பொதிகையிலே பூத்தவளே -47

47 விஷ்வாவின் தோளில் தொற்றிக் கொண்டிருப்பது மேகிதான் என்பதில் மீனாவுக்குக் கடுகளவும் சந்தேக மில்லை.. விஷ்வா அன்று கோயம்பத்தூருக்குத்த...


47

விஷ்வாவின் தோளில் தொற்றிக் கொண்டிருப்பது மேகிதான் என்பதில் மீனாவுக்குக் கடுகளவும் சந்தேக மில்லை.. விஷ்வா அன்று கோயம்பத்தூருக்குத்தான் போயிருந்தான்.. முக்கியமான வேலையென்று சொல்லியிருந்தான்.. அதில் மீனாவின் மனம் சிணுங்கியிருந்தது.. இன்னும் நான்கு தினங்களில் அவன் வெளிநாட்டிற்குக் கிளம்பி விடுவான்.. திரும்பி வர எத்தனை மாதங்களாகுமோ.. இரண்டு மாதங்களில் திரும்பி விடுவதாக அவன் சொல்லியிருந்தாலும் நிச்சயமாக நம்பிவிட முடியுமா..? அதெல்லாம் நீர் மேல் எழுதும் எழுத்துக்களைப் போன்றவைதானே.. அப்படியிருக்கும் போது கானாடுகிரியில் இருக்கும் தினங்களை மீனாவின் அருகில் கழித்தால்தான் என்ன..?
'மேகி கோயம்புத்தூருக்கு வந்திருக்கிறப்ப என் பக்கத்தில் அவன் எப்படியிருப்பான்..?'
மனதின் ஏக்கத்தில் திடுக்கிட்டாள் மீனா.. என்ன இது..? அவள் ஏன் இப்படியெல்லாம் நினைக்கிறாள்..?
"சார்.. உங்க தம்பி யாருடன் பழகினால் எனக்கு என்ன..? அது அவரின் சொந்த விசயம்.. நான் அவர் அப்பாயிண்ட் பண்ணியிருக்கும் சீனியர் மேனேஜர்.. அவர் எனக்கு சம்பளம் கொடுக்கிற முதலாளி.. என் வேலையை நான் பார்க்கிறேன்.. அதற்கான சம்பளத்தை அவர் கொடுக்கிறார்.. தட்ஸ் ஆல்.. வழியை விடறிங்களா..?"
ரங்கநாதன் காட்டிய புகைப்படத்தைப் பொருட் படுத்தாததைப் போலத் தோள்களைக் குலுக்கினாள் மீனா.. அவளின் அலட்சியத்தில் ரங்கநாதனின் முகம் ஜிவுஜிவுத்தது..
"ஏய்ய்.. நீ யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய்ன்னு நினைவில் இருக்கிறதா..?" விரல் நீட்டி எச்சரித்தான்..
"ஒரு பெண்ணிடம் மரியாதையில்லாமல் விரல் நீட்டி 'ஏய்ய்..' ன்னு பேசும் பண்பில்லாத மனிதரிடம் பேசிக் கொண்டிருக்கும் நினைவிருக்கு சார்.."
மீனா பதிலடி கொடுத்தாள்.. ரங்கநாதன் வெகுண்டான்.. அவனுக்கிருக்கும் கோபத்தில் கட்டாயம் அவன் கை நீட்டிவிடுவான் என்றுதான் மீனா நினைத்தாள்.. அக்கம் பக்கம் யாருமில்லை.. லிங்கம் கானாடுகிரியைச் சேர்ந்தவர்.. பெரிய ஜமீன்தாரைத் தட்டிக் கேட்பாரா..? இப்போதே தள்ளி நின்றிருக்கிறார்.. அதிகப்படியாக அவரால் செய்ய முடிந்ததெல்லாம் 'வேண்டாங்க ஐயா..' என்று கெஞ்சுவதுதான்.. ரங்கநாதனைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது.. மீனா எச்சரிக்கையுடன் யோசித்தாள்..
அவள் காரின் பின்சீட்டில் இருந்தாள்.. ரங்கநாதன் கைநீட்ட வேண்டுமென்றால் கார்க் கதவைத் திறக்க வேண்டும்.. அப்படி அவன் முயற்சி செய்தால் மீனா நகர்ந்து மறுபக்கக் கதவைத் திறந்து இறங்கி டிரைவர் சீட்டின் கதவைத் திறந்து காரில் ஏறி உட்கார்ந்து விட வேண்டும்.. அப்படி அவள் செய்து விட்டால், கார் அவளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும்.. கண்ணாடிகளை ஏற்றிக் கார்க் கதவுகளை லாக் செய்து விடலாம்.. ரங்கநாதனால் எதுவும் செய்ய முடியாது.. அதையும் மீறி அவன் கண்ணாடி கதவுகளை உடைக்க முற்பட்டால் காரைக் கிளப்பிப் பறந்து விட வேண்டியதுதான்..
மீனா நகர்வதற்குத் தோதாக எச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருந்தாள்.. இதோ.. ரங்கநாதன் கார்க் கதவை திறக்கப் போகிறான் என்று அவள் நினைத்ததை உண்மையாக்குவதைப் போல அவன் கார்க்கதவில் கை வைத்து விட்டான்.. மீனா மின்னலென மறுபக்கம் தாவ ஆயத்தமான போது..
"ரங்கா.." என்ற அதட்டல் கேட்டது..
பெண்குரலாக இருக்கவும், யார் இப்படி ரங்கநாதனைப் பெயர் சொல்லி அழைப்பது என்று வியப்புடன் மீனா ரங்கநாதனின் காரைப் பார்த்தாள்.. காரிலிருந்து நித்ய கோகில வாணியும், அனுபமாவும் இறங்கினார்கள்..
"வேண்டாம் ரங்கா.." நித்ய கோகிலவாணி மகனைத் தடுத்தாள்..
"அத்தை.. உங்கள் பெரிய மகனைப் பற்றி உங்களுக்குத் தெரியும்.. இந்த கானாடுகிரியில் நம்ம
ஜமீன் வம்சம் பெருமையைக் கட்டிக் காப்பாத்திக் கொண்டிருப்பது உங்க பெரிய மகன் மட்டும்தான்.. அவர் நினைத்தால் உல்லாசமாக உலகம் சுற்றியிருக்கலாம்.. செய்யவில்லையே.. அரண்மனையின் கௌரவத்தைக் காப்பாற்றனும்.. பெற்றவர்களுடன் துணையா இருக்கனும்.. தங்கைக்கான கடமையைச் செய்யனும்னு இங்கேயே தேங்கி நிற்கும் உத்தமர் இவர்.. உங்க பெரிய மகன் இல்லைன்னா நம்ம வம்சப் பெருமை என்னாகும்ன்னு யோசித்துப் பாருங்க அத்தை.."
அனுபமா அடுக்கிய விதத்தில் மீனா அயர்ந்து போனாள்.. இப்படிப்பட்ட உபதேசத்தைத் தினமும் கேட்டால் எப்பேற்பட்ட அறிவாளியின் மனமும் தடுமாறி விடுமே..
'இந்த லேடி எவ்வளவு கெட்டிக்காரித்தனமா பேசறாங்க.. விஷ்வாவை ஊர் சுற்றின்னு பட்டம் கட்டறாங்க.. இவங்க புருசனை உத்தமர்ன்னு சொல்கிறாங்க..'
மீனாவினால் தாள முடியவில்லை.. ரங்கநாதனை அவனது மனைவி எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்.. அதில் மீனாவுக்கு யாதொரு ஆட்சேபனையும் இல்லை.. ஆனால் விஷ்வாவை எப்படி அவள் உல்லாசமாக ஊர் சுற்றுகிறவன் என்று சொல்லலாம்..?
"சின்ன ஜமின்தார் உல்லாசமா ஊர் சுற்றலை மேம்.. காரணத்தோடுதான் ஊர் சுற்றுகிறார்.. இந்தியாவில் இருக்கிற ஒவ்வொரு மெகா சிட்டியிலும் அவரோட பிஸினெஸ் இருக்கு.. உலகம் முழுவதும் பிரான்சஸ் இருக்கு.. அதைப் பார்க்க சார் போய்த்தான் ஆகனும்.. எதுவும் செய்யாம கையைக் கட்டிக்கிட்டு பரம்பரைச் சொத்தில் உட்கார்ந்து சாப்பிடறவங்களால மட்டும்தான் இருக்கும் இடத்தை விட்டு நகராம இருக்க முடியும்.. எங்க பாஸ் அப்படியில்லை.. திரைகடல் தாண்டித் திரவியம் தேடி ஓடுகிறவர்.."
மீனாவின் பேச்சு நயத்தில் நித்யகோகில வாணி வியப்புடன் அவளைப் பார்த்தாள்.. அதை அனுபமாவினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. அவள்..
"பார்த்தீங்களா அத்தை.." என்று கோபப்பட்டாள்..
மீனாவைப் பார்த்துக் கொண்டிருந்த நித்யகோகிலவாணி மருமகள் அதைத்தான் சொல்கிறாளோ என்ற சம்சயத்துடன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.
"என்ன அனு..?" என்று பிரியத்துடன் மருமகளிடம் கேள்வியும் கேட்டாள்..
"அங்கே சொன்னால் இங்கே எரியுது.. யாருக்கு யார் சப்போர்ட் பண்றது.. கானாடுகிரி ஜமின்வம்சம், நம் வம்சம் அத்தை.."
இவள் இதையே எத்தனைதரம் சொல்வாள் என்று மீனாவுக்கு அலுப்பாக இருந்தது..
வம்சப் பெருமை பேசுவதற்கும் ஓர் அளவுகோல் வேண்டாமா..? எதற்கெடுத்தாலும் 'எங்க வம்சம்' என்று ரம்பம் போட்டால் கேட்கிறவர்களின் காதுகளில் குருதி கொட்டி விடாதா..?
நித்யகோகிலவாணிக்கு அப்படியெல்லாம் அலுப்பிருப்பதைப் போலத் தெரியவில்லை.. மருமகள் அப்படிப் பெருமை பேசுவதை விரும்புவதைப் போல தெரிந்தாள்.. அனுபமாவின் முகம் விகசிக்கத் தலையை ஆட்டி அதை ஆமோதித்தாள்..
'போச்சுடா..' மீனா அலுப்பை முகத்தில் காட்டி விடாமல் இருக்க அரும்பாடு பட்டாள்..
'விஷ்வாவோட அம்மாவுக்கு வம்சப் பெருமையைப் பேசினா பிடிக்கும் போல.. அதைச் சொல்லிச் சொல்லியே இந்த அனுபமா மாமியாரைத் தன் கண்ட்ரோலில வைத்திருக்கு பாரேன்..'
மீனாவின் நினைவை மெய்ப்பிக்க ஆரம்பித்தாள் அனுபமா..
"இப்பேற்பட்ட கானாடுகிரி ஜமீன் வம்சத்தைக் கட்டிக் காப்பாத்தறவங்க, வம்சத்தோட புகழை மட்டும்தான் நினைக்கனும்.. அதை அதிகப்படுத்தத்தான் பார்க்கனும்.. சுயநலமா.. தான், தன்னோட பெருமைன்னு இருக்கிறவங்க தான் ஊர், ஊரா சுற்றி பிஸினெஸ் ஆரம்பிப்பாங்க.. உலகம் சுற்றுவாங்க.. பரம்பரைப் பெருமையைக் கட்டிக் காப்பாத்தறவங்க பரம்பரைச் சொத்தைக் காவல் பண்ணிக்கிட்டு, அது குறையாம பார்த்துக்கிட்டு இருக்கிற இடத்தில்தான் இருப்பாங்க.. அதுதான் பொதுநலம்.. வம்சத்தின் பெருமையைக் கட்டிக் காப்பாத்தத் தன் பெருமையை அதிகப் படுத்திக்காத தியாகம்.."
அனுபமா போட்ட போட்டில் மீனா அயர்ந்து நின்று விட்டாள்..
'பார்றா.. இந்த லேடி இந்தப் போடு போடுது.. எந்தப்பக்கம் பந்தை வீசினாலும் அடிச்சுத் திருப்பி அதகளம் பண்ணுதே.. டேன்ஜரான லேடிதான்..'
"உங்க சின்ன மகனுக்கு என்ன அத்தை.. அவரோட புகழ் பாடினா இருக்கிற சொத்தையெல்லாம் தாரை வார்த்துக் கொடுத்துருவாரு.. ஸ்கூலாம், ஹாஸ்பிடலாம் யார் வீட்டுப் பணம்..?" அனுபமா வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளாத குறையாக கொந்தளிக்க..
"அது சின்ன ஜமீன்தாரோட பணம்.." என்று வெடுக்கென்று பதிலடி கொடுத்தாள் மீனா..
அனுபமாவின் பார்வை அர்த்தத்துடன் நித்ய கோகிலவாணியைப் பார்த்தது.. நித்ய கோகிலவாணியின் முகம் கடுகடுவென ஆனது..
"கேட்டிங்களா அத்தை.. கானாடுகிரி ஜமீன் அரண்மனைப் பணம் யார், யாருக்கானதுன்னு எங்கிருந்தோ வேலை பார்க்க வந்த ஒருத்தி பிரிச்சுப் பேசறா.. சின்ன ஜமீன்தாரோட பணமாம்.. அந்த சின்ன ஜமீன்தார் யார் அத்தை..? வானத்தில் இருந்து நேராக் குதிச்சுப் பூமிக்கு வந்து தானா வளர்ந்து நிற்கிறவரா..? உங்களுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா..? இதோ நிற்கிறாரே உங்க பெரிய மகன்.. இவருக்கும் சின்ன ஜமீன்தாருக்கும் எந்த ஒட்டும் உறவும் இல்லையா..? உங்க அண்ணன் மகள்ன்னு என்னை கானாடுகிரி ஜமீன் அரண்மனைக்கு மருமகளாகக் கொண்டு வந்திருகிறீங்களே.. எனக்கும் சின்ன ஜமின்தாருக்கும் இடையே எந்த சொந்த பந்தமும் இல்லையா..?"
அனுபமா கேள்விகளை அடுக்கிய விதத்தில் மீனாவுக்குத் தான்தான் குற்றவாளி என்று தோன்ற ஆரம்பித்து விட்டது.. நித்யகோகிலவாணியோ, அவளது குடும்பத்தைப் பிரிக்க வந்த கோடாரி மீனா என்பதைப் போல துவேசமாக பார்க்க ஆரம்பித்து விட்டாள்..
'ஆஹா.. இந்த லேடி மட்டும் அரசியல் கட்சி ஆரம்பிச்சா மொத்த நாட்டையும் சுருட்டி வாய்க்குள் போட்டு மென்னு துப்பிரும் போல இருக்கே..'
நல்லவேளையாக அனுபமா கானாடுகிரி ஜமீன் வம்சத்தின் ஜமின்தாரிணி என்ற பெருமையை மட்டும் பிடித்துக் கொண்டு தொங்கியதால் நாடு தப்பித்தது..
"இவளோட சின்ன ஜமின்தாரர் இவளுக்கு முதலாளியாக வருகிறதுக்கு முன்னாடியே உங்க வயித்தில சுமந்து பெத்த பிள்ளையாகிட்டார்.. அதனால உங்க மூத்த மகனுக்குத் தம்பியாகிட்டார்.. எனக்குக் கொழுந்தன் ஆகிட்டார்.. அவரோட பணம் நம்ம வீட்டுப் பணமில்லையாம்.. இவளோட பணமாம்.. எங்கிருந்தோ வந்தவ, எங்கே வந்து நிற்கிறான்னு பார்த்தீங்களா..?"
தான் எங்கே நிற்கிறோம் என்று பார்த்தாள் மீனா.. எஸ்டேட்டுக்குப் போகும் மலைபாதையில் நின்றிருந்தாள்.. ஒருபக்கம் கிடுகிடு பள்ளத்தாக்கு.. மறுபக்கம் தேயிலைச் செடிகளுடன் கூடிய மேடு..
'நல்ல இடத்தில நிப்பாட்டி வைத்து வம்பிழுக்கிறா..'
"இவ வந்த பின்னால்தான் உங்க சின்னமகன் தறிகெட்டு அலைகிறார் அத்தை.. அதற்கு முன்னாலாவது உங்க பெரிய மகனால் ஏதாவது செய்து தொழில்களைக் கட்டிக் காப்பாத்த முடிஞ்சது.. இப்ப அதுவும் முடியலை.."
"அதானே உங்க கோபம்..?"
மீனா நேருக்கு நேராகக் கேட்டு விட உக்கிரமானாள்.. அனுபமா.. அவள் பேச வாய் திறப்புதற்குள்..
"வாயை மூடு.." என்று நித்யகோகிலவாணி உக்கிரமானாள்..
அவளது சீற்றத்துக்கு மீனா அஞ்சவில்லை என்றாலும் பேசுவது விஷ்வாவின் தாயார் என்பதினால் எதிர்த்துப் பேச முடியவில்லை.. அமைதியானாள்..
"இது எங்க குடும்ப விவகாரம்.. நீ அனுபமா சொல்வதைப் போல எங்கிருந்தோ வந்தவள்.. எங்க  வீட்டு விவகாரங்களில் நீ மூக்கை நுழைக்காதே.. விஷ்வாவுக்குத் தவறான வழிகளைக் காட்டிக் கொண்டிருக்கிறாய்.. புகழுக்காக அவனும் பணத்தை அள்ளியிறைத்துக் கொண்டிருக்கிறான்.. பள்ளிக்கூடமும், ஆஸ்பத்திரியும் கட்டி கொடுக்க கவர்ண்மென்ட் இருக்கிறது.. இவன் ஏன் கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுக்க வேண்டும்..? இது போதாது என்று அவைகளை நிர்வகிக்க டிரஸ்ட் வேறு.. யார் வீட்டுப் பணத்தை யார் கொள்ளையடிப்பது..? முதலாளியாகப் பிறந்தவன் முதலாளியாகத்தான் இருக்க வேண்டும்.. தொழிலாளிகளின் துயர் துடைக்கிறேன் என்று பணத்தைத் தொலைக்கக் கூடாது.."
நித்யகோகிலவாணி அக்னிப் பிழம்பாக சீறினாள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,7,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,90,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,25,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,7,எண்ணியிருந்தது ஈடேற,230,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,21,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,6,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -47
பொதிகையிலே பூத்தவளே -47
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-47.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-47.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy