பொதிகையிலே பூத்தவளே -54

54 மீனாவின் தட்டில் இனிப்பை வைத்தாள் புனிதா.. " உனக்கு ரவா கேசரின்ன பிடிக்குமே.. சாப்பிடு.." " இன்னைக்கு என்னம்மா ...


54

மீனாவின் தட்டில் இனிப்பை வைத்தாள் புனிதா..
"உனக்கு ரவா கேசரின்ன பிடிக்குமே.. சாப்பிடு.."
"இன்னைக்கு என்னம்மா விசேசம்..?"
"கானாடுகிரி மலையிலே விடாம மழை பெய்யுது.. அதுதான் விசேசம்.. கொட்டற மழைக்கு இதமா சூடானா பலகாரம் செஞ்சு சாப்பிட்டா நல்லாயிருக்கும்ல்ல..?"
'இருக்கும்தான்.. ஆனா இல்லையே..' மீனா பெருமூச்சு விட்டாள்..
மேகி பேசிய பேச்சுக்குத் தக்க பதிலடி கொடுத்து விட்டாலும் அவளது மனம் ஆறவில்லை.. மேகி பேசிய பேச்சுக்களில் இருந்து வெளியே வரமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.. வாதத்திற்கு வேண்டுமானால் மேகிக்குப் பதிலடி கொடுத்து வாயை மூட வைத்திருக்கலாம்.. மேகி பேசிய பேச்சுக்களில் நியாயமில்லையென்று சொல்லிவிட முடியுமா..?
மீனா சாப்பிட்டேன் பேர்வழியென்று அரையும் குறையுமாகச் சாப்பிட்டு விட்டுக் கைகழுவினாள்.. வாழைக்காய் பஜ்ஜியையும் ரவா கேசரியையும் ஒரு கை பார்த்துக் கொண்டிருந்த மோகனா..
"ஏன்க்கா..?"  என்று வியப்புடன் கேட்டாள்..
மீனாவுக்கு வாழைக்காய் பஜ்ஜியும், ரவா கேசரியும் பிடித்தமான பலகாரங்கள்.. அடிக்கடி செய்யச் சொல்வாள்..
"அக்கா.. இதையெல்லாம் பெண் பார்க்க வருகிறவங்களுக்குத்தான் செஞ்சு போடனும்.. இப்ப என்ன உன்னைப் பெண் பார்க்கவா வர்றாங்க..?" மோகனா கிண்டல் செய்வாள்..
"மத்தவங்க மொக்கறதுக்குத்தான் பலகாரம் செய்யனுமா..?"
"நாமளே மொக்கிறலாம்ன்னு சொல்றயா..?"
"ஆமாண்டி அரட்டை.."
தங்கையின் காதைப் பிடித்துத் திருகுவாள் மீனா..
"வலிக்குதுக்கா.."
வலிக்காமலே சினுங்கிச் சிரிப்பாள் மோகனா.. அப்படி மீனா விரும்பிச் சாப்பிடும் பஜ்ஜியையும் ஜொஜ்ஜியையும் சூடாக மழை நேரத்தில் மொக்காமல் அவற்றை வேண்டாமென்று விலக்கித் தள்ளி விட்டு மீனா எழுந்து கொள்கிறாள் என்றால் அது உலக மகா ஆச்சரியமல்லவா.?
"உனக்குப் பிடிச்ச பலகாரமாச்சே மீனா.. கொஞ்சமாச்சும் சாப்பிடு.." புனிதா தடுத்தாள்..
"உடம்புக்கு முடியலையாம்மா..?" மூர்த்தி கவலையுடன் கேட்டார்..
குடும்பத்தாரின் உபசரணையும், அனுசரணையும் மனதுக்கு இதமாக இருந்தாலும் மீனாவால் உட்கார்ந்து சாப்பிட முடியவில்லை.. அவளுக்கு தனிமை தேவைப்பட்டது.. சிறுதுளி கண்ணீர் சிந்த வேண்டும்.. உத்தரவாதமில்லாத எதிர்காலத்தைக் கொண்ட காதல் உணர்வுகளுடன் கண்ணீரில் கரைய தனிமை அவளுக்கு வேண்டும்..
"தலை வலிக்குதும்மா.." தவிர்க்க முடியாமல் பொய் சொன்னாள்..
"கஷாயம் போட்டுத் தரவா..?" கவலையுடன் பரபரத்தாள் புனிதா..
"மாத்திரை போட்டுக்கம்மா.." மூர்த்தி மாத்திரையைத் தேடினார்..
தேவையில்லாமல் பெற்றோரை அழைக்கலிக்கும் குற்றஉணர்வு மீனாவுக்கு வந்தது..
"கசாயம், மாத்திரையெல்லாம் வேண்டாம்.. இன்னைக்கு அதிகமான அலைச்சல் அம்மா.. கொஞ்சநேரம் தூங்கி எழுந்தாச் சரியாப் போகிரும்ப்பா.." தாய், தந்தைக்குச் சமாதானம் சொன்னாள்..
"அப்படின்னா மாடிக்குப் போயி தூங்கு.. நைட் டிபன் சாப்பிட எழுப்பி விடறேன்.." புனிதா மகளைக் கிளப்பி விட்டாள்..
'அப்பாடி..'  என்ற நிம்மதியுணர்வுடன் எழுந்து கொண்டாள் மீனா.. ஹாலில் சோபாவில் குறுக்கு மறுக்காக சரிந்து படுத்து டிவி பார்த்துக் கொண்டிருந்த மோகனா..
"நான் நைட் தூங்கத்தான் ரூமுக்கு வருவேன்.." என்று அறிவித்தாள்..
"உன்னை யாருடி அழைச்சது..?" செல்லமாக தங்கையின் தலையில் தட்டிவிட்டு மாடியேறிய மீனாவின் உடலும் மனமும் சோர்ந்திருந்தன..
அறைக்கதவைத் திறந்தவளுக்கு அப்படியே படுக்கையில் விழுந்து கதறி அழ வேண்டும் போல இருந்தது.. பொதுவாகவே மலைப்பிரதேசத்தின் அமைதியும், அடர்ந்த வனங்களும், வெளிச்சமில்லாத இருளும், குளிரும் அச்சுறுத்தும்.. மனதில் தனித்த உணர்வை உண்டு பண்ணும்.. மெதுவாக விடிந்து சீக்கிரமே இருட்டிப் போகும் மலைப்பிரதேசத்தில் கொட்டும் மழையும் சேர்ந்து கொண்டால் என்னாகும்..?
மீனாவுக்குள் தனிமை உணர்வு சூழ்ந்து கொண்டது.. எவரும் இல்லாமல் நிராதரவாக நிற்கும் உணர்வு.. அவளுக்கு '' என்று அழ வேண்டும் போல இருந்தது.. மனம் வலிக்க அழுதாள்.. கண்ணீரில் கரைந்தாள்.. மேகி பேசிய ஒவ்வொரு பேச்சும் அவளது இதயத்தைப் பிளந்து கொண்டிருந்தன.. மேகியின் முன்னால் வலிக்காததைப் போல நடிக்க முடிந்தது.. தனிமையில் முடியவில்லை.. இதயத்தைப் பிளக்கும் கொடூர வலியின் கொடுமையைத் தாங்க முடியாதவளாக அவள் துடித்தாள்.. மேகியை இப்போது விஷ்வா விலக்கி வைத்திருக்கிறான்..
'ஆனால் ஒரு காலத்தில் மேகி விஷ்வாவிற்கு தேவைப்பட்டாளே..'
தெரிந்த ஒன்றுதான்.. கண்ணுக்கு முன்னால் வந்து நிற்கும் வரை மறக்க முடிந்தது.. கண் முண் பார்க்கும் போது.. மேகி கேட்ட கேள்விகளைக் காது கொடுத்துக் கேட்கும் போது.. மனது துடித்த துடிப்பு இருக்கிறதே.. அப்பப்பா.. காதல் என்பது செல்லரிக்கும் நோய் என்று தெரியாமலா சொல்லி வைத்தார்கள்..?
"அக்கா.."
மோகனாவின் குரலில் அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு இமைகளை மூடிக் கொண்டாள் மீனா..
"தூங்கறயா..?"
அறை விளக்கைப் போட்டபடி கேட்டாள் மோகனா.. வெளிச்சம் அறையில் பரவியது.. மீனாவின் பக்கத்தில் உட்கார்ந்து அவள் தோள் தொட்டு அசைத்தாள்..
"எழுந்திருக்கா.. அம்மா சாப்பிடக் கூப்பிடறாங்க.."
சோர்வாக இமைகளைத் திறந்த மீனா..
"எனக்குப் பசியில்லை மோகனா.. நீ போய் சாப்பிடு.." என்று சுணங்கிய குரலில் சொன்னாள்..
"ஏன் பசிக்கலை..? அதெல்லாம் பசிக்கும்.. இந்தக் குளிரில பசி வராம போகுமா..? எழுந்திரு.." பிடிவாதம் பிடித்தாள் மோகனா..
"சொன்னாக் கேளுடி.. சாயந்திரம் சாப்பிட்டதே வயிறு நிறைய இருக்கு.. தொம்முன்னு வயிறு இருக்கிறப்ப.. டிபன் உள்ளே இறங்காதுடி.." மீனா அசைய மறுத்தாள்..
"யாருகிட்ட காது குத்தற..? சாயந்திரம் நீ சாப்பிட்டியாக்கும்..? உனக்குப் பிடிச்ச பஜ்ஜியையும் சொஜ்ஜியையும் தள்ளி வைச்சுட்டுத் தலைவலின்னு வந்துட்ட ஆளு இல்ல நீ.. இப்பக் கதை விடறியா..?"
"ம்ப்ச்.. தலைவலி போகலைடி மோகனா.."
"சாப்பிடாம இருந்தா தலைவலி எப்படிப் போகும்..? அதிகமாத்தான் ஆகும்.. எழுந்து வாக்கா.. சூடா சாப்பிட்டா தலைவலி ஓடியே போயிரும்.."
வற்புறுத்தினாள் மோகனா.. மீனாவுக்கு எழுந்து கொள்ள தெம்பில்லை.. அப்படியே படுத்திருக்க வேண்டும் போல இருந்தது.. மோகனாவின் கையைத் தள்ளி விட்டாள்..
"படுத்தாதே மோகனா.. என்னைத் தனியே விடு.." என்று சொல்லி விட்டாள்..
"அக்கா..?" என்ற மோகனாவின் வார்த்தையில் பதறிப் போய் விட்டாள்..
ஒன்றும் அறியாத சின்னப் பெண்ணிடம் சுள்ளென்று பேசி விட்டாளோ..
"ஸாரிடி செல்லம்.." தங்கையின் முகவாய் தொட்டு குற்ற உணர்வுடன் சொன்னாள்..
"இப்ப எதுக்கு ஸாரி சொல்ற..? உன்னிடம் போய் நான் கோவிச்சுக்குவேனா..?"
மீனாவின் கைபிடித்து முத்தம் கொடுத்து அவளது தலையைக் கோதி விட்டாள் மோகனா.. மாற்றாந் தாயின் மகள் என்ற எண்ணமே வராமல் ஒரு தாய் மக்களாக அவர்கள் உறவாடினார்கள்.. தங்கை தாயானதில் மனம் நெகிழ்ந்தாள் மீனா.. மேகியின் பேச்சினால் காணாமல் போயிருந்த தெம்பு மீண்டது..
"உனக்கு என்னக்கா பிராப்ளம்..?" கனிவாகக் கேட்டாள் மோகனா..
'என் தங்கை பெரிய பெண் போல பேசுகிறாள்..'
மீனா மோகனாவின் கன்னத்தில் தட்டிவிட்டு..
"எனக்கென்ன பிராப்ளம்..? நீதான் ஒழுங்காக ஸ்கூலுக்குப் போகிறாயே.. எக்ஸாமில நல்ல மார்க் வாங்கற..  மட்டம் போட்டு மார்க் குறைவா வாங்கியிருந்தா ஸ்கூலில் என்னைக் கூப்பிட்டு விட்டு அர்ச்சனை செய்து அனுப்பியிருப்பாங்க.. நீ சமத்துப்பெண்ணா இருக்கிறதாலே நோ பிராப்ளம்.." என்று சிரித்தாள்..
"பொய் சொல்லாதே.." ஆழ்ந்த குரலில் சொன்னாள் மோகனா..
"போடி உண்மை விளம்பி.. நான் பொய் சொல்கிறதை இவ கண்டு பிடிச்சுட்டாளாம்.."
"சமாளிக்காதே அக்கா.. உனக்கு வேற ஏதோ பிராப்ளம் இருக்கு.. நான் சின்னப் பொண்ணுன்னு சொல்லாம மறைக்கிற.."
"நீ சின்னப்பொண்ணு.. மறைக்கிறேன்.. அம்மாவிடம் சொல்லியிருப்பேனில்ல..?"
"அது அப்ப.. மதுரையில.. இப்பல்லாம் நீ அம்மாவிடம் எதையும் சொல்வதில்லை.."
மீனாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது.. மோகனா இத்தனை நுணுக்கமாக கவனித்திருப்பாள் என்று அவள் நினைக்கவேயில்லை.. குழந்தையென்று அவள் சீராட்டும் மோகனா தெள்ளத் தெளிவானவளாக.. தமக்கையின் மாறுதலை உணர்ந்தவளாக இருக்கிறாள்..
"வளர்ந்தது நானில்லை அக்கா.. நீதான் வளர்ந்துட்ட.. அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனதில்.. மாறிப்போனது நம் குடும்பச் சூழ்நிலை மட்டுமில்லை.. நீயும்தான்.. பொறுப்பை உன் தோளில் சுமக்கிற.. எங்களை உட்கார வைத்து விட்டு குடும்பத்துக்காக ஓடுகிற.. ஆனா ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்க அக்கா.. எங்களுக்கு நீதான் முக்கியம்.. இந்த வசதியான வாழ்க்கையில்லை.."
"மோகனா.."
"உனக்குப் பிடிக்கலைன்னா வேலையை விட்டுவிடு.. நீ எங்கே கூப்பிட்டாலும் உன் பின்னால் நாங்க வருவோம்.. உனக்காக நாங்க இருப்போம்.."
"ஏய்ய்.. பெரிய மனுஷி போல பேசாதேடி.."
மீனா தங்கையை அணைத்துக் கொண்டாள்..  வேலையை விட்டு விடும் அளவிற்கு.. அவளுக்கு வேலையில் எந்தப் பிரச்னையும் இல்லையே.. தலைமைப் பொறுப்பை விஷ்வா கொடுத்திருக்கிறான்.. துணைக்குத் தளபதியாக கிரி நிற்கிறான்.. ரங்கநாதனை எதிர்ப்பதற்கான மனதைரியம் மீனாவுக்கு இருக்கிறது.. அவளது கலக்கம் வேலையில் ஏற்படும் இடர்பாடுகளை நினைத்தல்லவே..
மீனாவின் முகத்தையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தாள் மோகனா.. தங்கை கவனிக்கிறாள் என்பதில் சிந்தனையை மறைத்துக் கொண்டு புன்னகைத்தாள் மீனா..
"ஏண்டி அப்படிப் பார்க்கிற..?"
"நீ விஷ்வா சாரை காதலிக்கிறியா..?"
மறுபடியும் தூக்கிவாரிப் போட்டது மீனாவுக்கு.. இவளென்ன, அடுத்தடுத்து இப்படிக் கேள்விகளை அடுக்கிறாள்..
"இப்படியெல்லாம் பேசக்கூடாது மோகனா.."
"ஆகட்டும்.. ஆனா அக்கா, இதைப்பத்தி உன்னால் அம்மாவிடம் பேச முடியாதுன்னு தோணினா உனக்கு நெருக்கமானவங்ககிட்டப் பேசு.. மனதுக்குள் எதையும் போட்டு மறுகிக்கிட்டு இருக்காதே.."
"சரிடி பெரிய மனுஷி.. இப்பச் சாப்பிடப் போகலாம் வா.."
கலகலத்துச் சிரித்தபடி சாப்பிட எழுந்த மீனாவின் மனம் லேசாகியிருந்தது..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -54
பொதிகையிலே பூத்தவளே -54
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-54.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-54.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy