பொதிகையிலே பூத்தவளே -61

61 குளிர் அதிகமாகிக் கொண்டே இருந்தது.. ஸ்வெட்டரையும் மீறித் துளைத்த குளிரைப் பொருட்படுத்தாமல் பிடிவாதமாக விலகியே நின்றாள் மீனா.. அர...



61

குளிர் அதிகமாகிக் கொண்டே இருந்தது.. ஸ்வெட்டரையும் மீறித் துளைத்த குளிரைப் பொருட்படுத்தாமல் பிடிவாதமாக விலகியே நின்றாள் மீனா.. அருகில் இருப்பவளை இழுத்து அணைத்துக் குளிர்காய முடியாத கோபத்துடன் அவளை முறைத்தான் விஷ்வா.. அன்னியன் போல அவனை அவள் பாவித்ததில் அவனது சினம் தலைக்கேறியது.
"பார்த்துடி.. பத்திக்கப் போகுது.." உறுத்து விழித்தான்.
அவனது சிவந்த கண்களைப் பார்க்கக் கூடாது என்று தனக்குள் உருப் போட்டுக் கொண்டாள் மீனா.. அவனது பார்வையை சந்தித்தால் அவள் பலவீனமாகி விடுவாள்.. அவனது விழிகளின் அழைப்பை ஏற்று அவன் கைகளுக்குள் புகுந்து விடுவாள்.. அது கூடாது.. அவளது கேள்விகளுக்கான விடை கிடைக்காமல் அவள் அவனிடம் சரணடைய மாட்டாள்.. அவளால் விஷ்வாவின் கடந்த கால நடத்தையை மறந்து மன்னிக்க முடியும்.. வனமலரின் மரணத்துக்கு விஷ்வாதான் காரணம் என்பது உண்மையானால் ஒருபோதும் அவனை மன்னிக்கவே முடியாது..
மீனா மதுரைக்குக் கிளம்பத் தயார் நிலையில் இருந்தாள்.. விஷ்வா வருவதற்குள் அனைத்து ஏற்பாடுகளையும் முடித்து வைத்திருந்தாள்.. கம்பெனிகளின் கணக்கு வழக்குகள் அவனிடம் ஒப்படைப்பதற்கான தயார் நிலையில் இருந்தன.. குடும்பத்தினரிடமும் பேசிவிட்டாள்..
"அப்பா.."
அன்று மீனா தயக்கத்துடன் ஆரம்பித்த போது புனிதாவின் புருவங்கள் சுருங்கின.. இதுபோன்ற ஆழ்ந்த குரலில் மீனா பேசுகிறாள் என்றால் விவரம் அதிமுக்கியமானதாக இருக்க வேண்டும் என்று அவளது மனதில் மணியடித்தது.. மூர்த்தியைப் பார்த்தாள்.. அவள் நினைப்பதையே அவரும் நினைக்கிறார் என்பதை சிந்தனை வயப்பட்ட அவரது முகம் உணர்த்தியது.. மீனா வந்திருக்கிறாள், சேர்ந்து உட்கார்ந்து அரட்டையடிக்கலாம் என்று ஊஞ்சலைத் துறந்து ஓடிவந்த மோகனா, அவர்கள் தீவிரமான முகபாவனையுடன் இருப்பதைப் பார்த்ததும் முகம் மாறியவளாக மீனாவின் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
"சொல்லும்மா.." கனிவுடன் வினவினார் மூர்த்தி..
"அன்னைக்கு மோகனா ஏஜ் அட்டெண்ட் பண்ணினப்ப நம்ம ஊருக்கேத் திரும்பிப் போயிரலாம்ன்னு நீங்க சொன்னீங்களே.. ஞாபகம் இருக்கா..?"
புனிதா பூக்கட்டுவதை நிறுத்தி விட்டாள்.. மோகனா திகைத்துப் போனவளாக அக்காவின் முகத்தைப் பார்த்தாள்.. மீனா என்னதான் சொல்ல வருகிறாள்..?
"ஞாபகம் இருக்கும்மா.." அமைதியாக பதில் சொன்னார் மூர்த்தி..
"சார் இந்தியாவில இல்லை.. அவர் வருகிறவரைக்கும் நாம எதையும் டிசைட் பண்ண வேணாம்ன்னு நினைச்சேன்ப்பா.. அத்தோட, நாம மதுரைக்கு ரிட்டர்ன் ஆகிறப்ப எதிர்காலத்தில என்ன செய்கிறதுன்னு ஒரு பிளானோடு திரும்பினா பெட்டரா இருக்கும்ன்னு நினைச்சேன்.."
"அதுவும் சரிதானே மீனா.."
"இப்ப நம்ம வீட்டை இடிச்சு புது பில்டிங்க கட்டிட்டோம்.. கிரௌண்ட் ப்ளோரில ரெண்டு கடை இருக்கு.. ஒரு கடையை சின்ன டிபார்ட்மெண்டல் ஸ்டோராக்கிட்டு.. இன்னொரு கடையில் பெண்களுக்கான புடவை, சுடிதார் மெட்டிரியல், மேக்கப் அயிட்டம்ஸ், கவரிங் நகைகள்ன்னு ஷாப் ஒன்னை ஆரம்பிக்கலாம்ன்னு நினைக்கிறேன்ப்பா.."
மீனா நினைக்கவில்லை.. ஒரு முடிவோடுதான் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதை புனிதாவும் மூர்த்தியும் புரிந்து கொண்டார்கள்.. மீனா எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையுடன் ஆதரித்துப் பேசினார்கள்.. முதலில் புனிதா ஆமோதித்தாள்..
"நான்கூட நினைத்தேங்க.. கடைகளை ஏன் வாடகைக்கு விடனும்..? காடு, மலைன்னு இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த கானாடுகிரி மலையையே சுத்திக்கிட்டு இருக்கிறது..? இது என்ன நமக்கு சொந்தஊரா..? ஜேஜேன்னு மதுரையில இருந்துட்டு.. இப்புடிக் காட்டுக்குள்ளே வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கிட்டு இருக்கனுமான்னு நினைச்சேன்.. நான் நினைச்சதைத்தான் நம்ம மீனாவும் நினைச்சிருக்கா.."
"இப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு புனிதா.. ஆளோடு ஆளா நம்ம சொந்த ஊரில போய் செட்டிலாகிறதில இருக்கிற சந்தோசம் இந்த மலையில கிடைச்சிருமா..?"
தாய், தந்தையின் ஆதரவான பேச்சில் மீனாவின் கண்கள் கலங்கி விட்டன.. ஏனென்ற ஒரு கேள்வியில்லை.. நீ எது செய்தாலும் எங்களுக்கு சம்மதமே என்ற புரிதலுடன், அதை உணர்த்தாமல் அவர்களுக்குப் பிடித்ததை மீனா செய்வதைப் போலத் தாங்கிப் பிடிக்கும் பேச்சு..
'எனக்கு இவங்க போதும்..' பனித்த கண்களடன்..
"தேங்க்ஸ்.." என்றாள் மீனா.
"எதுக்குத் தேங்க்ஸ் சொல்ற..? பாத்திங்களா இவளை.. நமக்குத் தேங்க்ஸ் சொல்கிற அளவுக்கு பிரித்து நினைக்கிறா.." புனிதா கடிந்து கொண்டாள்..
"இல்லைம்மா.. இங்கே சீனீயர் மேனேஜர் போஸ்ட்டுன்னு கெம்பிரிக்கமா இருந்துட்டு மதுரையில போய் கிளர்க்கா வேலை செய்ய சங்கடமா இருக்கும்மா.. இங்கே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கலாம்.. அதுக்குத் தகுந்தாப்பில கானாடுகிரியில இருக்கிற அத்தனை கம்பெனிகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கனும்.. பொழுது விடிஞ்சு பொழுது போகிற வரைக்கும் காட்டைச் சுற்றி வரனும்.. ஓரிடத்தில் உக்காந்து பாக்கிற வேலையில்ல.. மதுரையில அப்படியில்லைம்மா.. அங்கே நான் இருந்த இடத்தில பார்கற வேலைக்கு, லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்காதும்மா.. கேட்கவும் முடியாது.."
"இவ பேசறதைக் கேட்டிங்களா.. இப்ப யாரு உன்னை வேலைக்குப் போகச் சொன்னது..? அதுதான் மூணுவீட்டு வாடகை வர்றதைப் போல வீட்டைக் கட்டி வைச்சிருக்க.. போதாக் குறைக்கு ரெண்டு கடையை வேற நடத்தப் போறோம்.. அப்பா டிபார்ட்மெண்டல் ஸ்டேரில உக்காந்துட்டா, நீ பெண்களுக்காக ஆரம்பிக்கப் போகிற ஷாப்பைப் பார்த்துக்கப் போகிற.. இதில வெளியில எதுக்காக வேலைக்குப் போகனும்..?"
புனிதா சொன்னதற்கு மூர்த்தி தலையை ஆட்டினார்.. இதையெல்லாம் யோசித்துப் பார்த்துத்தான் மீனா வீட்டை இடித்துக் கட்டியிருக்க வேண்டும் என்று அவர்களுக்குப் புரிந்து விட்டது.. ஏதோ நடந்திருக்க வேண்டும்.. அதனால் மீனா கானாடுகிரி மலையை விட்டும், விஷ்வா கொடுத்திருக்கும் வேலையை விட்டும் விலகிச் செல்லும் முடிவை எடுத்திருக்க வேண்டும்.. என்ன நடந்தது என்று அவர்கள் கேட்கவில்லை.. கேட்கவும் மாட்டார்கள்..
எது நடந்திருந்தாலும் மகளுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்பதில் மட்டும் மூர்த்தியும், புனிதாவும் உறுதியாக இருந்தார்கள்..
"சார் வந்தவுடன் அவரிடம் கம்பெனி பொறுப்புக்களை ஒப்படைத்து விட்டு நாம கிளம்பனும்.. இன்னும் ரெண்டு மூணுமாசம் ஆகும்.. கிளம்பறப்ப கையில பத்து லட்சம் அளவில பணம் இருக்கும்ப்பா.. ஐந்து லட்சத்தை டிபார்ட்மெண்டல் ஸ்டேரிலும், ஐந்து லட்சத்தை லேடிஸ்க்காக நாம ஆரம்பிக்கப் போகிற ஷாப்பிலும் முதலீடு பண்ணலாம்.."
"சரிம்மா.. கடைக்கு என்ன பெயர் வைக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டியா..?"
"இல்லைப்பா.. நாம சேர்ந்து பேசி முடிவெடுக்கலாம்ன்னு இருந்தேன்.."
"அதுக்கென்ன.. இப்ப முடிவு பண்ணிரலாம்.."
"அம்மா பேரை வைச்சிரலாம்ப்பா.."
"ஊஹீஹீம்.. மீனா பெயரை வைக்கலாம்ங்க.. அவளால்தான் நாம வசதி குறையாம வாழப் போகிறோம்."
நன்றியுடன் சொன்னாள் புனிதா.. பெரிய மாடி வீடு.. கார்.. உயர்ந்த ரகப் புடவைகள்.. நகை என்று மதிப்பான வாழ்க்கைக்குப் பழகி விட்ட பின்பு, பழையபடி வசதி குறைவான வாழ்வுக்கு திரும்பவேண்டி வந்தாலும் புனிதா அதைப் பொருட்படுத்த மாட்டாள்தான்.. இயல்பாக நூல்புடவை, எளிய வாழ்க்கை என்று பொருந்தி விடுவாள்.. அப்படி மாற வேண்டிய அவசியமின்றி மதுரையிலும் வசதியான வாழ்வை வாழ வழி வகுத்திருக்கும் மீனாவின் புத்திசாலித்தனத்தில் அவள் மனம் பெருமிதம் கொண்டது.
'நான் வளர்த்த என் மகள்..'
"அம்மா சொல்கிறதும் சரிதானே மீனா.." என்றார் மூர்த்தி..
"எதுக்குப்பா.. இவ போட்டிக்கு வர்றதுக்கா..? ஏற்கனெவே அம்மா எனக்கு முதலில் பூ வைச்சு விட்டதுக்கு, இவளை தவிட்டுக்கு வாங்கிட்டு வந்தீங்களான்னு கேட்டா.. இப்ப இது வேறயா..?"
மீனா சிரிக்க முயன்றாள்.. மோகனா சிரிக்கக் கூட முயலவில்லை.. தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு..
"இதுக்கெல்லாம் போட்டிக்கு வர மாட்டேன்க்கா.. எப்பவும் நான் நீயாகி விட முடியாது.. மதுரைக்கு ரிட்டர்ன் ஆனாலும் நாம இதே வசதியோட வாழப் போகிறோம்ன்னா, அது உன்னாலே கிடைக்கப் போகும் வாழ்வு.. அம்மாப்பா சொன்னதைப் போல உன் பெயரையே வைத்து விடலாம்.." என்று சொன்னாள்..
"போடி.. பெரிய மனுஷி.." தங்கையை அணைத்துக் கொள்வதைப் போலத் தன் கண்ணீரை மறைத்துக் கொண்டாள் மீனா..
மகள் மனதுக்குள் மருகுவதைக் கண்டும் காணாததைப் போல இருந்த பெற்றோரின் மனதை துயரம் கவ்வியது.. அவர்களுக்காக ஓடியோடி உழைத்த மகளின் மனதில் என்ன ரணம் இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.. அவள் சொல்லாமல் கேட்கவும் கூடாது.. அது மகளின் மனதை சங்கடப்படுத்தி விடக் கூடும்.. சொல்வதாக இருந்தால் அவளே சொல்லியிருப்பாளே..
"புனிதா டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ன்னு பெயர் வைக்கலாம்ப்பா.. இதில் எந்தவித மாற்றமும் இல்லை.." அடித்துச் சொல்லி விட்டாள் மீனா..
புனிதா பலமாக மறுத்தாலும் மற்ற மூவரின் ஆதரவு இருந்ததால் தீர்மானம் எளிதாக நிறைவேறி விட்டது.
"பெண்களுக்கான டிரஸ் மெட்டிரியல்ஸ், ஃபேசன் ஜ்வல்லரி, மேக்-அப் அயிட்டம்ஸ்ன்னு கிடைக்கிற ஷாப் என்கிறதினால பெயர் பொதுவானதா இருக்கனும்.. ஸோ.. அதுக்கு 'மதுரா' பெண்களுக்கான பிரத்யேக உலகம்ன்னு வைக்கலாமா..?"
மீனா கேட்டது ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. மீனா இருந்த இடத்திலிருந்தே மதுரையில் ஆரம்பிக்கப் போகும் கடைகளை வடிவமைத்தாள்.. போர்டு.. கப் போர்டுகள்.. கண்ணாடி ஷோ கேஸ்.. என்று தினம் தினம் வாட்ஸப்பில் வரும் படங்களை குடும்பத்தினரிடம் காட்டினாள்.. கானாடுகிரி மலையை விட்டுக் கிளம்பப் போகும் ஆயத்தங்களில் புனிதா ஈடுபட்டாள்.. மோகனா மட்டும் மீனாவைத் தனிமையில் கேள்விகளால் குடைந்தாள்..
"எதுக்காக இந்த டிசிசன்க்கா..? உனக்கு கானாடுகிரியை பிடிக்குமே.."
"பிடிச்சா இங்கேயே இருந்துர முடியுமா மோகனா..? ஏன், உனக்கு மதுரைக்கு ரிட்டர்ன் ஆகிறதில விருப்பமில்லையா..?"
"என்னக்கா பேசற..? நம்ம மதுரைக்குப் போக எனக்கு விருப்பமில்லாம இருக்குமா..? நான் கேட்டது உன்னைப் பத்தி.. உன் மனசைப் பத்தி.."
"என் மனசுக்கென்னடி..?"
"உன் மனசில விஷ்வாசார் இல்லையாக்கா..?"
மோகான கேட்டு விட்டாள்.. பதில் சொல்ல முடியாமல் மீனா ஸ்தம்பித்து நின்றாள்.. சின்னப்பெண்.. பெரிய கேள்வியை கேட்டு விட்டாள்..
"ஏய்ய்.. என்னடி இப்படிக் கேட்கிற..? அவர் எனக்குச் சம்பளம் கொடுக்கிற முதலாளி.. நான் அவரிடம் கைகட்டி வேலை பார்க்கிற தொழிலாளி.."
"இந்தக் கதையை அப்பாம்மாவிடம் சொல்லு.. அவங்க கேட்டுக்குவாங்க.. என்னிடம் சொல்லாதே.. எனக்கு காது குத்தி ரொம்ப வருசமாகுது.."
மோகனா காதுகளில் போட்டிருந்த ஜிமிக்கிகளை ஆட்டிக் காண்பித்தாள்.. மீனா எப்படி பதில் சொல்வது என்று திணறிக் கொண்டிருந்தாள்..
"நீங்க ரெண்டு பேரும் மேடு ஃபார் ஈச் அதர்க்கா.. அவர் மலை, நீ மடுன்னு டயலாக் விடாதே.. அந்த மலைக்கு இந்த மடுவை ரொம்பப் பிடிக்கும்ன்னு எனக்குத் தெரியும்.. இந்த மடுவும் மலைமேல உயிரையே வைச்சிருக்குதே.."
"வயதுக்குத் தகுந்ததைப் போலப் பேசு மோகனா.."
மீனா கோபமாக கண்டிப்பதைப் போல முகத்தை வைத்துக் கொண்டு அதட்டினாள்.. மோகனாவிடம் அது செல்லுபடியாகவில்லை.. ஒரு புறங்கை வீச்சில் அலட்சியப் படுத்தினாள்..
"ஹை.. ஹை.. நான் என்ன பப்பாவா..? பதினைஞ்சு வயசாகுது.. ஸ்வீட் ஃபிப்டீன்.. எனக்கும் காதலைப் பற்றிக் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.. விஷ்வா சாரைப் பாத்தா உன் கண்ணில பல்ப் எரியுது.. அவர் என்னடான்னா உன்னைத் தின்று விடுவதைப் போலப் பாக்கறாரு.. உங்க ரெண்டு பேருக்கும் மத்தியில எதுவும் இல்லைன்னு என்னை நம்பச் சொல்கிறயா..?"
மீனா எதுவும் பேசாமல் கண்ணீர் விட்டாள்.. மோகனா தமக்கையை மடி சாய்த்துத் தலைகோதி விட்டாள்.. ஆறுதலாய்மடி சாய்ப்பது அன்னை மட்டுமல்ல.. தங்கையும் செய்வாள்..
"என்னை எதுவும் கேட்காதேடி.."
குமுறி அழுத மீனாவின் முதுகில் தட்டிக் கொடுத்துச் சமாதானப்படுத்திய மோகனா அதற்குப் பின்னால் அது குறித்துப் பேசவே இல்லை..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -61
பொதிகையிலே பூத்தவளே -61
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-61.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-61.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy