பொதிகையிலே பூத்தவளே -51

51 கள் தரும் போதையைவிட காதலியின் முத்தங்கள் தரும் போதை அதிகமானது.. அதனால்தான் உமர்கயாம் ' ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு      ...


51
கள் தரும் போதையைவிட காதலியின் முத்தங்கள் தரும் போதை அதிகமானது.. அதனால்தான் உமர்கயாம்
'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
             ஒரு கோலமயில் என் துணையிருப்பு..'
என்று பாடி வைத்தான்..
விஷ்வா அவனை வளைத்த காதலியின் கரங்களை இழுத்துத் தன்னுடன் சேர்த்துக் கொண்டான்.. காற்றுக்கூட ஊடே வர முடியாமல் அவனுடன் பிணைந்து கொண்டாள் மீனா.. அவனுடைய முதுகில் படர்ந்த அவளது கரங்களின்  அழுத்தத்தில் அவன்மீதான அவளது ஆவேசத் தேடலை உணர்ந்தான் விஷ்வா.. அவனது கரங்கள் அவளது முடிகோதி.. கிழிறங்கித் தோள்களை வருடி இடையில் பதிந்து இழுத்து அணைத்தன..
"விஷ்வா.."
அவளது முணுமுணுப்பில் அவன் கிறங்கிப் போனான்..
"சொல்லுடி.."
"ஐ லவ் யு விஷ்வா.."
"ஐ லவ் யு டூ மீனா.."
"எனக்கு நீங்க வேணும்.."
"எப்பவோ நான் என்னைக் கொடுத்துட்டேனே.. எடுத்துக்க.."
"இல்லை விஷ்வா.. என் மனசு பதறுது.. நீங்க எனக்குக் கிடைக்க மாட்டிங்கன்னு மனசு சொல்லுது.."
அவளது உடலின் நடுக்கத்தில் விஷ்வா அவளைத் தழுவிக் கன்னத்தோடு கன்னம் வைத்தான்.
"முட்டாள்.. காதல்ன்னு இருந்தா எதிர்ப்பு வரத்தான் செய்யும்.. அண்ணனும் அண்ணியும் சொல்வதையெல்லாம் நம்பி பயப்படனுமா..?"
"கூடவே உங்க அம்மாவும் சொன்னாங்களே விஷ்வா.."
"அம்மா அண்ணன், அண்ணியின் கண்ட்ரோலில் இருக்காங்க.. அப்பா நான் சொன்னாக் கேட்டுக்குவார்.. ரூபிணி நம்ம பக்கம்தான்.. அத்தோடு மீனா.. நீ ஒன்றை நினைவில் வைத்துக்கனும்.. என் மேரேஜீக்கு அவங்க சம்மதம் தேவையில்லை.."
"என் அப்பாம்மாவுக்கு உங்க அப்பாம்மாவோட சம்மதம் தேவைப்படும் விஷ்வா.."
"ஐ நோ.. என் ஃ பேமிலியைக் கன்வின்ஸ் பண்ணப் பார்க்கிறேன்.. முடியலைன்னா நாம் இரண்டு ஃபேமிலிக்கும் தெரியாமல் மேரேஜ் பண்ணிக்க வேண்டியதுதான்.. நோ அதர் வே மீனா.. உனக்காக நான் என் ஃபேமிலியை கன்சிடர் பண்ணாமல் மேரேஜீக்குத் தயாராகிறப்ப, எனக்காக நீயும் என் பின்னால் வந்துதான் ஆகனும்.."
'அதை நீ சொல்லனுமா..?' மீனா அவன் மார்பில் முகம் புதைத்தாள்..
இப்போதே அவன் பின்னால்தானே அவளது மனம் அலைகிறது..? முப்பொழுதும் அவன் நினைவுகள் தானே..
"தேங்கஸ்.."
"எதுக்குடி..?"
"மோகனாவை ஸ்கூலில் ரிசீவ் பண்ணி வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்ததுக்கு.."
"அடிதான் வாங்கப் போற.. மோகனா யாருடி.. உன் தங்கை.. அவளுக்கு நான் கார்டியன்.. இதுக்கு தேங்க்ஸ் சொல்லுவியா..?"
"இருந்தாலும்.."
"குளோஸ் யுவர் மவுத்.."
"அதில்லை விஷ்வா.."
"இப்ப நீ வாயை மூட மாட்ட..?"
அவளாக வாயை மூட மாட்டாள் என்று அவளது வாயோடு வாய் வைத்து மூடினான் விஷ்வா.. அந்த நொடிகளின் அமிர்தத்தில் அமிழ்ந்து போனாள் மீனா.. அனைத்தும் மறந்து போக அவனது ஆலிங்கனம் மட்டுமே  நினைவில் நின்றது.. அவன் வெளிநாட்டிற்குக்
கிளம்பப் போகிறான் என்பதில் அவளது நெருக்கம் அதிகரித்தது..
விஷ்வாவுக்கு அலைபாயும் அவளது மனம் புரிந்தது.. அன்புடன் அவளது முடிகோதினான்.. அவனது ஜெர்கினுக்குள் புகுந்திருந்தவளை ஆறுதல் படுத்துவதைப் போல முதுகை வருடிக் கொடுத்தான்..
"மீனா.."
"ம்ம்ம்.."
"இது உன் வீடு.."
"உங்கள் அரண்மனை வேறுன்னு சொல்றீங்களா..?"
விசும்பலுடன் மீனா கேட்க அவளது முகத்தை நிமிர்த்திக் கண்ணீர்த் துளிகளை துடைத்து விட்டபடி அதட்டினான் விஷ்வா..
"நான் எதைச் சொல்ல வந்தேன்னு உனக்குத் தெரியுமா..?"
"இது நீங்க குடுத்திருக்கும் குவார்ட்டர்ஸ்ன்னு சொல்லியிருந்தாக்கூட நல்லாயிருந்திருக்குமே.. உன் வீடுன்னு பிரிச்சுப் பேசினீங்களே.."
"நாம் இந்த வீட்டின் தோட்டத்தில் நிற்கிறோம்.. சரியாச் சொல்லியிருக்கேனா..?"
அவன் தேர்வை எழுதிவிட்டு முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாணவனைப் போலக் கேட்டதில் அவளுக்குக் சிரிப்பு வந்தது.. கண்ணீர் நின்று விட்டது.
"கிரேட்.." நிம்மதிப் பெருமூச்சு விட்டான் விஷ்வா..
"ரொம்பத்தான் பண்ணாதீங்க.." செல்லமாக அவன் மார்பில் குத்தினாள் மீனா..
"அப்படி என்னடி பண்ணிட்டேன்..?" இருபொருள்பட விசமத்துடன் அவளது காதோரம் அவன் முணுமுணுத்ததில்..
"ச்சீய்.." என்ற வெட்கச் சிணுங்கலுடன் அவன் மார்பில் முகம் புதைத்தாள் மீனா..
அதுதான் சாக்கென அவள் அட்டைபோல ஒட்டிக் கொண்டதில் விஷ்வா இளகினான்.. அவனை விட்டுப் பிரிய அவள் மனம் மறுக்கிறது என்ற உண்மையில் அவன் மனதில் பிரியம் பொங்கியது.. மனம் தளும்பியது.. மற்ற நேரமாக இருந்தால், தன் வீட்டுத் தோட்டத்தில் நின்று இப்படி விஷ்வாவுடன் ஒட்டி உறவாடுபவளல்ல மீனா.. அதுவும் ஹாலில் மூர்த்தியும் புனிதாவும் இருக்கிறார்கள்.. சமையலறையில் பூவாயி இருக்கிறாள்.. எந்த வினாடியிலும் அவர்களில் ஒருவர் கதவைத்திறந்து வந்து விடலாம் என்ற நெருக்கடியான நிலையில் அவசர முத்தங்களுடன், ஆழமான அணைப்புகளுடனும் பிரியாமல, அவற்றைத் தொடருகிறாள் என்றால்  எந்த அளவுக்கு அவள் அவனுக்காக ஏங்கியிருக்க வேண்டும்..
"உன் அப்பாம்மா, பூவாயின்னு யாராவது வந்து விடலாம் மீனா.." விஷ்வா அறிவுறுத்தினான்..
மீனா உடல் தூக்கிப் போடப் பிரிந்து நின்றாள்.. அதைப்பற்றி அவள் யோசிக்கவே இல்லையென்பதில் அவள் மீதான விஷ்வாவின் காதல் அதிகரித்தது.. சுற்றுப் புறத்தை மறந்து, அவனை மட்டும் நினைத்திருக்கும் காதலியின் காதலில் கட்டுண்டான் விஷ்வா.. அவனுக்கான அவளது தேடலில் மனம் நிறைந்தது.
இருவரும் தோட்டத்தை விட்டு வெளியே வந்து காருக்குப் பக்கத்தில் சென்றார்கள்.. விஷ்வா கார்க் கதவைத் திறந்தபடி மீனாவைப் பார்த்தான்.. அவளது விழிகளில் தெரிந்த கலக்கம் அவனை பாதித்தது..
"உன்னை முதன் முதலாப் பார்த்தப்ப அஞ்சாம நேர் கொண்ட பார்வை பார்த்தியே.. அந்த மீனா எங்கே போனா..?"
"அப்படியேதான் இருக்கிறா.. இப்பவும் அறிமுகமில்லாத மூணாம் மனுசங்களை அந்தப் பார்வைதான் பார்க்கிறா.."
தலையைச் சாய்த்துப் பதில் சொன்னவளின் கன்னத்தில் தட்டிவிட்டு..
"குட்.." என்றபடி காரில் ஏறினான் விஷ்வா..
அவன் சென்றதும் கேட்டை மூடிவிட்டு வீட்டுக்குள் வந்தவளின் மனதில் அமைதி தொலைந்திருந்தது.. இனி அவனைப் பார்க்க அவள் காத்திருக்க வேண்டும்..
வெளிநாட்டுக்குப் பறப்பவன் திரும்பிவர எத்தனை மாதங்களாகுமோ.. அவனில்லாத கானாடுகிரி அவளுக்கு மட்டும் தகிக்கும் என்பதை அவன் அறிவானா..?
தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்த புனிதாவும் மூர்த்தியும் உள்ளே வந்த மகளைப் பார்த்ததும் பேச்சை நிறுத்தி விட்டார்கள்.. என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று மீனா கேட்கவில்லை.. இப்போது என்று இல்லை.. எப்போதுமே மீனா அப்படிக் கேட்க மாட்டாள்.. தாய், தந்தையாக இருந்தாலும் அவர்கள் கணவன் மனைவி.. அவர்களுக்குள் பேசிக் கொள்ள ஆயிரம் இருக்கும் என்று தலையிடாமல் விலகி நிற்பாள்..
"முதலாளி போயிட்டாரா மீனா.." புனிதா கேட்டாள்..
"போயிட்டாரும்மா.. அனேகமா நாளைக்கோ இல்லை மறுநாளோ ஃபாரின் கிளம்பிருவார்.." மீனா சோர்வுடன் பதில் சொல்லிவிட்டு அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்தாள்..
"வேலையெல்லாம் முடிஞ்சிருச்சும்மா.." பூவாயி வந்தாள்..
அவளை அனுப்பி வைத்துவிட்டு வந்தாள் புனிதா.. மூர்த்தி ஆழ்ந்த சிந்தனையுடன் இருந்தார்.. புனிதாவும் கவலையுடன் தெரிந்தாள்..
"என்னம்மா..? அப்பா ஏன் என்னவோ போல இருக்காரு..? உடம்பு சரியாத்தானே இருக்கு..?"
மகளின் பதட்டத்தில் மூர்த்தி வாத்சல்யத்துடன் புன்னகைத்தாள்.. மீனாவின் தலையைத் தடவிக் கொடுத்தார்..
"எனக்கு ஒன்னுமில்லைம்மா.. இந்த வாரம் டாக்டர் செக் பண்ணினப்பக்கூட நான் முழு ஆரோக்கியத்தோட இருக்கேன்னுதானே சொல்லியிருக்காரு.."
"ஆமாமில்ல.." மீனா நிம்மதியானாள்..
"அப்பா வேறு ஒன்னைச் சொல்கிறாரு மீனா.." புனிதா தயக்கத்துடன் சொன்னாள்..
"வேறு ஒன்னுன்னா..? புரியலையே.."
"மோகனா வயதுக்கு வந்துட்டா.."
"அதுக்கு என்ன..?"
"வயதுப் பெண்களை வைத்துக்கிட்டு அறியாத ஊரில் இருக்கனுமான்னு கேட்கிறார்.. மதுரைக்குப் போயிட்டா நம் வீட்டுத் திண்ணையை மளிகைக்கடையாக் கட்டிக்கிட்டு கடையில உட்கார்ந்துரலாமேன்னு நினைக்கிறாரு.. எனக்கும் அப்பா சொல்கிறது சரின்னுதான் படுது.."
'என்னது..?' அரண்டு போனாள் மீனா..
கானாடுகிரியை விட்டு நகரும் நினைவே அவளுக்கு  இல்லை... மதுரையை மறந்து விட்டாள்.. விஷ்வாவும் அவன் சார்ந்த மலையும் மட்டுமே அவளது நினைவில் நின்றது.. இப்போதுதான் கானாடுகிரியில் இருக்கும் அவனுடைய தொழிலகளை முறைப்படுத்திக் கைப்பற்றியிருக்கிறாள்.. வினோத்தை வேலையை விட்டு அனுப்பி விட்டாள்.. அவனுக்கு ரங்கநாதன் அடைக்கலம் கொடுத்து வைத்திருந்ததால் வழியீல் எதிர்படுவான்.. உக்கிரமாய் அவன் பார்க்க, உதாசீனமாய் மீனா பார்த்து விட்டுக் கடந்து விடுவாள்.. மலைவாழ் மக்களுக்காக பள்ளிக்கூடம், மருத்துவமனை, அவற்றை பராமரிக்க டிரஸ்ட் என்று விஷ்வாக்கு எடுத்துச் சொல்லிச் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறாள்..
இவை அனைத்தையும் அம்போ என விட்டுவிட்டு அவள் மதுரைக்குச் சென்று விடுவதா..? விஷ்வாவை மறந்து ஓர் அடி எடுத்து வைக்கக்கூட அவளால் முடியாது என்பதை அவளது குடும்பம் அறியுமா..?
"என்னம்மா இப்படிப் பேசறிங்க.. நாம் இங்கே வாழும் வாழ்க்கைக்கு செட் ஆகிட்டோம்.. என் பொறுப்பில் விஷ்வா சாரின் கம்பெனிகள் இருக்கு.. அப்பாவுக்கு இங்கே நல்ல ட்ரீட்மெண்ட், இயற்கைக் காத்து, குளிர்ச்சியான சூழல்ன்னு கிடைக்குது.. மோகனா கான்வெண்டில் படிக்கிறா.. வசதியான வீடு, கார், டிரைவர், வேலையாள், மதிப்பான வாழ்க்கைன்னு அத்தனையையும் விட்டு விட்டுக் கிளம்பச் சொல்கிறீங்களா..?"
மீனா கேட்ட கேள்வியில் இருந்த நியாயத்தில் பதில் சொல்ல முடியாமல் மௌனமானாள் புனிதா.. அவள் மனதிலும் இந்த எண்ணங்கள் இருந்தனதான்.. கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தபின்பு பழையபடி பழைய வாழ்க்கைக்குத் திரும்ப மனம் மறுத்து சண்டித்தனம் செய்ததுதான்.. ஆனால் மூர்த்தி சொல்வதிலும் ஓர் அர்த்தம் இருப்பதைப் போலத் தோன்றுகிறதே..
"நீ சொல்கிறதெல்லாம் உண்மைதான் மீனா.. உன் அம்மாவும் இதைச்சொன்னா.. நான் உன் அப்பா.. வசதியான வாழ்க்கை கிடைச்சிருக்கு என்கிறதுக்காக உன் எதிர்காலத்தை நினைத்துப் பார்க்காமல் உன் உழைப்பில் உட்கார்ந்து சாப்பிட என்னால் முடியாது.. மோகனா வயதுக்கு வந்திட்டா.. உனக்குக் கல்யாண வயசு வந்திருச்சு.. நம்ம ஊர்ப்பக்கம் போனாத்தான் உனக்கான மாப்பிள்ளையை நான் தேட ஆரம்பிக்க முடியும்.. மோகனாவின் படிப்புக்கு என்னம்மா மதுரையில் கான்வெண்ட் இல்லையா..? சொந்த வீடு.. உன் சம்பளத்தில் புனிதா சேர்த்து வைத்திருக்கும் பணமிருக்கு.. நம்ம ஊருக்குப் போயிரலாம்மா.."
மீனாவுக்குத் திகில் பிடித்துக் கொண்டது.. எப்படி மூர்த்தியை சமாதானப் படுத்துவது என்று தெரியாமல்..
"இப்போதைக்கு இதைப்பத்தி நாம் பேச வேண்டாம் அப்பா.. விஷ்வா சார்.. ஃபாரினிலிருந்து வந்தவுடன் அவரிடம் உங்க மனசைச் சொல்றேன்.. முறையா அவரிடம் அவருடைய பிஸினெஸ்ஸை ஒப்படைச்சுட்டுக் கிளம்புவதுதான் அவருக்கு நாம செய்கிற நன்றிக்கடனா இருக்கும்.." என்று சொல்லி வைத்தாள்..
மறுபேச்சில்லாமல் அதை மூர்த்தி ஏற்றுக் கொண்டதில் அப்போதைக்கு அவளது மனம் அமைதியடைந்தது..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -51
பொதிகையிலே பூத்தவளே -51
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaaiyilepooththavale-51.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaaiyilepooththavale-51.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy