மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.-32

32 "பேசும்மா.. ஏன் பேசாம இருக்கிற.. ?" "டாடி..." "இதுக்கு என்ன பதிலைச் சொல்லப் போகிற.. ? உன்னை ஆத்மா வீட...


32

"பேசும்மா.. ஏன் பேசாம இருக்கிற..?"
"டாடி..."
"இதுக்கு என்ன பதிலைச் சொல்லப் போகிற..? உன்னை ஆத்மா வீட்டில இருந்து பெண் கேட்டு வந்தது நாலு பேருக்குத் தெரியும்மா.. இப்ப அவர் கனடா போயிட்டா பார்க்கிறவங்க என்ன சொல்வாங்க..?"
"அதுக்கு..?"
"உனக்கு ஒரு நாள் டைம் தரேன் சாரு.. அதுக்குள்ள நீ முடிவு பண்ணிக்க.."
"எதை டாடி...?"
"என் ஜீனியரா.. உன் மாமா மகனா.. இல்லை.. என் பிரண்டோட மகனான்னு.. நீ முடிவு பண்ணனும் சாரு.. இவங்களில் ஒருத்தனை நீ மேரேஜ் பண்ணித்தான் ஆகனும்.. இனியும் என்னால் பொறுத்துக்க முடியாது.. போதும்.. இதுவரைக்கும் நீ சொல்கிறதை நான் கேட்டுட்டேன்.. இனிமே நான் சொல்கிறதை நீ கேளு.. அன்டர்ஸ்டான்ட்..?"
விட்டால் மகளை என்கவுண்டர் பண்ணி விடுபவரைப் போல சக்திவேல் ருத்ர அவதாரம் எடுத்ததில் சாருலதா ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்...
அவளுடைய ஆத்மாவே அவளைப் பிரிந்து செல்லும் முடிவை எடுத்து விட்ட பின்பும் அவள் ஏன் தயங்க வேண்டும்...?
அன்று இரவு சாருலதா ஒரு பாட்டில் தூக்க மாத்திரைகளை விழுங்கி வைத்து விட்டு.. கட்டிலில் சரிந்து விட்டாள்...
என்னதான் கண்காணிப்பாக இருந்தாலும்.. அவ்வளவு சீக்கிரத்தில் அவள் அந்த முடிவை எடுத்து விடுவாளென்று நினைத்துப் பார்த்திராத சொர்ணலதாவும்... புஷ்பவள்ளியும் அரண்டு போய் விட்டார்கள்...
"நான் அப்பவே சொன்னேன் கேட்டியா..?" புஷ்பவள்ளி தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பிக்க...
"உஸ்ஸ்.
"உஸ்ஸ்... அம்மா...! டாடிக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்.. நம்மள என்கவுண்டரில் போட்டுத் தள்ளிடுவாரு.. வாயை மூடிக்கங்க..." என்று எச்சரித்தாள் சொர்ணலதா...
"கண் திறக்காம கிடக்காளேடி..." புஷ்பவள்ளி பதறினாள்...
சொர்ணலதாவுக்கும் அதே பதட்டம் தான் என்றாலும்... அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தைரியமாக இருப்பதைப் போல நடித்தாள்...
அவளும் அரண்டு விட்டால் புஷ்பவள்ளி பயந்து போய் விட மாட்டாளா..? நினைவிழந்து கிடந்த சாருலதாவை ஹாஸ்பிடலில் சேர்த்தார்கள்.. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மகளைப் பார்த்ததும்.. ஆனானப் பட்ட என்கவுண்டர் ஏகாம்பரமே அரண்டு போய் விட்டார்..
குற்றம் செய்கிறவனை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது அவருக்கு எளிதான ஒன்றாக இருந்திருக்கலாம்.. வாழ்வில் துரத்தும் இது போன்ற சூழ்நிலைகளை எந்தத் துப்பாக்கியைக் கொண்டு அவர் சுட்டுத்தள்ளுவார்..?
"வள்ளி.." அவர் கலங்கிப் போனார்..
'அடிதாங்கும் உள்ளம் இது..
             இடி தாங்குமா..?
    இடிபோல மகளும் வந்தால்..
             மடி தாங்குமா..?
    சோதனைமேல் சோதனை
             போதுமடா சாமி..'
அவர் மனதிலிருந்த.. சௌத்ரி சக்திவேல் எழுந்து நின்று.. கண்கள் சிவக்க.. சோகரசம் பிழிந்தார்.. அவர் முகத்தைப் பார்த்தே.. மனதைப் புரிந்து கொண்ட அவருடைய தர்மபத்தினி அவரை மடிதாங்கி.. தேற்றி எழுப்பி உட்கார வைத்தாள்...
"இதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு..."
"என்ன வழிடி..?" பரபரப்பாக கேட்டார் சக்திவேல்..
"ஆத்மாகிட்டப் போங்க.. அவர் வழி சொல்லுவார்.. இவ மனசில அவர் மட்டும்தான்.. வேற யாரையும் இவ மனசு ஏத்துக்காது.. எனக்கு இவளைத் தெரியும்.. இப்படியே விட்டுட்டா நம்ம பொண்ணு நமக்கு இல்லாம போயிடுவா.."
மனைவி சொன்னதை மனதார ஏற்றுக் கொண்டார் சக்திவேல்.. மரணத்தின் விளிம்பைத் தொட்டு விட்ட மகளைப் பார்க்கும் போது அவரின் நெஞ்சம் பதறியது.. மகளை வாழவைக்க வேண்டுமென்று அவரது உயிர் துடித்தது...
அவர் ஆத்மாவைத் தேடிச் சென்றபோது... அவன் கனடாவிற்கு புறப்படுவதற்கான ஆயத்தங்களில் இருந்தான்..
"எங்கே கிளம்பிட்டிங்க ஆத்மா..?" என்று  கேட்டவரை திரும்பிப் பார்த்தவனின் முகத்தில் உறுதி இருந்தது...
அது அவன் மீதான சாருலதாவின் காதலின் மீது அவனுக்கு இருந்த நம்பிக்கையின் உறுதி... அவனுக்கும்.... சொர்ணலதாவிற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் சவாலைப் பற்றி சக்திவேலுக்கு எப்படித் தெரியும்..?
அதனால்.. மகளை மரணப் படுக்கையில் தள்ளி விட்டு ஓடப் பார்க்கும் அவளுடைய காதலனைப் பார்க்கும் வெறுப்புப் பார்வையினை அவர் பார்த்து வைத்தார்...
"நீங்களா சார்.. வாங்க.. வாங்க.. நான் கனடாவுக்கு கிளம்பிக்கிட்டு இருக்கேன்..", என்றான் ஆத்மா...
"தப்பிச்சு ஓடறிங்களா..?" கோபத்துடன் கேட்டான் சக்திவேல்...
"தப்பிச்சு ஓடறேனா..? நானா..? எதிலிருந்து தப்பிக்கப் போகிறேன்..?" ஆத்மா வியப்புடன் கேட்டான்..
"சாருவோட காதலில் இருந்து தப்பிக்கத்தான கனடாவுக்கு ஓடறிங்க..? நான் உங்களை ஜென்டில் மேன்னு நினைச்சேன்.. நீங்க என்னடான்னா.. காதலிச்ச பெண்ணை கைவிட்டுட்டு ஓடத் துணிஞ்சிட்டிங்க..."
"மைன்ட் யுவர் வெர்டுஸ் சார்.. நான் இங்கேயிருந்தா சாரு கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டான்னு நீங்க தானே நினைச்சீங்க...?"
ஆத்மாராம் அப்படிக் கேட்டதும் சக்திவேல் உதட்டைக் கடித்துக் கொண்டார்.. அவர் மனதில் அப்படி ஒரு நினைவு இருப்பது உண்மைதானே.. ஆத்மா சொர்ணலதாவின் பெயரைச் சொல்லாமல் நேரடியாக அவருடன் மோதி விட்டதில் சக்திவேலுக்கு சொர்ணலதாவின் திட்டத்தைப் பற்றித் தெரியாமலே போய் விட்டது...
"உங்களுக்கு ஒரு சவால் விடறேன் சார்.. நான் கண்ணுக்கு முன்னாலே இருந்தாத்தான் உங்க பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டான்னு இல்லை... நான் கண்மறைவாய் கனடா போய் விட்டாலும் அவ வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்க மாட்டா... உங்க விருப்பப்படியே நான் அவ கண்களுக்கு தென்படாம கனடா போயிடறேன் சார்.. முடிஞ்சா அவளுக்கு வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணி வையுங்க..."
"முடியலை ஆத்மா.." சக்திவேலின் குரல் தளர்ந்திருந்தது...
அப்போதுதான் அவரின் முகத்தைக் கவனித்த ஆத்மா திடுக்கிட்டான்.. அவனறிந்த சக்திவேல் கம்பீரமானவர்.. இதுபோல கலங்கி நிற்க மாட்டார்...
"என்னாச்சு சார்..?"
"நான் கல்யாணத்துக்கு ஃபோர்ஸ் பண்ணியதையும்.. நீங்க கனடாவுக்கு கிளம்பிப் போகிறதையும் சாருவால தாங்கிக்க முடியலை.. ஸோ..."
"ஸோ..?" ஆத்மா பதறினான்...
"அவ உயிரை விடத் துணிஞ்சிட்டா..."
"வாட்..?" ஆத்மாவின் கையிலிருந்த பேப்பர்கள் நழுவிக் கீழே விழுந்தன...
"என்ன சொல்கிறிங்க..? அவ இப்ப எங்கேயிருக்கா..?" சக்திவேலின் சட்டையைப் பிடித்து உலுக்கினான் ஆத்மா..
"அவ இப்ப ஹாஸ்பிடலில் இருக்கா.. உங்களை அவளால மறக்க முடியல.. உங்களைத் தவிர வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிறதைப் பத்தி அவளால நினைச்சுக்கூடப் பார்க்க முடியல.. உங்களைப் பிரிஞ்சு அவ இருக்க மாட்டா ஆத்மா.."
"அது இப்பத்தான் உங்களுக்குத் தெரிஞ்சதா..? அவ போக்கில விட்டுப் பிடிக்கலாம்ன்னுதான் நான் பொறுமையா இருந்தேன்.. நீங்க அவசரப் பட்டுட்டிங்களே சார்.. எதுக்காக அவளை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி ஃபோர்ஸ் பண்ணினீங்க..?"
"நான் பெண்ணைப் பெத்தவன் ஆத்மா.. நீங்க ஊரறிய அவளைப் பெண் பார்க்க வந்து நிச்சயமும் பண்ணிட்டிங்க... அதுக்கப்புறம் கல்யாணம் நின்று போச்சுன்னா அது என் பெண்ணின் வாழ்க்கையைத்தான் பாதிக்கும்..."
"என்னத்தை பாதிக்கப் போகுது..? என்னைக்கிருந்தாலும் அவ கழுத்தில நான்தான் தாலியைக் கட்டப் போறேன்.. அந்தக் கல்யாணம் உடனே நடந்தா என்ன..? இல்ல.. ஒரு வருசம் கடந்து நடந்தா என்ன..? அது என் பிரச்னை சார்.. உங்க பிரச்னை இல்லை..."
"நீங்க சொல்கிறது நூற்றிலே ஒரு வார்த்தை... எல்லாத்தையும் யோசிச்சுச் செய்கிறவன்.. இதை யோசிக்காம.. போயிட்டேன்.. சாரு இப்படி ஒரு பாட்டில் தூக்க மாத்திரைகளை முழுங்கி வைப்பான்னு நினைச்சும் பார்க்கலை..."
"மைகாட்.. ஒரு பாட்டில் ஸ்லீப்பிங் டேப்லெட்ஸா..?"
"ஆமாம் ஆத்மா.. கண் திறக்காம கிடக்கிறா.. எங்களுக்கு பயமாயிருக்கு.. டாக்டர்களும் உடனே எதையும் சொல்லிவிட முடியாதுன்னு சொல்லிட்டாங்க..."
"இதை ஏன் எனக்கு உடனே சொல்லலை.."
"என்னன்னு சொல்றது..? வயசுப் பெண்ணுக்கு காய்ச்சல் தலைவலின்னா வெளியில் சொல்லலாம்.. தற்கொலைக்கு முயற்சி பண்ணினா வெளியில் சொல்ல முடியாது..."
ஆத்மா அவசர கதியில் எழுந்து கொண்டான்.. செல்போனை எடுத்து யாரிடமோ பேசினான்...
"யெஸ்.. ஆத்மாதான் பேசறேன்.. கனடா போகிற டிரிப்பை கேன்சல் பண்ணிருங்க.. ஐ ஆம் நாட் வில்லிங்.."
வெளியே விரைந்தான்.. அவனது வேக நடைக்கு ஈடு கொடுத்து நடந்தார் சக்திவேல்...
"ஐ ஆம் ஸாரி ஆத்மா..."
"இப்பவாவது எங்க காதலை புரிஞ்சுக்கங்க சார்.. நான் உங்க மகளை விட்டு விலகித்தான் நின்னேன்.. விட்டுக் கொடுக்கலை. இனியொருதரம் இதைப் போல செய்து வைக்காதீங்க.. அப்படி நீங்க அவளை ஃபோர்ஸ் பண்றதாய் எனக்குத் தெரிஞ்சுச்சுன்னு வைங்க.. அவளை வீடு புகுந்து தூக்கிக்கிட்டு வந்து தாலிகட்டிருவேன்.. நீங்க வேணும்னா என்கவுண்டரில் என்னைப் போட்டுத் தள்ளுங்க..."




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.-32
மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.-32
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s320/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s72-c/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/malaisaaralaaimanamnanaiththaai-32.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/malaisaaralaaimanamnanaiththaai-32.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy