ஏதோ ஒரு நதியில். -3

3 மும்பையின் பிரம்மாண்டமான ஓங்கி உயர்ந்த பல   மாடிக் கட்டிடங்களில் ஒர கட்டிடத்தின் பதினைந்தாவது தளம் பூராவும் பரந்து விரிந்திருந்தது ...


3

மும்பையின் பிரம்மாண்டமான ஓங்கி உயர்ந்த பல  மாடிக் கட்டிடங்களில் ஒர கட்டிடத்தின் பதினைந்தாவது தளம் பூராவும் பரந்து விரிந்திருந்தது ஆடம்பரமான தோற்றத்துடன் இருந்து அந்த விளம்பரப் படங்கள் எடுக்கும் கம்பெனி. அதன் முகப்பிலிருந்து அந்தத் தளம் பூராவும் பணத்தால் அலங்கரிக்கப்பட்டு ஒரு மினி ஸ்டுடியோ போல் தோற்றமளித்தது. அதன் உரிமையாளரும்... விளம்பரப் படங்களை எடுக்கும் இயக்குநருமான பூஜா பரபரப்பாய் வந்து கொண்டிருந்தாள். ராமர் பச்சை என்று சொல்லப்படும் நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தாள். முடி சீராக வெட்டப்பட்டு விரிந்து கிடந்தது. நெற்றியில் சின்ன ஸ்டிக்கர் பொட்டு... கழுத்தில் தடிமனான ஒரு செயின்... வலது கையில் ஒரு கல் வளையல்... இடது கையில் ஒரு தங்கச் செயின் போட்ட வாட்ச்... இவ்வளவு தான் அவளுடைய அலங்காரம்.
ஆனால் அந்த குறைந்த அலங்காரத்திலும் ஒரு தேவதையைப் போலிருந்தாள் அவள். அவளது விளம்பரப் படங்களில் வரும் கதாநாயகிகளை விட அதிக அளவில் பொழிவுடனும்.. அழகுடனும் இருந்தாள்.. எல்லையற்ற வனப்புடன் திகழ்ந்தவள் அதை உணர்ந்ததே இல்லை.
"யு ஆர் ஸோ பியூட்டிபுல் பூஜா..."
"தேங்க்யூ..."
"ஐ வான்ட் டு டெல் யு சம்திங்..."
"பட் ஐ ஹேவ்  நோ டைம்.. பை..."
அவளது அழகில் கவரப்படும் ஆண்களிடம் இருந்து விலகியே நிற்பாள். பார்ட்டியில் கலந்து கொள்வாள். ஆனால் ஒரு அளவுக்கு மேல் யாரிடமும் பழக மாட்டாள். அங்கே நிற்கவும் மாட்டாள்.
'பூஜா இஸ் எ ஃபயர்..!'
இதுதான் மும்பையின் விளம்பரப் பட வட்டாரத்தில் அவளுக்கு சூட்டப்படடிருக்கும் பட்டப் பெயர்.
'நெருப்பு...!' 'பூஜா ஓர் நெருப்பு...'
அவள் அப்படித்தான் இன்று வரை இருக்கிறாள்... நெருப்பாக... யாராலும் அணுக முடியாத நெருப்பாக... தீப்பிழம்பாக வாழ்கிறாள்... அவளைத் தொட்டுப் பேச அவள் அனுமதித்தது இல்லை.
"பூஜா... வாட் இஸ் திஸ்...? இது மும்பை... மாடர்ன் வெர்ல்டு.. இங்கே போய் இப்படிக் கட்டுப்பெட்டித் தனமாய் பிஹேவ் பண்ணுகிறாயே. லைஃபை என்ஜாய் பண்ண வேண்டாமா?"
அகர்வால் ஒரு பார்ட்டியில் அவளது தோள் தழுவ முயன்றபோது இந்த வார்த்தைகளைக் கூறினான்.. அவனிடமிருந்து கண்டிப்புடன் ஒதுங்கி நின்ற பூஜா தெளிவாய் கூறினாள்.
"பர்ஸ்ட் பிஹேவ் யுவர்செல்ஃப் மிஸ்டர் அகர்வால். நான் வாழ்க்கையை நேர்மையாக வாழ விரும்புகிறேன். என்ஜாய் பண்ணி வாழ விரும்பவில்லை. மும்பையிலிருந்தாலும், லண்டனில் இருந்தாலும்... நான் நானாக இருக்கவே ஆசைப்படுகிறேன்..."
"குட் ஜோக்... உன்னைப் பார்த்தால் லண்டனில் படித்தவள் போலவே தெரியவில்லையே..."
"தெரிய வேண்டிய அவசியம் என்ன?"
"அவசியம் இருக்கிறது பூஜா. என் கம்பெனிகளின் அத்தனை புராடக்டுகளுக்கும் உன் கம்பெனிக்குத்தான் விளம்பரப் பட ஆர்டர் கொடுக்கப் போகிறேன். கோடிக் கணக்கான ரூபாய்கள் கொட்டும் ஆர்டர்களை இழந்து விடாதே..."
"ஸோ வாட்..? என் அப்பாவின் கோடிக்கணக்கான சொத்துக்களையே நான் மைன்ட் பண்ணிக் கொள்ளவில்லை... உங்கள் பணம் எனக்கு எதற்கு மிஸ்டர் அகர்வால்... நான் என் விருப்பத்திற்காகவும்.. என் கிரியேட்டிவிடியை யூஸ் பண்ணிக் கொள்ளவுமே இந்த புரொபஷனை தேர்ந்தெடுத்தேன்... பணத்திற்காக அல்ல. நீங்கள் உங்கள் பணத்தை விரும்பும் வேறு யாரிடமாவது உங்களது முயற்சியை கன்டினியூ பண்ணுங்கள் அகர்வால்."
அவனை மட்டுமல்ல... நிறையப் பண முதலைகளைத் தூக்கி அடித்திருக்கிறாள் பூஜா. அதனால் தான் அவளை அவர்கள் சொல்கிறார்கள்... 'பூஜா ஓர் நெருப்பு'
அன்றைய விளம்பரப் படத்திற்கான கான்செப்டை அசை போட்டவாறு வேகமாய் உள்ளே வந்தாள் பூஜா. அவளது செக்ரட்டரி ரூபா எதிரில் வந்தாள்.
"ரூபா எல்லாம் ரெடியா?"
"எவ்ரிதிங் இஸ் ரெடி மேடம்.."
"ஆர்ட்டிஸ்ட் வந்து விட்டாங்களா...?"
"மேக் அப் ரூமில் இருக்கிறார்கள் மேடம்..."
அடுத்த ஒரு மணி நேரத்தில் அவள் பரபரப்பாய் இயங்க ஆரம்பித்தாள். ஷூட்டிங் மும்முரமாய் நடந்து கொண்டிருந்த போது ரூபா அவளருகில் வந்து காதோரம் குனிந்தாள்.
"உங்களைப் பார்க்க ஒருவர் வந்திருக்கிறார் மேடம்..."
"யாராம்..."
"சொல்லவில்லை..."
"நான் பிஸியாக இருக்கிறேன் ரூபா..."
"அதையும் சொல்லிவிட்டேன் மேடம்..."
"போய் விட்டாரா...?"
"எங்கே...? இருந்து உங்கள் வேலை முடிந்தவுடன் பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு வெயிட் பண்ணிக் கொண்டு இருக்கிறார் மேடம்."
"இது என்ன தொல்லை ரூபா...? வேலை நேரத்தில் நான் யாரையும் பார்க்க மாட்டேன்னு உனக்குத் தெரியாதா?"
"அவரிடம் சொல்லிப் புரிய வைக்க முடியவில்லை மேடம்... காத்திருக்கிறேன்னு பிடிவாதம் பிடிக்கிறார்..."
"காத்திருக்கட்டும்."
வந்திருப்பவன் யாராக இருந்தாலும்... வேலை நேரத்தில் தொந்தரவு செய்கின்ற காரணத்தினால் உடனடியாக பார்க்க வேண்டியதில்லை என்று முடிவு செய்தாள் பூஜா... அவனது வரவின் நினைவை புறக்கணித்து  வேலையைத் தொடர்ந்தாள்.
"லைட்ஸ் கொஞ்சம் பவர் கம்மியா... இருக்கணும்."
"ஓகே மேடம்..."
"அந்த ஸ்கிரீன் கொஞ்சம் சீரில்லாமல் தொங்குகிறதே சரி செய்யுங்கள்... அப்படித்தான்... இன்னும் கொஞ்சம்..."
இங்கும் அங்கும் நடந்தபடி ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்தாள் பூஜா. வேலையின் ஊடே திரும்பிப் பார்த்தபோது ரிசப்ஷன் சோபாவில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு ஒரு கையை சோபாவின் பின் பக்கமாய் தூக்கிப் போட்டு தோரணையாய் அவன் அமர்ந்திருப்பது தெரிந்தது... அவனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
'யார் இவன்....?' புருவம் உயர்த்தி யோசித்தாள் பூஜா. நினைவில் வரவில்லை. யாராக இருந்தால்தான் என்ன? வேலை நேரத்தில் வந்து சட்டமாய் அமர்ந்திருப்பவனைப் பற்றி அவள் ஏன் கவலைப்பட வேண்டும்?
"லிஸா.. இன்னும் கொஞ்சம் ஸ்மைல் ப்ளீஸ்."
வேலை முடிந்து விட்டது. 'அப்பாடா' என்றிருந்தது பூஜாவிற்கு. அபார்ட்மென்டிற்கு திரும்பி ஒரு குளியல் போட்டு விட்டுத் தூங்கினால் தேவலை... ஆனால் காத்திருக்கும் அந்த ஒருவன் யார்...?
சோர்வாய் தன் அறைக்குள் போய் அமர்ந்தவள்,
"ரூபா..." என்று அழைத்தாள்.
"யெஸ் மேடம்..."
"காத்திருப்பவரை வரச் சொல்..."
"ஓகே... மேடம்..."
அவள் விரைந்து விட்டாள். பூஜா தளர்வாய் சுழல் நாற்காலியில் சரிந்து கண் மூடிக் கொண்டாள். அறை வாயிலில் அந்தக் கனத்த குரல் கேட்டது.
"மே... ஐ கமின்..."
"யெஸ் கமின்..."
உட்கார்ந்து இருந்தபோது தெரியாத அவனது உயரம் இப்போது தெரிந்தது. கூரிய விழிகளால் அவளைத் துளைக்கும் பார்வை பார்த்தபடி வந்தவனை அறிமுகமற்ற பார்வை பார்த்தபடி,
"ப்ளீஸ்... டேக் யுவர் சீட்..." என்றாள் பூஜா.
"தேங்க்ஸ் ஃபார் யுவர் கைன்ட்னெஸ்..."
உணர்ச்சியற்ற முகத்துடன் அமர்ந்த அவன் குரலில் ஓர் வித கிண்டல் தொனித்ததோ... பூஜா அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள். அவனிடம் முக மாற்றமில்லை.
"வெல்... நீங்கள் யார்...? என்னை ஏன் பார்க்க வந்திருக்கிறீர்கள்."
அவன் முகத்தில் சலனம் தெரிந்தது. அவளையே ஊடுருவும் விழிகளால் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவன் முகம் ஆயிரம் உணர்ச்சிகளை பிரதி பலித்தது... கண்கள் அவளுக்கு விளங்காத ஒன்றை உணர்த்த முயன்றன.
'நேரமாகிறது...' பூஜா சலிப்பாய் உணர்ந்தாள்.
'இவன் தான் யாரென்று சீக்கரம் சொல்லித் தொலைத்து விட்டுப் பேச வேண்டியதைப் பேசி விட்டு இடத்தைக் காலி பண்ணித் தொலைக்கக் கூடாதா.... இவனால் மற்றவர்களுக்கு எவ்வளவு சிரமம் என்பதை உணராத பிரகிருதியாய் இருக்கின்றானே...'
கோபமாய் நினைத்தாலும் ஏனோ பூஜாவால் மற்றவர்களிடம் காட்டும் கடுமையை அவனிடம் காட்ட முடியவில்லை. அவனது விழிகளில் தெரியும் குற்றச்சாட்டு அவளை உறுத்தியது. இவனை ஏதோ ஒரு வகையில் பாதித்திருக்கிறோம் என்று தோன்றியது.
'இவனைப் பார்த்த நினைவே இல்லை... இவனை எந்த வகையில் நான் பாதித்திருக்க முடியும்? ஒன்றுமேயில் லாமாலா இவன் இந்தப் பார்வை பார்க்கிறான்...'
யோசனையுடன் அவன் முகத்தைப் பார்த்தாள் பூஜா. அவன் பார்த்தது பார்த்தாகவே இருந்தான்.
'இவனுக்குப் பேசும் உத்தேசமே இல்லையா...?'
பூஜா பொறுமை இழந்தாள். அவனை குறிப்பாய் நோக்கி விட்டுத் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள்... மீண்டும் அவனை நோக்கினாள். அவன் அசைகிறது போலத் தெரியவில்லை.
"உங்களைத்தான் சார்... நீங்கள் யார்?"
"உங்களுக்கு வேண்டியவன்.."
"எந்த வகையில்...?"
அவன் மீண்டும் மௌனமானான்... பூஜா ரூபாவை அழைத்தாள். அவள் அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.
"இரண்டு ஜூஸ்... ரூபா."
ரூபா வெளியேறினாள். பூஜா யோசனையுடன் தன் கைவிரல்களை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
"மேடம் ஜூஸ்...." ரூபா தம்பளர்களை மேஜை மேல் வைத்துவிட்டுப் போய்  விட்டாள்.
"எடுத்துக் கொள்ளுங்கள்... குடித்து விட்டுத் தெம்பாக நீங்கள் யார்.. என்ன விவரம் என்று எனக்குச் சொல்லுங்கள்... ஐ ஆம் ஸோ பிஸி."
"பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்..."
"தெரிந்துமா என் டயத்தை வேஸ்ட் பண்ணுகிறீர்கள்?"
"நீங்கள் மற்றவர்களின் வாழ்க்கையையே வேஸ்ட் பண்ணிவிட்டீர்களே... அதை என்றாவது நினைத்துப் பார்த்து இருக்கிறீர்களா?"
"வாட்?"
"யெஸ்."
"ஹூ ஆர் யூ...?"
"ஐ ஆம் கௌதம்... கமிங் ப்ரம் கோயம்புத்தூர்... இப்போது ஏதாவது புரிகின்றதா? உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று நினைவு வருகின்றதா? நான் உங்களது நேரத்தை வீணடிக்கவில்லை. நீங்கள் தான் என் வாழ்க்கையை வீணடித்து விட்டீர்கள் என்று நான் சொன்ன குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கிறீர்களா...?"
"கௌதம்...! யு ஆர்... யு ஆர்..."
"யெஸ்... ஐ ஆம் யுவர் ஹஸ்பென்ட்."
பூஜா வாயடைத்துப் போய் அமர்ந்து விட்டாள். அவளது மனக் கண்ணில் பொள்ளாச்சி தோன்றியது... அவளுடன் வாக்குவாதம் செய்த தகப்பன் தோன்றினார். அவருக்கு சாதகமாய் பேசிய சித்தப்பாவும் சித்தியும் நினைவில் வந்தனர்... திருமண வீடு நினைவில் வந்தது... மணப் பெண் கோலத்தில் அவளை கோயம்புத்தூர் அழைத்துச் சென்றது புகை வடிவ காட்சியாய் அவள் கண் முன் தோன்றியது.
கோயம்புத்தூரில் மணமேடையில் அவளை அமர வைத்தனர்... அருகே அமர்ந்திருந்தவன்... தாலியை எடுத்து அவள் கழுத்தில் கட்டினான்... அவன்... அந்த கௌதம்... அவளது கணவன் இவன்தானா...?
பூஜாவின் கழுத்தில் கிடந்த செயினில் மாட்டப் பட்டிருந்த மாங்கல்யம் அவள் உடல் மேல் பட்டு 'நானிருக்கிறேன்' என்று உணர்த்தியது.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஏதோ ஒரு நதியில். -3
ஏதோ ஒரு நதியில். -3
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s320/IMG-20200117-WA0015.jpg
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s72-c/IMG-20200117-WA0015.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ethoornathiyil-3.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ethoornathiyil-3.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy