பொதிகையிலே பூத்தவளே -62

62 " நீ பிரிப்பர்டா இருந்திருக்கடி.." விஷ்வா விரல் நீட்டிக் குற்றம் சாட்டினான்.. அவனது கண்கள் செந்தனலாக ஜொலித்தன.. கொழுந்து...


62
"நீ பிரிப்பர்டா இருந்திருக்கடி.." விஷ்வா விரல் நீட்டிக் குற்றம் சாட்டினான்.. அவனது கண்கள் செந்தனலாக ஜொலித்தன..
கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீயின் தகிப்பை அவனிடம் கண்டாள் மீனா.. உதடுகள் துடிக்க முகம் திருப்பிக் கொண்டாள்.. அவளது முகத்தை பலவந்தமாகப் பற்றித் தன்பக்கம் திருப்பினான் அவன்.. அப்போதும் அவனுடைய பார்வையைச் சந்திக்காமல் பிடிவாதமாக நின்றவளைக் கண்டவனின் சினம் அதிகரித்தது.. அதில் அவன் இறுக்கிப் பிடித்த பிடியில் அவளுடைய கன்னம் வலித்தது..
"உனக்காக அங்கே டே அண்ட் நைட்டா உறக்கமில்லாம வேலைகளை முடிச்சேண்டி.. நீயோ.. என்னைப் பிரிஞ்சு போகிறதுக்கான வேலைகளை டே அண்ட் நைட்டா பார்த்திருக்க.. எப்படிப்பட்டக் காதலி நீ..! வாவ்..! யு டிட் எ கிரேட் ஜாப் மீனா.. நான் கொடுத்து வைத்தவன்.."
"நானும் கொடுத்து வைத்தவள்தான்.. உங்களை முதன் முதலா பார்த்தப்ப ஒரு பிடாரியோடு பார்த்தேனே.. நான் கொடுத்து வைத்தவ இல்லையா..?"
"சொல்லிக் காட்டறியா..?" ஒரு மாதிரியான குரலில் வினவினான் விஷ்வா..
"சொல்லிக் காட்டனும்னு நான் நினைக்கலை.. அந்த மேகிதான் நினைத்தா..?"
"அவ பேச்சை ஏன் எடுக்கிற..? அவ அவ்வளவு இம்பார்ட்டண்ட் பெர்சனில்ல.."
"உங்க தோள் மேல் தொற்றிக்கிட்டு இருந்தவ இம்பார்ட்டன்ஸான ஆளில்லன்னு சொல்கிறீங்க.. குட்.."
விஷ்வா அவளைப் பின்னுக்குத் தள்ளி விட்டு ஆயாசமாக ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் கைகளை விட்டு ஆயாசமாக பெருமூச்சு விட்டான்..
"வாட்'ஸ் ராங் வித் யு மீனா..? மேகிதான் உன் பிராப்ளமா..?"
"அவளும் பிராப்ளம்தான்.. ஆனா.. அவ மட்டும் பிராப்ளமில்ல..?"
"உனக்கு மேகியைப் பற்றித் தெரியும் மீனா.. நான் பழகிய எத்தனையோ பெண்களில் அவளும் ஒருத்தி.. தட்ஸ் ஆல்.."
"அவ்வளவுதானா..? எவ்வளவு ஈஸியாச் சொல்கிறிங்க..?"
"வேற என்னடி செய்யனும்..? உன்னிடம் எதை நான் மறைத்தேன்..? நான் ஒன்றும் உன்னிடம் நல்லவன் வேடம் போடலையேடி.. நீயும் என்னை கெட்டவனாத்தானே பார்த்த.. என்னைப் பார்த்து விலகி ஓடினவதானேடி நீ.. இப்ப மட்டும் என்ன வந்தது..?"
"அந்த மேகி வந்தா.."
விஷ்வாவின் முகம் பார்க்காமல் மேகி வந்து போன நிகழ்வை சொல்லி முடித்தாள் மீனா.. விஷ்வா பல்லைக் கடித்தான்..
"குன்னூரில் அவளைப் பார்த்தேன்.. வேண்டும்ன்னே என் மேல் விழுந்து பேசினா.. நான் கோபமாய் திட்டி அனுப்பினேன்.."
"இப்படி எத்தனை பேர் எத்தனை இடங்களில் மேலே விழுவார்களோ.. அத்தனை பேரையும் திட்டி அனுப்பிக் கொண்டே இருப்பீங்களா..?"
"ஏய்ய்.. நீ என்ன தாண்டி சொல்ல வர்ற..? நான் நினைத்தா மேகியை இருக்கும் இடம் தெரியாமல் செய்து விடுவேன்.. ப்ளடி இடியட்.." விஷ்வா கர்ஜிக்க, மீனா ஆழ்ந்த குரலில் கேட்டாள்..
"எப்படி..? அந்த வனமலரை அருவியில இருந்து தள்ளி விட்டு இருக்கிற இடம் தெரியாம செஞ்சீங்களே.. அது போலவா..?"
"வாட்..?"
விஷ்வாவின் முகம் போன போக்கில் மீனா பயந்து விட்டாள்.. அழகான அவனது முகம் அதிபயங்கரமாக மாறியிருந்தது.. மீனாவின் தோள்களை இறுக்கிப் பிடித்து உலுக்கினான்..
"என்னடி சொன்ன..?"
மீனா மனதைத் திடப்படுத்திக் கொண்டாள்.. அவளிடம் எதையும் மறைக்கவில்லையென்று சொன்ன விஷ்வா வனமலருடன் அவன் சகஜமாகப் பேசிப் பழகியதுண்டு என்பதை மட்டும் ஏன் மறைத்தான்..? நெருப்பில்லாமல் புகை வராது.. புகை மூண்டதற்கான மூலகாரணம் என்ன என்பதை அவன் சொல்லித்தான் ஆக வேண்டும்.. அதுவரை மீனா பின்வாங்க மாட்டாள்..
"இதை நான் சொல்லலை.. வினோத் சொன்னான்."
அவன் வந்து சென்றதையும் மீனா சொல்லி முடித்தாள்.. விஷ்வா உஷ்ணமாக அவளை முறைத்தான்..
"ஆக மேகியும், வினோத்தும் நல்லவங்க.. அவங்க சொன்னதை நம்பி நீ என்னைச் சந்தேகப்படுவ.. அதுவும் எப்படிப்பட்ட சந்தேகம்..!"
"நீங்க ஊரில் இல்லைன்னா வகை வகையாய் என்னைக் கார்னர் பண்ணி, பயமுறுத்தி ஊரை விட்டு ஓட வைக்க உங்க அண்ணன் ஆள்களை அனுப்பி விட்டுக்கிட்டே இருப்பார்.. அவரும் வருவார்.. இது தெரிந்த சங்கதிதான்.. வேற வகையான தாக்குதல்ன்னா நான் சமாளிச்சுருவேன்.. இது என் மனைசப் பிளக்கிற தாக்குதல்.."
மீனா உதட்டைக் கடித்துக் கொண்டு குமுறிய குமுறலில் விஷ்வா அவளையே வெறிக்கப் பார்த்தான்.. காதலியை மார்பில் சாய்த்து ஆறுதல் படுத்த முடியாத நிலையை எண்ணி அவனது மனம் வெதும்பியது..
"வினோத் கேட்டான்.. அவன் கெட்டவன் என்கிறதுக்காக அவன் சொல்கிற விசயம் பொய்யாகிருமான்னு.. அதுக்குப் பின்னாலேதான் நான் விசாரிக்க ஆரம்பிச்சேன்.. விசாரிக்க விசாரிக்க எனக்குக் கிடைத்த தகவல்களில் ஒன்னைக்கூட நீங்க என்னிடம் சொன்னதில்லை.."
விஷ்வா பதில் பேசவில்லை.. இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை அவன் மீது அவள் சுமத்தியதில் இறுகிப் போயிருந்தான்..
"மேகியும் கேட்டா.. அவ கெட்டவள்ன்னா நீங்க மட்டும் யோக்கியமான்னு கேட்டா.. ஆம்பளைக்கு ஒரு நியாயம்.. பொம்பளைக்கு ஒரு நியாயமான்னு கேட்டா.. அவ கேட்ட கேள்விக்கு என்னாலே பதில் சொல்ல முடியல.. என்ன பதிலைச் சொல்ல முடியும்.? அவளைக் கூடப் புறம் தள்ளிடலாம்.. வினோத் சொன்னது..? அதுக்கு என்ன பதில்..? நெருப்பில்லாமல் புகையாது.."
இப்போது விஷ்வா வாய் திறந்தான்.. கண்கள் சிவக்க, மீனாவை உறுத்துப் பார்த்தபடி உறுமினான்.
"இது கானாடுகிரி மலைடி.. மதுரையில்ல.. இங்கே நெருப்பில்லாமலே புகைமூட்டம் வரும்.. கண்ணுக்கு முன்னாலே என்ன இருக்குன்னு தெரியாத பனிப்புகை.. அது உண்மையை மறைக்கும்.."
மீனா உன்னை நம்பமாட்டேன் என்ற மனக்குமுறலுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.. எது உண்மையோ, பொய்யோ.. விஷ்வா வனமலரை ரசித்தது உண்மைதானே.. அவளிடம் பேசிப்பழக ஆர்வம் காட்டினான் என்பது உண்மைதானே.. அதை இல்லையென்று அவனால் மறுக்க முடியுமா..? மறுத்தாலும் மீனா நம்பி விடுவாளா..?
"நான் இந்த கானாடுகிரியின் ஜமின் வம்சத்தில் பிறந்தவன்டி.. உலகம் பூரா பறந்து பறந்து பிஸினெஸ் செய்கிறவன்.. கோடி கோடியாய் பணம் குவிந்து கிடக்கிறது.. எல்லா நாடுகளிலும் சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன.. பட்.. அன்பு..? பாசம்..? அது இல்லைடி.. என்னை எனக்காக நேசிக்க ஓர் மனதைத் தேடினேன்டி.."
மீனாவின் மனம் அலைகடலாய் கொந்தளித்தது.. இதோ.. அவளது உயிரான அவள் காதலன் அவன் மனது தேடிய தேடலைச் சொல்கிறான்.. நானில்லையா உனக்கு என்று அவனை மார்போடு சேர்த்துத் தழுவி ஆறுதல் கொடுக்காமல் அவள் தள்ளி நிற்கிறாள்.. ஏன்..? இதுதான் அவளுக்கான சாபமா..? பிறந்தவுடன் தாயை இழந்தாள்.. வளர்ந்த பின்னால் தமையனைப் பிரிந்தாள்.. காதல் என்ற உணர்வில் அவள் மாட்டிக் கொண்டாளா..? இல்லையே.. அந்த மாயவலை அவளை இழுத்து விழ வைத்தது.. மனதார விஷ்வாவைக் காதலித்தாளே.. எது வந்தாலும் அவனது நிழலில் வாழ்ந்துவிட வேண்டும் என்று வைராக்கியம் வைத்தாளே.. அது முடிந்ததா..?
"நானும் மனிதன்தான்.. நெறி தவறினேன்தான்.. என்னிடம் இருந்த பணம் தேவையாக இருந்த பெண்களை எனது தேவைக்கு பயன் படுத்திக்கிட்டேன்.. அதை நியாயப்படுத்தலை.. அதே சமயம் என்னைத் தேடி வந்தவர்களிடம்தான் நான் பழகினேன்.."
"வனமலரிடம் நீங்க பழகலையா..?"
"இல்லைன்னு நான் சொல்லலையே.. அந்தப் பழக்கம் வேற.."
"எப்படி..? அவ பேசறதும் சிரிக்கிறதும் உங்களுக்குப் பிடிக்கும்.. அவ என்ன கேட்டாலும் நீங்க செய்து கொடுத்துருவீங்க.. உங்களிடம் அவளுக்கு அத்தனை செல்வாக்கு இருந்திருக்கு.."
"பேசுவது நீதானா மீனா..? ஏய், மலைவாழ் மக்கள் மத்தியிலே அவ புத்திசாலிப் பெண்ணா இருந்தாடி.. மலையை விட்டு கீழே இறங்கிப் படிக்கப் போனா.. கண்ணுக்கு முன்னாலே ஆக்டிவ்வா இருக்கிற பெண்மீது இம்ப்ரெஸ் ஆவது சகஜம்தானே..?"
'ஒப்புக்கிட்டான்..' மீனாவின் மனம் கனத்தது..
வனமலரைப் பிடிக்குமென்று விஷ்வா தன் வாயாலேயே சொல்லிவிட்ட பின்பு கேட்பதற்கு எதுவுமில்லை என்று வெறுத்துப் போனது.. ஒன்றில் மட்டும் மீனா நிச்சயமாக இருந்தாள்.. அது வனமலரின் மரணத்துக்கு விஷ்வா காரணமாக இருந்திருக்க மாட்டான் என்பது.. அந்த அளவுக்கு கொடூரமானவன் அவன் என்று மீனாவால் நினைக்க முடியவில்லை.. ஆனால், வனமலர் உயிரோடு இருந்திருந்தால் விஷ்வாவின் மனது அவள்மீது நாட்டம் கொள்ளாமல் இருந்திருக்குமா என்ற கேள்வி அவளை வதைத்தது..
பணத்துக்காக வந்த பெண்களிடம் அவன் பழகியது வேறு.. இது அப்படியில்லையே.. மீனாவைப் பார்த்த
அதே பார்வையை வேறு ஒரு பெண் மீதும் செழுத்தியிருக்கிறானே..
"சகஜம்தான்.. உங்களுக்கு எல்லாமே சகஜம்தான்.. போதும்.. எனக்கு வெறுத்துப் போயிருச்சு.. நான் கிளம்பறேன்.."
"எங்கே..?"
"எங்கேயிருந்து வந்தேனோ.. அங்கேதான்.."
விஷ்வா இமைக்காமல் அவளையே தீர்க்கமாக பார்த்தான்.. உதடுகள் துடிக்க அவள் பார்வையை விலக்கிக் கொண்டாள்..
"என்னை எனக்காகவே காதலிச்சவடி நீ.. என்னைப் பெற்ற அம்மா காட்டாத பாசத்தை என்மீது காட்டினவடி நீ.. எனக்காக என் அண்ணனையே எதிர்த்து நின்னவடி நீ.. இங்கே இருக்கிற தொழில்களைக் கட்டிக் காப்பாற்றி நிலை நிறுத்தினவடி நீ.. என்னை விட்டுப் போய் விடுவாயா..?"
'போய் விடுவேன்..' துயரத்துடன் நினைத்துக் கொண்டாள் மீனா..
'எனக்கு எதுவும் வேண்டாம்.. கோடி கோடியாய் நீ குவித்து வைத்திருக்கும் பணம் வேண்டாம்.. உலகம் பூரா நீ சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் வேண்டாம்.. உன் ஜமின்வம்சப் பெருமையும் வேண்டாம்.. நீ.. நீ.. நீ.. மட்டும்தான் வேண்டும்.. உன் மனம் மட்டும்தான் வேண்டும்.. உன் மனதில் நான் மட்டும்தான் என்ற உறுதி வேண்டும்.. அது இல்லையே... அது இல்லாமல் உன்னுடன் நான் இருக்க மாட்டேன்.. போகிறேன்..'
"கம்பெனிகளின் கணக்கு வழக்குகளை கம்யூட்டரில் பதிவு பண்ணி பிரிண்ட் எடுத்து வைத்திருக் கிறேன்.. டோட்டலா லேபர்ஸை மாத்தி உங்களுக்கு விசுவாசமா உண்மையா உழைக்கிறவங்களைப் பார்த்து வேலையில் சேர்த்திருக்கிறேன்.. நான் இல்லேன்னாலும் உங்க கம்பெனிகள் நல்லா நடக்கும்.. துரோகிகள் உள்ளே வரவே முடியாது.."
"சந்தேகம் என்பது வாழ்க்கையை சுக்கு நூறாக்கி விடும் மீனா.."
"உங்க குவார்ட்டர்ஸ் சாவியை லிங்கத்திடம் கொடுத்து விடுகிறேன்.. காரையும், வீட்டுச் சாவியையும் அவர் கொண்டு வந்து தருவார்.."
"அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதே.. பொறுடி."
"கிரி அண்ணாவிடமும், அம்மாவிடமும் சொல்லிட்டேன்.. ஏன்னு கேட்டாங்க.. அப்பாம்மா ஊருக்கு ரிட்டர்ன் ஆகனும்னு ஆசைப்படறாங்கன்னு சொன்னேன்.. அப்புறம்தான் சமாதானமானாங்க.."
"நான் மட்டும் கன்வின்ஸ் ஆகிருவேனாடி..?"
"நீங்க எத்தனையோ பார்த்தவங்க.. இதையும் கடந்து விடுவீங்க.."
"ஏன் கடக்கனும்..? கடக்கனும் என்கிற எண்ணத்துடன் உன்னைக் காதலிக்கலை மீனா.. கடைசிவரை சேர்ந்து வாழனும் என்கிற டிசிசனோடுதான் உன்னைக் காதலித்தேன்.."
"அதுக்குக் குடுப்பினை வேணாமா..?" உடைந்து அழுதாள் மீனா..
இரண்டு எட்டில் தாவி அணைத்துக் கொள்ள வந்த விஷ்வாவின் கைகளைத் தட்டி விட்டாள்.. கண்ணீர் மடை திறந்த வெள்ளமாகக் கொட்டியது.. தேற்றுவார் இருந்தும் அநாதை போல தேம்பித் தேம்பி அழுதாள் அந்த பேதை..
"குடுப்பினை இருக்கனும்.. குடுப்பினை இல்லாதவ இப்படித்தான் தனிச்சு நிக்கனும்.. நான் வாங்கி வந்த வரம் அது.."
"நானிருக்கேன் மீனா.. ஐ லவ் யு டி.. நம்பு மீனா.."
"இல்லை.." நிராசையுடன் தலையை அசைத்தாள் மீனா..
"நீங்க இல்லை.. எனக்காக நீங்க இல்லை.. கிரியண்ணா உங்க நண்பர்.. அவரோட காதலி மீது இம்ப்ரெஸ் ஆகியிருக்கீங்க.. அவ அருவியில விழுந்ததுக்குக் காரணம் நீங்கதான்ங்கிற குற்றச்சாட்டுக்கு உங்களுக்கு எதிரா ஆதாரம் இல்லைதான்.. அதே
சமயம் உங்களுக்கு ஆதரவாகவும் ஆதாரம் இல்லை.. ஆதாரம் இருந்தாத்தான் உங்களை நம்பு வேணான்னு கேட்டா என்னிடம் பதிலில்லை.. ஒருவேளை, வனமலர் மேல உங்களக்கு இண்ட்ரெஸ்ட் இல்லைன்னு இருந்திருந்தா நான் முழுமனசா உங்களை நம்பி
இங்கே இருந்திருப்பேனோ என்னவோ.. அப்படியில்லை.. அந்தப் பெண் மேல உங்களுக்கு இண்ட்ரெஸ்ட் இருந்திருக்கு.. இதுக்கு மேலே நான் இங்கே இருக்கக் கூடாது.. இருக்கவும் முடியாது.."
புயல்போல அவனை விட்டு விலகி நடந்து விட்டாள் மீனா.. புருவங்கள் முடிச்சிட.. இறுக்கமான முகத்துடன் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா அவளைத் தடுக்கவில்லை.. அசையாமல் நின்றிருந்தான்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,6,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,89,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,24,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,6,எண்ணியிருந்தது ஈடேற,229,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,20,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,5,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -62
பொதிகையிலே பூத்தவளே -62
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-62.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-62.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy