மழைச்சாரலாய் மனம் நனைத்தாய். -31

31 தொடர்மழையினால் கடற்கரைக் சாலை கழுவித் துடைத்ததைப் போல சுத்தமான அழகுடன் இருந்தது.. பொங்கி வரும் அலைகளைப் பார்த்தபடி.. கடலோரமாக மணலி...


31

தொடர்மழையினால் கடற்கரைக் சாலை கழுவித் துடைத்ததைப் போல சுத்தமான அழகுடன் இருந்தது.. பொங்கி வரும் அலைகளைப் பார்த்தபடி.. கடலோரமாக மணலில் கால் புதைய நடந்தாள் சொர்ணலதா.. அவள் அரைத்துத் தள்ளிய நொறுக்குத் தீனிக்கு பணம் கொடுத்தபடி.. இவள் கடற்கரைக்கு இதற்காகத்தான் வந்தாளா என்று யோசித்துக் கொண்டிருந்தான் ஆத்மா..
"அந்த சுண்டல்காரனைக் கூப்பிடுங்க.."
"இதோட ஆறு பொட்டலம் சுண்டலைக் காலி பண்ணிட்ட.. இன்னுமா..?"
"ஹலோ.. உங்க கூடப் பேசனும்னு வெறும் வயிறோட ஓடி வந்திருக்கேன்... பேசறதுக்கு சக்தி வேணாமா...?"
"இரண்டு பிளேட் பானிபூரி.. நாலு ஐஸ்கிரிம்.. ஒரு மாங்கா மூன்று பொட்டலம் பட்டாணி.. ஆறு பொட்டலம் சுண்டல்ன்னு உள்ளே தள்ளியிருக்கியே.. இன்னுமா சக்தி வரல...?"
"சொல்லிக் காட்டறிங்களா...? என்கிட்ட கிரெடிட் கார்டு இருக்கு.."
"அதை வைச்சு சுண்டல் வாங்க முடியாது.."
"அவசரத்தில பர்ஸ் எடுத்துக்கல.. கிரெடிட் கார்டு தான் அகப்பட்டது.. இது இருக்கேன்னு வந்திட்டா.. நீங்க சொல்லிக் காட்டுவீங்களா...?"
"நீ பண்ற அழும்புக்கு.. உன்னைப் படைச்ச பகவானே வந்திருந்தாலும் சொல்லித்தான் காண்பிச்சிருப்பார்.."
"இப்படியெல்லாம் பேசினா.. நான் பத்தாவது பொட்டல சுண்டலை வாங்க மாட்டேன்னுதானே கணக்குப் போடறிங்க...? உங்க கணக்கு தப்பு மிஸ்டர் ஆத்மா..."
"உன் கணக்குத்தான் தப்பு.. ஆறாவது பொட்டலத்துக்கு அடுத்து ஏழாவது பொட்டலம்தானே வரும்...?"
"ஒரு பொட்டலத்தை வாங்கினாத்தானே அப்படிக் கணக்காகும்...? நான்தான் நாலுபொட்டலத்தை வாங்கப் போறேனே.."
"நாலு பொட்டலமா...?"
"என்ன இப்படியொரு கஞ்சப் பிசுநாரியா இருக்கீங்க...? எதை வைத்து உங்களைப் போய் மாய்ஞ்சு.. மாய்ஞ்சு.. சாரு காதலிச்சா...?"
"அவ சுண்டலை வைச்செல்லாம் காதலை எடை போடறதில்லை.."
"அதான் ஏமாந்திட்டு நிற்கிறா.. ஆப்டர் ஆல்.. ஒரு சுண்டலுக்கு இவ்வளவு கணக்கு பார்க்கிறவரை காதலிச்சா இந்தக் கதிதான்..."
"ஒரு சுண்டலா.. சொச்சத்துக்கு என்ன கணக்கு...?"
"இந்தக் கணக்கிலெல்லாம் கரெக்டா இருங்க.. காதலிக்கிறவள கணக்கு பண்றதை மட்டும் ஏடாகூடமாய் பண்ணி வையுங்க..."
"இதைச் சொல்லத்தான் இங்கே வந்தியா...?"
"அதைச் சொல்லனும்னா எனக்குச் சக்தி தேவை.. அதுக்கு நாலு பொட்டலம் சுண்டல் தேவை..."
"கொட்டிக்க.. ஏம்ப்பா சுண்டல்.. இங்கே வா..."
ஆத்மா கைதட்டிக் கூப்பிட.. அருகில் வந்த அந்தப் பையன்..
"இப்பத்தான் அண்ணே சுண்டல் வாங்கினீங்க...?" என்று கேட்டான்..
"அது உனக்குத் தெரியுது.. எனக்கும் தெரியுது.. இந்த அக்காவுக்குத் தெரியலையே.. நான் என்ன செய்வேன்.. என்ன செய்வேன்..." நடிகர் திலகத்தைப் போல இறுமியபடி சுண்டலை வாங்கிக் கொடுத்தான் ஆத்மா..
சுண்டல்காரப் பையன் போனதும் ஆத்மாவை முறைத்தாள் சொர்ணலதா..
"அதான் நீ கேட்ட நாலு பொட்டலமும் உன் கைக்கு வந்தாச்சே.. இன்னும் என்ன..?"
"என்னைப் பார்த்தா அந்தப் பையனுக்கு அக்கா மாதிரி இருக்கா...?"
"இல்லைதான்.. ஆண்ட்டி மாதிரிதான் தெரியுது.. ஆனாபாரு.. அந்தப்பையன் என்னை அண்ணான்னு கூப்பிட்டுட்டான்..."
"அதுக்கு...?"
"அதுக்கப்புறமும் உன்னை ஆண்ட்டின்னு சொல்லச் சொன்னா நல்லாயிருக்குமா...? நீயே சொல்லு.."
ஆத்மா நியாயம் கேட்ட விதத்தை ரசித்தாள் சொர்ணலதா.. எதற்கும் அசையாத சாருலதாவின் மனது.. எதனால் அவன் பின்னால் போனது என்பதை அந்த நொடிகளில் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது..
'இவ்வளவு ஸ்மார்ட்டா.. ஹியுமெர் சென்ஸோட.. செம ஹேண்ட்சம்மா ஒருத்தன் கிடைச்சா.. எந்தப் பெண்தான் காதலில் விழமாட்டா..?'
சுண்டலைத் தின்று முடித்தவளுக்கு தாகம் தணிக்க இரண்டு பெரிய குளிர்பான பாட்டில்கள் தேவைப்பட்டன.. ஒருவழியாய் குடித்து முடித்து ஆசுவாசமானவளிடம்..
"இனியாவது என்ன விசயம்ங்கிறத போட்டு உடைக்கிறயா...?" என்று கேட்டான் ஆத்மா...
"சாருவுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகியிருக்கு..."
அதுவரை அவனுடைய பர்ஸைக் காலி செய்து நொறுக்குத் தீனிகளை அரைத்து முடித்த நன்றியுணர்வு கொஞ்சம் கூட இல்லாதவளாக குண்டைத்தூக்கிப் போட்டாள் சொர்ணலதா..
ஆத்மாவின் முகத்தில் ஒர் அதிர்வு வந்து போனதை ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டாள்..
"சாரு சம்மதிச்சுட்டாளா...?" சட்டென்று கேட்டான் ஆத்மா..
"அவ சம்மதிக்கிறது உங்க கையில்தான் இருக்கு.." புதிர் போட்டாள் சொர்ணலதா..
'அவ சம்மதிக்கலையா...' ஆத்மாவின் முகத்தில் நிம்மதி பரவியது..
"அவளுக்கு அட்வைஸ் பண்ணச் சொல்லியெல்லாம் என்னை ஃபோர்ஸ் பண்ணக் கூடாது... அவ உடனே எனக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுருவா.. அதோட.. இது உங்க குடும்ப விசயம்.. அவ.. சம்மதிச்சா தாராளமா கல்யாணத்தை நடத்துங்க..."
"அவ சம்மதிப்பா மிஸ்டர் ஆத்மா.. நீங்க மட்டும் அவ கண்ணுக்கு முன்னாலே நடமாடாம.. வேற எங்கேயாவது போயிட்டிங்கன்னா நிச்சயமா அவ சம்மதிப்பா.."
"வாட் டு யு மீன்...?"
"நீங்க ஏன் திரும்பவும் கனடாவுக்கே போயிரக் கூடாது..?"
"அப்படிப் போனா.. என்ன நடக்கும்ன்னு நினைக்கிற..?"
"சாருவுக்கு பிக்ஸ் ஆகியிருக்கிற கல்யாணம் நடக்கும்ன்னு நினைக்கிறேன்.. உங்களாலதான் அவ கல்யாணம் இழுபறியாயிருக்கு மிஸ்டர் ஆத்மா.."
"ஐ அப்ஜெக்ட் இட்.. சாருலதா மெச்சூரான பொண்ணு.. அவ கல்யாணத்தை முடிவு பண்ற பக்குவம் அவளிடம் இருக்கு.. நான் அவ கண்ணு முன்னாலே இல்லாம.. தூரதேசத்தில இருந்தா மட்டும் அவ வோறொருத்தனைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சுருவாளா...?"
"ஏன் சம்மதிக்க மாட்டா...? கிட்டாதாயின் வெட்டென மறக்கணும்தானே...?"
"அவ மறக்க மாட்டா..."
"அது உங்க நினைப்பு.. அவ உங்களை மறந்திருவா.. வேற ஒருத்தனைக் கல்யாணமும் பண்ணிக்குவா..."
"நடக்காது.."
"நடக்கும்..."
"சேலன்ஸ்...?"
"சேலன்ஸ்..."
"ஓகே.. உனக்கு உன் அக்காவைப் பத்தி இன்னும் தெரியலைன்னு நினைக்கிறேன்.. அவ ஒன்றை நினைச்சா.. அதிலேயே நிலைச்சு நிற்கிற ரகம்.. நான் அவ கண் முன்னாலே இருந்தாலும்.. கனடாவில் இருந்தாலும் அவ மனசு என் மேலதான் இருக்கும்.. உங்க வீட்டில இருக்கிற அத்தனை பேரும் தலைகீழா நின்னாலும்.. அவ மனசை மாத்த முடியாது.. வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள அவ சம்மதிக்கவே மாட்டா.. இதை நான் புரூவ் பண்ணிக் காட்டறேன்.. இன்னைக்கே கனடா போக என்னோட சம்மதத்தை ஆபிசில் சொல்லிடறேன்.."
"தட்ஸ் குட்.. சாருவோட கல்யாணத்தை இனிமே நாங்க ஈஸியா நடத்தி விடுவோம்.. ஜெயிக்கப் போறது நாங்கதான்.."
"ஊஹீம்.. ஜெயிக்கப் போறது எங்க காதல்தான்.."
சொர்ணலதாவை அம்போவென்று விட்டுவிட்டு.. ஆத்மா வேகநடையுடன் அங்கிருந்து விலகிச் சென்று விட்டான்.. சுண்டல் பொட்டலமும் கையுமாக.. கடற்கரைச் சாலைக்கு வந்த சொர்ணலதா...
"ஆட்டோ.." என்று போக்கு ஆட்டோவினை அழைத்தாள்...
சாருலதா தலையைப் பிடித்துக் கொண்டாள்.. எப்போதும் அவளிடம் தன்மையாகப் பேசும் சக்திவேல் அன்று ஒங்கிச் சப்தம் போட்டுக் கொண்டிருந்தார்.. அவர் முகத்தில் கோபம் விரவிக் கிடந்தது...
"இதுக்கு முதலிலாவது... ஆத்மா இங்கேயே இருக்கார்ன்னு பார்த்தேன்.. இப்ப அப்படியும் இல்லையாமே.. கனடா போகப் போகிறாராமே... "
சாருலதாவுக்கும் அது தெரியும் தான்.. காவ்யா அவளிடம் விவரத்தை சொல்லியபோது ஸ்தம்பித்துப் போய் விட்டாள்தான்.
"ஆத்மா கனடா போக வில்லிங்னஸ் கொடுத்திருக்கானாம் சாரு... உனக்குத் தெரியுமா..?"
தெரியாது.. சாருலதாவிற்கு எதுவுமே தெரியாது.. காவ்யா போனை வைத்துவிட.. இவள் பித்துப் பிடித்தவளைப் போல உட்கார்ந்து விட்டாள்.. அவள் முன்னால் உலகமே சுழல்வதைப் போல இருந்தது...
அவளுடைய ஆத்மா அவளை விட்டுவிட்டு கனடா போகிறானா..? திரும்பி வர மாட்டானா..?
அந்த ஊரில்தான் அவன் இருக்கிறான்.. தினமும் அவனைக் கண்ணாரப் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தானே அவள் வாழ்கிறாள்..? அவள் கண்பார்வையை விட்டு விலகி கனடா செல்லும் முடிவை ஆத்மா எடுத்து விட்டதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை..
அவ்வளவுதானா..? அவளுக்கென்று அவன் மனதில்  இடமில்லையா..? அவள் 'போ..' என்று சொன்னதும் அவன் போய் விடுவானா..?
"தேனாகப் பேசியதும்...
             சிரித்து விளையாடியதும்...
    வீணாகப் போகுமென்று...
             நானென்றும் நினைத்ததில்லை.."
அவள் மனதை அறிந்ததைப் போல தொலைக் காட்சியில் பாடல் ஒலிக்க.. சிலையானாள் சாருலதா...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,124,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,24,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,10,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,40,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,3,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மழைச்சாரலாய் மனம் நனைத்தாய். -31
மழைச்சாரலாய் மனம் நனைத்தாய். -31
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s320/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s72-c/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/malaisaaralaaimanamnanaiththaai-31.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/malaisaaralaaimanamnanaiththaai-31.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy