பொதிகையிலே பூத்தவளே -63

63 ஏரியா கவுன்சிலர் ரிப்பனைக் கட் பண்ணி இரண்டு கடைகளையும் திறந்து வைத்தார்.. திரண்டிருந்த கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்தது.. மூர்த்தி சந...

63

ஏரியா கவுன்சிலர் ரிப்பனைக் கட் பண்ணி இரண்டு கடைகளையும் திறந்து வைத்தார்.. திரண்டிருந்த கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்தது.. மூர்த்தி சந்தோசமாக கல்லாவில் அமர்ந்தார்.. அவரது பூரிப்பைப் பார்த்த புனிதா பனித்த கண்ணீர் துளிகளை இமைசிமிட்டி அடக்கியபடி மீனாவைப் பார்த்தாள்.. அவளும் அப்போது மூர்த்தியைத்தான் நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.. திரும்பியவளின் பார்வை தாயின் பார்வையைச் சந்தித்தது.
"அப்பா முகத்தில எம்புட்டு சந்தோசம் பார்த்தியா..?"
"ஆமாம்மா.. நினைவு தெரிஞ்ச நாள் முதலா ஓடியோடி உழைச்சவர்.. ஓய்வா வீட்டில உட்கார, என்னவோ போல இருந்திருக்கும்தான்.."
"மீனா உழைக்க நான் உட்கார்ந்து சாப்பிடனுமான்னு கானாடுகிரியில புலம்பிக்கிட்டே இருப்பார்.. மோகனா வயசுக்கு வந்ததும் புலம்பல் அதிகமாகிருச்சு.. வயசுக்கு வந்த ரெண்டு பெண்களையும் வைத்துக்கிட்டு மலையில இருக்கனுமாடி..? மதுரைக்குப் போயிரலாம்.. கல்யாணம் பண்ணி இன்னொருத்தன் வீட்டுக்கு வாழப் போக வேண்டிய பொண்ணு, காட்டிலயும் மேட்டிலயும் அலைஞ்சு சம்பாதிக்கிற பணத்தில நாம சொகுசா வாழ்க்கை நடத்தனுமா..? இது நல்லாயில்லடி.. இப்பத்தான் எனக்கு உடம்பு சரியாகிருச்சே.. உட்கார்ந்துக்கிட்டேப் பாக்கிறதைப் போல ஏதாச்சும் வேலையைத் தேடிக்கறேன்.. இல்லேன்னா, நம்ம வீட்டுத் திண்ணையில சின்னதா மளிகைக் கடை வைக்கிறேன்னு சொல்லிக்கிட்டே இருப்பார்.. அவர் சின்னதா நினைத்ததை நீ பெரிசாவே செஞ்சுட்ட மீனா.."
"அப்பா அன்னைக்குச் சொன்னதும்தான் எனக்கே இந்த ஐடியா தோணுச்சு.. நாம செலவளிச்சுப் பழக்கமில்லாதவங்க.. லட்சக்கணக்கில் சம்பளம் வந்ததை இறுக்கிப் படிச்சுச் சேர்த்து வைச்சிருக்கோம்.. மதுரையில் நம்ம வீடு இருக்கிற ஏரியாவோ மெயினான ஏரியா..கடை வைச்சா நல்லா வரும்.. கட்டி விட்ட வீடு காலியா இல்லாம வாடகைக்கு ஆளுக வந்துக்கிட்டே இருப்பாக.. அதனால வீட்டை இடிச்சுக் கட்டறதில பணத்தைப் போடுவோம்ன்னு முடிவு பண்ணினேன்.. "
"அருமையான முடிவு.. அப்பாவை இவ்வளவு சுறுசுறுப்பாவும் உற்சாகமாகவும் பாத்து வருசக் கணக்காச்சு.."
மூர்த்தி நேயுற்று படுக்கையில் விழுந்து எழுந்தவரைப் போல இல்லாமல் படு உற்சாகத்துடன் இருந்தார்.. கண்ணாடி கதவுகளுடன் கூடிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர்.. முழுதாக ஏஸி பண்ணப் பட்டிருந்தது.. மூர்த்தி உட்கார்ந்து கொள்ள வசதியான சோபா.. எதிரே இருந்த மர டேபிளில் கம்யூட்டர் இருந்தது.. அதன் திரையில் கடையின் உற்புறம், வெளிப்புறம் என்று அனைத்து இடங்களையும் ஆராய்ந்து கண்காணிப்புக் காமெரா படத்தை ஓடவிட்டுக் கொண்டிருந்தது.. பக்கத்தில் பில் போடும் இயந்திரம்..
"உக்காந்த இடத்தில இருந்து ஒவ்வொரு அங்குலத்தையும் நீங்க பார்த்துக்கலாம்.. எல்லாப் பொருள்களையும் ஸ்கேன் பண்ணி விலை சொல்லி பில் எவ்வளவுன்னு காட்ட கம்யூட்டர் இருக்குது.. பட்டனைத் தட்டினா மெஷின் பில் போட்டு வெளியே தள்ளிரும்.. அலட்டிக்காம ஸ்டேரைப் பார்த்துக்கனும்.."
மீனாவின் அன்புக் கட்டளைக்கும் பெருமையுடன் தலையை ஆட்டினார் மூர்த்தி.. அவரும் சம்பாதிக்கப் போகிறார் என்பதில் அவரது உடலில் புதுரத்தம் பாய்ந்ததைப் போல இருந்தது.. புனிதாவைப் பார்த்து ரகசியமாக கண்ணடிக்கக்கூட செய்தார்.. நண்பர்களுடன் உரக்கப் பேசி சிரித்து மகிழ்ந்தார்..
'மதுரா..' பெண்களுக்கான பிரத்யேக உலகம் என்ற பெயர் தாங்கிய கடையும் டிபார்ட்மெண்டல் ஸ்டோரைப் போலக் கண்ணாடி கதவுகளும்.. ஏஸியுமாக இருந்தது.. புடவை, சுரிதார் மெட்டிரியல்.. உள்ளாடைகள், நைட்டிகள் என்று பிறந்த குழந்தை முதல் வயதான பாட்டிவரை அனைத்துப் பெண்களுக்கும் தேவையான உடை வகைகள் ஒரு பிரிவில் இருந்தன.. அடுத்த பிரிவில் பெண்களுக்கான மேக்அப் சாதனங்கள்.. கிளிப்புகள்.. பொட்டு என்று அழகான கண்ணாடி ஷோ கேஸில் அணி வகுத்திருந்தன.. மூன்றாவது பிரிவு.. கவரிங் நகைகளுடன் கண்சிமிட்டியது..  சுடிதார் டிசைனுடன் கூடிய பலவகையான நகை செட்டுகள் கண்ணை கவர்ந்தன.. மணமகள் அலங்கார நகைகள் வாடகைக்கும் வைக்கப் பட்டிருந்தன.. அந்தக் கடையில் மீனா பொறுப்பேற்றாள்..
"அக்கா.. உங்க கடைக்கு வர்ற பெண்களுக்கு எங்க பியூட்டி பார்லரை சிபாரிசு பண்ணுங்க.." ஏரியாவில் பியூட்டி பார்லர் வைத்திருக்கும் நித்யா கேட்டுக் கொண்டாள்..
"அதுக்கென்ன நித்யா.. அப்படியே செய்யறோம்.." புவனா வாக்குக் கொடுத்தாள்..
"அப்புடியே, கல்யாண நகைகளை வாடகைக்கு எடுக்கிறவங்க கிட்டயும் எங்க பியூட்டி பார்லரை கைகாட்டி விடுங்கக்க.. கல்யாண மண்டபத்துக்குப் போயி அலங்காரம் பண்ணி விடுவோம்.."
"ஆகட்டும் நித்யா.."
ஏரியாவாசிகளும், பக்கத்துக் கிராமங்களில் இருந்த உறவினர்களும் கலந்து கொள்ள, விழா களை கட்டியது.. மொட்டை மாடியில் ஷாமியானைக் கட்டி, வரிசையாக டேபிள் சேர்களைப் போட்டு பந்தி நடந்து கொண்டிருந்தது.. காலையில் ஆரம்பித்த பந்தி, மாலைவரை தொடர்ந்ததில் மோகனா களைத்துப் போனாள்..
"எப்போக்கா ரெஸ்ட் கிடைக்கும்..? காலையில நாலு மணிக்கு ஹோமத்தில் உட்காரனும்னு, மூணு மணிக்கே எழுந்திருச்சாச்சு.. அப்ப இருந்து இப்ப வரைக்கும் ஒரு பொட்டு கண்ணசர முடியல.. ஒளிஞ்சு மறைஞ்சு தூங்கினாலும், தேடிக் கண்டு பிடிச்சு, இந்தா யாரு வந்திருக்காங்க பாருன்னு எழுப்பி விட்டுடறீங்க.. வந்திருக்கிற சொந்த பந்தமெல்லாம் இத்தனை நாளாய் எங்கேயிருந்தாங்கன்னுதான் தெரியலை.."
"எல்லாம் சுத்துப்பட்டிக் கிராமங்களிள்ல குவிஞ்சு கிடந்த சொந்தபந்தம்தான்.. நாம கஷ்டப்பட்ட காலத்தில, யாரோ எவரோன்னு இருந்துட்டு, இப்ப நல்லா இருக்கிற சமயத்தில ஒட்டிக்கிறதுக்கு ஓடி வந்திருக்காங்க.." வெறுப்புடன் சொன்னாள் மீனா..
"விடும்மா.. இதுதான் உலகம்.. கண்ணதாசன் அன்னைக்கே பாடி வைச்சிருக்காரே.. பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா.. சோதனையை பங்கு வைச்சா, சொந்தமில்ல பந்தமில்லன்னு.." புனிதா சொன்னாள்..
"ராப்பகலா பழைய பாட்டையே விழுந்து விழுந்து போட்டுப் பார்த்துக்கிட்டு இருந்தா, இப்படித்தான்.. பிலாஸபியா அள்ளி விடலாம்.." மோகனா மீனாவைப் பார்த்துக் கண்சிமிட்டினாள்..
மீனாவுக்குச் சிரிப்பு வந்தது.. மனதில் இருந்த பாரம் பாரமாகத்தான் இருந்தது.. ஆனாலும் மதுரையின் கலகலப்பில் அதை மறக்க முடிந்தது..
"என்ன வேனா சொல்லு மீனா.. அக்கம் பக்கத்தில பழகினவங்க காட்டற அக்கறையையும் ஒத்தாசையையும், சொந்த பந்தங்க காட்டறதில்லையே.." புனிதா ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டாள்..
உண்மைதான் என்று நினைத்துக் கொண்டாள் மீனா.. மூர்த்தி நோய் வாய் பட்ட போது உதவிக்கரம் நீட்டியது நண்பர்களும், அக்கம் பக்கம் பழகியவர்களும்தான்.. சொந்த பந்தம் என்று யாரும் தலை காட்டவேயில்லை.. என்னவோ ஒட்டுமில்லை, உறவுமில்லை என்பதைப்போல ஒதுங்கிக் கொண்டார்கள்..
"அன்னம், தண்ணி புழங்கறதில்லன்னு ஒதுங்கி நின்னவங்க இப்ப விருந்து சாப்பிட ஓடி வந்திருக்காங்க.. உலகம் இப்படித்தான் இருக்கு.." புனிதா அடுத்த பெரூமூச்சை விட..
"உலகம் உருண்டையா இருக்கும்மா.." என்று புனிதாவைக் கட்டிக்கொண்டாள் மோகனா..
திறப்பு விழா முடிந்து படுத்த போது உடம்பெல்லாம் விண், விண் என்று தெறித்தது.. அடித்துப் போட்டதைப் போலத் தூக்கம் வந்தது.. அயர்வில் தூக்கம் வந்து விடுமென்பதை கண்டு பிடித்தாள் மீனா.. ஓய்வின்றி உழைத்தால் அயர்ந்து தூங்கி விடலாமல்லவா..? வாழ்வை ஓட்ட வழி கிட்டி விட்டது..
மூர்த்தியின் வீடு அழகான ஒரு அபார்ட்மெண்டைப் போல கம்பீரமாக நிமிர்ந்து நின்றது.. வீட்டின் இருபக்கமும் நீண்டிருந்த கடைகள்.. நடுவே பெரிய கேட்.. உள்ளே மூன்று கார்கள் நிற்க கார் பார்க்கிங் ஏரியா.. அடுத்து மாடிப்படிகள்.. அதன் பக்கத்தில் ஒற்றைப் படுக்கையறையுடன் கூடிய சிறிய வீடு.. முதல் மாடியில் இரட்டைப் படுக்கையறையுடன் கூடிய இரண்டு வீடுகள்.. இரண்டாவது மாடியில் பெரிய ஹால்.. அதையொட்டிய பால்கனி.. ஹாலின் இருபக்கமும் எதிரெதிரே கதவுகளுடன் கூடிய நான்கு படுக்கையறைகள்.. அதனுள்ளே அட்டாச்சுடு பாத்ரூம்கள்.. ஹாலைத் தாண்டியதும் டைனிங்ஹால், பூஜையறை.. அதையடுத்து ஒருபக்கம் சமையலறை.. அதையொட்டிய பால்கனி.. அதில் வாஷிங்மெஷின்.. துணி துவைத்ததும் காயப்போட கொடிகள்..
"கானாடுகிரியில கூட மூணு பெட்ரூம்தான்.. இங்கே நாலு பெட்ரூம்.."
"ஆமாண்டி.. நீ பெரிய பொண்ணாகிட்டயா..? தனியா ஒரு ரூமைக் கொடுத்துடலாம்ன்னு ஐடியா பண்ணினேன்.. அப்பாம்மாவுக்கு ஒன்னு.. உனக்கு ஒன்னு.. எனக்கு ஒன்னு.. கெஸ்ட் ரூம்.. எப்புடி..?" மீனா கித்தாய்ப்பாக கேட்க..
"ஆசை, தோசை, அப்பளம், வடை.." என்றாள் மோகனா..
"ஏண்டி..?"
"இஸ்க்கு.. புஸ்க்கு.. அதெல்லாம் நமக்கு ஒரே ரூம்தான்.. உன் கழுத்தைக் கட்டிக்கிட்டுத் தூங்கினாத்தான் எனக்குத் தூக்கம் வரும்.. இந்தச் சாக்கில என்னைக் கழட்டி விடப் பாக்கறியா..? நான் ஒன்னும் பெரிய பொண்ணில்ல.. குட்டிப் பொண்ணுதான்.."
மோகனா மீனாவின் கழுத்தைக் கட்டிக் கொள்ள, தங்கையின் உச்சந்தலையில் முகம் புதைத்து முத்தமிட்டாள் மீனா.. அக்கா, தங்கையின் பாசத்தில் மூர்த்தியும், புனிதாவும் கண்கலங்கினார்கள்..
கானாடுகிரியைப் பற்றிய நினைவுகள் சுகமானவையாக இருந்தன.. தினமும் அந்நினைவுகளை மூர்த்தியும், புவனாவும் அசை போடுவார்கள்.. அங்கே அப்படி இருந்தோம், இங்கே இப்படி இருந்தோம் என்ற பேசிக் கொள்வார்கள்.. அவர்களது வாழ்வின் இனிய தினங்களும், நினைவுகளும் கானாடுகிரி மலையில் கிடைத்தவைதான்..
வாழ்க்கை எல்லோருக்கும் மலர்வனமாக இருப்பதில்லை.. பிறந்து விட்டோமே என்று விதி விட்ட வழியில் நீரோடு செல்கின்ற ஓடம் போல, கால வெள்ளத்தில் பயணம் செய்பவர்கள்தான் அதிகம்..
மூர்த்தியும் அதுபோல பயணம் செய்பவர்தான்.. போராட்டங்கள் நிரம்பிய வாழ்வு அவருடையது.. இரண்டு குழந்தைகளை அவர் பொறுப்பில் விட்டு விட்டு அவருடைய முதல் மனைவி வசந்தா கண்மூடினாள்.. சேர்ந்து வாழ ஒரு பெண் தேடி அவர் மறுமணம் செய்து கொள்ளவில்லை.. அவர் வேலைக்குச் செல்லும் போது, வீட்டையும் அவருடைய பிள்ளைகளையும் கவனித்துக் கொள்ளும் ஆயாவாக ஒரு பெண்ணைத் தேடினார்.. கூடுதலாக அவள் இருபத்திநான்குமணி நேர வேலைக்காரியாகவும், சமையல்காரியாகவும் இருக்க வேண்டும்.. அதற்கெல்லாம் சம்பளம் கொடுப்பதென்றால் அவர் வாங்கும் முழுச்சம்பளத் தொகையும் போதாது.. அதனால் இளையதாரம் என்ற பெயரில் புனிதாவின் கழுத்தில் தாலியைக்கட்டி கொத்தடிமையாக வீட்டுக்குள் அழைத்து வந்தார்..
புனிதா தன்னை கொத்தடிமையாக என்றுமே நினைத்ததில்லை.. முதிர் கன்னியாக இருந்த அவளுக்கு வாழ்வு கொடுக்க வந்த கந்தவர்வன் என்று அவரைக் காதலித்தாள்.. அவர் பெற்ற பிள்ளைகளைத் தன் வயிற்றில் சுமந்து பெற்ற பிள்ளைகளாகக் கருதினாள்.. அன்பு செழுத்தினாள்.. நாளடைவில் அவளது பாசத்தையும் காதலையும் புரிந்து கொண்ட மூர்த்தி பதிலுக்கு அவளை நேசிக்க ஆரம்பித்தார்.. தாமதமாகக் கிடைத்த காதலை ஆவலுடன் ஏற்றுக் கொண்டவள் புனிதா.. மூர்த்தியுடன் வெகு சந்தோசமாக வாழ ஆரம்பித்தாள்.. மோகனாவைப் பெற்றடுத்தாலும், அவள் மட்டும்தான் தன் குழந்தை என்று புனிதா நினைத்ததேயில்லை.. தனக்கு மூன்று பிள்ளைகள்.. மோகனா மூன்றாவது பிள்ளை.. கடைக்குட்டி.. இப்படித்தான் நினைப்பாள்.. பேசுவாள்.. அவளது நினைவில் பதிந்திருப்பதும் இதுதான்..
புனிதா மூர்த்திக்குக் கிடைத்த மிகப்பெரும் வரம்.. அவர் ஒன்றும் அழகனல்ல.. இருந்தாலும் அவரை பேரழகனைப் போல பாவித்து மயங்கினாள் புனிதா..
அவர் ஒன்றும் இளமையானவரல்ல.. இருந்தாலும் அவரை வாலிபனைப் பார்ப்பதைப் போல மையலுடன் பார்த்துக்கிறங்கினாள் புனிதா.. அவர் ஒன்றும் பணக்காரர் அல்ல.. சொற்ப சம்பளம் வாங்குகியவர்.. குடியிருக்க ஒரு வீடிருந்தது.. அவ்வளவுதான்.. இருந்தாலும் அவரைக் கோடிஸ்வரனைப் போலக் கொண்டாடினாள் புனிதா..
மூர்த்தி ஒற்றை ரூபாயைக் கொடுத்தாலும், அதில் என்பது பைசாவை செலவளித்து அதற்குள் குடும்பச் செலவுகளை அடக்கி, இருபது பைசாவைச் சேமித்து விடும் ஆற்றல் மிக்கவள் அவள்.. நூல் புடவையிலும், மெல்லிய தாலிச் செயினிலும் திருப்தி கொள்பவள்..
புனிதா மட்டுமல்ல.. எண்ணற்ற இந்தியப் பெண்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள்.. அவர்களின் அருமை தெரியாமல் தூசு போல நினைத்து ஆண்கள் அவர்களை மிதித்தாலும், முகத்தில் வலியைக் காட்டாமல் புன்சிரிப்புடன்  குடும்பத்தைத் தாங்கிப் பிடித்து, நேசித்து வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள்..
மெல்ல புதிய வாழ்வில் பொருந்திப் போனது மீனாவின் குடும்பம்.. அவர்களின் சொந்த ஊருக்கே திரும்பி மதிப்பு மிக்க வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பதில் மூர்த்திக்கு பரம சந்தோசம்.. எந்தத் தெருவில் எளிமையான தோற்றத்துடன் எளிய வாழ்வை வாழ்ந்து வந்தாளோ, அதே தெருவில் கழுத்து, கைகளில் நகைகள், உயர்ந்த ரகப் புடவைகள்.. வாடகைக்கு விட்டிருக்கும் வீடுகள், சொந்தக்கடைகள், நான்கு படுக்கையறைகளுடன் கூடிய, நவீன குடியிருப்பு என்று பெருமையுடன் வாழ்வதில் புனிதாவுக்கும் சந்தோசம்.. மோகனா  கான்வெண்டில் சேர்ந்து விட்டாள்.. மீனா தனக்கென உருவாக்கிக் கொண்டிருந்த ஷாப்பில் நேரத்தைக் கழித்தாள்.. வாழ்க்கை சீராக ஓட ஆரம்பித்தது..
அதை தடம் புரள வைப்பதைப் போலத் தடதடவென ஆனந்தன் ஒருநாள் வந்து நின்றான்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,27,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -63
பொதிகையிலே பூத்தவளே -63
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-63.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-63.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy