ஏதோ ஒரு நதியில். -2

2 டாக்டரின் அறைக் கதவை ஒரு விரலால் தட்டினான் கௌதம். " யெஸ் கமின்.... ஓ மிஸ்டர் கௌதம்... உட்காருங்கள்." " அம்மாவுக்...


2

டாக்டரின் அறைக் கதவை ஒரு விரலால் தட்டினான் கௌதம்.
"யெஸ் கமின்.... ஓ மிஸ்டர் கௌதம்... உட்காருங்கள்."
"அம்மாவுக்கு எப்படி இருக்கிறது டாக்டர்?"
"அது சம்பந்தமாய் பேசத்தான் உங்களை வரச் சொன்னேன். அவர்களுடைய உடல்நிலை சீரியஸாகத்தான் இருக்கிறது. இந்த ஹாஸ்பிடலில் இருப்பதை விட வீட்டில் அவர்கள் இருப்பதுநல்லதுன்னு என் மனதிற்குப் படுகிறது."
"அம்மா சீரியசாய் இருக்கிறார்கள்ன்னு நீங்கள் தானே சொன்னீங்க டாக்டர். இந்த நிலைமையில் அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வது ஆபத்தாய் முடிந்து விட்டால் என்ன செய்வது? எனக்கு என் அம்மா வேண்டும்."
"அவர்களுடைய நோய் உடலில் இல்லை மிஸ்டர் கௌதம். மனதில் இருக்கிறது. அவர்களது மனக்காயம் ஆறிவிட்டால்.. உடல் தேற ஆரம்பித்து விடும்.. இடைவிடாத மன உளைச்சலில் புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு என்ன ட்ரீட்மென்ட் கொடுத்தாலும் பிரயோசனமில்லை. உங்கள் அம்மாவைக் காப்பாற்ற ஒரே ஒரு வழி இருக்கின்றது..."
"என்ன டாக்டர்... எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவளிக்கிறேன் என் அம்மா என்னோடு இருந்தால் எனக்கு அது போதும்..."
"இதை பணத்தை செலவு பண்ணி செய்ய முடியாது... நீங்கள் மனம் வைக்க வேண்டும்.. அவ்வளவு தான்..."
"மனம் வைக்க வேண்டுமா?"
"யெஸ் மிஸ்டர் கௌதம். அவர்கள் இடைவிடாது பெயர் சொல்லிப் புலம்பிக் கொண்டிருக்கும் அந்த நபரை அழைத்து வாருங்கள்... அப்போதுதான் உங்கள் தாயின் மனம் அமைதியாகும். நாங்கள் கொடுக்கும் ட்ரீட்மென்டும் பலனளிக்கும்..."
"டாக்டர்...."
"உங்கள் மனநிலை எனக்குப் புரிகின்றது மிஸ்டர் கௌதம். இது ஈகோ பார்க்கும் நேரமல்ல. உங்கள் தாயின் உடல் நிலைதான் இப்போது நம் கண் முன் நிற்கின்றது. அதை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். மற்றவற்றைப் பின்னுக்குத் தள்ளுங்கள் உங்கள் அம்மாவின் மனம் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்போது அவர்களுடைய மனதிற்கு தேவை உற்சாகமும் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையும்தான்... அதை உங்களால் மட்டுமே கொடுக்க முடியும். இந்த மருத்தவமனைச் சூழலில் இருந்து அவர்கள் மிகவும் நேசிக்கும் உங்களுடைய வீட்டிற்கு அவர்களை அழைத்து போவது நல்லது... இந்த ஒரு வருடமாகவே ஒரே அறைக்குள் படுத்துக் கிடப்பவர்களுக்கு மன மாறுதலாக அது இருக்கும்... அடுத்து நீங்கள்.... உங்களது ஈகோவைப் புறம் தள்ளி விட்டு அவர்கள் பார்க்க விரும்புகிறவரை அழைத்து வந்து அவர்களுடன் பழக விடுவது அவர்களை உயிர்ப்பிக்கும். இது என் ஆலோசனை மிஸ்டர் கௌதம்."
"ஓகே டாக்டர்.. ஐ ஷல் டூ இட்..."
"தட்ஸ் குட்.. நீங்கள் இந்த முடிவை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நான் அறிவேன் மிஸ்டர் கௌதம்.. நீங்கள் உங்களது அம்மாவின் மேல் வைத்திருக்கும் பாசம் அப்படிப்பட்டது."
"தேங்க்ஸ் பார் யுவர் கைன்ட்நெஸ் டாக்டர்."
கௌதம் டாக்டரிடம் கை குலுக்கி விட்டு அறையை விட்டு வெளியே வந்தான். இயந்திர கதியில் தன் தாய் இருந்த அறையை நோக்கி நடந்தான். சிந்தாமணி அறை வாசலில் அவனுக்காக காத்துக் கொண்டு நின்றாள்..
இவளுக்குத் தெரிந்திருக்கும்... அதனால்தான் டாக்டரைப் பார்க்கப் போகச் சொல்லியிருக்கிறாள்... டாக்டர் கூறியதை அவன் ஏற்றுக் கொண்டானா.. இல்லையா... என்பதை அறியவே வெளியே நிற்கிறாள்.
ஓர் வினாடி அவளது அக்கறையை எண்ணி அவனது உள்ளம் நெகிழ்ந்தது. இத்தனைக்கும் சிந்தாமணி அவனது தந்தை நீலமேகத்தின் கூடப் பிறந்த தங்கை அல்ல. சித்தப்பாவின் மகள். பொள்ளாச்சியில் பெரிய வியாபாரியின் மனைவி.. மகனுக்கும்.. மகளுக்கும் திருமணமாகி பேரன் பேத்திகளென்று வாழ்பவள். என்று வசுந்தரா கை கால்கள் செயலிழந்து படுக்கையில் வீழ்ந்தாளோ... அன்றிலிருந்து இன்று வரை தன் குடும்பத்தை மறந்து அவளது பக்கத்திலேயே இருந்து கவனித்துக் கொள்கிறவள்.
யார் சொன்னது பணக்காரர்களுக்கு பந்த பாசம் கிடையாது என்று? இந்த சிந்தாமணி என்ன பணத்திலும் வசதியிலும் குறைந்தவளா? அவளுக்கு இருக்கும் பாசத்தில் துளியளவாவது ஏன் உரிமைப்ட்டவர்களுக்கு இல்லை?
அலையடிக்கும் உணர்வுகளோடு அவளை நெருங்கினான் கௌதம்.
"டாக்டர் என்ன சொன்னார் கௌதம்?"
"உங்களுக்குத் தெரியாதா அத்தை...?"
"என்ன செய்யப் போகிறாய்?"
"அவர் சொன்னதைச் செய்யப் போகிளேன்."
"உண்மையாகவா..? என் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லையே கௌதம்.. மனம் மாறி விட்டாயா?"
"என் மனம் அப்படியேதான் இருக்கிறது அத்தை... அம்மாவுக்காக... என் அம்மாவின் மன நிம்மதிக்காக.. அவங்க கேட்டதைச் செய்யப் போகிறேன் அத்தை..."
"இப்பத்தான் என்ர மனசு குளிர்ந்துச்சு மருமகனே... உன்ர அப்பாவும் அம்மாவும் வாழ்ந்த வாழ்க்கை ஊரே பார்த்து கண் வைத்து அதிசயப்பட்ட வாழ்க்கை. ஜோடிப் புறா மாதிரியில்ல என்ர அண்ணனும் அண்ணன் பொண்டாட்டியும் வாழ்ந்தாங்க. அப்பேர்ப்பட்ட புருசன் போனப்போ.. அழுது புரளாம அந்தத் துக்கத்தை மனசில் போட்டுக்கிட்டு உனக்காக வாழ்ந்த மகராசிய்யா உன்ர அம்மா... அடிமேல் அடி விழுந்தால் அந்த மனசு தாங்குமா? பாழாப்போன மனசு எத்தனை துயரத்தைத் தான் தாங்கும்? போய்யா... போய்... உன்ர அம்மா பார்க்கணும்னு ஆசைப்படற ஆளைக் கட்டியாவது இழுத்து வா.. என்ர அண்ணி பழையபடி எழுந்து நடமாடனும். அதை இந்தப் பாவி மகள் கண் குளிரப் பார்க்கோணும்."
"அம்மாவை வீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்கிறாரே அத்தை..."
"அதுக்கென்னய்யா தங்கமா கூப்பிட்டுக்கிட்டுப் போவோம்.. இங்கே கொடுக்கிற மாத்திரை மருந்தை வீட்டில் வைச்சுக் கொடுப்போம். தனியாய் ஒரு
நர்ஸை  வேலைக்கு வைத்துக் கொள்வோம்.. எதுக்குப் பயப்படனும்... நானும் இருக்கேன் மருமகனே... உன்ர அம்மாவுக்குத் துணையா நான் இருக்கேன். நீ மட்டும் பதறாமல்... பயப்படாமல் இருக்கோணும்..."
"உங்களுக்கும் குடும்பம் இருக்கிறதே அத்தை..."
"இதுவும் என்ர அண்ணன் குடும்பம்தானே... இங்கே என்ர அண்ணி துடிச்சுக்கிட்டு கிடக்கிறப்போ.. நான் மட்டும் நிம்மதியாய் இருக்கோணுமா? என்ர தொண்டையில் பச்சைத் தண்ணி இறங்குமா? நீ நிம்மதியாய்ப் போயிட்டு வா மருமகனே. நான் என்ர அண்ணியைப் பார்த்துக்கிறேன்..."
"அம்மாவை எப்போ கூப்பிட்டுக்கிட்டுப் போவது..?"
"இன்னைக்கே கூப்பிட்டுப் போயிடலாம்.. அதுக்கென்ன நாளும் கிழமையுமா பார்க்கோணும்...?"
"அம்மாகிட்ட சொல்லிடலாமா?"
"தாராளமாய் சொல்லலாம். இதில் ஒளிச்சு மறைக்க என்ன இருக்கு.. என்ர அண்ணியும் சந்தோசமாய் இருக்கணுமில்ல...?"
அவர்கள் அறைக்குள் நுழைந்தார்கள். வசுந்தரா காய்ச்சலின் வேகம் தாளாமல் முணங்கிக் கொண்டிருந்தாள்.
கௌதம் தாயின் அருகே கட்டிலில் அமர்ந்து அவளது நெற்றியை வருடினான். சிந்தாமணி அருகேயிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
கண்கள் மூடிப் படுத்திருந்த வசுந்தரா... மகனின் தொடுதலைப் புரிந்து கொண்டு உடனே கண் விழித்தாள்...
"கௌதம்..."
"அம்மா... நான் மும்பைக்கு கிளம்புகிறேன்."
அவனது இந்த வார்த்தைகளைக் கேட்டதும் வசுந்தராவின் விழிகள் மலர்ந்தன. மகனின் கரத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
"பொய்யில்லையே கௌதம்..."
"நான் உங்களிடம் இதற்கு முன் பொய் சொல்லியிருக்கிறேனா அம்மா?"
"அழைத்து வந்து விடுவாயா?"
"அழைத்து வரத்தானே போகிறேன்..."
"நான் பார்த்து விடுவேனா?"
"கட்டாயம் பார்த்து விடுவீர்கள் அம்மா. நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன். எப்படியும் நான் அழைத்து வந்து விடுவேன். என்னை நம்புங்கள்..."
வசுந்தராவின் விழிகளில் நம்பிக்கை வந்தது. அவள் கண் மூடித் தூங்க ஆரம்பித்தாள். சற்று நேரத்தில் அவளது காய்ச்சல் குறைந்து விட்டது. டாக்டரை அழைத்தார்கள். அவர் வந்து பார்த்துவிட்டுத் திருப்தியாய் தலை ஆட்டினார்.
"இனி பயமில்லை கௌதம்... நீங்கள் சொன்ன ஒரு வார்த்தைக்கு எவ்வளவு சக்தி பார்த்தீர்களா? சொன்னதை நிறைவேற்றியும் விட்டீர்கள் என்றால் அவர்களது உடல் நிலை எவ்வளவு தேறும் என்று நினைத்துப் பாருங்கள்... இது மனம் சம்பந்தப்பட்ட நோய்..."
"நிச்சயமாய் நான் சொன்னதைச் செய்வேன் டாக்டர்..."
அன்று மாலையே வசுந்தராவை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்கள்.. கோயம்புத்தூரின் பணக்காரப் பகுதியில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான வீட்டின் காம்பவுண்டு சுவரின் வெளியே காவலுக்கு நின்ற கூர்க்கா அவசரமாய் மெயின் கேட்டைத் திறந்து விட கௌதமின் காரும்... அதைத் தொடர்ந்து இன்னொரு காரும் போர்ட்டிகோவில் போய் நின்றன.
காரை விட்டு அவசரமாய் இறங்கின கௌதம். சிந்தாமணியின் துணையுடன் வசுந்தராவைஙக் கைத்தாங்கலாய் அழைத்துக் கொண்டு படியேறினான். பின்னால் வந்த காரில் வந்த நர்ஸ் கோமளம். அவளுடைய பெட்டி படுக்கைகளுடன் அவர்களைப் பின் தொடர்ந்தாள்... வீட்டிலிருந்த வேலையாட்கள் ஓடி காரிலிருந்த சாமாக்களை ஆளுக்கு ஒருவராய் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் விரைந்தனர்.
வீட்டினுள்ளே முதலில் பரந்து விரிந்த ஹாலின் ஒரு கோடியிலிருந்த பெரிய படுக்கையறைக்குள் சென்று வசுந்தராவை படுக்க வைத்த கௌதம்... சிந்தாமணியின் பக்கம் திரும்பி...
"அத்தை... பக்கத்து பெட்ரூமில் நீங்க தங்கிக்கங்க..." என்றான்.
"அதுக்கென்ன கௌதம்... தங்கிக்கறேன்."
"மிஸ் கோமளா... அத்தையின் பெட்ரூமிற்கு அடுத்த பெட்ரூமில் நீங்கள் தங்கிக் கொள்ளலாம்.. பட்.. இரவில் நீங்கள் என் அம்மாவின் அறையில்தான் தங்க வேண்டும்.. உங்களுடைய டியூட்டி டைம் இருபத்து நான்கு மணி நேரம்.. நீங்கள் கேட்டதை விட இரண்டு மடங்கு சம்பளம் கிடைக்கும்... எனக்குத் தேவை... என் அம்மாவிற்கு இருபத்தி நான்கு மணி நேரமும் கண்காணித்து.. பாதுகாத்து.. வேளா வேளைக்குச் சரியான மருந்து மாத்திரைகளையும் உணவையும் சாப்பிட வைக்கும். நர்ஸ்... நீங்கள் என் கோரிக்கையை சரியானபடி நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்..."
"நான் என் கடமையைச் சரிவரச் செய்வேன் சார்..."
வீடு வந்து விட்டதில் வசுந்தராவின் முகம் தெளிந்திருந்தது. வேலையாட்கள் அனைவரும் மாறி மாறி  வந்து பேசிவிட்டுப் போக சந்தோசமாய் சிரித்துக் கொண்டு இருந்தாள்.
தாயின் வரவில் வீட்டின் ஜீவ களை மீண்டு விட்டதை உணர்ந்த கௌதம். அலுவலகம் சென்றான்... அவனுடைய ஜெனரல் மேனேஜர் ரமேஷை அழைத்தான்.
"ரமேஷ்... நான் அவசரமாய் மும்பை போகிறேன். திரும்பி வர எத்தனை நாளாகும் என்று சொல்ல முடியாது நான்  வரும் வரை மில்லை பொறுப்பாகப் பார்த்துக் கொள்ளுங்கள்... எஸ்டேட் மேனேஜர் போன் பண்ணினால் என்னவென்று கேட்டு சால்வ் பண்ணுங்கள்.. பண்ணைகளையும் பார்த்துக் கொள்ளுங்கள். எந்தக் காரணம் கொண்டும் என்னை டிஸ்டாப் பண்ணக் கூடாது."
"ஓகே சார்..."
வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு பிளைட்டிற்குக் கிளம்பினான்.
"அத்தை... நான் மும்பைக்கு போய் வருகிறேன். திரும்பி வர எத்தனை நாளாகும் என்று தெரியவில்லை. அவசரத் தேவைக்கு இந்தப் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு மேலும் தேவையென்றால் என் ஜி.எம். ரமேஷிற்குப் போன் பண்ணுங்கள். அவன் கொடுப்பான்..."
"இதுவே அதிகம் கௌதம்... நான் பார்த்துக் கொள்கிறேன்."
தாயின் அறைக்குள் சென்று அவள் கரம் தொட்டு,
"போய் வரவா அம்மா..." என்றான்.
"போய் வா... கௌதம்.... திரும்பி வரும்போது... "
"கட்டாயம் அழைத்து வருவேன்..."
உயரக் கிளம்பிய விமானத்தில் மும்பை நோக்கிப் பறந்து கொண்டிருந்த கௌதம் அயர்வாய் விழிகளை மூடிக் கொண்டான்.
'எப்படி அழைத்து வரப் போகிறேன்...?



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,27,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஏதோ ஒரு நதியில். -2
ஏதோ ஒரு நதியில். -2
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s320/IMG-20200117-WA0015.jpg
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s72-c/IMG-20200117-WA0015.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ethoorunathiyil-2.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ethoorunathiyil-2.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy