருக்கக் கூடாது.. ஒன்னுக்கு ரெண்டு கல்யாணம் பண்ணிக்க பணமிருக்கும்.. என்னைப் படிக்க வைக்க பணமிருக்காதா..?"
ஆனந்தன் கேட்ட கேள்வியின் புனிதா உடல் கூசிப் போனாள்.. மூர்த்தியின் நெஞ்சு வலி அதிகரித்தது.. மோகனாவுக்கு அங்கே நிற்கவே முடியவில்லை..
'என்ன மாதிரியான மனிதன் இவன்.. டீசன்ட்லெஸ் மேன்..'
மோகனாவுக்கு ஆனந்தனை நாலு சாத்து சாத்த வேண்டும் போல இருந்தது.. பெற்ற தகப்பனை என்ன மாதிரியான கேள்விகள் கேட்பது என்ற வரை முறை எதுவும் இல்லையா..? அதிலும் மூர்த்தி பாவம்.. கண்ணியமான மனிதர்..
மோகனாவால் கேட்க முடியாத கேள்விகளை மீதம் வைக்காமல் மீனா கேட்டு வைத்தாள்.. ஆனந்தன் அவளை அந்தப் பாடு படுத்திக் கொண்டிருந்தான்..
"கூடப் பிறந்தவனாச்சேன்னு பார்க்கிறேன்.. இல்லேன்னா வண்டை வண்டையாக் கேட்டிருவேன்.. நீயெல்லாம் எதில சேர்த்தி..? அம்மா உயிரோடு இருந்தப்ப அப்பா இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டாரா..? அவங்க போனதுக்கு அப்புறம், உனக்கும் எனக்கும் வடிச்சுக் கொட்டி வீட்டைப் பார்த்துக்கத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டார்.. அதை விடு.. அதுக்கெல்லாம் உனக்கு விளக்கம் சொல்லனும்னு அவசியம் என்ன இருக்கு..? அப்பாவோட ரத்தத்தை உறிஞ்சி, அதில படிச்சு முடிச்சு வேலை வாங்கின மறு நிமிசம் உனக்குன்னு ஒரு துணையைத் தேடிக்கிட்டு அமெரிக்காவுக்குப் பறந்தவன்தானே நீ.. அப்பாவை கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதியிருக்கு..? பெத்த கடமைக்கு அவர் உன்னை வளர்த்தார்.. படிக்க வைத்தார்.. பிள்ளைங்கிற கடமைக்கு பதிலுக்கு நீ என்ன செய்த..? அவருக்குக் கூடத் தெரியாம ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு அவருக்கு நெஞ்சு வலியை வர வைச்சு படுக்கையில் தள்ளின.."
"வேற என்ன செஞ்சிருக்கனும்..?"
"இந்தக் குடும்பத்தைத் தாங்கியிருக்கனும்.. மூத்த மகனா முன்னாலே நின்னிருக்கனும்.. ஒன்னுக்கு ரெண்டு தங்கைக இருக்கிறப்ப, உன் கல்யாணத்துக்கு அவசரப்படாம என்னைக் கரையேத்தியிருக்கனும்.. செஞ்சியா..? அப்படி இந்தக் குடும்பத்தை நிலை நிறுத்திட்டு இது என் வீடுன்னு நீ சொந்தம் கொண்டாடிக்கிட்டு வந்திருந்தா, ஆமாண்ணேன்னு உன்னை ஆரத்தி எடுத்து உள்ளே அழைச்சிருப்பேன்.. பெத்தவரையும், கூடப்பிறந்தவளையும் கைகழுவிட்டு பெரியவேலை கிடைச்சதும் பெண்டாட்டியக் கட்டிக்கிட்டு வசதியான வாழ்க்கையை வாழப்பிரிஞ்சு ஓடினவன் நீ.. ஆக்சுவலா இந்த வீட்டுப் படியை மிதிக்க நீ வெட்கப் பட்டிருக்கனும்.. உனக்குத்தான் அது இருக்காதே.. பெத்தவரைக் குறை சொல்லி அவரைத் துடியாய் துடிக்க வைத்து அதில் சந்தோசம் காண்பவன் நீ.. நீயெல்லாம் என்ன பிறவின்னு இந்த வீட்டை சொந்தம் கொண்டாக்கிட்டு வந்து நிற்கிற..?"
மீனா கேட்ட கேள்விகளில் ஆனந்தனின் முகம் கருத்தது.. புனிதாவும் மோகனாவும் அங்கிருக்க, அவர்கள் முன்னிலையில் மீனா பேசிய பேச்சுக்களில் அவன் பாதிக்கப்பட்டான்..
"இப்படியெல்லாம் பேசினா, இந்த வீட்டை நான் விட்டுக் கொடுத்துருவேன்னு கனவு கூடக் காணாதே.. இது என் அம்மாவின் நகைகளை விற்று வாங்கிய வீடு.. எனக்குத்தான் சொந்தம்.." என்று சீறினான்..
புனிதாவின் கால்கள் வெடவெடத்தன.. கடவுளே..! இது என்ன சோதனை என்று மனதுக்குள் பதறினாள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -64
பொதிகையிலே பூத்தவளே -64
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-64.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-64.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy