மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.-27

27 வானத்தில் மின்னிய மின்னல் ஆத்மாவின் மனதிலும் மின்னியது.. என்னதான் மழையாக இருந்தாலும்.. ஆத்மாவைத் தவிர வேறு ஒருவன் பக்கத்தில் இரு...


27


வானத்தில் மின்னிய மின்னல் ஆத்மாவின் மனதிலும் மின்னியது.. என்னதான் மழையாக இருந்தாலும்.. ஆத்மாவைத் தவிர வேறு ஒருவன் பக்கத்தில் இருந்திருந்தால்.. அம்மா என்ற அலறலோடு அடைக்கலம் தேடி சாருலதா அவனைக் கட்டிக் கொண்டு மார்பில் முகம் புதைத்திருப்பாளா...?
'இவ என்னை விட்டு விலகிட்டாளாம்...'
கோபத்துடன் அவளை இறுக்கிக் கொண்டான் ஆத்மா.. கொட்டிய மழைத்துளிகள் அவர்கள் இருவரையும் குளிப்பாட்டி மகிழ்ந்து கொண்டிருக்க..
"பயப்படாதே.. நான் பக்கத்திலிருக்கேனில்ல...?" என்று அவள் முதுகில் தட்டிக் கொடுத்து சமாதானப் படுத்தினான்..
ஒருவழியாய் நடுக்கம் ஒய்ந்ததும்.. சாருலதா அவனிடமிருந்து விலகி நின்றாள்...
"அதுக்குள்ள என்ன அவசரம்...?" கோபப்பட்டான் ஆத்மா..
"நான் போகனும்..." முணுமுணுத்தபடி.. முகத்தில் வழிந்த நீரை கையால் வழித்து விட்டாள் சாருலதா...
"போ.. அதான் விட்டுட்டுப் போயிட்டல்ல...? அதுக்கப்புறமும் எதுக்காக வியாக்கினம் பேசற...? உன்னைப் போக வேணாம்ன்னு நான் சொன்னேனா...?" எரிச்சல்பட்டான் அவன்...
சாருலதா எதுவும் பேசாமல் ஸ்கூட்டியை உதைப்பதைத் தொடர்ந்தாள்.. மற்ற நாள்களில் எல்லாம் சமத்துப் பிள்ளையைப் போல சொன்னபடி கேட்கும் அந்த ஸ்கூட்டி.. அன்று மட்டும் பிடிவாதத்துடன் கிளம்புவேனா என்று அடம் பிடித்தது..
"அதான் எத்தனை உதை கொடுத்தாலும் கேட்க மாட்டேன்னு நிற்குதே.. அப்புறமும் எதுக்காக அதைப் போட்டு படுத்தி எடுக்கிற...?"
இப்போது முகத்தில் வழிந்த நீரை வழித்து விடுவது ஆத்மாவின் முறையாக இருக்க.. அவனை நிமிர்ந்து பார்த்தாள் சாருலதா.. சொட்டச் சொட்ட நனைந்திருந்தவனை.. தலைமுதல் கால்வரை பார்த்தவள்..
"எனக்காக யாரும் நனைய வேணாம்..." என்றாள்..
"அதை இப்பச் சொல்லு.. கொஞ்ச நேரத்துக்கு முன்னால இடி இடிச்சதும் அம்மான்னு அலறிக்கிட்டு என்னைக் கட்டிப்பிடிச்சயே.. அப்ப நான் நனைஞ்சிருக்கேன்னு உனக்குத் தெரியலையா...?"
"நான் ஒன்னும் யாரையும் நனையச் சொல்லலை..."
"யாரையும்ன்னு யாரைச் சொல்ற...? தெருவில் பேகிறவனையா...?"
"நான் அப்படிச் சொல்லலை..."
"வேற எப்படிச் சொன்ன...?"
"எதுக்காக மழையில நனையனும்...?"
"உன்னைக் காதலிச்சு தொலைச்சுட்டேனில்ல.. அதுக்காகத்தான் நனையறேன்.. போதுமா...? நகரு..."
"எதுக்கு...?"
"உன் வண்டி எதுக்காக அடம் பிடிக்குதுன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்ன்னுதான்.. உன் கூடத்தான் பேச்சுவார்த்தை நடத்த முடியல.. உன் வண்டிகூடவாவது பேசலாமில்ல...?"
அவளை இழுத்து நகர்த்திவிட்டு வண்டியின் அருகே ஆத்மா குனிய முயன்ற போது.. வானில் வெள்ளிக் கோடாய் அடுத்த மின்னல் வந்தது.. அதைத் தொடர்ந்து இடியும் வர.. சாருலதா.. கதைப் பொத்திக் கொண்டு "அம்மா" என்று அலறினாள்.. இப்போது அவள் சாய்ந்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லாமல் ஆத்மாவின் கை அவளைச் சுற்றி வளைத்து இழுத்து அணைத்துக் கொண்டது.. அவன் மார்பில் முகம் புதைத்திருந்தவளின் உடலில் தென்பட்ட நடுக்கத்தில் ஆத்மாவின் மனம் இளகியது..
'இவள்தான் எத்தனை மென்மையானவள்..'
அவளின் முதுகைத் தட்டிக் கொடுத்தபடி.. அவளை தைரியப்படுத்த முயன்றான் ஆத்மா..
"ஏண்டி.. மழையில நனையறதுன்னா உனக்கு அல்வா சாப்பிடறதைப் போல.. ஆனா.. இடியும் மின்னலும் வந்தா பயந்து நடுங்கற...?"
அவள் பதில் சொல்லாமல் விலகி நின்றாள்.. கொட்டும் மழைத்தாரைகளுக்கு இடையே அவள் ஓவியம் போல நின்று கொண்டிருந்ததில் மனம் லயித்தான் ஆத்மா..
"உனக்கு மழை பிடிக்கும்.. ஆனா இடின்னா பயம்.. இதை என்னன்னு சொல்றது...?"
"எப்படி வேணும்னாலும் சொல்லிக்கங்க.."
"இப்ப மழை மட்டும்தான கொட்டுது.. இடி வந்து போயாச்சில்ல.. இப்படித்தான் பேசுவ.. சரி சரி.. வா"
"எங்கே..."
"என் காருக்கு.."
"நான் வரமாட்டேன்..."
"நானும் விட மாட்டேன்..."
ஆத்மா அவள் இடுப்புக்குக் கீழே கை கொடுத்து அலேக்காக தூக்கிக் கொண்டு போய் காரின் முன்பக்க சீட்டில் அவளை உட்கார வைத்து கதவை மூடினான்.. சாருலதா இறங்க முயல்வதற்குள் காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்து காரைக் கிளப்பி விட்டான்
"கிட்நாப் பண்றீங்களா...?"
"ஆமாம்.. உன் அப்பனுக்கு போன் போட்டுச் சொல்லு.. என்கவுண்டர் ஏகாம்பரம் வந்து என்னை என்கவுண்டர் பண்ணட்டும்.."
"வம்பு வளர்க்கறிங்களா...?"
"ஏண்டி.. அது என்ன செல்லப்பிராணியாடி.. அதை வளர்த்து நான் என்ன செய்யப் போறேன்...?"
"என்னை எதுக்காக காரில் கூப்பிட்டுக்கிட்டுப் போறிங்க...?"
"ஏன்னா.. எனக்கு ஆயிரத்தைந்து வேலை இருக்கு.. அதனால கூப்பிட்டுக்கிட்டுப் போறேன்.."
"உங்க வேலையைப் பார்க்க என்னைக் கூப்பிட்டுக்கிட்டுப் போயாகணுமா...?"
"வேற என்னத்தைப் பண்றது..? உனக்கு மழையில நனையறதுன்னா இஷ்டம்.. மழையோடு சேர்ந்து வர்ற இடிச்சத்தத்தைக் கேட்டாக் கஷ்டம்.. அம்மான்னு அலறிக்கிட்டு பக்கத்தில் நிக்கிறவங்களைக் கட்டிப் புடிச்சுக்குவ... உனக்காக பக்கத்தில நின்னு இடி வருகிறப்ப கட்டிப் பிடிச்சு ஆறுதல் சொல்லிக்கிட்டே இருக்க முடியுமா...? வேலையிருக்கும்மா.."
ஆத்மா சுவராஸ்யமாக சொல்லிக் கொண்டேவர.. சாருலதாவிற்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்தது..
"அப்படி எத்தனை பேரைக் கட்டிப் பிடிச்சேனாம்...?"
"ஹா... ஹா..."
"இப்படிப் பேசினா நான் சும்மாயிருக்க மாட்டேன்.."
"என்ன செய்வ...? என் கவுண்டர் ஏகாம்பரத்துகிட்ட போட்டுக் கொடுத்துருவியா...? நீ செய்தாலும் செய்வ.. யாரு கண்டது.."
சாருலதாவுக்கு கண்கள் கலங்கி விட்டன.. இவன் என்னவெல்லாம் சொல்கிறான் என்று கொதித்துப் போய் விட்டாள் அவள்.. பக்கத்தில் யார் வந்து நின்றாலும்.. இடிக்குப் பயந்து அவர்களைக் கட்டிக் கொள்வாளாம். அதோடு மட்டுமில்லாமல் ஆத்மாவைப் பற்றி அவருடைய அப்பாவிடம் போட்டுக் கொடுப்பாளாம்..
அவள் மூக்கை உறிஞ்சியதில் அவளைத் திரும்பிப் பார்த்த ஆத்மா.. காரின் முன்பக்க டாஷ்போர்டைத் திறந்து டவலை எடுத்து நீட்டினான்.. அவளோ அதை வாங்கிக் கொள்ளாமல் முறைத்தாள்..
"என்னடி...?"
"நான் கேட்டேனா...?"
"எதைச் சொல்ற...? நீ கட்டிப் புடிச்சப்ப.. நான் முதுகில் தட்டிக் கொடுத்தேனே.. அதையா சொல்ற..?"
'நீ அதிலேயே நில்லு..' சாருலதாவின் கன்னம் சிவந்து போனது.. அதை ஓரக்கண்ணால் பார்ப்பதிலே ஓர் சுகம் இருப்பதை அனுபவித்து உணர்ந்தான் ஆத்மா..
"எதையெதையோ பேச வேணாம்.."
"எதையெதையோன்னா.. எதைச் சொல்ற...?"
"இந்த டவலை நான் கேட்டேனான்னுதான் கேட்டேன்.."
"நீ கேட்டுத்தான் இடிச்சத்தத்தில பயந்தவள நான் கட்டிப் பிடிச்சுக்கிட்டேனா...?"
சாருலதா உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. ஆத்மாவின் மனதில் உல்லாசம் பிறந்தது.. அந்த மழை நேர மாலையில் அவளருகில் அமர்ந்து இதைப் போன்று உரையாட அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது..
"உங்களை யாரு அங்கே வரச் சொன்னது..?"
"நீதான் வரச் சொன்ன..?" அவன் நிதானமாகச் சொன்னான்..
"என்னது...?"
"யெஸ்.. கொட்டற மழையில உன் வண்டியை உதைச்சுக்கிட்டு நீ நின்னா விட்டுட்டுப் போக என்னால முடியுமா...?"
"விலக்கி வைச்சவர்.. விட்டுட்டுப் போக முடியலைன்னு சொல்கிறது வேடிக்கையாய் இருக்கு.."
"என்ன சொன்ன...?"
"நீங்க சொன்னதைத்தான் சொன்னேன்.. உங்களுக்கு நான் வேணாம்ன்னு சொன்னவர்தானே நீங்க..? இப்ப என்ன கரிசன மழை பொங்கி வழியுது..? என் முகத்திலே முழிச்சாலும் பாவம்ன்னு சொன்னவர்.. என்மேல இரக்கப்படறதைப் பார்த்தா வேடிக்கையா இருக்காதா...? எனக்கு என்னவானாலும் உங்களுக்கென்ன வந்ததாம்...?"
அவளுடைய பேச்சில் ஆத்மா காரை நிறுத்தி விட்டான்.. ஆள் நடமாட்டமில்லாத சாலையின் ஓரமாக நின்று விட்ட காரின் மேல் கொட்டி வழிந்த மழைத்துளிகள்... தாரைதாரையாய்  ஜன்னல் கண்ணாடிகளில் இறங்கிக் கொண்டிருந்தன..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.-27
மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.-27
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s320/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s72-c/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/malaisaaralaaimanamnanaiththaai-27.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/malaisaaralaaimanamnanaiththaai-27.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy