மழைச்சாரலாய் மனம் நனைத்தாய். -33

33 ஆத்மாவின் அறைகூவலில் சக்திவேலின் மனம் நிம்மதியானது.. அவரிடமே சவால் விடும் அவன் தைரியத்தை அவர் மனதுக்குள் மெச்சிக் கொண்டார்.. அவரின...


33

ஆத்மாவின் அறைகூவலில் சக்திவேலின் மனம் நிம்மதியானது.. அவரிடமே சவால் விடும் அவன் தைரியத்தை அவர் மனதுக்குள் மெச்சிக் கொண்டார்.. அவரின் மீசைதுடித்தது.. நெஞ்சம் நிமிர்ந்தது...
'இந்த சக்திவேலுக்கு ஏத்த மருமகன்...'
சாருலதா சோர்வாகப் படுத்திருந்தாள்.. கண் திறக்க நினைத்தும் முடியாமல் அவள் இமைகள் பாறைகளைப் போல கனத்தன.. யாராவது வந்து அவளைத் தட்டி எழுப்பி விட மாட்டார்களா என்று ஏங்கினாள்.. கனவில் கேட்பதைப் போல அவளைச் சுற்றிக் குரல்கள் சூழ்ந்திருந்தன.. அதை யார் பேசுகிறார்கள் என்று கூடக் கேட்க முடியாமல் ஆழ்நிலைத் தூக்கத்தில் அவள் அமிழ்ந்து கொண்டிருந்தாள்..
அவள் நெற்றியில் வலிமையான விரல்கள் படிந்து வருடின.. அதன் ஸ்பரிசத்தை அவளது ஆழ்மனம் உணர்ந்து கொண்டது...
'இது.. இந்தத் தொடுகை.. இது ஆத்மாவாச்சே..'
சட்டென்று அவளை பாரமாய் அழுத்திக் கொண்டிருந்த தூக்கத்தை மீறிக்கொண்டு அவள் கண் விழித்தாள்.. ஆத்மாவை அவள்கண்கள் தேடின...
அவளுடைய ஆத்மா அவளருகே அமர்ந்திருந்தான்.. அவன் விழிகள் சிவந்து கலங்கியிருந்தன.. உரிமையுடன் அவளது கட்டிலில் உட்கார்ந்திருந்தவனின் துளைக்கும் பார்வையை அவளால் தாங்க முடியவில்லை...
"இப்படியொரு வழியிருக்குன்னு எனக்கும் சொல்லியிருக்கலாமேடி.. வாழ்வில்தான் ஒன்னாய் சேர முடியலை.. சாவிலேயாவது ஒன்று சேரலாம்ன்னு சந்தோசமா உன்கூட கூட்டுக்கு வந்திருப்பேனேடி..."
அவள் இதழ்களை அசைத்துப் பேச முயன்றாள்.. பேச்சு வரவில்லை...
"போதும்.. உன்னையே நீ சிரமப்படுத்திக்காதே.." அவன் கைகள் அவள் இதழ்களில் படிந்தது.. கன்னத்தில் படர்ந்து தடவியதில் கண்மூடி இதம் கண்டாள்...
"கனடா போகலையா..?" திக்கித் திணறிப் பேசிவிட்டாள்...
அவன் கண்கள் ஒளிர்ந்தன.. அவள் விரல்களை நீவி விட்டவன்.. அந்த விரல்களைப் பற்றி அவற்றில் மென்மையாக முத்தம் பதித்தான்...
"போகலை... உன்னை விட்டுட்டுப் போவேனா..?"
"போகத் துணிஞ்சீங்கள்ல..?"
"நானாவது நாட்டை விட்டுத்தான் போக நினைச்சேன்.. நீ என்னைத் தவிக்க விட்டுட்டு இந்த உலகத்தை விட்டே போக நினைச்சியே.. கனடா போகிறவனை ஒரு போன்காலில் நீ திரும்பி வரவைக்கலாம்.. ஆனா.. நீ போக நினைச்ச இடத்துக்கு போனைப் போட்டா நீ திரும்பி வர முடியுமா..? நான்தான் உன்னைத் தேடி அங்கே வரனும்.." அவன் பேசப் பேச...
"ஆத்மா..." என்று அவன் காதலில் உடைந்து அழுதாள் சாருலதா...
"அழாதேடி.." அவள் கண்ணீரை துடைத்து விட்டான் ஆத்மா...
"உங்க முதல் காதலை நினைத்துக்கிட்டுத்தானே.. என்காதலை நீங்க ஏத்துக்கலை..? உங்க மனசை மூடி மறைச்சு தட்டிக் கழிச்சீங்க..?"
"அது காதலே இல்லைங்கறேன்.. இன்னும் முதல் காதல்ன்னு அதைப் பிடித்துக்கிட்டு தொங்கிக்கிட்டு இருக்கா.. பைத்தியக்காரி.. உன் காதலை நான் ஏத்துக்கிறதா..? உன் போட்டோவை என் செல்போன் ஸ்கிரீன்ல பதிஞ்சு வைச்சிருந்தேனே.. அதிலிருந்தே என்காதல் உனக்குத் தெரியலையா..?"
"நீங்க அதை ஒப்புக்கலை.. நான் ஒப்புக்க வைச்சேன்.. அப்பவும் என்னை விட்டுட்டு கனடா போக நினைச்சவர்தானே நீங்க..."
"உன்னை எனக்குப் பிடிக்குடி.. என் அண்ணியைப் பார்த்த கண்ணில் உன்னையும் பார்த்தப்ப ஒரு தேவதையாய் என் கண்ணுக்கு நீ தெரிஞ்ச.. ஆனாலும்.. உன் மேல் எனக்கிருந்த ஈர்ப்பிற்கு பெயர் காதல்தானான்னு நான் உறுதிப் படுத்திக்க வேண்டியிருந்தது.. உன்மேல எனக்கிருக்கிறது காதல்தான்னு நிச்சயமாய் எனக்குத் தெரியனும்னு நினைச்சேன்.. அதுக்குத்தான் அந்த விலகல்... கனடா போறதா இருந்தது ஆறுமாத டெபுடேசனில்தான்.. அங்கே போன பின்னாலயும் உன் நினைப்பு என்னைத் துரத்தினா அப்ப உன்னைத் தேடி வரலாம்ன்னு நினைச்சேன்..."
"எதையெதையோ நினைச்சவர்.. என்னை மட்டும் நினைக்கல..."
"நினைக்காமத்தான் நீ இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்தேனா..?"
"வளைந்து கொடுத்த ஆளைப்பாரு.. உங்களைப் பெண் கேட்டு வரவைக்கிறதுக்கு நான் என்ன பாடுபட வேண்டியிருந்தது தெரியுமா..?"
"எல்லாம் தெரியும்.. பிசாசையும்.. தேவதையையும்.. ஒரே வீட்டில் குடி வைக்க முடியுமா..? என் அண்ணி ஒரு பிசாசு.. அதையும் கூப்பிட்டுக்கிட்டு வந்து தான் பெண் கேட்கனும்னு வால்டர் சக்திவேல் கண்டிசன் போட்டுட்டார்..."
"வால்டர் சக்திவேலா..?"
"உன் அப்பாதான்டி.. என் கவுண்டர் ஏகாம்பரம்ன்னாத் தான் உனக்குத் தெரியுமா..?"
"குடும்பத்தோட வந்து பெண் கேளுங்கன்னு சொன்னா அது ஒரு தப்பா..?"
"என் அண்ணிதான் குடும்பத்திலே ஒட்டவே இல்லையே.. அதையெல்லாம் குடும்பத்தில எப்படிச் சேர்க்கிறது..?"
"விடுங்க.. அவங்க குணம் அப்படி.. உங்க அண்ணன்தான் பாவம்..."
"ஊஹீம்.. அந்தக் கவலையும் இனி எனக்கில்லை.. என் அண்ணனுக்கும் பேயோட்டத் தெரியும்கிற விவரம் இப்பத்தான் எனக்கே தெரிஞ்சது.. குடும்ப அமைதிக்காக அடங்குவதைப் போலப் பாவ்லா பண்ணிக்கிட்டு இருந்திருக்கான்... சமயம் வந்தப்ப பொங்கிட்டான்.. பிசாசு பிறந்த வீட்டுக்கு ஓடிப் போயிருச்சு..அண்ணியாடி அது..? வில்லி.. இத்தனைக்கும் எங்க வீட்டிலே யாரும் அதை எதிர்த்தே பேச மாட்டாங்க.. ஆனாலும் இது சத்தம் போட்டு ரகளை பண்ணும்.. எல்லாத்தையும் அடக்கி கைக்குள்ள வைச்சுக்குதாம்.."
"அவங்களுக்கு யாராவது இப்படிச் செய்யுன்னு சொல்லிக் கொடுத்திருப்பாங்க.."
"அது ஊருக்கே சொல்லிக்கொடுக்கும்.."
ஆத்மாவின் விரல்கள் சாருலதாவின் தலைமுடியை கோதிவிட்டன.. இன்னும் அவளுக்கு.. அவளின் காதல் திரும்பக் கிடைத்து விட்டது என்பதை நம்ப முடியவில்லை...
"நான் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகவும்தானே என்னைத் தேடிவந்தீங்க..? இல்லைன்னா.. என்னை மறந்துட்டு கனடாவுக்கு பறந்திருப்பீங்கதானே..."
காதல் நிச்சயத்தை விரும்புவது.. கடிகாரத்தின் பெண்டுலத்தைப் போல.. இங்கும் அங்கும் ஆடும் மனதைக் கொடுப்பது.. அதீத காதலின் வசப்படும் பெண்.. அவளுடைய ஆண் அவளை எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டான் என்ற உத்தரவாதத்தை விரும்புகிறாள்.. அது கிடைக்காத வரை அவள் மனதில் சஞ்சலம் சதிராடிக் கொண்டுதான் இருக்கும்..
சாருலதாவின் பூப்போன்ற அந்த மனதை ஆத்மா புரிந்து கொண்டான்... மென்மையாக அவள் கன்னம் தட்டியவன் காதலுடன் சொன்னான்...
"கண்ணம்மா.. உன்னை விட்டுப் போக நான் நினைச்சதுக்கு காரணமே உன் காதல்மேல எனக்கிருந்த நம்பிக்கைதாண்டி..."
"என்னது..?!" சாருலதா விழி விரித்தாள்...
"ஆமாண்டி.. சொர்ணா என்னைப் பார்க்க வந்திருந்தா..."
"என்னிடம் சொல்லவேயில்லையே.. அது எப்படி.. எனக்குத் தெரியாம அவ உங்களை மீட் பண்ண வரலாம்..."
"பொறாமையா..?" ஆத்மா சிரித்து விட்டான்..
"ஏண்டி.. உன் மண்டைக்குள்ளே மசாலாவே இல்லையா..? அவளைப் பார்த்தா சோன்பப்டி வாங்கிக் கொடுக்கத்தான் எனக்குத் தோணும்.. காதலிக்கத் தோணாது.. அவ என்னைப் பார்க்க வந்த விவரமே வேற.."
"என்னவாம்..?"
"நான் உன் கண் முன்னால் நடமாடறதால நீ என்னை நினைச்சுக்கிட்டு வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிக்கிட்டு இருக்கியாம்.. நான் உன் கண் மறைவா கனடாப் பக்கம் போயிட்டேன்னா நீ என்னை மறந்துருவியாம்.. வேற ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டிருவியாம்.. அதனால என்னை நாடு கடக்கச் சொன்னா..."
"அப்படியா சொன்னா...?"
"யெஸ்.. அதுக்கு நான் ஒரு சேலன்ஜ் விட்டேன்.."
"என்ன சேலன்ஜ்..?"
"நான் எங்கே போனாலும் என் சாரு என்னை மறக்க மாட்டா.. என்னைத் தவிர வேறு ஒருத்தனுக்கு கழுத்தை நீட்ட மாட்டான்னு சேலன்ஜ் பண்ணினேன்.. அதை புரூவ் பண்ணத்தான் கனடா கிளம்பினேன்..."
"ஆர் யு ஷ்யூர்..? நீங்க அப்படியா சேலன்ஜ் விட்டிங்க..."
"வேணும்னா சொர்ணாவைக் கூப்பிட்டுக் கேட்டுப்பார்..."
"என்மேல் அவ்வளவு நம்பிக்கையா..?"
"என்மேல் நீ வைச்சிருக்கிற காதல் மீது அவ்வளவு நம்பிக்கை..."
அந்த வார்த்தைகளுக்குத்தான் எத்தனை சக்தி..!
அலைகடலாய் பொங்கிக் கொண்டிருந்த சாருலதாவின் உணர்வுகள் சமனப்பட்டு விட்டன..
அவள் பிழைத்து எழுந்து விட்டாள்...
"என்ன மாப்பிள்ளை.. எப்பக் கல்யாணத்தை வைச்சக்கலாம்..?" என்று கேட்டார் சக்திவேல்...
"உங்க பெண்ணைக் கேளுங்க மாமா.." என்று பதவிசாகச் சொன்னான் ஆத்மா..
"இப்பவே பெண்டாட்டி முந்தானையிலே ஒளிஞ்சுக்காதீங்க மாப்பிள்ளை.. அப்புறம் வீட்டில எலி.. வெளியில புலி கதையாகிடும்.." என்ற சக்திவேல்...
"அங்கே என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க..? இங்கே வாங்க.." என்ற புஷ்பவள்ளியின் அதட்டலில் ஆடிப் போனவராக...
"இதோ வந்திட்டேன் வள்ளி.." என்று பாய்ந்து ஓடினார்...
"ஆக என்கவுண்டர் ஏகாம்பரங்கிறதெல்லாம் வெளியுலகத்துக்குத்தான்.." ஆத்மா சிரிக்க.. சாருலதா செல்லமாக அவன் முதுகில் ஒரு போடு போட்டாள்...
"மாமனாரையா கேலி பண்றீங்க..?"
சங்கரனும்.. பார்வதியும் நிம்மதியான மனத்துடன் திருமண வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.. குறித்த நாளில் அவர்களின் திருமணம் நடந்தது.. திருமணத்திற்கு நித்யா வந்திருந்தாள்...
"இங்கே பாரும்மா.. ஏதோ கல்யாணம் ஆன புதுசில உன் மாமியா வீட்டில நாங்க சவுண்டு விட்டு உனக்கு சப்போர்ட் பண்ணினோம்கிறதுக்காக.. நீ அதையே பிடிச்சுக்கிட்டு அங்கே ரவுண்டு கட்டி ஆடனும்னு நினைக்கக் கூடாது.. பொம்பளைக் குழந்தையை பெத்திருக்க.. பொறுமையாய் அனுசரிச்சுப் போகப் பாரு.. உன் கொழுந்தன் வேற போலிஸ் ஆபிசரு வீட்டில பெண்ணெடுக்கிறான்.. அந்த மனுசரைப் பத்தி வெளியே கதை கதையாய் சொல்றாங்க.. அதனால வம்பு வளர்க்காம கல்யாணத்துக்கு வந்து சேரப் பாரு.." என்று அவளைப் பெற்றவர் புத்திமதி சொல்லி.. திருமணத்திற்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டார்..
அத்தோடும் நிற்காமல்.. மருமகனை அழைத்து.. மகளையும் பேத்தியையும் ஒப்படைத்து விட்டார்...
"நீங்களாச்சு.. உங்க பெண்டாட்டியாச்சு.. உங்க குடும்ப விவகாரத்தில இனி நாங்க தலையிட மாட்டோம் மாப்பிள்ள..."
நித்யாவுக்கு மூக்கு உடைந்ததைப் போலாகி விட்டது... சீத்தாராம் முறைத்துக் கொண்டே.. பெண்டாட்டியை அழைத்துக் கொண்டான்.. இனியும் பிறந்த வீட்டைச் சொல்லி அவர்களை பயமுறுத்த முடியாது என்று தெரிந்து போனபின்பு நித்யா ஏன் வாயைத் திறக்கப் போகிறாள்..? அதையும் மீறி வாயைத்திறந்தால்.. சாருலதா அவளுடைய பிறந்த வீட்டில் போட்டுக் கொடுத்து.. என்கவுண்டர் ஏகாம்பரம் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு வந்து விடுவாரென்ற பயத்தில் நித்யா வாயை முடிக் கொண்டு வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தாள்...
"வீடே அமைதிப் பூங்காவா ஆகிடுச்சுடி.."
இரவுகளின் நெருக்கத்தில் ஆத்மா சாருலதாவின் காதோரம் கிசுகிசுத்தான். அவனின் அத்து மீறும் கைகளுக்குள் சரண் புகுந்த சாருலதாவின் உணர்வுகள் அத்து மீறி கரையை உடைக்க.. அவள் கண்மூடி அவன் கைகளுக்குள் புகுந்தாள்...
இணைந்து விட்ட காதலர்களின் வாழ்வில் இரவுக்கும்.. பகலுக்கும் வேலையே இல்லையே...
மழைச்சாரலாய் மனம் நனைக்கும் காதலை ஆத்மாவிற்கு அள்ளி அள்ளிக் கொடுத்தாள் சாருலதா.. அவளின் அந்தக் காதல் மழையில் நனைந்த ஆத்மா பதிலுக்கு அதே காதல் மழையைப் பொழிந்து அவளை நனைய வைத்தான்...
காதல் என்பது மழை.. அந்த மழைச் சாரலில் மனம் நனைந்து விட்டவர்களுக்குத்தான் தெரியும்...
காதல்.. வாழ வைத்து உய்விக்கும் மகா சத்தி என்பது...

- முற்றும் -



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மழைச்சாரலாய் மனம் நனைத்தாய். -33
மழைச்சாரலாய் மனம் நனைத்தாய். -33
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s320/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s72-c/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/malaisaaralaaimanamnanaiththaai-33.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/malaisaaralaaimanamnanaiththaai-33.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy