மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.. -30

30 "என்னடி என்னென்னவோ சொல்ற.. ? புரிஞ்சுதான் பேசறயா.. ?" "ம்மா.. புரிஞ்சுதான் பேசறேன்.. காதல்ங்கிறது ஒரு உயிர்க்கொல்...


30

"என்னடி என்னென்னவோ சொல்ற..? புரிஞ்சுதான் பேசறயா..?"
"ம்மா.. புரிஞ்சுதான் பேசறேன்.. காதல்ங்கிறது ஒரு உயிர்க்கொல்லி நோய்.. அது தெரிஞ்சதினாலதான் அந்தக் கருமத்தை நான் நினைச்சும் பார்க்கறதில்ல..."
"காப்பாத்தினேடி மகளே.. உன் அக்கா என்னைக் அலைக்கழிக்கிறது போதாதா.. நீயும் எதையாவது இழுத்துக்கிட்டு வந்திருந்தா என்பாடு என்னத்துக்கு ஆகும்..?"
"அதான் காப்பாத்திட்டேனில்ல.. விட்டுத் தள்ளுங்க.. இப்ப இவளை இந்த புதைகுழியில இருந்து வெளியே இழுக்கற வழியைப் பார்ப்போம்..."
"என்னத்தைப் பார்க்கிறது..? இரண்டு பேருமே பிரிஞ்சுட்டதாப் பேசிக்கிறாங்க.. ஆனா பிரிஞ்சு நிற்க மாட்டேங்கிறாங்க.. இவ மழையில நனைஞ்சா ஆத்மாவுக்கென்ன வந்தது..? கரிசனமா வீட்டில கொண்டு வந்து விடறாரு.. சரிதான்.. இரண்டு பேர் மனசிலயும் காதல்தீ மறுபடியும் பத்திக்குச்சோன்னு டெஸ்ட் பண்ணிப் பார்த்தா இரண்டு பேருமே மாறிமாறி ஒருத்தருக்கொருத்தர் அட்வைஸ் பண்ணிக்கிறாங்க..."
"நானும் கவனிச்சேன்.. சரி.. நீங்களும் டாடியும் ஏதோ பிளே பண்றீங்கன்னு லேட்டாத்தான் பிடிபட்டது..."
"காதலில் பொறாமை வரும் சொர்ணா.. அதான்.. அவரைவிட்டே இவளுக்கு கல்யாணம் பண்ணிக்கன்னு அட்வைஸ் பண்ண வைச்சோம்.. நாங்க நினைச்சதைப் போலத்தான் நடந்தது... இவ கல்யாணத்துக்கு சம்மதிக்கலை.. அவரானா கல்யாணமே வேண்டாம்ன்னு நிற்கிறாரு..."
"இதில எல்லாம் தெய்வீகக் காதலர்கள்தான்..."
"இவங்களுக்கு ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கிட்டாப் போதும் போல.. எங்களுக்கு அது போதுமா...?"
"போதாது தான்.."
"இந்தக் கொடுமையில இவ என்னடான்னா.. இற்று நூலாகிப் போறா.. பார்க்கச் சகிக்கலை..."
"நான்தான் சொன்னேனே.. காதல்ங்கிறது கொடிய நோய்ன்னு.."
"அதுசரி.. நோய்ன்னு இருந்தா.. அதுக்கு மருந்தே இருக்காதா...?"
"ஏன் இருக்காது..? இந்த நோய்க்கு மருந்து இந்த நோய்தான்.."
"என்னடி குழப்பற...?"
"குழப்பலைம்மா.. தெளிவாத்தான் சொல்றேன்.. இவளோட நோய்க்கு மருந்து ஆத்மாதான்..."
"ஆத்மா.. ஆத்மா.. அந்த மனுஷனாலதான் என் மக புத்தி பேதலிச்சதைப் போல நிக்கிறா..."
"உண்மைதான்.. அவர்தான் சாருலதாவோட நோய்.. பட்.. அந்த நோய்க்கான மருந்தும் ஆத்மாதான்.."
"இவதான் அவரை வேண்டாம்ன்னு சொல்லிட்டாளே.. அதுதான் சாக்குன்னு அந்த மனுசனும் விலகிப் போயிட்டாரே..."
"இவளும் மனசாலே வேண்டாம்ன்னு சொல்லலை.. அவரும் மனசார விலகிப் போகலை.. இரண்டு பேருமே வாய் வார்த்தையிலதான் சண்டை போட்டுக்கிறாங்க.."
"அதுதான் எங்களுக்குத் தெரியுமே.. ஆனாப் பிடிவாதமா நிற்கிறவங்களை எப்படி ஒன்னு சேர்க்கிறது..?"
சொர்ணலதா நெற்றியில் ஒற்றைவிரலால் டொக்.. டொக்கென்று தட்டியபடி யோசித்தாள்.. இப்படித் தட்டினால் மட்டும் யோசனை வந்துவிடுமா என்று புஷ்பவள்ளி யோசித்தாள்.. திடிரென்று சொர்ணலதாவின் கண்களில் வெளிச்சம் பரவியது.. அவள் 'யுரேகா' என்று கத்தாத  குறையாக.. விரலைச் சொடுக்கி..
"ஐடியா.." என்றாள்..
"என்னடி...?"
இளையமகள் ஏதோ ஒரு வழியைக் கண்டு பிடித்து விட்டாள் என்ற பரபரப்புடன் வினவினாள் புஷ்பவள்ளி..
"இரண்டு பேருக்கும் ஒருத்தர் பக்கத்திலே ஒருத்தர் இருக்கிறோம்கிற மனநிறைவு இருக்கில்லம்மா.. முதலாவதா அதை உடைக்கனும்.."
"எப்படி..?"
"அதை நான் பார்த்துக்கிறேன்.. ஆத்மாகிட்ட சொல்கிற விதமாய்ச் சொன்னா அவர் சாருவைப் பிரிஞ்சு போகிற முடிவை எடுத்திருவார்.."
"என்னடி இப்படிச் சொல்ற...? அவர் பிரிஞ்சு போயிட்டா சாருவோட நிலைமை என்னவாகிறது..? இவ அதை தாங்கிக்குவாளா...?"
"தாங்கிக்கத்தான் மாட்டா..."
"இவ நிலைமை மோசமாகிடுமே.."
"ஆகட்டும்.. அதுக்குத்தான இந்த வேலையைப் பண்ணப் போறேன்.."
"எனக்கென்னவோ பயமாய் இருக்குடி.."
"பயப்படாதீங்கம்மா.. சில நோய்க்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாகனும்.. இவங்க விசயத்தில இரண்டு பேருக்குமே அதிர்ச்சி வைத்தியம் தேவைப்படுது.. என்ன ஆனாலும் சாரு வேற ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்கிற தைரியம் ஆத்மாவுக்கு.. என்ன நடந்தாலும் ஆத்மா இவளை விட்டுப் போக மாட்டார்ங்கிற தைரியம் சாருவுக்கு.. இரண்டுமே இல்லைன்னு ஆகிட்டா இவங்க என்ன செய்வாங்க...?"
"விபரீதமா ஏதாவது நடந்திட்டா...?"
"இந்த நிலைமைக்கு எந்த விபரீதமும் பெட்டர்தான்.. கத்தியெடுக்காம ஆப்பரேசனை பண்ண முடியாது.."
"முதலாவதுன்னு சொன்னியே.. இரண்டாவதாய் எதையாவது யோசிச்சு வைச்சிருக்கியா..?"
"யெஸ்.. சாருவை நாம ஃபோர்ஸ் பண்ணனும்..."
"எதுக்கு...?"
"கல்யாணத்துக்கு.."
"இவ சம்மதிக்க மாட்டாளே..."
"அதைப் பத்தி நமக்கென்ன கவலை...?"
"ஏடாகூடமாய் எதையாவது செய்து வைச்சிட்டா..."
"அதை.. அதை.. அதைத்தான் நான் எதிர் பார்க்கிறேன்..."
"அடிப்பாவி... பேச்சுக்குத்தான் ஒற்றை பெண்ணாய் பிறந்திருந்தால் அம்மா டாடியோட அத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசா இருந்திருப்பேனேன்னு சொல்கிறன்னு பார்த்தா.. நிஜமாவே அந்தத் திட்டத்தோடதான் இருக்கறியா..? உன்னை.."
"பல்லைக் கடிக்காதீங்க.. கிட்ட வாங்க..."
"எதுக்கு...?"
"காதைக் கடிக்கத்தாள்..."
புஷ்பவள்ளி இளைய மகளை எதிரியைப் பார்ப்பதைப் போல பாசத்துடன் பார்த்தபடி அருகே வந்தாள்.. அவளும் தாயின் காதைக் கடித்தாள்.. அவள் சொல்லச் சொல்ல.. புஷ்பவள்ளியின் முகத்தில்.. பயம்.. தைரியம்.. சோகம் என்று நவரசங்களும் மாறிமாறி வந்து போயின.. கடைசியில் காதை பத்திரமாக விடுவித்துக் கொண்டு...
"இதெல்லாம் நடக்கும்கிற...?" என்று அவநம்பிக்கையோடு கேட்டாள்..
"நடக்கும்மா.. துணிஞ்சு இறங்கலாம்.. துணிவே துணை.."
"எதுக்கும் உன் டாடி காதில ஒருவார்த்தை போட்டிரலாமா...?"
"வேணாம்.. என்கவுண்டர் ஏகாம்பரம்.. டிராமாவை உண்மையாக்கனும்னு கிளம்பிட்டா வம்பு.. ஏற்கனவே.. அவருக்கு வாரிசா.. அவரோட ஜீனியரை இந்த வீட்டு மாப்பிள்ளையாக்கிரனும்னு கனாக் கண்டுக்கிட்டு இருக்கார்.. அதனால வம்பே வேணாம்..."
"நீ சொல்றதும் சரிதான்.."
"நீங்க உங்க பங்குக்கு அப்பாவுக்கு ஸ்க்ரூ கொடுங்க.. நான் என் பங்குக்கு ஆத்மாகிட்ட நியாயம் கேட்டு நெடும்பயணத்த ஆரம்பிக்கிறேன்.."
"நெடும் பயணமா...?"
"பின்னே...? நம்ம வீட்ல இருந்து  ஆத்மாவோட ஆபிஸ் ரொம்ப தூரமாச்சே.. பக்கத்திலயா இருக்கு...?"
சொர்ணலதாவின் நியாயத்தில் சிரிப்பை மறந்திருந்த புஷ்பவள்ளிக்கு லேசான சிரிப்பு வந்தது..
"வாய்தாண்டி உன்னை வாழ வைக்குது.." என்று சின்ன மகளின் கன்னத்தைத் தட்டினாள்..
ஆத்மாவின் செல்போன் அலறியது.. எடுத்துப் பார்த்தான்.. தெரியாத நம்பராக இருந்தது.. காதுக்குக் கொடுத்து
"ஹலோ.." என்றான்..
"நான் சொர்ணலதா.." என்றது மறுமுனை..
'இவ எதுக்காக என்னிடம் பேசறா...' என்ற யோசனையுடன்..
"ஹாய்.. ஹவ் ஆர் யு..." என்று கேட்டான் ஆத்மா..
"உங்களைப் போல ஆளுக பூமியில இருந்தா... நாங்க எப்படி நல்லாயிருக்க முடியும்...?" மறுமுனையில் சொர்ணலதா கோபமாக பேசினாள்..
"வாட்...?" ஆத்மாவின் புருவங்கள் உயர்ந்தன..
"நான் உங்களிடம் பேசனும்..."
"பேசலாமே.. இப்ப நான் ஃபரீயாத்தான் இருக்கேன்.. நீ எங்க இருக்க...?"
"உங்க ஆபிஸ் வாசலில்.."
"அங்க நின்றுக்கிட்டு போனில் பேசனுமா...? உள்ளே வரவேண்டியது தானே.."
"எதுக்கு...? என் அக்காகிட்ட என்னை மாட்டி விடறதுக்கா...?"
அவளின் கேள்வியில் ஆத்மாவின் புருவங்கள் அதிகமாக உயர்ந்தன..





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.. -30
மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.. -30
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s320/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s72-c/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/malaisaaralaaimanamnanaiththaai-30.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/malaisaaralaaimanamnanaiththaai-30.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy