பொதிகையிலே பூத்தவளே -48

48 ' விர் ' ரென்ற சப்தத்துடன் எஸ்டேட் அலுவல வளாகத்தினுள் நுழைந்து நின்றது ஜீப்.. அதன் கதவைத் திறந்து இறங்கிய கிரி , மீனாவுக்க...


48

'விர்'ரென்ற சப்தத்துடன் எஸ்டேட் அலுவல வளாகத்தினுள் நுழைந்து நின்றது ஜீப்.. அதன் கதவைத் திறந்து இறங்கிய கிரி, மீனாவுக்கு கொடுக்கப்பட்டிருந்த காருக்குப் பக்கத்தில் நின்றிருந்த லிங்கத்திடம்.
"இப்ப என்ன நிலைமையில இருக்காங்க..?" என்று விசாரித்தான்..
"எதுவும் பேசலைங்க சார்.. அம்மணி தலையைப் பிடிச்சுக்கிட்டு அப்படியே உக்காந்திருக்காங்க.. அவங்க என்ன செய்வாங்க..? பெரிய ஜமீன்தாரும், அவரோட அம்மாவும், பெரிய ஜமின்தாரிகனியும் ஒன்னாச் சேந்துக்கிட்டு அம்மணியைப் பேசு பேசுன்னு பேசித் தள்ளிட்டாங்கய்யா.. அம்மணி ஒற்றை ஆளா அவங்க மூணு பேரையும் சமாளிச்சுப் பதில் சொன்னாங்க.. அம்மணியை எங்கிருந்தோ வந்தவன்னு பேசிட்டாங்க.. அதைக் கேட்ட எனக்கே  மனசு தாங்கலை.. அம்மணிக்கு எப்படியிருக்கும்..?"
பொறுமையாக லிங்கத்திடம் விவரங்களை கேட்டு அறிந்து கொண்டு அலுவலகத்திற்குள் போனான் கிரி.. அவனைக் கண்டதும் கார்மேகம் வணக்கம் சொல்ல, செண்பகவள்ளி போட்டி போட்டுக் கொண்டு தானும் வணக்கம் சொன்னாள் லேசாக தலையை அசைத்து விட்டு மீனாவின் அறைக் கதவை விரலால் தட்டினான்..
"உள்ளே வாங்க.."
மீனாவின் குரல் கேட்டதும் உள்ளே சென்றான்.. தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த மீனா சோர்ந்திருந்தாள்.. கிரியைக் கண்டதும் தாயைக் கண்ட சேயாக அவளது கண்கள் கலங்கி விட்டன..
"என் தங்கையை உள்ளங்கையில் வைத்துத் தாங்க நான் இருக்கேன் என் கண் முன்னாலே என் தங்கை கலங்குவதாங்க மீனா..?"
அவனது அன்பான வார்த்தைகளில் விசும்பினாள் மீனா.. ஆறுதல் தேடி தாய்மடி கண்ட கன்றாக தேம்பியது அவள் மனம்.. அடக்க அடக்கக் கண்ணீர் பெருகியது..
"மீனா.. என்னங்க இது..?" கிரி அதட்டினான்..
"முடியல அண்ணா.." மீனா கண்ணீரைத் துடைக்க முயன்றாள்.. அது நிற்காமல் பெருகியது..
நித்யகோகில வாணி எப்படியெல்லாம் பேசி விட்டாள்.. அனுபமா பேசலாம்.. அவள் விஷ்வாவுக்கு அண்ணி மட்டும்தான்.. ரங்கநாதன் பேசலாம்.. அவன் விஷ்வாவுக்கு அண்ணனாக இருந்தாலும் பங்காளி.. நித்யகோகிலவாணி பேசலாமா..? அவள் விஷ்வாவைப் பெற்ற தாய் அல்லவா..
பெற்றதாய் நியாயமில்லாமல் பேசுவதை விஷ்வா கேட்க நேர்ந்தால் எவ்வளவு துயரப்படுவான்.. ஆயிரம் பிள்ளைகளைப் பெற்றாலும் அன்னையின் மனம் அனைவரையும் ஒன்றாகத்தான் எண்ணும் அப்படி நினைப்பதுதான் தாய்மை..
இங்கே என்னவென்றால் பெற்ற தாயே பிள்ளைகளிடம் பாரபட்சம் காட்டுகிறாளே..
"அதிகமாக ஆடுகிறாயாமே.. ரங்கநாதனையே கேள்வி கேட்கிறாயாமே.. இரண்டு எஸ்டேட்டுகளின் வருமானத்தையும் பிரித்து விட்டாயாமே.. அண்ணன் தம்பியைப் பிரிக்க நீ யார்..?"
விஷ்வாவின் அன்னை கேட்ட கேள்வியில் மீனா திகைத்துப் போனாள்.. இது அநியாயம் என்று நித்ய கோகிலவாணிக்குத் தெரியவில்லையா..?
"நான் சின்ன ஜமின்தாரின் தொழில்களை நிர்வகிக்க வந்திருக்கும் சீனியர் மேனேஜர் மேடம்.. என் வேலையைத்தான் நான் செய்தேன்.. யாழிசை எஸ்டேட்டில் விளையும் காய்களும், மளிகைப் பொருள்களும் தனி லாரிகளில் போவதுதானே முறை..? அந்த வருமானம் சின்னவரைத்தானே சேர வேண்டும்..?"
"அதைச் சொல்ல நீ யார்..?"
"அதான் சொன்னேனே மேடம்.. நான் சின்னவர் நியமித்திருக்கும் சீனியர் மேனேஜர்.."
"கெட்டிக்காரத்தனமாக பேசுவதாய் நினைப்பா..? தம்பியின் எஸ்டேட், அண்ணனின் எஸ்டேட் என்று பிரித்துப் பேச நீ யார்..? நீ வரும்வரை எல்லாமே ஒன்றாகத்தான் இருந்தது.."
"சரிங்க மேடம்.. இனி நான் பிரித்துப் பேசலை.. அண்ணன் தம்பியின் எஸ்டேட்டுகளின் வருமானம் ஒன்றாகவே இருக்கட்டும்.."
மீனா அமைதியும் பணிவுமாக பதில் சொன்னாள்..
'அஃது...' என்ற வெற்றிப் பார்வையுடன் மகனையும் மருமகளையும் பார்த்தாள் நித்யகோகிலவாணி அவர்கள் பதிலுக்கு ஆணவமாக சிரித்தார்கள்..
"இனி ஏழிசை எஸ்டேட்டின் காய்களையும், மளிகை விளைபொருள்களையும் யாழிசை எஸ்டேட்டின் லாரிகளில் ஏற்றிக் கொள்கிறோம் மேம்.. வருமானத்தையும் யாழிசை எஸ்டேட்டின் கணக்கில் வரவு வைத்து விடுகிறோம்.." முகம் மாறாமல் அதே பணிவுடன் மீனா சொல்ல..
"என்னது..?" என்று ஒருமித்த குரலில் மூவரும் அலறினார்கள்..
"இதுக்கு ஏன் அதிர்ச்சியாகறீங்க..? அண்ணன் தம்பிகளின் வருமானங்களைப் பிரிக்கக் கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க..?" அறியாப் பெண் போல் இமை கொட்டினாள் மீனா..
நித்யகோகிலவாணியால் பேச முடியவில்லை..
ஆத்திரத்தில் அவளது உடல் நடுங்கியது.. அவளுக்கும் சேர்ந்து அனுபமா பேசினாள்.. ரங்கநாதன் கொலைவெறியுடன் கண்கள் சிவக்க ரௌத்ரமாக நின்றிருந்தான்.. அனுபமா சொடக்குப் போட்டு மீனாவிடம் சவால் விட்டாள்..
"போனாப் போகுது.. பெண்ணாச்சேன்னு விட்டு வைத்தா, நீ இந்த ஆட்டமா போடற..? எது உன்னை ஆட வைக்குது..? இந்த வேலைதானே..? இந்த வேலையைப் பிடுங்கிக்கிட்டு உன்னை ஊரை விட்டே ஓட வைக்கலைன்னா நான் அனுபமா இல்லைடி.. ஆப்டர் ஆல் பிழைக்க வந்தவ நீ.. இந்தப் பேச்சா பேசுகிறாய்.."
அவர்கள் போன பின்பும் காரில் ஏறாமல் அசைவந்நு நின்று விட்டாள் மீனா.. அருகில் வந்த லிங்கத்தின் மனம் துடித்தது.. அவள் பேச்சு வாங்குவதை அவரால் தடுக்க முடியவில்லையே.. பார்த்துக் கொண்டுதானே இருக்க முடிந்தது..
"மன்னிச்சுருங்க அம்மணி.." குரல் கம்மச் சொன்னார்.. அவரை நிமிர்ந்து பார்த்த மீனாவின் முகத்தில் உயிர்ப்பில்லை சோர்ந்திருந்தாள்..
"எதுக்காக மன்னிப்புக் கேட்கறிங்க..?"
"சின்ன ஜமின்தாரின் குடும்பத்து ஆளுக உங்களைப் பேசறதைப் பார்த்துக்கிட்டு இருந்தேனுங்களே.. தட்டிக் கேட்க முடியலைங்களே.."
"உங்களால் வேறு என்ன செய்திருக்க முடியும்..?"
"எங்களுக்காக பாடுபடுகிற உங்களைக் காப்பாத்த வக்கில்லாதவன் அம்மா நான்.."
"விடுங்க லிங்கம்.. காரை எடுங்க.."
"சின்ன ஜமின்தார் வேலை செய்கிறவங்களுக்கு நல்ல சம்பளம் கொடுப்பாரு.. அதையே இவங்களாலே தாங்கிக்க முடியாது.. தொழிலில் குழப்பம் பண்ணிக்கிட்டே இருப்பாங்க.. நீங்க வந்து தொழில்களைக் காப்பாத்திக் கைப்பற்றிட்டிங்க.. இந்த மலையில இருக்கிற மக்களுக்கு படிக்க பள்ளிக்கூடமும் மருத்துவம் பார்த்துக்க ஆஸ்பத்திரியும் கட்டிக் கொடுக்க வைச்சீங்க.. இம்புட்டையும் எப்படிம்மா தாங்கிக்குவாங்க..? அதான்.. இந்தப் பேச்சுப் பேசிட்டுப் போறாங்க.. என் மனசு வலிக்குதும்மா.."
மீனா சன்னமாக சிரிக்க முயன்றாள்.. முடியவில்லை.. அதைக் காட்டிக் கொள்ளாமல் காரில் ஏறி அமர்ந்து விட்டாள்.. லிங்கம் எஸ்டேட்டுக்குள் வந்ததும் கிரிக்குப் போன் போட்டு விட்டார்..
"இரும்பு மனுஷின்னு உங்களை நினைத்துக்கிட்டு இருக்கேன்.. என் தங்கை இப்படி அழலாமா..?"
"நான் மனுஷின்னா.. இரும்பு இல்ல.. எனக்கும் மனசு இருக்கு.. மான, ரோசம் இருக்கு.. சூடு, சொரணை இருக்கு.. உணர்வுகள் இருக்கு.. இவங்க அத்தனையையும் பதம் பார்க்கிறாங்க.."
"அவங்க மட்டும்தான் இந்த மலையில இருக்கிறாங்களா..? நானில்லையா..? என் ஜனங்க உங்க பக்கம் இல்லையா..?"
"சொடக்குப் போட்டுக் கூப்பிடறாங்க அண்ணா.."
"இந்த அளவுக்கு அவங்க இறங்கறாங்கன்னா, அதுக்கு உங்க மேல் அவங்களுக்கு பயம் வந்திருக்குன்னு அர்த்தம்மா.. விஷ்வா சாரின் சொத்தைக் காவல்காக்க அயர்ன் லேடி வந்தாச்சுன்னு அச்சப்படறாங்க.."
"அவங்க என்னை அச்சப்படுத்தறாங்கண்ணா.."
"லிங்கம் சொன்னார்.. விஷ்வாவின் அண்ணியென்ன ஆண்டவனா..? இந்த மலையில் நீங்க நிலைத்து நிற்பீங்க.. உங்க பக்கத்தில் யார் வர்றாங்கன்னு நானும் பார்க்கிறேன்.. எழுதி வைத்துக்கங்க.. இந்த மலையை விட்டு உங்களைப் போகவிட மாட்டேன்.. இந்த கிரி அதற்கு அனுமதிக்க மாட்டான்.."
கிரியின் கோபத்தில் மீனா ஆறுதலடைந்தாலும் வெகுநேரம் தேம்பிக் கொண்டிருந்தாள்.. கிரி மதிய உணவு நேரம் வரை அங்கேயே அமர்ந்திருந்து மீனாவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்.. மதிய உணவு நேரம் வந்தது..
"வாங்க.. சாப்பிட எங்க வீட்டுக்குப் போகலாம்.." என்று அழைத்தான்..
"நான் லன்ச் கொண்டு வந்திருக்கிறேனே அண்ணா.." மீனா மறுத்தாள்..
"அதை லிங்கத்திடம் கொடுத்துருங்க.. அம்மாவின் கைப்பக்குவத்தை ஒரு பிடி பிடிக்கட்டும்.. நாம எங்கம்மா கைப்பக்குவத்தை ஒருபிடி பிடிக்கலாம்.." கிரி இலகுவாகச் சொன்னான்.. மீனாவின் மனம் லேசானது..
"எங்கம்மா மட்டும் உங்கம்மா.. உங்கம்மா எங்கம்மா இல்லையாக்கும்..?" விளையாட்டுச் சண்டைக்குப் போனாள்..
"எங்கம்மா, நம்ம அம்மாங்க.. நான் மட்டும் உரிமை கொண்டாடினா எப்படி என் மகளை பிரிச்சுப் பேசப் போச்சுன்னு எங்கம்மா, இல்லையில்ல, நம்ம அம்மா சண்டைக்கு வந்துருவாங்க.." கிரி கைகள் இரண்டையும் மேலே தூக்கிச் சரணைந்தான்..
மீனாவுக்கு காலையில் நடந்தது மறந்து விட்டது.. அவள் கிரியுடன் சிரித்துப் பேசியபடி அவனுடைய ஜீப்பில் ஏறினாள்.. அதைப் பார்த்த லிங்கத்தின் மனம் அமைதியானது.. மீனாவின் வாடிய முகம் மலர்ந்து விட்டதில் அவனுக்கு மெத்த மகிழ்ச்சி.. மீனா நீட்டிய கேரியரை சந்தோசமாக வாங்கிக் கொண்டார்..
கிரியின் அன்னை சூடான உணவுவகைகளுடன் காத்திருந்தாள்.. மீனாவைக் கண்டதும் இரு கைகளையும் விரித்து அழைத்தாள்.. சிறு குழந்தையாக அவளது கைகளுக்குள் புகுந்து கழுத்தைக் கட்டிக் கொண்டாள் மீனா..
"மகளைக் கண்டால் மகனை மறந்துருவீங்களே.." கிரி கேலி செய்தான்..
அரட்டையும் சிரிப்புமாக மதிய உணவை முடித்து விட்டு கிளம்பினார்கள்.. வழக்கம் போல கிரியின் அம்மா மூட்டை கட்டிக் கொடுத்த பொருள்களை வாங்கிக் கொண்டு கையாட்டி விடைபெற்றாள் மீனா..
வானம் இருண்டிருந்தது.. மழை வரும் அறிகுறி தெரிந்தது.. காட்டுக்குள் ஜீப் விரைந்த போது மழை பிடித்துக் கொண்டது.. வன மலரின் குடிசை இருந்த பகுதியை ஜீப் கடக்கும் போது மீனா குடிசையிருக்கும் திசையைப் பார்த்தாள்.. அதை கிரி பார்த்து விட்டு..
"என்னங்க..?" என்று வினவினான்..
"அந்தப் பக்கம்தானே வனமலரின் குடிசையிருக்கு..?" மீனா கேட்டு விட்டாள்..
கிரியின் முகம் மாறியது..
"அம்மா சொன்னாங்களா..?" என்று கேட்டான்..
"அவங்களும் சொன்னாங்க.. நானும் சாரும் ஒரு தடவை மழையில் மாட்டிக்கிட்டப்ப அந்தக் குடிசையில் கொஞ்ச நேரம் நின்றிருந்தோம்.."
கிரியின் முகம் பார்க்காமல் சொன்னாள் மீனா.. அந்த மழை நாளின் மணித்துளிகள் அவள் மனதில் வலம் வந்தன.. கூடவே அனுபமாவின் சொடக்கு ஒலியும் கேட்டது.. இரண்டில் எது நிலைக்கப் போகிறது..? மழைநாளின் மணித்துளிகளா..? சொடக்கு ஒலியா..?




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -48
பொதிகையிலே பூத்தவளே -48
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-48.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-48.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy