மழைச்சாரலாய் மனம் நனைத்தாய். -28

28 ஆத்மாவின் முகத்தில் குடி கொண்டிருந்த உல்லாசம் காணாமல் போயிருந்தது.. அவளையே உறுத்துப் பார்த்தான் அவன்.. அந்தப் பார்வையின் வேகம் தாங...


28

ஆத்மாவின் முகத்தில் குடி கொண்டிருந்த உல்லாசம் காணாமல் போயிருந்தது.. அவளையே உறுத்துப் பார்த்தான் அவன்.. அந்தப் பார்வையின் வேகம் தாங்காமல் அவள் தலை குனிந்தாள்..
சொட்டச் சொட்ட நனைந்திருந்தவள்.. குளிர் தாங்க முடியாமல் நடுங்கியதைப் பார்த்தவன்.. கையிலிருந்த டவலால் அவளுக்கு துடைத்து விட ஆரம்பித்தான்..
"என்.. என்ன செய்றிங்க...? " அவள் வார்த்தைகளால் தந்தியடித்தாள்..
"துவட்டி விடறேன்.. தெரியலை..? நான் சொன்னதையெல்லாம் நினைப்பில் வைத்திருந்து சொல்லத் தெரிஞ்சவளுக்கு இது தெரியலைன்னா ஆச்சரியமாத்தான் இருக்கு.."
அலட்சியமாக பேசியபடி அவன் துவட்டி விடுவதைத் தொடர்ந்தான்.. அவன் விரல் பட்டு குளிர்ந்த மேனி கொதிக்க ஆரம்பித்தது.. தாள மாட்டாத தவிப்புடன் அவன் கையிலிருந்த டவலைப் பிடுங்கினாள் சாருலதா..
"எனக்குத் துவட்டிக்கத் தெரியும்..."
"இதை முதலிலேயே செய்கிறதுதானே...? அதை விட்டுட்டு எதையெதையோ தூண்டிலைப் போட்டு இழுத்துக்கிட்டு வந்த.."
"இருந்ததைத்தானே இழுத்தாங்க...? இல்லாததையா இழுத்தாங்க...?"
"எப்படி அது வந்தது..? சொல்லு.. நானும் கேட்டுக்கிறேன்.. விலகிப் போயிடுன்னு நீதானேடி சொன்ன...?"
ஆத்மா நிதானமாகக் கேட்க.. மனதில் அடி வாங்கினாள் சாருலதா.. அவள் 'போ' என்று சொன்னால் அவன் போய் விடுவானா..?
அவளின் பார்வையில் எதைக் கண்டானோ.. ஆத்மா பேச்சை நிறுத்திக் கொண்டான்..
"சொன்னது நீதானா...
             சொல் சொல்.. என்னுயிரே...."
காரில் இருந்த எப்.எம் நேரம் காலம் தெரியாமல் பாடி வைத்தது...
"இது வேற.. சொல்கிறதையெல்லாம் இவளுக சொல்லிருவாளுக.. அதுக்கப்புறமா.. சொன்னது நீதானா.. சொல்லு... சொல்லுன்னு உயிரை வாங்குவாளுக.." எரிச்சலுடன் எப்.எம்மில் சேனலை மாற்றி வைத்தான் ஆத்மா...
அவனது அந்த எரிச்சலில் சாருலதாவுக்குள் ஏதோ நிகழ்ந்தது... அவனின் அடாவடித்தனமான அந்தப் பேச்சை ரசித்தாள் அவள்..
"சொல்கிறதைப் போல ஏன் வைச்சுக்கணும்..?"
ஆத்மாவின் விழிகள் ரத்தமென சிவந்தன.. அவளை முறைத்துப் பார்த்தவன்..
"இன்னும் எத்தனை முறைடி இதைச் சொல்லிக் காண்பிச்சுக்கிட்டு இருப்ப...? ஆயுசு முழுமைக்கும் இதைச் சொல்லிச் சொல்லியே காலத்தை ஓட்டப் போறியா...?"
'ஆயுள் முழுவதும் இவன் கூட நான் இருக்க முடியுமா...?' ஏக்கத்துடன் அவள் மௌனித்தாள்..
"வாதத்துக்கு மருந்திருக்குடி.. பிடிவாதத்துக்கு மருந்து கிடையாது... உன்னைத் திருத்த முடியும்ன்னு எனக்குத் தோணலை.. நீ பிடிச்ச பிடியை விட மாட்ட.. உன்னை மலையிறக்கவும் என்னால முடியாது..."
"செஞ்சதெல்லாம் நீங்க.. என்மேல பழி போடறிங்களா..? நீங்க என்னவோ உத்தம புத்திரனைப் போலவும்.. நான்தான் வீணாப் பழி போட்டுக்கிட்டு இருக்கிறதைப் போலவும் பேசி வைக்கறிங்களே..."
"நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நான் உத்தம புத்திரன்தான்.."
"வேணாம்.. வாய் விடாதிங்க.. சொல்லிட்டேன்.."
"ஏய்ய்.. நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்கடி.. காலேஜ் டயத்தில அந்தப் பொண்ணக் காதலிச்சேன்னு சொல்லிக்கிட்டு ஊரைச் சுத்தினேன்தான்.. ஆனா.. என் விரல் கூட அவ மேல பட்டதில்லை.. இங்கே அப்படியா..?"
அழுத்தமான குரலில் ஆத்மா கேட்டதில் சாருலதாவின் வாயடைத்துக் போனது.. மனதிற்குள் இன்பம் ஊற்றெடுப்பதை உணர்ந்தாள் அவள்..
"அவ பக்கத்தில இருக்கிறப்ப.. அதை மத்தவங்க பார்க்கிறாங்களான்னு தான் என் கண்ணு போகும்.. மத்தவங்க கவனிச்சா என் மனசுக்கு குஷியாகிடும்.. அவகிட்ட உரிமையோட பேச ஆரம்பிச்சிருவேன்.. அது மத்தவங்களுக்காக போட்ட நாடகம்டி.. இங்கே அப்படியா...? நீ பக்கத்தில இருந்தா எனக்கு உலகமே மறந்து போகும்டி.. உன் நினைப்பு மட்டும்தான் என் மனசில நிற்கும்.. இது புரியாம நீ பினாத்தினா அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது.."
ஆத்மா காரைக் கிளப்பினான்.. கிளம்ப வேண்டுமே என்றிருந்த மனத்தை இறுக்கிப் பிடித்தாள் சாருலதா..
'வேண்டாம்.. வீணாய் ஆசைப்படாதே.. இவன் உன்னைக் காதலிக்கிறதுக்கு முந்தியே வேறொருத்தியைக் காதலித்தவன்...'
சாருலதாவின் வீட்டின் முன்னால் கார் நின்றது.. வாசலில் சக்திவேலின் ஜீப் நின்று கொண்டிருந்தது.. யாரோ ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த சக்திவேல்.. ஆத்மாவின் காரை அடையாளம் கண்டு கொண்டார்.. லேசான தூறலுடன் கூடிய மழையில் நனைந்தபடி காருக்கருகே வந்து குனிந்து பார்த்தார்.. சாருலதா காரை விட்டு இறங்கினாள்.. அவரின் புருவங்கள் சுருங்கின.. ஆத்மாவைக் கேள்வியாகப் பார்த்தார்...
"மழையில நனைஞ்சுக்கிட்டு இருந்தாங்க.. அவங்க ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகலை.. அதான்.. டிராப் பண்ண வந்தேன்.." ஒட்டுதல் இல்லாத குரலில் சொன்னான் ஆத்மா...
"தேங்க் யு.. உள்ளே வாங்க.. காப்பி சாப்பிட்டுட்டு போகலாம்.." சக்திவேல் அழைத்தார்..
"நோ தேங்க்ஸ்..."
"அப்படிச் சொன்னா எப்படி..? என் பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணியிருக்கீங்க.. இந்த மழையில அவளை வீட்டில வந்து டிராப் பண்ணியிருக்கீங்க.. வாசல் வரைக்கும் வந்தவரை வாசலோடு அனுப்பினா வள்ளி என்னைக் கோவிச்சுக்குவா.. அதனால தான் சொல்றேன்... வீட்டுக்குள்ள வந்துட்டுப் போங்க..."
சக்திவேலின் வற்புறுத்துதலில் ஆத்மா காரை விட்டு இறங்கினான்.. அவருடன் பேசியபடி வீட்டுப் படியில் ஏறினான்.. அவனும் கூட வருவதில் சாருலதாவிற்குள் ஒர் நிம்மதி பரவியது.. உற்சாகத்துடன் வீட்டுக்குள் போனவள்..
"அம்மா.." என்று அழைத்தாள்...
"அம்மா உன்னைப் பார்த்தாச்சு.. கிச்சனுக்கு போயிருக்காங்க.." என்ற சொர்ணலதா.. ஆத்மாவைக் கண்டதும்...
"ஹலோ சார்.. எங்கே இவ்வளவு தூரம்..? எங்க நினைப்பெல்லாம் உங்களுக்கு இருக்கா..?" என்று கேட்டாள்...
சொர்ணலதாவின் கேள்விக்கு ஏதோ ஒரு பதிலைச் சொல்லிச் சமாளித்த ஆத்மாவை காபியுடன் வந்த புஷ்பவள்ளி வரவேற்றாள்...
"என்னடி இப்படி நனைஞ்சிருக்க..? போ.. போய் துணியை மாத்து.." என்று மகளைக் கடிந்து கொண்டவள்..
"நீங்களும் நனைஞ்சிட்டிங்க போல..." என்று ஆத்மாவிடம் கேட்டாள்...
"அதையேன் கேட்கிற வள்ளி.. உன் மகளுக்குத்தான் தலையெழுத்து.. ஸ்கூட்டி கூட மழையில நனைஞ்சுக் கிட்டு மல்லுக்கட்டியிருக்கா.. இவருக்கென்ன தலையெழுத்துன்னு தெரியலை.. காரை வைச்சிருக்கிறவர் காருக்குள்ள உட்காராம காரை விட்டு இறங்கி மழையில நனைஞ்சிருக்காரு.." சக்திவேல் இயல்பாக பேசினார்...
எதுவுமே நடக்காததைப் போல அவர்கள் உரையாடிக் கொண்டதில் சாருலதாவுக்குள் மகிழ்ச்சியின் பூப் பூத்தது.. அவள் உடை மாற்ற வேண்டும் என்ற நினைப்பில்லாமல் சொர்ணலதாவின் பக்கத்தில் அமர்ந்து விட்டாள்... அவர்கள் பேசப்பேச.. ஏதோ ஒரு மாற்றம் நிகழப் போகிறது என்று அவளுக்கு தோன்றி விட்டது..
அப்படியொரு மாற்றம் நிகழ வேண்டுமென்று அவளின் ஆழ்மனது ஆசைப்பட்டதை உணர்ந்து கொண்டவளால் அதை வாய் விட்டுச் சொல்ல முடியவில்லை...
"அப்புறம்..? உங்க வேலையெல்லாம் எப்படிப் போய்க்கிட்டு இருக்கு..?"
"அதுக்கென்ன சார்.. வழக்கம் போலத்தான் போய்க்கிட்டு இருக்கு.."
"உங்களிடம் ஓர் உதவி கேட்கனுமே..."
"கேளுங்களேன்..."
"சாருவை நல்ல இடங்களில் இருந்து பெண் கேட்டு வர்றாங்க.. ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ், கோடிஸ்வர பிஸினெஸ் மேன்னு வந்து நிற்கிறாங்க.. எல்லோருமே நெருங்கின சொந்தபந்தம்தான்.. சாருதான் பிடிகொடுக்க மாட்டேங்கிறா.. நீங்கதான் அவளுக்கு புத்தி சொல்லனும்.."
என்னவோ.. ஒரு நண்பனாகப் பழகியவனிடம் கேட்பதைப் போல சக்திவேல் சொல்லி வைக்க.. அதை முகத்தில் எந்தவிதச் சலனமும் இல்லாமல் கேட்டுக் கொண்டான் ஆத்மா...
"சொல்லிட்டாப் போச்சு..." என்றவன் சாருலதாவின் பக்கம் திரும்பி
"என்னங்க சாரு.. உங்க அப்பாதான் பெரிய.. பெரிய இடத்து மாப்பிள்ளைகளை சொல்கிறாரே.. அதில ஒருத்தரை செலக்ட் பண்ணி மேரேஜ் பண்ணிக்க வேண்டியது தான..? எதுக்குத் தள்ளிப் போடறிங்க..? பெத்தவங்களையும் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க.. அவங்க கடமையை அவங்க செய்ய வேணாமா..?" என்று கரிசனத்துடன் புத்தி சொன்னான்...
சாருலதா இடிந்து போய் விட்டாள்.. அழகான இசையை மீட்டிய யாழின் நரம்பு அறுந்து போனதைப் போல உணர்ந்தாள்.. இப்படிப்பட்ட புத்திமதியைச் சொல்லச் சொல்லி சக்திவேல் கேட்பாரென்ரோ.. அதைக் கேட்டுக் கொண்டு அப்படியே ஆத்மாவும் புத்தி சொல்வானென்றோ அவள் எதிர்பார்க்கவேயில்லை...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மழைச்சாரலாய் மனம் நனைத்தாய். -28
மழைச்சாரலாய் மனம் நனைத்தாய். -28
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s320/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s72-c/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/malaisaaralaaimanamnamnanaiththaai-28.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/malaisaaralaaimanamnamnanaiththaai-28.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy