எண்ணியிருந்தது ஈடேற -171

171 "யாரு நானு.. ?" நந்தினியின் முன்னால் எச்சரிப்பதைப் போல ஒற்றை விரலை உயர்த்திய உத்ரா அதை கொக்கி போல மடக்கிக் காட்டி உ...


171


"யாரு நானு..?"
நந்தினியின் முன்னால் எச்சரிப்பதைப் போல ஒற்றை விரலை உயர்த்திய உத்ரா அதை கொக்கி போல மடக்கிக் காட்டி உதட்டைச் சுழித்தபடி..
"என்னை நீயும்..  
             மாட்டி விட முடியுமா..?
    அது முடியுமா..?
             நான் நீ நினைக்கும்
                  உத்ரா இல்லை.. தெரியுமா..?
         அது தெரியுமா..?"
என்று பழைய பாடல் ஒன்றின் ராகத்தில் வார்த்தைகளை இட்டுக் கட்டி எடுப்பாக பாடிக் காட்டினாள்..
"கரை வந்திருச்சு.." மனைவியின் கைவிரல்களோடு விரல் கோர்த்தான் வினித்..
இப்படி ரவிச்சந்திரனின் விரல்களோடு விரல் கோர்த்து என்று நடப்பது என்று ஏக்கப் பட்டாள் நந்தினி..
சடுதியில் தோழியை மறந்தவளாக கணவனோடு உரசியபடி ரகசியம் பேச ஆரம்பித்த உத்ரா..
"அட.. ரவிசார் வந்திருக்காரே.." என்று ஆச்சரியப் பட்டாள்..
அவளும் வினித்தும் போட்டை விட்டு இறங்கியிருந்தார்கள்.. நந்தினி அப்போதுதான் போட்டிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தாள்.. ரவிச்சந்திரன் வந்திருக்கிறான் என்று உத்ரா சொன்னதும்..
'எங்கே அவன்..? எங்கே அவன்..?' என்று மனது பரபரக்க விழிகளால் அவனைத் தேடினாள்..
கரையிலிருந்த அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. அவனைத் தேடிய அவளது விழிகளைச் சந்தித்தவனின் ஆழ்ந்த பார்வையில் நந்தினிக்குள் எதுவோ நிகழ்ந்தது.. அவர்கள் இருவரின் பார்வைகளும் பின்னிப் பிணைந்தன.. அவனைத் தேடிய அந்தப் பார்வையில் ரவிச்சந்திரனின் மனதில்..
'எங்கே நானென்று தேடட்டும் என்னை..
             சிந்தாத முத்தங்கள் சிந்த..'
என்ற பாடல்வரிகள் ஒலித்தன..
இதோ அவன் விரும்பிய காரிகையின் கண்கள் அவன் எங்கேயென்று தேடி விட்டன.. அவள் மனதை அவன் ஜெயித்து விட்டான்..
ஓர் ஆண்மகனாக இதைவிட மகத்தான வெற்றி வேறு எதுவும் இருக்க முடியாது என்று அவன் கர்வம் கொண்டான்..
எவராலும் கட்டுப்படுத்த முடியாத காட்டாற்றின் சுபாவம் கொண்டவள்.. இயற்கையான யௌவன அழகு தன்னில் நிரம்பிக் கிடந்தும் அதை உணராத இயல்புடையவள்.. மனதில் உள்ளதை மறைக்கத் தெரியாதவள்.. மற்றவரைக் கவர முற்படாதவள்.. காணக் கிடைக்காத தோஹினூர் வைரம் போன்றவள்.. அருவியெனக் குதித்தோடும் அழகு தேவதை..!
அப்படியொரு பெண்ணை தன் வாழ்வின் போக்கில் அவன் சந்தித்தான்.. முதல் பார்வையிலேயே அவனை வசீகரித்தாள் அந்த வசீகரி..! அதை உணராத குழந்தைத் தனத்துடன் இருந்தாள்.. அவள் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவள்தான்.. அவனோ அவள் அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் உள்ள கோடிஸ்வரன்.. ராஜ பாரம்பர்யப் பேரழகன்.. உலகம் முழுவதும் அறியப்பட்ட இளந்தொழிலதிபன்... நட்சத்திர அந்தஸ்தைக் கொண்டவன்..
இப்படிப்பட்டவனின் பின்புலம் அறியாமல் இயல்பாக அவனுடன் அவள் உரையாடினாள்.. பின்புலத்தை அறிந்த பின்னால் பிரமிப்பாள் என்று நினைத்தால்.. அவள் முன்பைவிட படு இயல்பாக அவனுடன் உரையாட ஆரம்பித்தாள்.. ஒருபோதும் நீ இவ்வளவு பெரிய ஆளா என்று விழி விரித்ததில்லை.. எவராலும் அணுக
முடியாத உச்சத்தில் இருப்பவனின் பக்கத்தில் அவள் இருக்கிறாள் என்று பெருமிதம் கொண்டதில்லை.. அவனது அரண்மனையையும், யாழ் ஹோட்டல்களையும், பேக்டரிகளையும், கம்பெனிகளையும் கண்டு பிரமித்ததில்லை..
இப்படிப்பட்டவனா நீ என்று வெகு இயல்பாக அவனது பின்புலத்தை ஏற்றுக் கொண்டாள்.. இதனால் எல்லாம் நான் உனக்குத் தோப்புக்கரணம் போட்டு விட மாட்டேன் என்பதைப் போல அவள் அவளாகவே இருந்தாள்.. அவனைக் கவர நினைத்ததில்லை.. புதிதாக நளினங்களையும், லாவகங்களையும் கையாளவில்லை.. அவன் காதல் சொன்னபோது இப்பேற்பட்டவனின் காதல் தனக்குக் கிடைத்திருக்கிறதே என்று துள்ளிக் குதிக்கவில்லை..
மாறாக அவள் பயந்து விலகினாள்.. அவனுடைய காதலை ஏற்றுக்கொள்ள மறுத்தாள்.. அவன் அரட்டினாலும், மிரட்டினாலும் அடி பணியாமல் பிடிவாதமாக இருந்தாள்..
அப்படிப்பட்டவளின் காதல் அவனுக்குக் கிடைத்து விட்டது..
'நந்தினி..!'
அவனைத் தேடும் அவளது விழிகளைப் பார்த்தான்.. அவனைக் கண்டவுடன் ஒளிர்ந்த அவளது விழிகள் அவனைச் சுண்டியிழுத்தன.. அவனும் கட்டுண்டான்.. விருப்பமான கட்டல்லவா அது..!
'என் நந்தினி..!'
தாள முடியாத தாபத்துடன் பார்த்த அவனது பார்வையின் வேகத்தைத் தாள முடியாமல் அவள் தடுமாறி விழப் போனாள்..
"ஏய்ய்.. நந்தினி.."
இரண்டே எட்டில் போட்டை அணுகி அவளைத் தாங்கிப் பிடித்துத் தூக்கிக் கடற்கரை மணலில் இறக்கி விட்டான் ரவிச்சந்திரன்..
"செம சீன்.." என்ற வினித்துக்கு அவனும் உத்ராவை இதுபோல உச்சத் தூக்காக தூக்கிக் கரையில் இறக்கி விட்டிருக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது..
"மிஸ் பண்ணிட்டேண்டி..." ஏகத்துக்கும் மனைவியிடம் வருத்தப் பட்டான்..
"ஐய்யே.. இதுவே கேரளா.. தடுக்கி விழுந்தால் படகுப் பயணம்தான்.. இன்னும் ஏகப்பட்ட சான்ஸ் கிட்டும் மாமோய்.. உத்ரா கணவனைச் சமாதானம் செய்ய.."
"என்னது..? 'மாமோய்..' யா.." என்று அவன் கிளர்ந்தான்..
"பிடிக்கலைன்னா மச்சான்னு கூப்பிடறேன்.." கண்சிமிட்டி கணவனின் ஏமாற்றத்தைத் துரத்தி விட்டாள் உத்ரா..
பேசியபடியே அவள் முன்னால் நகர்ந்து விட வினித் அவளுடன் சேர்ந்து நடந்தான்.. அவனது மனைவி அவனுடைய மனதைப் புரிந்து கொண்டவளாய் தனித்து அவனுடன் நடக்கிறாள் என்ற பெருமை அவனுக்கு.. உத்ராவின் மனது தனிமையை நாடியது.. அவளுக்கும் வினித்துக்குமான தனிமையை அல்ல... அதுதான் எப்போதும் கிடைத்து விடுகிறதே... நந்தினிக்கும் ரவிச்சந்திரனுக்குமான தனிமையை அவள் நாடினாள்.. வாராது வந்திருக்கும் காதலை நந்தினி ரவிச்சந்திரனிடம் தெரியப் படுத்த வேண்டாமா..? இப்படி மனதுக்குள் ஒளித்து வைத்து மருகிக் கொண்டிருக்க வேண்டுமா..?
நந்தினி மனதுக்குள் ரவிச்சந்திரனைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உத்ரா புரிந்து கொண்டதைப் போல ரவிச்சந்திரனும் புரிந்து கொள்ள வேண்டாமா..?
வினித்திடம் பேசியபடி திரும்பிப் பார்த்தாள்.. நந்தினி தள்ளி நடந்து வர ரவிச்சந்திரன் செல்போனை காதுக்குக் கொடுத்துப் பேசியபடி நடந்து வந்து கொண்டிருந்தான்..
'இவன் புரிந்து கொண்டாலும்..'
தோழியின் விழிகளில் தெரிந்த ஆற்றாமையில் உத்ராவுக்கு கோபம் கோபமாக வந்தது.. இதற்காகவா அவள் அவர்களைத் தனித்து விட்டு விலகி நடந்தாள்..?
'படா பிக் பிஸினெஸ் மேன்னு சொல்லிக்கிறாங்க.. ஒரு பெண்ணோட மனசைப் புரிஞ்சுக்க முடியலையா..?'
"என்ன பார்க்கிற..?" வினித் கேட்டான்..
'ஒரு செகண்ட் அந்தப் பக்கம், இந்தப் பக்கம்ன்னு என் பார்வை திரும்பிரக் கூடாது..' கணவனின் ஆளுமை நிரம்பிய காதலை அவள் மனம் விரும்பியது..
"ச்சும்மா.. நாம வந்த போட்டைப் பார்த்தேன்.." உத்ரா சமயோசிதமாக எதையோ சொல்லித் தப்பித்தாள்..
நந்தினியின் காதலை அவள் பார்த்துக் கொள்ளட்டும்.. உத்ரா தன் கணவனைப் பார்த்தாக வேண்டும்.. அவளுக்கு அவன்தான் முக்கியம்..
நந்தினி பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.. கம்பீரமாக செல்போனில் பேசியபடி காற்றில் தலைமுடி அலைபாய அவள் மனதை அலைபாய வைத்துக் கொண்டிருந்த ரவிச்சந்திரனின் பேரழகைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.. அவள் பக்கம் அவன் திரும்ப மாட்டானா என்று அவள் மனம் ஏங்கித் தவித்தது..
ஓர்நொடி.. ஒரு சிறு நொடி போதும்.. அவளுக்கான பிரத்யேக அந்த சிறு பார்வையில் அவள் உயிர்த்தெழுந்து விடுவாள்..
இந்த அளவுக்கா அவன் மீது அவள் மனம் பித்தாகியிருக்கிறது..? அவள் திகைத்துப் போனாள்.. அவனுக்காக அவள் உள்ளம் தவிக்கும் தவிப்பில் பயந்து போனாள்.. அன்று நீலிமலைக் காட்டின் மரக் குடிலில் ஒரு பொய்யாவது சொல் கண்ணே.. உன் காதல் நான்தானென்று.. அந்தச் சொல்லில் உயிர் வாழ்வேன் என்று பாடினானே.. அந்தப் பாடல் வரிகளை இப்போது அவளது மனம் பாடிக் கொண்டிருக்கிறதே.. அது அவனது மனதை எட்டவில்லையா..? அந்தப் பாடல் வரிகளை உணர்ந்து பாடியிருந்தால் அவளது மன ஏக்கத்தை உணராமல் இருப்பானா..?
"நடிப்புக்காரன்.."
மனதுக்குள் பேசுவதாக நினைத்துக் கொண்டு அவள் வாய் விட்டுச் சொல்லிவிட..
"வாட்..?" என்று அவன் திரும்பினான்..
'தொலைஞ்சது போ..' அவள் கையை உதறியதை விசித்திரமாகப் பார்த்து விட்டுச் செல்போனுக்கு காதைக் கொடுப்பதை அவன் தொடர..
'போ.. போ.. போய் அந்த செல்போனையே கட்டிக்க.. அதுதான் உன் காதலி..' என்று கடுப்பானாள் நந்தினி..
கனமான சாம்பல் வண்ணக் கோட்டில் அட்டகாசமாக இருந்து தொலைத்தான்.. இவ்வளவு வெள்ளையாக அழகாக ஓர் ஆண்மகன் இருக்கக்கூடுமா என்று வயிறெரிந்தாள் நந்தினி.. இவனுடைய நிழலுக்குப் பக்கத்தில் நிற்க கூட அவளுக்குத் தகுதியில்லையே..
'எதைப் புலம்பினாலும் மனதுக்குள் புலம்பித் தொலைடி.. நீ பாட்டுக்கு மைண்ட் வாய்ஸீன்னு நினைச்சுக்கிட்டு.. சவுண்ட் வாய்ஸில பேசி மாட்டிக்காதே.. இவன் ஜெகஜால கில்லாடி..! ம்ஹீம்.. என்னத்தைக் கில்லாடியா இருந்து என்ன பிரயோசனம்..? என் மனசைப் புரிஞ்சுக்காத மக்கா இருக்கிறானே.. இதில இவன் எனக்குத் தத்தி பட்டம் கொடுக்கிறான்.. கொடுமை..'
பேசுகிறேன்.. பேசுகிறேன்.. உன் இதயம் பேசுகிறேன் என்று அவளைப் பார்த்து அன்றொரு நாளில் பாடியவன் பேசுகிறான்.. பேசுகிறான்.. வாய் வலிக்கப் பேசிக் கொண்டே இருக்கிறான்.. அவளிடம் அல்ல.. செல்போனில்..! காதை விட்டு ஒர் அங்குலம் கூட செல்போனை நகர்த்தவில்லை.. பேச்சை நிறுத்தவுமில்லை..
'கம் போட்டுக் காதோடு செல்போனை ஒட்டியிருப்பானோ..' நந்தினிக்குச் சந்தேகமாக இருந்தது..
'வாய் வலிக்காதா..? செல்போனில நிஜமாவே பிஸினெஸ் தான் பேசறானா.. இல்லை.. கடலை கிடலை போடுகிறானா..?'
ரவிச்சந்திரனின் கண்டிப்பான முகபாவனையைப் பார்த்தால் கடலை போடுகிறவனைப் போலத் தெரியவில்லை.. தீவிரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருந்தான்..
'இப்போதைக்குப் பேசி முடிக்க மாட்டான்..'
அவள் நாக்கைத் துருத்தி அவனுக்கு அழகு காட்டிய அதே நொடியில் அவன் பேச்சை முடித்து செல்போனை காதை விட்டு அகற்றியபடி அவளைப் பார்த்து விட்டான்..
'அகப்பட்டுக்கிட்டேனே..' அவள் திருதிருத்தாள்..
குடம் குடமாக முகத்தில் அசடு வழிய..
"ஹி.. ஹி.." என்றவளிடம்..
"என்ன..?" என்று புருவங்களை உயர்த்தி இறக்கி மயக்கித் தொலைத்தான்..
வேய்ங்குழல்தான் கையில் இல்லை.. மற்றபடி குழலூதூம் அந்தக் காதல் கண்ணன்தான்.. யமுனை நதி தீரத்தில் கோபியர்கள் புடைசூழ ஆடிப்பாடி ராதையை மயக்கிப் பைத்தியமாக்கியது போதாது என்று நந்தினியைப் பைத்தியமாக்க வந்து சேர்ந்திருக்கிறானா..?
கிறங்கிப் போன நந்தினியை அவன் பார்த்த பார்வையின் வேகம் தாளாமல் கிளர்ந்து தளர்ந்தாள் நந்தினி.. இப்படிப் பார்க்காதே என்று மனதுக்குள் அரற்றிக் கொண்டாள்..
'உன்னை நான் காதலிக்கிறேன்.. அதை உன்னிடம் சொல்ல அற்புதமான தனிமை கிடைக்காமல் தவிக்கிறேன்.. நான் வேண்டும் அந்த அற்புதமான தனிமை கிடைத்து
நீயும் நானும் மட்டுமே நிற்கும் சூழலில் உன்னிடம் வாய் திறந்து என் காதலைச் சொல்லிவிட முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை.. இப்போதும் உனக்கு நான் இணையானவள்தானா என்ற தாழ்வு மனப்பான்மை எனக்குள் குவிந்து கிடக்கின்றது.. அதைத் தாண்டி வரும் திராணி எனக்கு இருக்குமானால் அப்போது உன்னிடம்
என் காதலைச் சொல்வேன்.. அந்தத் திராணி எனக்கு வருமா..?'
எதையோ பறிகொடுத்து விட்டவளைப் போன்ற நந்தினியின் ஏக்கப் பெருமூச்சில்..
"என்னடி..?" என்றாள் உத்ரா..
நந்தினியின் வாடிய முகம் அவள் இன்னும் ரவிச்சந்திரனிடம் மனம் திறந்து பேசவில்லை என்பதை அறிவித்தது..
'இவ ஏன் இப்படி இருக்கா..?' உத்ராவுக்கு கோபம் கோபமாக வந்தது..
நந்தினி அப்படியிருக்கக் கூடியவளல்ல.. மனதி இருப்பதை மறைக்காமல் பேசி விடுபவள்.. மனதில் எதையும் தேக்கி வைத்துக் கொள்ளத் தெரியாதவள்..
"இவளிடம் ரகசியம் பேசிட்டாலும்.. கழுதையில.. அப்படியே மனதுக்குள்ளே பத்திரப் படுத்தித்தான் வைத்துக்குவாளாக்கும்..?"
தோழிகள் அலுத்துக் கொள்வார்கள்.. ரகசியத்தை பாதுகாக்கத் தெரியாத நந்தினியா தன் மனதில் காதலை ரகசியமாக சுமந்து கொண்டிருக்கிறாள்..?




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -171
எண்ணியிருந்தது ஈடேற -171
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ennniyirunthathueedera-171.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ennniyirunthathueedera-171.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy