பொதிகையிலே பூத்தவளே -53

53 " நீ கடந்த காலத்தில் அவர் வாழ்வில் வந்து போன இருள் மேகி.. நிகழ்காலத்தில் அவருடன் இருப்பது நான் மட்டும்தான்.." தன் உணர்...


53

"நீ கடந்த காலத்தில் அவர் வாழ்வில் வந்து போன இருள் மேகி.. நிகழ்காலத்தில் அவருடன் இருப்பது நான் மட்டும்தான்.."
தன் உணர்வுகளையும் மன பயத்தையும் மறைத்தபடி பேசினாள் மீனா.. என்னதான் விஷ்வா அவளுக்கு மட்டும்தான் சொந்தமென்று மனம் சொன்னாலும், அவள் முதன் முதலில் விஷ்வாவை மேகியுடன்தான் பார்த்தாள் என்ற உண்மை மனதை வாள் கொண்டு அறுத்தது..
'விட்டகுறை, தொட்டகுறை விட்டுப் போய் விடுமான்னு சொல்வாங்களே..'
மேகி விஷ்வா விட்ட குறை.. மேகியை விஷ்வா தொட்ட குறையும் இருக்கிறது என்பதில் மீனா நிலை குலைந்தாள்..
மேகி ஒன்றும் உண்மை விளம்பியில்லைதான்.. ஆனால் அவள் ஒன்றும் விஷ்வாவுக்கு அறிமுகம் ஆகாதவளே இல்லையே.. விஷ்வா அவளைக் கழட்டி விட்டு விட்டான் என்பதற்காக அவனுடைய கடந்த
கால வாழ்க்கையில் மேகியுடன் அவனுக்குப் பழக்கம் இருந்திருக்கிறது என்ற உண்மை பொய்யாகி விடுமா..?
பெண்கள் நுண்ணர்வு மிக்கவர்கள்.. அதிலும் மேகி சாகசக்காரி.. மீனாவின் மனச் சலனங்களை அவளது விழிகளில் கண்டு விட்டாள்.. புத்திசாலி மீனா தடுமாறுகிறாள்.. இது போதாதா மேகிக்கு..?
மேகி கலங்கியிருக்கும் மீனாவின் மனதை மேலும் கலக்கும் வேலையைச் செவ்வனே செய்ய ஆரம்பித்தாள்..
"எதிர்காலம்ன்னு ஒன்னு இருக்கே மீனா.. நீ அதை மறந்துட்டுப் பேசறியே.. விஷ்வாவோட எதிர்காலத்தில நீ இருக்க மாட்ட.."
அழுத்தம் திருத்தமாக மீனாவையே நேருக்கு நேராகப் பார்த்தபடி குரூரத்துடன் மேகி சொன்ன விதத்தில் பதறிப் போனாள் மீனா..
"வாயை மூடு.." என்று சீறினாள்..
"என் வாயை நான் மூடிட்டா, எல்லாம் சரியாகி விடுமா..? முட்டாளா நீ..?" எகத்தாளமாகக் கேட்டாள் மேகி..
"நானும் விஷ்வாவும் காதலிக்கிறோம்.." மீனாவின் குரல் நடுங்கியது..
"நானும்தான் விஷ்வாவைக் காதலிக்கிறேன்.." ஏளனமாகச் சொன்னாள் மேகி..
"உன் பழக்கத்தைக் காதல்ன்னு சொல்லாதே.."
மேகியை விட ஏளனமாகச் சொன்னாள் மீனா.. அவள் மேகியைப் புழுவைப் பார்ப்பதைப் போல கேவலமாக பார்த்த பார்த்த பார்வைக்கு வேறு ஒரு பெண்ணாக இருந்திருந்தால் கூனிக் குறுகி அந்த இடத்தை விட்டே ஓடிப் போயிருப்பாள்.. மேகி அப்படிப்பட்ட சூடு, சுரணையையெல்லாம் வைத்துக் கொள்வதே இல்லையே.. அவள்தான் எதையும் தட்டி விட்டுப் போகும் ரகமாயிற்றே.. அதனால் படு திண்ணக்கமாக அலட்டிக் கொள்ளாமல் அலட்சியத்துடன் உரக்கச் சிரித்தாள்..
"பழக்கமா..? எனக்கும் விஷ்வாவுக்கும் இடையில் இருந்தது வெறும் பழக்கமில்லை மீனா.. அதையும் தாண்டியது.."
அவள் இமைகளைச் சிமிட்டி அசிங்கமாக ஜாடை செய்ததில் அருவெறுப்படைந்த மீனா..
"ச்ச்சீ.." என்றாள்..
"கண்டு பிடிச்சிட்டியே.. இது கூடத் தெரியாத எல்.கே.ஜி பப்பாவோன்னு நினைச்சேன்.." மேகி கேலியாகச் சொன்னாள்..
"உன்னுடைய அசிங்கமான கண்ஜாடையை நிறுத்தறியா..?" மீனா சீறினாள்..
"பட்.. இப்படிப் பேசினாத்தான் விஷ்வாவுக்குப் பிடிக்கும்.. இன்னும் என்னென்ன செய்தால் அவருக்குப் பிடிக்கும்ன்னு நான் சொல்லவா..?"
மேகி சொல்ல ஆரம்பித்தாள்.. மீனா உடல் நடுங்க காதுகளைப் பொத்திக் கொண்டாள்.. அதைப் பார்த்த மேகிக்கு உற்சாகம் பீறிட்டது.. அவள் ஏற்கனெவே மீனாவின் மீது கொலை வெளியில் இருந்தவள்.. இவளால்தானே விஷ்வா என்னை விரட்டியடித்தான்
என்ற வன்மம் அவள் நெஞ்சிலே கொந்தளித்துக் கொண்டிருந்தது.. அதற்கு தூபம் போடுவதைப் போல மீனாவும் விஷ்வாவும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள் என்ற செய்தி அவளுடைய காதுகளை எட்டியது.. மேகியினால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை..
மேகிக்கு ஒன்றும் விஷ்வாவின் மீது காதலெல்லாம் இல்லை.. அப்படி இருப்பதாகச் சொன்னால் விஷ்வா அவளைத் துரத்தியடித்து விடுவான்.. என்பதும் அவளுக்கு நன்றாகவே தெரியும்.. தான் யார், தன் எல்லை என்ன என்பதை அவள் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தாள்.. விஷ்வாவைப் போன்ற பணக்காரர்களின் அறிமுகம் கிடைப்பதே பெரிது.. அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதிகமாக உரிமை கொண்டாடக்கூடாது.. இடைவெளி கொடுத்துத் தள்ளி நிற்க வேண்டும் என்று அவளுக்குத் தெரியும்.. அவளுக்கு வேண்டியது பணம்... அதை விஷ்வா அள்ளிக் கொடுக்கிறான்.. அது போதும் மேகிக்கு..
விஷ்வாவின் திருமணத்திற்குப் பின்னால் அவன் இதுபோல மேகியுடன் பழகுவானா மாட்டானா என்பதைப் பற்றியெல்லாம் அவள் யோசித்ததில்லை.. அவள் பழகும் பணக்காரர்களில் விஷ்வாவும் ஒருவன்.. அதுபோல விஷ்வா பயன்படுத்திக் கொள்ளும் பல பெண்களில் இவளும் ஒருத்தி.. அவ்வளவுதான்.. விஷ்வாவிற்குத் திருமணமாகி விலகிப் போனால்.. இன்னொரு தர்ஷா.. மேகிக்கு ஆள்களா இல்லை..?
இப்படி அலட்டிக் கொள்ளாத மேகியை அதிர வைத்தது விஷ்வாவின் காதல்.. அவன் யாரைக் காதலித்திருந்தாலும் எனக்கென்ன என்று அவள் தன் வேலையைப் பார்த்துக் கொண்டு போயிருப்பாள்.. விஷ்வா மீனாவைக் காதலித்தான்.. அதைத்தான் அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை..
விஷ்வா அவனுடைய பணக்கார பின்புலத்திற்கு இணையான ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வான் என்று மேகி நினைத்திருந்தாள்.. அந்தப் பெண் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவளாக இருப்பாள்.. கோடிஸ்வர பரம்பரையில் பிறந்திருப்பாள்.. வெளிநாட்டில் படித்திருப்பாள்..
என்றெல்லாம் மேகி நினைத்திருக்க விஷ்வா மிகச் சாதாரண நிலையிலிருந்த மீனாவைக் காதலித்து மேகியின் மனதில் பொறாமைத் தீயை மூட்டி விட்டான்..
மீனா காணக் கிடைக்காத கோஹினூர் வைரம்.. மேகி கண்ணாடிக் கல்லிலும் கீழானவள்.. அதை மிக எளிதாக மறந்துவிட்ட மேகி இவளுக்கெல்லாம் வந்த வாழ்வைப் பார் என்று மீனாவின் மீது வஞ்சம் வைத்தாள்.. அதை மிகச் சரியாக பயன் படுத்திக் கொண்டான் ரங்கநாதன்.. கூடுதலாக பணமும் கிடைக்கவே மேகி கானாடுகிரிக்கு வந்து மீனாவை வழி மறித்து விட்டாள்..
"உன்னை எச்சரிக்கிறேன் மேகி.. என்னிடம் இப்படிப் பேசாதே.. எனக்குப் பிடிக்காது.."
"பட்.. விஷ்வாவுக்குப் பிடிக்குமே.."
"அவர் பெயரைச் சொன்னால் உன் பல்லைக் கழட்டி விடுவேன்.."
"அவ்வளவு உரிமையா..? ஹி இஸ் மை மேன்.."
"ஏய்ய்ய்...."
மீனா ஒற்றை விரலை உயர்த்தி ஆக்ரேசமாக எச்சரித்தாள்.. மேகியின் கண்களில் பயம் வந்தது..
'அடிச்சிருவாளோ..' அவள் மெதுவாகப் பின் வாங்கினாள்..
"யுவர் மேனா..? அறைஞ்சேன்னா பாரு.. யார், யாரை உரிமை கொண்டாடறது..? நீ என்ன அவளுடைய கேர்ளா..?"
"இந்த மிரட்டுகிற வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம் மீனா.. நான் யார் என்பது விஷ்வாவுக்குத் தெரியும்.. அவரும் நானும் காதலித்தோம்.. இது உனக்குத் தெரியாது.."
"அவர் என்னைக் காதலிக்கிறார்.."
"இதுக்குத்தான் முட்டாளா நீன்னு கேட்டேன்.. உனக்கு விஷ்வாவைத் தெரியறதுக்கு முன்னாடியே எனக்கு அவரைத் தெரியும்.. அதை மறந்து விடாதே.."
"என் முன்னாடியே உன்னை அவர் துரத்தி விட்டார்.. நீயும் அதை மறந்து விடாதே.."
"எங்களுக்குள் ஆயிரம் இருக்கும்.. விரட்டியது யார்..? என் விஷ்வாதானே..? ஐ டோன்ட் கேர்.."
"நீ எதைத்தான் கேர் பண்ணியிருக்கிற..? தட் இஸ் யுவர் நேச்சர்.. நீயெல்லாம் ஓர் ஆள்..? நீ பேசுவதை நான் கேர் பண்ணனும்..? ஐ டோன்ட் கேர்.."
என்ன சொன்னாலும் பதிலுக்குப் பதில் சொல்லி கொடுத்துக் கட்டும் மீனாவின் முன்னால் நின்று தாக்குதல் தொடுக்க முடியாமல் திணறிப் போனாள் மேகி.. எப்படித் தாக்கினாலும் மீனா எதிர் தாக்குதலைத் தொடுத்தாள்.. அவளை வீழ்த்த மேகிக்கு பலத்த அஸ்திரம் தேவைப்பட்டது..
கண்கள் இடுங்க மீனாவைப் பார்த்தாள்.. அதில் தெரிந்த குரூரத்தில் மீனாவின் மனம் பதறியது..
அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்று இதயம் தடதடத்தது..
'ச்சீ.. இவளுக்கா பயப்படுவது..?' தன் மனதை கடிந்து கொண்டாள்..
நேர் கொண்ட பார்வையும், சீரிய நடத்தையும் உள்ள மீனா, மேகியைப் போன்ற ஆள்களுக்குப் பயப்படலாமா..?
"நீயெல்லாம் ஓர் ஆள்ன்னு என்னைப் பார்த்து இகழ்ச்சியாப் பேசறியே.. எதை வைத்து இப்படிப் பேசற மீனா..?"
நிதானமாகக் கேள்வி கேட்டாள் மேகி.. அவளது நிதானம் மீனாவை அதிர வைத்தது.. மேகிக்கும் நிதானத்திற்கும் வெகு தூரம்.. கயமையே உருவான மேகியைப் போன்றவர்களின் நிதானம் அச்சத்தைத் தரக் கூடியது..
"எதை வைத்துன்னு உனக்குத் தெரியாதா மேகி..?"
"ஏன் தெரியாது..? நல்லாவே தெரியுது.. ஆனா மீனா.. விஷ்வாவைப் போன்ற ஒருவரைக் காதலிக்கும் நீயெல்லாம் இதைப் பற்றிப் பேசவே கூடாது.."
"ஏய்ய்.."
"உஷ்ஷ்.."
"மேகி.."
"காம் டவுன்.."
மேகி ஒற்றை விரலை வாயில் வைத்து மீனாவை பேசாதே என்றாள்.. மீனாவின் கோபத்தை அவள் லட்சியமே பண்ணவில்லை..
"உனக்கெல்லாம் இவ்வளவு கோபம் வரக்கூடாது.. ஊருக்கொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த விஷ்வாவெல்லம் உனக்கு 'ஆள்..'.. அதற்கு உடன்பட்ட என்னைப் போன்ற பெண்கள் எல்லாம் ஆள்களில்லை.. தவறுக்கு இரண்டு பக்கமும் தண்டனை இருக்க வேண்டும் மீனா.. விஷ்வா ஆண்.. பணக்காரன்.. அதிலும் கோடிஸ்வரன்.. ஜமீன் பரம்பரை.. ஹீரோ இமேஜ்.. ஸ்டார் போகஸ், அவன் எதைச் செய்தாலும் சரி.. அதையே என்னைப் போன்ற பாவப்பட்ட பெண்கள் செய்தால் நாங்கள் ஒரு மாதிரி.. என்ன ஒரு சமூகநீதி..! இதைப் பெண்ணே பெண்ணுக்குச் சொல்வதுதான் 'சபாஷ்..' போட வைக்குது.. வாவ் மீனா.. யு ஆர் கிரேட்.." மேகி கை தட்டினாள்..
"மேகி.." மீனா விக்கித்துப் போனாள்..
வேதாளம் தேவாரம் சொல்கிறதுதான்.. ஆனால் தேவாரம், தேவாரம்தானே..? வேதாளம் சொல்கிறது என்பதற்காக அது தேவாரம் இல்லையென்று ஆகி விடுமா..? மேலி கேட்ட கேள்வியில் நியாயம் உள்ளதே.. விஷ்வாவின் நடத்தை கடந்த காலத்தில் மனம் போன போக்கில்தானே இருந்தது..
அதிர்ந்து நின்ற மீனாவைப் பார்த்த மேகியின் விழிகளில் வெற்றிக்களிப்பு வந்தது.. அவள் குனிந்து மீனாவின் முன்னால் விரல் சொடுக்கினாள்..
"என்ன..? பேச்சையே காணோம்..? உண்மை கசக்குதா..? காதல் இனிக்கத்தான் செய்யும் மீனா.. ஆனா, அதுக்குப் பின்னாலே இருக்கும் உண்மை கசக்கும்.."
மேகியின் எகத்தாளத்தில் மீனா சுதாரித்துக் கொண்டாள்.. கசக்கும் உண்மையை மீனா ஜீரணித்துக் கொள்வாள்.. அதே மேகி கண்டு விடக் கூடாது.. மேகியின் முன்னால் மீனாவால் தோல்வியை ஒப்புக் கொள்ள முடியாது..
"அது என் பிரச்னை மேகி.. கசப்புக்கு இனிப்பு தடவிக்க எனக்குத் தெரியும்.. நீ உன் வழியைப் பார்.. ஐ மீன், உன் பிழைப்பைப் பார்.. விஷ்வா உனக்குப் பிழைப்புத் தர மாட்டார்.. ஸோ, நீ வேறு ஆளை, ஐ மீன் வேறு பிழைப்பைத் தேடிக்கத்தான் வேண்டும்.. ஆல்ரெடி உனக்கு நிறைய அப்பாயிண்ட்மெண்ட்ஸ் இருக்கும்.. அதிலெல்லாம் நீ கெட்டிக்காரியாச்சே.. நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.. என்ன..? சரிதானே..?"
"மீனா.."
"உஷ்ஷ்.."
"ஏய்ய்.."
"காம் டவுன்.."
மேகி செய்ததைத் திரும்பச் செவ்வனே செய்தாள் மீனா.. மேகியின் முகம் விகாரமானது.. மனது அழகாக இருந்தால்தானே முகமும் அழகாக இருக்கும்..? அருவெறுப்பான மனமும் குணமும் உடையவர்கள் ஆயிரம் ஒப்பனைகள் செய்தாலும் சாயம் வெழுத்து விடும்தானே..
"பேசாதே.. நீயெல்லாம் பேசவே கூடாது.. விஷ்வா தவறு செய்தவர்தான்.. இப்போது திருந்தி நேர்வழியில் வாழ ஆரம்பித்து விட்டார்.. அவருடைய தகுதிக்கு, என்னைவிட அழகான, பணக்கார, படித்த பெண்கள் வரிசைகட்டி நின்றிருப்பார்கள்.. ஆனால் அவர் சாதாரண மீனாவைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்.. இதிலிருந்து அவருடைய குணத்தை நீ புரிந்து கொள்ள முயற்சி செய்.. அவர் என்னிடம் பொய் சொல்லவில்லை.. உத்தமன் வேசம் கட்டவில்லை.. அவருடைய தவறுகளுடன்தான் எனக்கு அறிமுகமானார்.. எந்தவொரு சந்தர்ப்பதிலும் அவரின் நடவடிக்கைகளை அவர் நியாயப்படுத்திக் காட்டியதே இல்லை.. உண்மையான காதல் தவறுகளை மறந்து, மன்னித்து நீயே எனக்கு சகலமும் என்று ஏற்றுக் கொண்டு சரனாகதி ஆவது.. நான் அவரை உண்மையாகக் காதலிக்கிறேன் மேகி.. இப்படிப்பட்ட உண்மையான காதலுடன், என்னைப் போல சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் உன்னை நேசித்தால் பணம் வேண்டாம்.. உன் குணம் ஒன்றே போதும்.. குடிசையில் வாழ்ந்தாலும் உன்னுடன் சந்தோசமாக வாழ்வேன்னு அவன் பின்னால் உன்னால் போக முடியுமா..?"
மீனாவின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் பொறி கலங்கி நின்றாள் மேகி.. அப்படி ஒருவன் அவள் வாழ்வில் வந்தான்.. அனைத்தையும் மறந்து புதுவாழ்வு வாழலாம் என்று அழைத்தான்..
"நீயே பிளாட்பார்ம்.. உனக்கெல்லாம் காதல் ஒரு கேடா..?" என்று அவனை அவமானப்படுத்தி விரட்டி விட்டவள்தான் மேகி..
"விஷ்வாவால் அது முடிந்திருக்கிறது மேகி.. இந்த உலகில் தவறு செய்யாமல் நேர் கோட்டில் வாழ முடிவது வெகு சிலரால்தான்.. அதற்காக மற்றவரெல்லாம் வாழத் தகுதியில்லாதவர்கள்ன்னு சொல்லிவிட முடியுமா..? உனக்கு ஒரு சான்ஸ் கிடைத்தால் உன்னால் மாற முடியுமா..? இதுதான் என் கேள்வி.. முடியாதென்றால் மற்றவர்களை குறை சொல்ல உனக்குத் தகுதி கிடையாது.."
மேகியை ஒதுக்கித் தள்ளி விட்டு மீனா காரில் ஏறிப் போய் விட்டாள்.. மேகி வெகுநேரம் சிலையாக அங்கே நின்றிருந்தாள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -53
பொதிகையிலே பூத்தவளே -53
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-53.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-53.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy