, எண்ணியிருந்தது ஈடேற -194

194 ஆலப்புழாவின் அடையாளம் ஆடம்பர படகு வீடுகள்.. காயலாகப் பட்ட கடலின் மீது பயணம் செய்வது இனிமை.. அதுவே வீட்டில் அமர்ந்து அந்த வீடு ந...


194


ஆலப்புழாவின் அடையாளம் ஆடம்பர படகு வீடுகள்.. காயலாகப் பட்ட கடலின் மீது பயணம் செய்வது இனிமை.. அதுவே வீட்டில் அமர்ந்து அந்த வீடு நீரினில் மிதக்க உண்டு, உறங்கி, கூடிக் களித்துச் சிரித்துப் பேசி என்று மிதக்கும் வீட்டில் வாழ்ந்து பார்ப்பது இனிமையிலும் இனிமை..
ஒரு அழகான படகு வீட்டை கட்டமைக்க குறைந்த பட்சம் ஒரு கோடி ரூபாய் அளவில் செலவாகலாம் என்று ரவிச்சந்திரன் சொன்னான்..
"அதற்கும் குறைந்து இருக்கலாம்.. பட்ஷே.. எனக்குத் தெரிந்த படகு வீடுகளை கட்டமைக்க ஆன செலவு ஒரு கோடி ரூபாய்தான்.." என்றான்..
"உங்க படகு வீட்டை கட்டமைக்க ஆன செலவு எவ்வளவு..?"
"ஆறு கோடி ரூபாய்.."
"அடேங்கப்பா.."
மலைத்து விட்டாள் நந்தினி.. மிதக்கும் படகு வீட்டை நிர்மாணிக்க ஆறுகோடி ரூபாயை செலவிட்டிருக் கிறானா..?
"அதற்குத் தகுந்தபடி இண்டிரியர் வொர்க் இருக்கும்.. அங்கேதானே போய்க்கிட்டிருக்கோம்..? நீயே நேரில் பார்த்து அனலைஸ் பண்ணு.."
படகு வீடுகளில் மூன்று நபர்கள் இருப்பார்களாம்.. படகு ஓட்டுவது, சமைப்பது, மற்ற வேலைகளைப் பார்ப்பது என பகிர்ந்து வேலை செய்வார்களாம்.. மூவருக்குமே படகு தொடர்பான அனைத்து வேலைகளும் தெரியுமாம்..
"தெரிந்திருக்கனும்.." அழுத்தமாகச் சொன்னான் ரவிச்சந்திரன்..
"ஏன் அப்படி..?"
"தண்ணீரில் படகு கிளம்பிட்டா எந்த நேரம் எது நடக்கும்ன்னு யாருக்குத் தெரியும்..? ஆளில்லாத இடத்திலே படகை ஓட்டுகிறவனுக்கு உடம்பு சரியில்லாமல் போகலாம்.. சமையல் வேலை செய்கிறவனுக்கும் அதே கதைதான்.. அப்ப அந்த வேலைகளை மாற்றிச் செய்யத் தெரிந்திருக்கனும்.. ஒருநாள் சமையல் வேலையில் இருக்கிறவன் அடுத்த நாள் படகை ஓட்டற வேலையில் இருக்கனும்.. மறுநாள் மற்ற வேலைகளைக் கவனிக்கனும்.. மத்தவங்களக்கும் இதே ரொட்டின் வொர்க்தான்.. படகை ஓட்டறவன் சமைக்க வருவான்.. மற்ற வேலைகளைக் கவனிக்கிறவன் படகை ஓட்டுவான்.. இப்படி வேலைகளை மாற்றிச் செய்து டிரெயினிங் எடுத்துக்குவாங்க.."
"இண்ட்ரெஸ்ட்டிங்.."
"உனக்கு இது இண்ட்ரெஸ்டிங்.. இவங்களுக்கோ வாழ்க்கை..!"
'உண்மைதானே..' என்றிருந்தது நந்தினிக்கு..
"தண்ணியிலேயே மிதந்துக்கிட்டு இருந்தா இவங்களுக்கான வாழ்வை எப்படி வாழ்வாங்க பாஸ்..?" நந்தினிக்கு பெருங் கவலையாகி விட்டது..
"இவங்க ஒரு வாரம் வந்தா இவங்களை மாத்தி விட வேறொரு டீம் வருவாங்க.. அவங்க ஒரு வாரம்.. அவங்களை மாத்திவிட இவங்க.. இதுவும் ரொட்டின்தான்.. சில படகுகளை உருவாக்கினவங்களே அதில் வேலை செய்வாங்க.. அவங்க பாடுதான் கஷ்டம்.."
"இவங்க குடும்பம்..?"
"குடும்பம் இல்லாமல் இருக்குமா...? குடும்பத்திற்காகத்தானே இத்தனை உழைப்பும்...? இவங்களுக்குன்னு தனி ஸ்கூல் இருக்கு.. சர்ச் இருக்கு.. கவர்ண்மென்டில இவங்களுக்குன்னு தனி கவனிப்பு உண்டு.."
"ஓ.."
வியப்புடன் கேட்டுக் கொண்டாள் நந்தினி.. தண்ணீரில் மிதக்கும் படகு வீட்டில் அவள் தங்கப் போகிறாள் என்ற நினைவே எதிர்பார்ப்பைக் கிளறியது.
அவளுக்குப் போட்டில் போய் வர பிடிக்கும்.. கப்பலைத் தொலைவில் நின்று கவனித்திருக்கிறாள்.. பக்கத்தில் போனதில்லை.. இங்கோ போட் ஹவுஸ்.. அது நீரில் விரையும்.. அதில் அவளும் ரவிச்சந்திரனும் இருப்பார்கள்..
'ஆஹா..!'
நினைத்தாலே இனிக்கும் என்பது இதுதானா..?
"நம்முடைய போட் ஹவுஸீக்கு வந்துட்டோம்.."
மகாராணியை வரவேற்பதைப் போல ரவிச்சந்திரன் முதுகை வளைத்து அவளுக்கு முகமன் கூறி அவளது கையைப் பற்றி..
"வெல்கம் டு அவர் போட் ஹவுஸ்.." என்றான்..
நந்தினி தன்னை மகாராணியைப் போல உணர்ந்தாள்.. ராஜாதிராஜனான ரவிச்சந்திரனின் காதலி மகாராணிதானே.. கண்முன் நீரில் அன்னப் பட்சியைப் போல அசைந்தாடிக் கொண்டிருந்த படகு வீட்டைப் பார்த்தாள்.. பிரமித்துப் போனவளாய் அப்படியே நின்று விட்டாள்..
நீண்ட அன்னப் பறவையின் தோற்றத்தோடு வெகு நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருந்தது அந்தப் படகு.. அதில் சொகுசான பங்களா ஒன்று வீற்றிருந்தது.. அழகான ஆடம்பரம் நிறைந்த பங்களா..
ரவிச்சந்திரனின் ஸ்டார் ஹோட்டலின் காட்டேஜ் ஒன்றின் முன்னால் நிற்பதைப் போலவே நந்தினிக்கு இருந்தது..
'யாழ் ஹோட்டலோட ரிசார்ட் ஒன்னைத் தூக்கி இங்கே வைச்சுட்டாங்களா..?'
ரவிச்சந்திரன் செய்தாலும் செய்வான்.. அவனால் செய்ய முடியாதது என்று ஒன்று உண்டா..?
"செப்பலைக் கழட்டிட்டு வா.. போட் ஹவுஸில் செப்பலுடன் நடக்கக் கூடாது.." என்றான் ரவிச்சந்திரன்..
அவர்களது செருப்புக்களை அங்கேயே விட்டு விட்டு படகு வீட்டில் ஏறினார்கள்.. அவளது இடுப்பில் கை கொடுத்து அலேக்காக தூக்கி படகு வீட்டில் விட்ட ரவிச்சந்திரன் உள்ளே வந்தான்.. ஸ்டார் ஹோட்டலைப் போலவே படகு வீட்டின் உள்புறத் தோற்றம் வடிவமைக்கப் பட்டிருந்ததில் மயங்கிப் போயிருந்தாள் நந்தினி..
'இது எப்பேற்பட்ட அனுபவம்..!'
படகு வீட்டின் சுவர்கள் முழுவதும் மர வேலைப் பாடுகள் கொண்ட அலமாரிகளைக் கொண்டிருந்தன.. வழவழப்பாய் வீட்டின் ஹாலில் இருப்பதைப் போலவே தூண்கள் இருந்தன.. பரந்த பெரிய ஹால்.. தரையிலும் சுவரிலும் ஒட்டப் பட்டிருந்த பளிங்குக் கல்.. அழகாக போடப் பட்டிருந்த சோபாக்கள் அமர்ந்ததும் மிருதுவாக உள்வாங்கி இதத்தைக் கொடுத்தன.. சுவரில் பொருத்தப் பட்டிருந்த மிகப் பெரிய டிவியில் ஒரு மலையாளத் திரைப்படம் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது..
ஜன்னல் வரித் தெரியும் நீர் மட்டுமே அதை படகுவீடு என்று உணர்த்திக் கொண்டிருந்தது.. மற்றபடி அது ஆடம்பர சொகுசு பங்களாவைப் போலவே இருந்தது..
'இது யாழ் ஹோட்டலேதான்..'
ஆங்காங்கே சுவரில் மாட்டப் பட்டிருந்த ஓவியங்கள் கலை நுணுக்கத்துடன் அழகுற மிளிர்ந்தன.. ஜன்னல் வழி தெரிந்த தண்ணீரும் கரையோரத் தென்னை மரங்களும் எனப் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத இயற்கையும், செயற்கையும் காலந்த பேரழகு..
தொலைவில் ஒரு பாலம் தெரிந்தது.. அதன் அருகில் தெரிந்த செடி கொடிகளை ஆடம்பர பங்களாவினுள் இருந்தபடி ரசிப்பதைப் போல உணர்ந்தாள் நந்தினி..
'ஹப்பா..! இது படகு வீடாம்... படகு பங்களான்னுள்ல சொல்லனும்..'
ஹாலைக் கடந்து போனால் ஒரு பார்ட்டி நடத்தும் அளவுக்குப் பெரிதான டைனிங் ஹால் இருந்தது.. அதன் இருபுறமும் ஜன்னல்கள்.. அவற்றின் பக்கத்தில் ஓரம் கட்டிப் போடப் பட்டிருந்த ஒற்றை சேபாக்களின் வரிசை.. நடுவில் அரண்மனைகளில் இருப்பதைப் போன்ற மிக நீண்ட டைனிங் டேபிள்.. அதன் மையப் பகுதிகளில் எதிரும் புதிருமாக குசன் பதித்த நாற்காலிகள் இரண்டு இருந்தன.. டைனிங் டேபிளின் இருபக்கமும் பக்கத்திற்கு ஒரு டஜன் என்று இருபத்தி நான்கு நாற்காலிகள் போடப் பட்டிருந்தன..
டைனிங் ஹாலைக் கடந்ததும் பால்கனி போன்ற அமைப்பு.. படகின் வெளிப்புறத்தை ஒட்டி அமைக்கப் பட்டிருந்த இந்தப் பகுதியில் குசன் சோபாக்கள் வட்ட வடிவமாக வளைத்து கைபிடி சுவர்களை ஒட்டி போடப் பட்டிருந்தன.. அவற்றில் அமர்ந்து தண்ணீரையும், தென்னந் தோப்பையும் பார்த்தபடி பயணம் செய்யலாம்..
நீண்டு செல்லும் நீர்வழியும் கரையின் இருபக்கமும் அடர்ந்திருக்கும் தென்னந்தோப்புக்களும் கருத்தைக் கவர்ந்து இழுத்ததில் நந்தினி குதித்துக் கொண்டு அங்கே உட்காரப்போனாள்.. தடுத்து நிறுத்திய ரவிச்சந்திரனின் விழிகளில் ஏதோ இருந்தது..
"முதலில் போய் ஹவுஸை சுற்றிப் பார்.. அவுட்டிங்கை அப்புறமா வேடிக்கை பார்க்கலாம்.." என்று இழுத்துக் கொண்டு போனான்..
ஹாலுக்கும் டைனிங் ஹாலுக்கும் இடையே வழவழப்பான டைல்ஸ் பதிக்கப்பட்ட காரிடார்.. அங்கே கிரானைட் பதிக்கப் பட்டிருந்த உயர்தரமான வாஷ்பேசின்.. அதையொட்டிய படுக்கை அறைகள்..
ரவிச்சந்திரனுக்கான ஸ்பெசல் படுக்கை அறையைத் திறந்து காண்பித்தான்.. யாழ் ஹோட்டல் ரூமைப் போல அழகாக இருந்தது அந்த அறை.. வெண்மை நிற விரிப்புக்களைக் கொண்ட மெத்தைகள்.. தலையனைகள்.. ரோஸ்வுட்டில் செய்யப்பட்ட கட்டில்.. படுக்கையறையில் பொருத்தப் பட்டிருந்த ஏ.ஸி.. டி.வி. அதையொட்டியிருந்த அட்டாச்சுடு பாத்ரூம்.. ஷவர்..
அந்த அறையைப் பார்த்தால் படகு வீட்டில் இருக்கும் அறையைப் போலத் தோன்றவில்லை.. வயநாட்டு அரண்மனையின் அறையைப் போலவும் யாழ் ஹோட்டலின் அறையைப் போலவும் தோற்றமளித்தது..
அனைத்து அறைகளிலும் ஏஸி பொருத்தப் பட்டிருந்ததில்..
"தேவையா இது..?" என்றாள் நந்தினி..
"ஏன்..?" ரவிச்சந்திரன் புருவங்களை உயர்த்தினான்.
"கேரளத்து குளிரில.. படகு வீட்டில யாராச்சும் ஏஸியை யூஸ் பண்ணுவாங்களா..?"
"ரூம் கதவை இறுக்கி மூடிட்டா ஏஸியை யூஸ் பண்ணித்தானே ஆகனும்..?"
ரவிச்சந்திரனின் மேய்ச்சல் பார்வை ஒரு மார்க்கமாக அவள் மீது பரவி இறங்கிப் படர்ந்தது.. நந்தினிக்கு மூச்சுத் திணறியது.. அவனிடம் காதல் சொன்னபின்பு அவள் அனுபவிக்கும் தனிமையில் இந்தத் தனிமை அழகான இனிமையை அள்ளித் தரும் தனிமையென்று அவளது உள்ளம் சொல்லியது..
"நந்தினி.." ஆரத் தழுவிக் கொண்டான் ரவிச்சந்திரன்..
நீலிமலைக் காட்டின் படகு வீட்டில் அவளை உரிமையுடன் தழுவ முடியாத தழுவலை ஆலப்புழாவின் படகு வீட்டில் தழுவித் தன் ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்ள முற்பட்டான் அவன்.. அது புரிந்தவளாய் விலகாமல் உடன்பட்டு நின்றாள் நந்தினி..
"ஏய்ய்.."
"ம்ம்ம்.."
"ஐ லவ் யு.."
"ஐ லவ் யு டூ.."
மறுபடியும் இறுக்கமான தழுவல்.. தழுவித் தழுவி தன்னை மறந்திருந்தவர்களை செல்போனின் ஒலி படகு வீட்டிற்கு அழைத்து வந்தது..
"ம்ப்ச்.. இது ஒன்னு.. டிஸ்டர்பா.."
அலுத்துக் கொண்டபடி போனை காதுக்குக் கொடுத்த ரவிச்சந்திரன் அங்கே டவர் கிடைக்காததினால் ஹலோ.. ஹலோ என்றபடி வெளியே சென்று விட்டான்..
நந்தினி வெளியே வந்து பால்கனிப் பகுதியில் உட்கார்ந்தாள்.. உடலைத் தழுவிச் சென்ற ஈரப்பசை மிகுந்த குளிர்காற்றில் மனமும் உடலும் சிலிர்த்தன..
படகை ஓட்ட ஆரம்பித்து விட்டார்கள்.. மற்ற படகுகள் மதியம் பனிரெண்டு மணிக்குத்தான் ஓட ஆரம்பிக்குமாம்.. அது ரவிச்சந்திரனின் படகு வீடு என்பதால் காலையிலேயே தன் நீர்வழிப் பயணத்தை ஆரம்பித்து விட்டது..
மக்கள் சென்றுவர ஆங்காங்கே அரசுப் படகுகள் அரசு பஸ்களைப் போல இயங்கிக் கொண்டிருந்தன.. செல்போன் பேச்சை முடித்து விட்டு அவளைத் தேடி
வந்த ரவிச்சந்திரன் அவளருகில் நெருங்கி உட்கார்ந்து அவள் தோளில் கைபோட்டு மடிக்கு இழுத்துக் கொண்டான்..
நந்தினிக்கு 'ரோஜா' திரைப்படம் நினைவுக்கு வந்தது.. காஷ்மீர் நதியில் மிதிக்கும் படகில் அரவிந்தசாமியின் மடியில் மதுபாலா அமர்ந்து கொள்ளும் அந்தக் காட்சி..! வயநாட்டு அரண்மனையின் மாடி ஹாலில் ரவிச்சந்திரனை அரவிந்த சாமியாகவும் அவளை மதுபாலாவாகவும் அவள் கற்பனை செய்து பார்த்துக் களித்த அந்தக் காட்சி..! நிஜமாக ஓர் படகு வீடு..! அதில் அவன்..! அவன் மடியில் அவள்..!
கற்பனையோ கை வந்ததோ என்பது இதுதானோ..
கேரளாவின் மிதக்கும் படகுவீடு..! ஆலப்புழாவில் தண்ணீரில் மிதக்கும் வீட்டில் அவனும், அவளும்..
அனுபவம் புதுமை.. மிக அருமை..
"விண்ணத் தாண்டி வருவாயா படம் பார்த்திருக்கியா..?" அவளை வாசம் பிடித்தபடி கேட்டான் அவன்..
"ம்ம்ம்.." பேச முடியாமல் முணுமுணுத்தாள் அவள்..
"திரிஷாவைத் தேடி சிம்பு கேரளாவுக்கு வருவதாகக் காட்டுவாங்களே.. அது இந்த ஊர்தான்.."
"ஹை.. மன்னிப்பாயா பாட்டு வருமே.. அந்த சீனை இங்கேதான் எடுத்தாங்களா பாஸ்..?"
உணர்வுப் பேரலைகளில் இருந்து வெளிப் பட்டவளாக அவள் கேட்டதில் அவளது நெற்றியில் செல்லமாக முட்டினான் ரவிச்சந்திரன்..
"நீ இருக்கியே.."
"ஏனாம்..? எனக்கு என்னவாம்..? ஐயாவுக்கு என்னைவிட அழகான கேரளத்து சொப்பன சுந்தரிகள் தேவைப்படறாங்களோ.."
"ஹா.. ஹா.. நீதாண்டி என் சொப்பன சுந்தரி.. வல்லிய சுந்தரி.."
ரவிச்சந்திரன் அவளை இறுக்கி அணைத்து உம்மா கொடுத்தான்.. யாராவது வந்து விடுவார்கள் என்று விலகப் பார்த்தாள் நந்தினி.. அது அவனது படகுவீடு.. அவனது அனுமதியில்லாமல் எவரும் வரமாட்டார்கள் என்று எளிதாக அவளது மறுப்பை மறுத்து இழுத்துக் கொண்டான் அவன்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,11,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,94,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,29,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,11,எண்ணியிருந்தது ஈடேற,234,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,25,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,10,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: , எண்ணியிருந்தது ஈடேற -194
, எண்ணியிருந்தது ஈடேற -194
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-194.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-194.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy