பொதிகையிலே பூத்தவளே -55

55 மறுநாள் மீனா அலுவலகத்தில் இருந்த போது கிரி வந்தான்.. தூக்கமின்றி கலங்கிச் சிவந்திருந்த மீனாவின் விழிகளை உற்றுப் பார்த்தான்.. &qu...


55

மறுநாள் மீனா அலுவலகத்தில் இருந்த போது கிரி வந்தான்.. தூக்கமின்றி கலங்கிச் சிவந்திருந்த மீனாவின் விழிகளை உற்றுப் பார்த்தான்..
"என்னாச்சுங்க..?"
அந்த ஓர் கேள்வியில் ஓராயிரம் கேள்விகள் ஒளிந்திருந்தன.. என்னவென்று மீனா சொல்வாள்..? சொல்ல முடிகின்ற விவரங்களா அவை..? அவளுக்கும் விஷ்வாவுக்கும் இடையிலிருக்கும் காதலைப் பற்றி அவள் கிரியிடம் சொன்னதில்லை.. அவளுடைய மன உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டதில்லை.. கிரி உணர்ந்திருக்கலாம்.. இனம் இனமறியும்.. அவன் காதலித்தவன்.. காதலிப்பவர்களின் உணர்வுகளை அவனால் இனம் காண முடியும்.. நிச்சயம் அவன் விஷ்வா-மீனாவின் காதலை உணர்ந்திருப்பான்.. ஆனாலும் அதைப்பற்றி அவன் பேசியதில்லை.. தெரிந்து கொண்டதைப் போலக் காட்டிக் கொண்டதில்லை.. அதுதான் கிரி.. அவன் ராமனின் குகன் மட்டுமல்ல.. சுபத்திரைக்கும் தமையன்.. அந்தக் கண்ணன்.. கார்மேக வண்ணன்..
"ஒன்னுமில்லையே.."
மனதை மறைத்துக் கொண்டு சிரிக்க முயன்றாள் மீனா.. கிரியின் துளைக்கும் விழிகள் உன்னை நம்ப மாட்டேன் என்று அறிவித்தன.. அவனது விழிகளை ஏறிட்டுப் பார்த்தால், எங்கே உடைந்து போய் மனதில் கனக்கும் துயர உணர்வுகளைக் கொட்டி விடுவோமோ என்ற பயத்தில் அவன் பார்வையை நேருக்கு நேராக சந்திக்க முடியாமல் தவிர்த்தாள் மீனா..
"இது நீங்க இல்லை மீனா.." குற்றம் சாட்டும் தொனியில் கூறினான் கிரி..
"நானில்லையா..? என்னங்கண்ணா நீங்க.. ரங்கநாதன் சார் மட்டும் இதைக் கேட்டிருக்கனும்.. ஆஹா.. ஆள் மாறாட்ட கேஸில் இவளைத் தூக்கி உள்ளே போட்டிரலாமேன்னு ஆனந்தப் பட்டிருப்பார்.."
நகைச்சுவையாய் பேசி சிரிக்க முயன்றாள் மீனா.. அழும்பு பிடித்த சிரிப்பு இப்போதும் வருவேனா என்று அடம்பிடித்து மீனாவின் காலை வாரி விட்டது..
"வராத சிரிப்பை வா, வான்னு வெத்தலை பாக்கு வைச்சு அழைச்சீங்கன்னா அது வந்துருமா மீனா..? விட்டிருங்க.."
சிரிப்பைக் காப்பாற்ற 'பாவம் அது பிழைத்துப் போகட்டும்..' என்ற ரீதியில் சிபாரிசு செய்து வைத்தான் கிரி..
"வேலை அதிகம் அண்ணா.. அதான்.." சிரிப்பு வராததிற்கான காரணத்தைச் சொல்லிப் பூசி மொழுகினாள் மீனா.
"வேலைக்குப் பயப்படுகிற ஆளா நீங்க..? குட் ஜோக்.. ஏதோ உங்க மனசை பாதித்திருக்கு.. அது என்னன்னு நீங்க சொல்ல விரும்பலைன்னு தெரியுது.. போகட்டும்.. விடுங்க.."
அவனை வேற்று மனிதனைப் போல நினைத்து மீனா தள்ளி நிறுத்துகிறாளே என்ற வருத்தத்துடன் சொன்னான் கிரி.. அவனது மனத்தாங்கல் அவனது குரலில் அப்பட்டமாக வெளிப்பட்டது.. மீனாவிற்கு வாய்விட்டு ''வென்று அழ வேண்டும் போல இருந்தது..
இதைவிட பெருந்துயரம் வேறேதுமில்லை.. மனதின் துயரத்தை அக்கறையுடன் காது கொடுத்துக் கேட்கும் அன்பான சகமனிதர் கிடைப்பது பெரும்வரம்.. அந்த வரம் கிடைக்கப் பெற்றும் சொல்லி அழ முடியாமல் தன் மனதின் சோகத்தை அடி மனதில் புதைத்துக் கொள்ள நேரிடுவது பெரும் சோகம்.. வரம் கிடைத்தும் அதன் பலனைப் பெற முடியாத சாபம் பெற்ற ஜீவன் மீனா.. கூடப் பிறந்தவன் சுயநலத்துடன் பிரிந்து சென்று விட்டான்.. அண்ணா என்று அவன் தோள் சாய்ந்து சொல்லி அழும் கொடுப்பினை மீனாவுக்கு இல்லை.. உடன் பிறந்தவனைப் போல, அவனுக்கும் மேலான பாசத்தைப் பொழிய கிரி, அவள் வாழ்வில் வந்திருக்கிறான்.. இவன் தோளில் தலைசாய்து 'அண்ணா..' என்று சொல்லி அழலாம்.. அவளுக்காக கிரி தன் உயிரையும் கொடுப்பான்.. தன் உயிருக்கும் மேலாக நேசிக்கும் விஷ்வாவின் சட்டையைப் பிடித்து உலுக்கி நியாயம் கேட்கவும் தயங்க மாட்டான்.. அப்படிப் பட்டவனிடம் மேகியைப் பற்றி மீனா எப்படிச் சொல்வாள்..?
"உங்களிடம் சொல்ல முடியலைன்னு சொல்லுங்க.. சொல்ல விரும்பலைன்னு சொல்லாதீங்க.. நீங்க என் அண்ணன்.. அண்ணனிடம் தங்கை சொல்ல சங்கடப்படும் விசயம் இதுன்னு புரிந்துக்கங்க.."
கிரியின் மனத்தாங்கல் ஓடிவிட்டது.. அவன் பாசத்துடன் மீனாவைப் பார்த்தான்.. அவனது பரிவு மீனாவை தாலாட்டியது..
"அண்ணனிடம் சொல்ல முடியலைன்னா உங்களிடம் நீங்களே சொல்லிக்கங்க மீனா.. உங்களுக்கான வழியை உங்களால் கண்டு பிடிக்க முடியும்.."
ஆகட்டும் என்பதைப் போல மீனா தலையசைத்தாள்.. ஒரு வகையில் கிரி அவளுக்கான வழியைக் காட்டியிருந்தான்.. தன் கையே தனக்குதவி என்பதைப் போல, சில தருணங்களில், தன் அறிவே தனக்கு வழி காட்டும் என்ற சுய அலசல் சாலச் சிறந்ததுதான்..
கிரியும் அவளும் கம்பெனி விவகாரங்களைப் பற்றிப் பேசினார்கள்.. மதிய உணவுக்குப் பின் இருவரும் கிளம்பி சாக்லெட் பேக்டரிக்குப் போனார்கள்.. அங்கே சுற்றிப் பார்த்து விட்டு கிரி தன் வீட்டுக்குத் திரும்பி விட்டான்.. லிங்கம் அன்று விடுப்பு எடுத்திருந்ததால் மீனா தனியாக காரை ஓட்டியபடி திரும்பி வந்து கொண்டிருந்தாள்.. வழியில் அன்று மேகி காரை மறித்தது போல இன்று வினோத் வழி மறித்தான்..
'மீனா.. காரை விட்டு இறங்கி விடாதே.. தனியா இருக்க..'
அவள் மனது எச்சரித்தது.. உதவிக்கு அவளது ஹேண்ட் பேக்கில் வைத்திருக்கும் மிளகாய் பொடி ஸ்ப்ரேயையும், மயக்க மருந்து ஸ்பிரேயையும் எடுத்துக் கையில் வைத்துக் கொண்டாள்.. கார் கண்ணாடிக் கதவை கை நுழையாத அளவிற்கு லேசாக இறக்கினாள்.. அப்போதுதானே அவன் பேசுவது காதில் விழுகும்..
 "என்ன..? வழியை ஏன் மறிக்கற..?" அதட்டினாள்..
வினோத் அவளை ஏளனமாகப் பார்த்தபடி காரின் பக்கம் வந்தான்..
"பகுமானமா காரை ஓட்டிக்கிட்டு வர்ற..? கானாடு கிரி மலையின் ஜமின்தாரிணி ஆகப் போகிறோம் என்ற திமிரா..?" என்று கேட்டான்..
"ஆமாண்டா.. அப்படித்தான்.." அவன் பாணியிலேயே பதிலளித்தாள் மீனா..
"பாருடா.. மீனு இந்தத் துள்ளு துள்ளுது.. இதப் போலத்தான் அந்த வனமலரும் துள்ளத் துடிக்கச் செத்தா..  கொன்னவன் யாரு தெரியுமா..? உன் அருமைக் காதலன் விஷ்வாதான்.."
'வனமலரா..? கிரியின் காதலியா..? விஷ்வா கொன்றானா..?'
"ஒற்றை வார்த்தைக்கே இந்த முழி முழிக்கற.. மொத்தக் கதையையும் கேட்டா கையைக் காலை இழுத்துக்கிட்டுப் போய் சேர்ந்திருவ போல.. வேற எதுக்காக அந்த விஷ்வா கிரியை உச்சந்தலையில தூக்கி வைச்சுக்கிட்டு இருக்கான்னு நினைக்கிற..? எல்லாம் குற்ற உணர்ச்சிதான்.. வேறென்னா..?"
அணுகுண்டு தலையில் விழுந்தால் என்னாகுமோ, அந்த திகிலை அனுபவித்துக் கொண்டிருந்தாள் மீனா.. அவளுக்குக் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -55
பொதிகையிலே பூத்தவளே -55
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-55.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-55.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy