ஏதோ ஒரு நதியில்.. -4

4 பூஜா லண்டனில் படித்துக் கொண்டிருலுக்கும் போதே அவளுக்கு விளம்பரத் துறையில் ஆர்வம் வந்து விட்டது. அது சம்பந்தமான படிப்பையும் மேல் படி...


4

பூஜா லண்டனில் படித்துக் கொண்டிருலுக்கும் போதே அவளுக்கு விளம்பரத் துறையில் ஆர்வம் வந்து விட்டது. அது சம்பந்தமான படிப்பையும் மேல் படிப்பாக லண்டனில் படித்துவிட்டு இந்தியா திரும்பியவுடன் மும்பையில் தங்கி விட்டாள்.
பொள்ளாச்சியில் மிகப் பெரிய செல்வந்தராகவும் வியாபாரியாகவும் இருக்கும் விநாயகம், மகள் கேட்டவுடன் அவளுக்காக கோடிக்கணக்கான ரூபாயில் அபார்ட்மென்ட் வாங்கிக் கொடுத்து விளம்பரக் கம்பெனியும் வைத்துக் கொடுத்து விட்டார்.
பூஜா அவள் எடுத்த முதல் விளம்பரப் படத்திலேயே மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து விட்டாள்.
'யாரிந்த புதுப் பெண்' என்ற கேள்வியுடன் விளம்பர உலகம் அவளைத் திரும்பிப் பார்த்தது. வாய்ப்புக்கள் குவிந்தன... பணம் தேடி வந்தது...  தகப்பனார் கொடுத்த பணத்தை அவரிடமே அவள் திருப்பிக் கொடுத்தபோது அவர் ஆச்சர்யப்பட்டுப் போனார்.
"எப்படிம்மா... பணம் காய்க்கும் மரம் எதையாவது நட்டு வைத்திருக்கிறாயா? பறித்துக் கொண்டு வந்து விட்டாயா?"
"நான் ஏர்ன் பண்ணியது அப்பா."
"இவ்வளவா...?"
"இதற்கு மேலும் இனி சம்பாதிப்பேன் அப்பா."
சொன்னது போலவே சம்பாதித்தாள். அவளுக்கு விருப்பமான துறையில் ஈடுபாட்டோடு வேலை பார்த்து வெற்றிகளைக் குவித்தாள். ஒரு நாள் மாலையில்
அவள் அபார்ட்மென்டிற்குத் திரும்பி வந்த போது அவளது தந்தை பொள்ளாச்சியிலிருந்து வந்திருந்தார். அவசரமாய் அபார்ட்மென்டைத் திறந்தாள் பூஜா.
"வாங்கப்பா... நேரமாகி விட்டதா...?"
"இல்லைம்மா... இப்போதுதான் வந்தேன்..."
"அட்வர்டைசிங் கம்பெனிக்கு வந்திருக்கலாமே அப்பா.."
"எப்படியும் நாம் இங்குதானே வந்தாக வேண்டும்... அப்பாவுக்கு வயதாகி விட்டதும்மா... அலைய முடியவில்லை..."
பூஜா பதறி விட்டாள். விநாயகத்தை அமர வைத்து விட்டு சூடாய் காபி போட்டுக் கொண்டு வந்தாள்.
"நைட்.. சாப்பிட எங்கே போகலாம் பா...?"
"ஏம்மா... இந்த வீட்டில் சமையல் கட்டு கிடையாதா?"
"அப்பா..." பூஜா சிரித்தாள்.
"நான் சமைக்கிறது இல்லைப்பா. வெளியில்தான் சாப்பிட்டுக்குவேன்."
"ஏம்மா..."
"பாஸ்ட்.. எனக்கு சமைக்கத் தெரியாது. செகன்ட். எனக்கு அதற்கு நேரம் கிடையாது அப்பா.. ஐ ஆம் ஆல் வேஸ் பிஸி..."
விநாயகத்தின் முகத்தில் கவலை தெரிந்தது.
"என்னம்மா இப்படிச் சொல்றே.. தாயில்லாத பெண்ணை விநாயகம் இப்படி வளர்த்திருக்கிறானேன்னு நாலு பேர் என்னைப் பார்த்துச் சொல்லி விடக் கூடாது அம்மிணி..."
"நான்கு பேர் ஏன்ப்பா என்னைப் பற்றிக் கமென்ட் பண்ண வேண்டும்?"
"அப்படியெல்லாம் பேசக் கூடாது அம்மிணி. பெரிய வங்க சொன்னால் கேட்டுக்கோணும்.. வாழப் போகிற இடத்தில் எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கோணும்."
"அப்பா.. ப்ளீஸ்... ஏன் என்னவோ போல் பேசுகிறீங்க..? இத்தனை நாள் நான் இப்படித்தானே இருந்தேன்? இன்றைக்கு என்ன புதிதாய் இத்தனை தடை உத்தரவு போடுகிறீர்ங்க..?"
"இத்தனை நாள் போல இனியும் இருக்க முடியாது அம்மிணி... உனக்குக் கல்யாண வயசாகிட்டது இல்லையா? நல்ல இடத்தில் நான் உன்னைக் கல்யாணம் கட்டிக் கொடுக்கோணும் இல்லையா?"
"அப்பா... மேரேஜ் பண்ணிக்கும் ஐடியாவே எனக்கு இல்லை..."
"இது என்ன அம்மிணி இப்படிப் பேசிப்புட்டே... போ... போய் வாயைக் கழுவு... ஆத்தாடி... அப்பனுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கோணுமின்னு உனக்குக் கொஞ்சம் கூட எண்ணமே இல்லையா அம்மிணி..."
"அப்பா... இந்த மும்பையில் எனக்கென்று ஒரு நல்ல பெயர் இருக்கிறது... என் அப்பா என்பதால் உங்களுக்குப் பெருமைதான் கிடைக்கும்... நான் அப்படித்தான் நடந்து வந்திருக்கிறேன்..."
"அப்புறம் ஏன் அம்மிணி கல்யாணம் வேண்டாம்கிற?"
"அப்பா.. எனக்கு இன்னும் சாதிக்க வேண்டும் மேரேஜ் அதற்கு ஒரு தடைக்கல்லாக இருக்கக்கூடாது.. நான் என் புரபொஷனை நேசிக்கிறேன் அப்பா..."
"கிறுக்குத்தனமாய் பேசாதே அம்மிணி... யாருக்குமே கிடைக்காத வாழ்க்கை உனக்குக் கிடைத்திருக்கு. அதைப் பற்றி யோசிக்காமல் வேறு எதையோ பினாத்திக்கிட்டு இதுக்கிறாயே... என்னவோ படம் எடுக்கணும்னு ஆசைப் பட்டாய்... கொஞ்ச நான் உன் ஆசைப்படியே விட்டுப் பிடிக்கலாம்ன்னு விட்டு வைச்சேன்.. நீயும் உன் ஆசைப் படி இருந்து விட்டாய்... இனியும் இங்கே நீ தனியாய் இருக்க முடியாது. என்னோடு உடனே கிளம்பி வா..."
"அப்பா... இது என்ன பிடிவாதம்? எனக்கு இங்கே நிறைய வேலைகள் இருக்கின்றன. நான் ஒப்புக் கொண்ட விளம்பரங்களை முடித்துக் கொடுக்க வேண்டும். நான் ஓர் நாள் கூட மும்பையை விட்டு நகர முடியாது..."
"அப்படியா"
விநாயகம் கோபத்துடன் பூஜா கூப்பிடக் கூப்பிட கிளம்பிப் போய் விட்டார். பூஜாவிற்கு மனதிற்குக் கஷ்டமாக இருந்தது. ஒரு நாள்கூட கடிந்து பேசாத தந்தை... இன்று இந்த அளவிற்குப் பேசி விட்டாரே... போனில் அழைத்தால் போனை அணைத்து விட்டார்.
ஓர் நாள் நள்ளிரவில் அவளுக்கு போன் வந்தது. அவளது சித்தப்பாவின் மனைவி சிந்தாமணி பேசினாள்.
"பூஜா... உன் அப்பாவிற்கு உடம்பு சீரியஸாய் இருக்கு உடனே கிளம்பி வா..."
"சித்தி... அப்பாவுக்கு என்ன ஆச்சு..."
"ஒன்றும் சொல்ல முடியவில்லை உடனே கிளம்பி வா..."
பூஜா பதறிப் போய் கிளம்பினாள். தாயில்லாத மகளுக்கு தாயுமானவனாய் இருந்து வளர்த்த தந்தைக்கு என்ன ஆயிற்று... உடனே பிளைட் பிடித்துக் கோயம்புத்தூர் ஏர்போர்ட்டில் இறங்கினாள். அவளை அழைத்துப் போக அவளது சித்தப்பா தண்டாயுதபாணி வந்திருந்தார்.
"சித்தப்பா... அப்பாவுக்கு எப்படியிருக்கிறது...?"
"நீயே வந்து பார்..."
பூஜா பதட்டமாய் நகம் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். பொள்ளாச்சியில் கார் நுழைந்தது. அவளது பிரம்மாண்டமான வீடு இருக்கும் தெருவை அடைத்துப் பந்தல் போடப்பட்டிருந்தது. வீட்டு வாசலில் வாழை மரம் கட்டப்பட்டிருந்தது.
உறவுனர்கள் வருகையால் வீடே நிறைந்திருக்க அந்தக் கலகலகப்பான சூழலைக் கவனித்த பூஜா ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் இறங்கி வீட்டுக்குள் போனாள்.
ஹாலின் சோபாவில் அமர்ந்து யாருடனோ பேசிக் சிரித்துக் கொண்டிருந்த விநாயகம் பூஜாவைக் கண்டதும் மலர்ச்சியாக எழுந்து "வா.. அம்மணி..." என்றார்.
தந்தை நலமாக இருக்கிறார் என்ற நிம்மதி வந்தாலும்... ஏன் பொய் சொல்லித் தன்னை வரவழைத்தார்கள் என்ற கோபம் பொங்கி எழ அவள் "அப்பா... என்ன இதெல்லாம்..." என்று அதட்டினாள்.
அதற்குள் அங்கேயிருந்த உறவுக்காரப் பெண்ணொருத்தி அவளருகே வந்து அவள் கன்னம் தொட்டு வழித்து.
"என்ன இதெல்லாம்ன்னா... என்ன அர்த்தம் அம்மிணி... இது உன்ர கல்யாணத்திற்காக வந்திருக்கும் உறவுக்கார ஜாதி ஜனம் அம்மிணி..." என்று கூறினாள்.
"வாட்...?"
அலறிய பூஜாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மாடிப்படி ஏறினார் விநாயகம்.. தண்டாயுதபாணியும்... சிந்தாமணியும் அவசரமாய் பின் தொடர்ந்தனர் பூஜாவின் அறைக்குள் அவளை நிறுத்தி கதவைப் பூட்டிய மூவரும்... அவளை முறைத்தனர்.
"அம்மிணி... ஊரே சொல்லிச்சு... ஒத்தைப் பொண்ணு கேட்கிறான்னு அவ ஆடச் சொன்னபடி யெல்லாம் ஆடாதேன்னு.. நான் கேட்கலை அம்மிணி.. உன் இஷ்டப்படியெல்லாம் ஆடினேன். வெளி நாட்டுக்குப் போய் படிப்பேன்னு ஒத்தைக்காலில் நின்னே... சரின்னேன்... மும்பையில் வீடு வாங்கித் தான்னு கேட்டே... வாங்கித் தந்தேன்... கம்பெனி ஆரம்பிச்சுக் கொடுன்னே.. செய்தேன்.. இத்தனையும் வாயைத் திறக்காமல் செய்தேனே... நான் உன்கிட்ட என்ன கேட்டேன்
அம்மிணி.. ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கோன்னு தானே கேட்டேன். அது முடியாதுன்னு சொல்லிட்டேயே... உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்காமல் நான் இந்த ஊருக்குள்ள தலை நிமிர்ந்து நடக்க முடியுமா அம்மிணி..."
"அதற்காக...?"
"உனக்குக் கல்யாண ஏற்பாடு பண்ணி விட்டேன்..."
"யாரைக் கேட்டு இப்படிச் செய்தீங்க..?"
"யாரைக் கேட்கோணும்..?"
"என்னைக் கேட்கணும்... அப்பா.. என்னைக் கேட்டிருக்க வேண்டும்."
"உன்னைக் கேட்டு உன்னை வளர்க்கவில்லை அம்மிணி..."
"அப்பா... எனக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டமில்லை... நான் அடுத்த பிளைம்டைப் பிடித்து மும்பைக்குப் போகப் போகிறேன்..."
"என்னடி பேசுகிறாய்...?" சித்தி சிந்தாமணி அதட்டினாள்.
"உன்ர அப்பா இவ்வளவு தூரம் எடுத்துச் சொல்கிறார். நீ பிடிவாதமாய் பேசிக்கிட்டே போறே. உன்ர மனசில் என்ன நினைச்சுக்கிட்டு இருக்க? கோயம்புத்தூரில் நாளைக் காலையில் உனக்குக் கல்யாணம். இன்னும் கொஞ்ச நேரத்தில் பெண் அழைக்க வந்து விடுவார்கள். குளித்துவிட்டு வா... அலங்காரம் பண்ணிவிட பியூட்டி பார்லரிலிருந்து பெண்ணுக வந்து காத்துக்கிட்டு கிடக்குதுக. அதை விட்டு விட்டு மும்பைக்குப் போகிறேன்னு பினாத்திக்கிட்டு நிற்காதே."
"சித்தி... அங்கே... என் கம்பெனி இருக்கிறது சித்தி."
"ஏண்டி.. கூறு கெட்டவளா நீ..? பொள்ளாச்சியில் எங்க நீலமேகம் அண்ணன் பெயரைச் சொன்னால் எல்லோரும் ''ன்னு வாயைப் பிளப்பாங்க... அவரு மகன் கௌதம். வெளிநாட்டில் படிச்சுட்டு வந்தது.. கோயம்புத்தூரில் மில்.. ஊட்டியில் எஸ்டேட். இந்தப் பொள்ளாச்சியில் கண்ணுக்கெட்டின தூரமெல்லாம் பண்ணை நிலம்ன்னு ஓஹோன்னு பிழைக்கிற பையன்.. தகப்பனில்லாத பிள்ளை.. அவங்க அம்மாவுக்கு உன்னைப் பிடிச்சுப் போச்சுங்கிற ஒரே காரணத்திற்காக உன்னைக் கட்டிக்க சம்மதம் சொல்யிருக்கு.. அதைக் கட்டிக் கிட்டு மகாராணி போல் வாழ்வதை விட்டுவிட்டு மும்பையாம்... விளம்பரமாம்... கம்பெனியாம்.. குடும்பப் பொண்ணாய் லட்சணமாய் இரு..."
"சித்தி அந்தம்மா என்னை எப்போது பார்த்தாங்களாம்?"
"நம்ம ரேவதி கல்யாணத்திற்கு நீ வந்திருந்தபோது பார்த்திருக்கிறார்கள். பிடித்துப் போகவும் என்கிட்ட பெண் கேட்டார்கள்... நானும் உங்க அப்பாகிட்டயும், சித்தப்பாகிட்டயும் இது பற்றிப் பேசினேன். கரும்பு திங்க யாருக்குக் கசக்கும்? உங்க அப்பா உடனே சம்மதம் சொல்லிட்டார். இங்கே பார் பூஜா... கௌதம் உன்னை போட்டோவில் பார்த்ததுதான்.. அம்மா சொன்னதால் சரியென்று சொல்லி விட்டது... தங்கமான பிள்ளை...அதைக் கட்டிக்க... நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும்..."
"எதைக் கொடுத்து வைத்திருக்கிறேன் சித்தி.. என் எதிர்காலத்தையா?"
"கூடக் கூடப் பேசாமல் கிளம்புகிற வழியைப் பார்..."
"சித்தி இது அநியாயம்... அந்தக் காலத்தில் கூட சுயம்வரம் வைத்து மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்க பெண்ணுக்கு சான்ஸ் கொடுப்பார்கள்... இப்போது அதுகூட இல்லையா? முன் பின் பார்த்து  அறியாத ஒருவனுக்கு எப்படி சித்தி கழுத்தை நீட்டுவது? என் பியூச்சர் பிளானே வேறு... கோயம்புத்தூரில் குப்பை கொட்டுபவனுடன் நான் குடும்பம் நடத்த முடியுமா?"
"இங்கே பார்... அது ஒன்றும் முன்பின் தெரியாதபிள்ளை இல்லை என்ற பெரியப்பாவின் பேரன் என்ற அண்ணன் மகன்..."
"உங்களுக்கு சொந்தமென்றால் எனக்குத் தெரிந்தவன் ஆகி விடுவானா?"
"அவன்... இவன்னா அடித்து விடுவேன்... உனக்கென்ன தெரியும் என்ர அண்ணன் மகனைப் பற்றி..? போ... போய் குளித்து விட்டுவா."
பூஜாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவள் குளித்து முடித்ததும் காத்திருந்த அழகு நிலையப் பெண்கள் அவளை அலங்கரித்தனர்.
பெண்ணழைத்துச் சென்ற கார்கள் கோயம்புத்தூரின் பிரசித்தி பெற்ற திருமண மண்டபத்திற்குள் நுழைந்தன. மணப்பெண்ணுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துப் போனார்கள். மணப் பெண்ணுக்கான அறையில் இருந்தவளை தேடி வந்து பார்த்தாள் வசுந்தரா.
பூஜாவின் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் அவள் அன்பாக முத்தமிட்டபோது... தாயில்லாத பூஜாவிற்கு தாய்மை நிறைந்த வசுந்தராவை மிகவும் பிடித்துப் போனது.
 'அதற்காக... என் லட்சியத்தை நான் குழி தோண்டிப் புதைக்க முடியுமா...?'
தன் மனதிற்குள் கேள்வி கேட்டுக் கொண்டாள் பூஜா. கடலை ஒரு குவளையில் அள்ள முடியுமா? காற்றை கைப்பிடிக்குள் அடக்க முடியுமா? விநாயகமும்... சிந்தாமணியும்... அதைத்தான் செய்ய முயன்றார்கள்.




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஏதோ ஒரு நதியில்.. -4
ஏதோ ஒரு நதியில்.. -4
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s320/IMG-20200117-WA0015.jpg
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s72-c/IMG-20200117-WA0015.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ethoorunathiyil-4.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ethoorunathiyil-4.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy