பொதிகையிலே பூத்தவளே -59

59 அடர்வனத்தின் அடங்காப் பெருமூச்சாய் காற்று ' ஸ்ஸ்ஸ்.. ' என்ற சப்தத்துடன் சுழன்று வந்தது.. ஊசிகளால் உடலைத் துளைத்த குளிரிலி...


59

அடர்வனத்தின் அடங்காப் பெருமூச்சாய் காற்று 'ஸ்ஸ்ஸ்..' என்ற சப்தத்துடன் சுழன்று வந்தது.. ஊசிகளால் உடலைத் துளைத்த குளிரிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள கைகள் இரண்டையும் மடித்துக் கட்டிக் கொண்டாள் மீனா.. அவளின் அந்தச் செய்கையில் விஷ்வா பல்லைக் கடித்தான்..
அவர்கள் இருவரும் லாம்ப் பாறையில் நின்று கொண்டிருந்தார்கள்.. அங்கிருந்து அவர்கள் பார்த்த போது கோயம்பத்தூர் நிலவெளிகளும் அதன் சுற்றுப்புறங்களில் காணும் பள்ளத்தாக்குகளும் அழகிய காட்சியாக கண்களுக்கு முன்னால் பரந்து விரிந்து மனங்களைக் கவர்ந்தன.. இதமான ஓர் உணர்வை மனதுக்குத் தந்து ஏதோ செய்தன..
மீனாவுக்கு அங்கே வருவதென்றால் மிகவும் பிடிக்கும்.. அந்தப் பாறையின் கீழே, சில நூறு அடிகள் தொலைவில் அடர்ந்திருந்த வனத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மீனாவின் உடல் குளிரில் நடுங்கியது.. எப்போதும் அந்த நடுக்கத்தைப் போக்க விஷ்வாவின் கைகளுக்குள் புகுந்து கொள்வாள்.. கதகதப்பான அவனது உடல் சூட்டில் அவளது குளிர் ஓடிவிடும்..
இன்று அதுபோல அவள் செய்யவில்லை.. அருகில் அவன் இருந்தும் வெகு தொலைவில் இருப்பதைப் போன்ற உணர்வுடன் விலகி நின்றாள்.. அது விஷ்வாவை பாதித்தது.. அவனால் மீனாவின் விலகலைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. அது புதிதாக வந்த விலகல் போல அவனுக்குத் தோன்றவில்லை.. வெகு தினங்களாக அந்த விலகலுக்கு அவள் பழகியிருப்பதைப் போலத் தோன்றியது.
அவன் வெளிநாட்டில் இருக்கும் போது தினந்தோறும் மீனாவிடம் பேசுவான்.. அவனது குரல் கேட்டதும் அவளது குரலில் ஒலிக்கும் துள்ளல் அவன் இந்தியாவிற்குத் திரும்பும் உத்தேசத்திலிருந்த தினங்களில் இல்லை.. கடந்த சில நாள்களாக அவள் அவனது போன்காலை தவிர்த்தாள்.. அவன் அலுவலக போனில் தொடர்பு கொண்டால், இயந்திரம் போலப் பேசினாள்.. விஷ்வாவுக்கு அப்போதே நறுக்கென்று இருந்தது..
"என்னடி..?" அவன் அதட்டினான்..
அவன் குரல் காதில் விழாததைப் போலப் பள்ளத்தாக்கிலிருந்த அடர் வனத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கன்னத்தில் நாலு அப்பு அப்பினால் என்ன என்று வெறி வெறியாக வந்தது.. எதற்காக அவன் இத்தனை மாதங்களாக வெளிநாட்டிலேயே இருந்தான்..? அவளை திருமணம் செய்து கொள்வதற்காகத்தானே. அவனது தொழில்களில் தலைமையகத்தை கோயம்பத்தூருக்கு மாற்றி அமைக்கும் வேலைகளில் மும்முரமாக இருந்தானே.. சொற்பநேரம் உறங்கி அசுர வேகத்தில் உழைத்தானே.. எதற்காக.. மீனாவுடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தானே.. அதை நினைத்துப் பார்க்காமல் நிமிர்ந்து நிற்கிறாளே..
"ஏய்ய்.."
பொறுக்க முடியாமல் அவளுடைய தோள்களைப் பற்றி உலுக்கினான் விஷ்வா.. அவனுடைய விரல் பட்டாலே பாகாய் உருகி விடும் மீனா அவனது கைபட்டும் விலகி நின்றாள்.. விஷ்வா துணுக்குற்றான்.. இது மீனாவின் வழக்கமல்ல.. அவள் அவனைக் காதலிப்பவள்..
அவனுக்குத் தெரியாது.. மீனா ஒரு முடிவோடுதான் காத்திருந்தால் என்பது.. அவள் மனதில் எரிமலை குமுறிக் கொண்டிருந்தது.. எந்த நேரமும் அது வெடித்துச் சிதறி விடும் என்பதை உணராமல் விஷ்வா கோபப் பட்டுக் கொண்டிருந்தான்.. மீனாவின் மனம் விரக்தியில் வெந்து கொண்டிருந்தது..
வனமலரை விஷ்வா ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த போட்டோவைப் பார்த்தவுடன் மீனா துடித்துப் போய் விட்டாள் என்றாலும் உடனடியாக விஷ்வாவை விட்டு விலகி விடும் முடிவை அவள் எடுக்கவில்லை.. அவளை வீட்டில் விட வந்த கிரியிடம் வழியில் பேச்சுக் கொடுத்தபடி வந்தாள்..
"சாருக்கும் வனமலரை தெரியும் போல.."
"தெரியுமே.. அவரும் இந்த மலையில் பிறந்து வளர்ந்தவர் தானே.. தெரியமல் இருக்குமா..? எங்க இனத்தில விழா கொண்டாடறப்ப விருந்தாளியா சார் வருவார்.. எங்களோட பாட்டு, டான்ஸையெல்லாம் ரசிப்பார்.."
"வனமலர் பாடுமா..?"
"பின்னே..? அவதானே டாப் ஸ்டார்..! பாட்டு, டான்ஸ் எல்லாத்திலயும் பிச்சு உதறுவா.. உங்களுக்கு ஒன்னு தெரியுமா மீனா.. ஆயிரம் பேருக்கு மத்தியில அவ இருந்தாலும் பளிச்சுன்னு தனியாத் தெரிவா.. நான்தான் அப்படி நினைச்சுக்கிட்டு இருக்கேன்னு நினைச்சா, சாரும் அதையேதான் சொன்னாரு.."
"ஓ.."
விஷ்வா வனமலரின் பாடலையும், நடனத்தையும் ரசித்திருக்கிறான்.. பலரின் மத்தியிலும் தனித்துப் பளிச்சென்று தெரியும் அவளின் தோற்றப் பொழிவை கிரியிடமே புகழ்ந்து பேசியிருக்கிறான்..
'அந்த அளவுக்கு அந்தப் பொண்ணு விஷ்வா மனதை இம்ப்ரெஸ் பண்ணியிருக்கிறா.. அவளை ரசித்துப் பார்ப்பதற்காகவே இவன் விருந்துகளுக்குப் போனானோ.. அவன் பார்த்த பார்வையிலேயே மயக்கம் தெரிகிறதே..'
மீனாவின் தலையில் வண்டு குடைய ஆரம்பித்தது.. அதன் வேதனை தாளாமல் மனதுக்குள் அவள் சுருண்டாள்.. விஷ்வா பெண்களுடன் பழகுகிறவன்தான்.. மேகியைப் போன்ற பெண்களுடன் தொடர்பில் இருந்தவன்.. அவனைக் காதலிக்காத நாள்களில் அது குறித்து அவனை மீனாவே இழிவாகப் பேசியிருக்கிறாள்.. பின்னாளில் அவளால் அவற்றை மறக்க முடிந்தது.. மன்னிகவும் முடிந்தது.. ஏனென்றால் அவையெல்லாம் உடல்  சார்ந்த பழக்கங்கள்.. வனமலரிடம் விஷ்வா காட்டிய மயக்கம் அவ்வகையைச் சேர்ந்ததாக இருக்கவே முடியாது.. வனமலர் மேகியல்ல.. கிரியின் காதலி.. பண்பட்ட நடவடிக்கைகளைக் கொண்டவள்..
"இந்தப் பெண் மலையில் பிறக்காமல் நகரத்தில் பிறந்து வளர்ந்திருந்தால் கதையே வேறுன்னு சார் சொல்வார்.." கிரி மலரும் நினைவுகளில் ஆழ்ந்தவனாகப் பெருமையுடன் சொன்னான்..
'கதை எப்படி மாறியிருக்குமாம்..? இவன் அவளைக் காதலித்திருப்பானோ..' மீனாவின் மனது வேதனையில் வலித்தது..
கிரியும் அவ்விதமே சொன்னதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. நெஞ்சமே இரண்டாய் பிளந்ததைப் போல அதிர்ச்சியடைந்தாள்..
"இப்ப மட்டும் என்ன..? மலையிலே பிறந்திருந்தாலும் என்னன்னு நான் சிறையெடுத்துப் போய் தாலி கட்டியிருப்பேன்.. அப்படிச் செய்ய முடியாம நீ குறுக்கே வந்துட்ட.. உனக்கு இந்தப் பொண்ணு முறைப் பொண்ணா போயிருச்சுன்னு சோகமாய் முகத்தை வைச்சுக்கிட்டுச் சொல்லி வேடிக்கை செய்வாரு.. வனமலர் விழுந்து விழுந்து சிரிப்பா.."
'அப்படியா..? அவள் கிரியின் முறைப்பெண்ணாக இல்லாமலிருந்திருந்தால் நீ சிறையெடுத்திருப்பியா..? அந்த அளவுக்கு அவள்மீது மோகமா..?'
மறுநாளில் இருந்து மீனா வனமலரைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்க ஆரம்பித்தாள்.. அனைத்து விவரங்களும் வனமலருடன் விஷ்வா நெருக்கமாக இருந்தான் என்று அவளுக்கு கட்டியம் கூறுபவையாகவே இருந்தன... மீனாவுக்கு பைத்தியம் பிடித்து விடும் போல ஆனது..
"லிங்கம்.."
"சொல்லுங்கம்மா.."
"நம்ம ஊருக்கு வனமலரை நல்லாத் தெரியுமா..?"
"தெரியும்மா.. அந்தப் பெண் சொன்னா நம்ம ஐயா மறுபேச்சை பேசாம சரின்னு சொல்லிருவாரே.. இது அவங்க ஜனங்களுக்கே தெரியுமே.."
தெரியுமா..? எல்லோருக்கும் தெரிந்த இந்த விவரம் மீனாவுக்குத் தெரியாமல் போனதே.. ஆசைப்பட்டவளை அடைய காதலைச் சொல்ல முடியாது என்று பலவந்தப் படுத்தி விட்டு அருவியிலிருந்து தள்ளி விட்டானா..?
மீனா மனம் துடிக்கக் கண்களை மூடிக் கொண்டாள்.. விரும்பியதை அடைய எதையும் செய்வான் விஷ்வா என்ற நினைவில் அவளது உடல் நடுங்கியது.. அடிக்கடி கிரியின் பேக்டரிக்குச் சென்றாள்.. அங்கே வேலை செய்யும் பெண்களிடம் பேசினாள்..
"வனமலரு இங்கதான் வேல பாத்துச்சங்கோ.. சூப்பர்வைசரு வேலை.. சின்ன ஜமின்தாரய்யா மலைக்கு வந்தா பேக்டரியிலதான் இருப்பாரு.. கிரிகிட்டயும் வனமலருகிட்டயும் பேசிக்கிட்டே இருப்பாரு.. எங்களுக்குத் தேவையான வசதிய எல்லாம் வனமலருகிட்டச் சொல்லித்தான் ஐயாகிட்டக் கேக்கச் சொல்வோம்.. அந்தப் புள்ள கேட்டா ஐயா தட்ட மாட்டாரே.."
ஆக.. விஷ்வாவைத் தன் கடைக்கண் பார்வையில் வைத்திருப்பதாக மீனா கர்வம் கொண்டிருப்பதில் உண்மையில்லை.. அவளுக்கு முன்பே ஒருத்தி விஷ்வாவை தன் கடைக்கண் பார்வையில் கட்டுப்படுத்தியிருக்கிறாள்..
'பிடிச்சிருந்தா கட்டித் தொலைச்சிருக்க வேண்டியதுதானே..?'
இந்தக் கேள்வி மீனாவின் மனதில் சுழன்றது.. அவள் தனியாக காரோட்டி வந்தால் வழி மறிக்கும் வினோத் அதற்கான பதிலைச் சொன்னான்..
"உன் விஷ்வா கேட்டானாம்.. அந்த வனமலர் மாட்டேன்னு சொல்லிட்டாளாம்.. எப்படி சரின்னு சொல்லுவா..? கட்டிக்கிறேன்னு சொல்லியிருந்தா சரின்னு சொல்லியிருப்பா.. வைச்சுக்கறேன்னு சொன்னா..? முடியாதுன்னுதானே சொல்லுவா.. நீ மதுரைக்காரி.. கட்டலாம்.. உள்ளூர் மலையில பொறந்து வளர்ந்தவளை கானாடுகிரி ஜமின் அரண்மனை ஒத்துக்குமா..? அதான் கை வைச்சுத் தள்ளி விட்டுட்டான்.."
எது எப்படியாக இருந்தாலும், வனமலரை அவனுக்கு நன்கு தெரியும் என்பதை விஷ்வா எதற்காக மீனாவிடம் இருந்து மறைக்க வேண்டும்..? அவன் உள்ளத்தில்
கள்ளம் இல்லாமலிருந்தால் அவன் வனமலரை ரசித்து சிலாகித்தான் என்பதை மீனாவிடம் சொல்லியிருக்கலாமே.. ஏன் அதைச் சொல்லவில்லை..?
இவற்றுக்கு விடை தெரியாமல் மீனாவால் நிம்மதியாக இருக்க முடியுமா..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -59
பொதிகையிலே பூத்தவளே -59
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-59_20.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-59_20.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy