எண்ணியிருந்தது ஈடேற -193

193 சிலுசிலுவென ஈரப் பசையுடன் கூடிய காற்று உடலுக்கும் , மனதுக்கும் புத்துணர்வைத் தந்தது.. மனதை வருடும் காற்றில் சிலிர்த்துப் போனாள்...


193


சிலுசிலுவென ஈரப் பசையுடன் கூடிய காற்று உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வைத் தந்தது.. மனதை வருடும் காற்றில் சிலிர்த்துப் போனாள் நந்தினி.. அவள் தோளில் போட்டிருந்த துப்பட்டா பறந்து ரவிச்சந்திரனின் முகத்தை மூடியது.. அதை விலக்க மனமில்லாமல் இழுத்துத் தன் கழுத்தில் அவன் சுற்றிக் கொண்டு
இழுக்க.. துப்பட்டாவை பறக்க விடாமல் இறுக்கிப் பிடிக்க முயன்ற நந்தினி அவன் கை வளைவுக்குள் வந்தாள்.. அவளது முகத்தோடு முகம் வைத்துக் கண்ணோடு
கண் பார்த்தவனின் ஆழ்ந்த பார்வையில் அவள் கிறங்கித் தவித்தாள்..
ஓர் பார்வையில் அவள் தடுமாறும் தடுமாற்றத்தை ரசித்தான் ரவிச்சந்திரன்.. மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில் சின்னஞ்சிறு பெண்ணாக சிறுபிள்ளைத்தனம் மாறாமல் அவனுடன் சண்டையிட்டுக் கொண்டு வந்த நந்தினியா இது என்று வியந்து போனான்..
நீலிமலைக்காட்டில் அவன் காதல் சொன்னபோது அவள் விழிகளில் வந்த மிரட்சி இப்போது இல்லை.. அவன் மீதான தேடல்தான் இருந்தது..
'எங்கே நானென்று..
             தேடட்டும் என்னை..
    சிந்தாத முத்தங்கள் சிந்த..'
அவளது காதலை வேண்டி அவன் பாடிய பாடல் நனவாகி விட்டது.. அவன் எங்கேயென்று அவளது விழிகள் தேடித் தவித்து விட்டன.. அவன் வேண்டும் என்ற வேட்கையுடன் அவனைக் கட்டியணைத்து கோடி முத்தங்களை அவள் சிந்தி விட்டாள்..
அவன் காதலித்த காதலியின் மனதை வென்று அவனைக் காதலிக்க வைத்து விட்ட ஆண்மையின் கர்வம் அவன் மனதில் வியாபித்தது..
"எல்லோரும் முந்தானை முடிச்சில ஹஸ்பெண்டை முடிச்சுப் போட்டு வைத்துக்குவாங்கன்னா நீ டிபரன்ஸா துப்பட்டாவில முடிச்சுப் போட்டு வைத்துக்கலாம்ன்னு பார்க்கறியா..?" கண் சிமிட்டினான்..
'இவன் என் புருசனா..?' அவள் மனதில் மயக்கம் சூழ்ந்தது..
புருசன் என்ற அந்த ஓர் வார்த்தையில் தலைகீழாக் கவிழ்ந்து மாயலோகத்தில் வீழ்ந்து விட்டாள் நந்தினி.. மனமெங்கும் பூவாசம்.. அவன் மீது அவள் கொண்ட நேசம்.. எல்லைகளற்ற ஏகாந்த உலகத்தில் அவனுடன் அவள் மட்டும் சஞ்சரித்தாள்.. இனிமை நிரம்பிய கனவு போன்ற சுகானுபவத்தில் திளைத்தாள்..
"ஆமாம்.. அப்படித்தான்.."
மூச்சுத் திணறலுடன் அவள் சொல்லியபோது அவளது முகத்தில் தெரிந்த வெட்கமும் வேட்கையும் ஒன்று சேர்ந்து அவனை ஈர்த்தது..
"முடிஞ்சுக்கடி.. அது உன் சேலையின் முந்தானை முடிச்சா இருந்தாலும் சரி.. துப்பட்டாவின் முந்தானை முடிச்சா இருந்தாலும் சரி.. முடிச்சுப் போடறது நீயாய் இருந்தா முடிச்சில் சிக்க நான் ரெடிடி.."
அவளது முகத்தைக் கையில் ஏந்தி வெகு பிரியத்துடன் சொன்னான் அவன்.. அவனையே ஆசையுடன் பார்த்தவளின் விழிகளோடு அவனது விழிகள் கலந்தன.. அவன் மீதான அவளது பிரேமத்தில் (காதலில்..) அவன் பிரமித்தான்..
'இவ்வளவு ஆசையா என் மீது..?'
கள்ளமில்லா பிள்ளை குணம் கொண்டவள் அவள்.. காதல் உணர்வுகளை உணராத பேதை.. காணக் கிடைக்காத கோஹினூர் வைரம் போன்றவள்.. அவளது அருமை என்னவென்று ரவிச்சந்திரன் நன்கு அறிவான்.. அவளது காதல் கிடைப்பதென்பது வரம்.. அதனால்தான் அவன் நீலிமலைக் காட்டின் மரவீட்டில் ஒரு பொய்யாவது சொல் கண்ணே.. உன் காதல் நான்தானென்று என்று பாடினான்.. அவள் பொய் சொல்லியறியாதவள்.. உண்மையாக அவனைக் காதலித்து விட்டாள்..
'இதைவிடப் பெரிய சக்சஸ்ன்னு எதுவுமே இல்லை..'
வியாபார உலகில் பல வெற்றிகளை ஈட்டி கேரளத்தின் முதன்மைத் தொழிலதிபனாக.. உலகம் முழுவதும் அறியப்பட்ட வியாபார காந்தமாக நட்சத்திர அந்தஸ்துடன் சுடர் விடும் அந்த ராஜாதிராஜன் அவளைத் தன்னோடு இறுக்கித் தழுவிக் கொண்டான்.. இசைந்து கொடுத்து அவன் அணைப்பில் அடங்கிய நந்தினியின் கரங்கள் உரிமையுடன் அவனது முதுகில் பரவிப் படர்ந்து அழுந்தின.. அந்த இசைவில் அவள் உணர்த்திய ஒப்புக் கொடுத்தலில் களிப்படைந்தது அவன் மனம்..
"போவோமா..?" அவளது காதருகே குனிந்து கேட்டான்..
"ம்ம்ம்.."
"எங்கேன்னு கேட்க மாட்டியா..?"
"கேட்க மாட்டேன்.."
"நான் எங்கே கூப்பிட்டாலும் வருவாயா..?"
"வருவேன்.."
அவன் கண்களில் விசமம் வழிந்தோட அவளது காதருகே உதடுகளைப் புதைத்து கிசுகிசுப்பாக பேசிய பேச்சுக்களில் கிளர்ந்து தவித்தவள் முகச் சிகப்புடன் விலகி அவன் கையைப் பிடித்துக் கிள்ளி..
"ச்சீய்.." என்றாள்..
"ஹா.. ஹா.." அவன் உரக்க நகைத்தான்..
அவன் முகம் பார்க்க முடியாமல் நந்தினியை வெட்கம் சூழ்ந்து கொண்டது.. ரத்தமென முகம் சிவந்திருந்தது..
'என்னவெல்லாம் பேசுகிறான்..' உதட்டைக் கடித்தாள்..
"ஏய்ய்.." போதையுடன் அழைத்தான் ரவிச்சந்திரன்..
"ம்ம்ம்.."
"பேச மாட்டியா..?"
"ம்ம்ம்.."
"ஏண்டி..? என்னைப் பிடிக்கலையா..?"
ரவிச்சந்திரனின் அநியாயமான கேள்விக்குக் கை மேல் பலன் கிடைத்தது.. நந்தினி உதடுகள் துடிக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்..
"உங்களை அளவுக்கு மீறிப் பிடிச்சுப் போனதினாலதானே பைத்தியமா நிற்கறேன்..? உங்களைப் பிடிக்கலைன்னா எனக்கு இந்த உலகத்தையே பிடிக்கலைன்னு அர்த்தம் பாஸ்.. ஏன்னா நீங்கதான் என் உலகம்.."
"நந்தினி.."
மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான் நந்தினியின் காதலன்.. காதல்தான் எத்தனை சுகமானதாக இருக்கிறது.. காதலிப்பது ஓர்வித சுகமென்றால்.. காதலிக்கப் படுவது அதைவிட அதீதமான சுகம் கொண்டதாக இருக்கின்றதே.. தேனாகத் தித்திக்கின்றதே..
ரவிச்சந்திரன் நந்தினியால் காதலிக்கப்படும் சுகத்தினை மனமார ரசித்து அனுபவித்தான்.. அதுபோன்ற இன்பம் வேறில்லையென்று அவனது மனம் சொன்னது..
"நம்ம படகு வீட்டுக்குப் போகலாம் வா.."
"நிஜமாவா பாஸ்.. இந்தப் படகு வீட்டில் நாம போகப் போகிறோமா..?"
காதலின் போதையிலிருந்து விடுபட்டு படகு வீட்டில் பயணிக்கப் போகும் ஆர்வத்துடன் சிறு குழந்தையைப் போல விழி விரித்தாள் நந்தினி..
அவளது அந்தக் குழந்தைத்தனமான ஆர்வத்தை ரசித்தான் ரவிச்சந்திரன்..
"யெஸ்.." என்றான்..
"ஹைய்யா.." கைகளைத் தட்டிக் குதித்தாள் நந்தினி.
"ஏய்ய்.. தண்ணிரில் விழுந்து விடாதேடி..." அவளைத் தன் பக்கமாக இழுத்துக் கொண்டான் ரவிச்சந்திரன்..
'தண்ணிங்கிறதெல்லாம் சும்மா.. இவனுக்கு ஒரு செகண்ட் கூட நான் தள்ளியிருக்கக் கூடாது.. கட்டிப் பிடிச்சுக்கிட்டே இருக்கனும்..' கன்னம் சிவந்தாள் நந்தினி.
"ஆலப்புழாவின் முக்கிய தொழிலே படகு வீடுகள்தான்.. இதற்கு அடுத்ததா கயிறு தயாரிக்கும் தொழிலைச் சொல்லலாம்.."
கணப் பொழுதில் தொழிலதிபனாக மாறி அவன் விவரித்ததை ஆழ்ந்து கேட்டுத் தலையை ஆட்டினாள் நந்தினி.. வியாபாரத்தையும் இவனையும் பிரிக்க முடியாது என்று நினைத்துக் கொண்டாள்.. எங்கு சென்றாலும் அங்கு நிலவும் தொழில் சூழலை கணக்கில் எடுத்துக் கொண்டு அவன் பேசுவதை அவள் பலமுறை கவனித்திருக்கிறாள்.. அவளுடைய அப்பா மேகநாதனும் இப்படித்தான்.. எங்கே போனாலும் அந்த நிலத்தில் என்ன விளைகின்றது என்று ஊன்றிக் கவனித்து அதைப் பற்றிச் சிலாகித்து பேசுவார்.. என்னதான் ஜவுளி வியாபாரம் என்று தஞ்சையில் கால் ஊன்றியிருந்தாலும் அவரது வேர் பூர்விக கிராமத்திலும் விவசாயத்திலும்தான் இருந்தது..
'அப்பா..!'
நெகிழ்ந்த மனதை அவளது விழிகளில் கண்டு கொண்டவன்..
"என்ன..?" என்று புருவங்களை உயர்த்தி அவளை மயக்கத்தில் ஆழ்த்தித் தந்தையை மறக்க வைத்தான்..
வரிசை கட்டி நின்றிருந்த படகு வீடுகளில் மிக ஆடம்பரமாக இருந்த படகு வீட்டை நோக்கி அவன் நடந்தான்.. கையில் அவளது துணிகளையும் அவனது துணிகளையும் ஒன்றாக்கித் தன்னுள் அடக்கியிருந்த லெதர் பேக்..
"உன் பேக்கை எடு.."
காரில் அவன் கட்டளையிட்ட போது எதற்காகக் கேட்கிறான் என்று தெரியாமலே பின்சீட்டில் இருந்த தனது பையை எடுத்துக் கொடுத்தாள் நந்தினி.. பையிலிருந்த அவளது துணிகளை அவனது பெரிய லெதர் பேக்கிற்கு அவன் இடம் மாற்றிய போது..
"எதுக்கு பாஸ்..?" என்று குழம்பினாள்..
"போகப் போகத் தெரிஞ்சுக்குவ.." மர்மமான குரலில் அவன் சொன்னதும்..
'இவன் பெரிய மர்ம வீரன்..' என்று புதிதாக ஒரு பட்டப் பெயரைக் கண்டு பிடித்து அவனுக்கு நாமகரணம் செய்தாள்..
அந்த மர்மவீரன் பரிசளிக்கும் மர்மங்கள் அவளுக்குப் பிடித்தமானவையாக இருந்தன.. நீலிமலைக் காட்டில் அவன் காட்டாத மர்மங்களாக..? மீன்முட்டி அருவிகளைப் பார்க்கப் போவதாகச் சொல்லிவிட்டு அவளை முட்டி உடைய மலையேற வைத்தான்.. நீலிமலை வியு பாயிண்டிலிருந்து வெள்ளிப் பாலாறாக ஓடி வந்த
மீன்முட்டி அருவிகளைக் காட்டினான்.. அவற்றைப் பார்த்த அதிசயத்திலிருந்து அவள் மீள்வதற்குள் அவளிடம் காதலைச் சொல்லி மயக்கம் போட வைத்தான்.. அவளையாவது, அவன் காதலிப்பதாவது என்று அவன் காதலை நம்பாமல் மறுத்தவளிடம் கோபம் கொள்ளாமல் யானைக் கூட்டம் வருகிறது என்று பயமுறுத்தி மரக்குடிலைக் காட்டிப் பிரமிக்க வைத்தான்..
அந்த மர்மவீரன் அளிக்கும் மர்மங்கள் அனைத்தும் அலாதியான அழகு நிரம்பிய பொழுதுகளை உள்ளடக்கியவை என்பதில் அடுத்து அவன் கொடுக்கப் போகும் மர்மம் எதுவாக இருக்கக்கூடும் என்று மனது குறுகுறுக்கத்தான் அவனை ஆட்டுக்குட்டி பின் தொடர்வதைப் போலப் பின் தொடர்ந்து கொண்டிருந்தாள் அவள்..
படகு வீடுகளைப் பார்வையிட்டபடி அவன் கூட நடந்தவள்..
"இத்தனை படகு வீடுகளும் வாடகைப் படகு வீடுகளா பாஸ்..?" என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்டாள்..
"யெஸ்.. பட்ஷே.. நாம போகப் போகிறது வாடகைப் படகு வீட்டில் இல்லை.. என் சொந்தப் படகு வீடு..!"
"அதானே பார்த்தேன்.. நீலிமலைக் காட்டிலே மர உச்சியிலேயே மரவீட்டைக் கட்டி வைத்திருந்தவர் படகு வீட்டை விட்டா வைப்பார்ன்னு நினைச்சேன்.. நான் நினைச்சது சரியாத்தான் இருக்கு.."
"ஊஹீம்..? நீ எப்பவும் என்னைப் பத்தியே நினைத்துக்கிட்டு இருக்கேன்னு சொல்லு.." வசீகரமாய் அவன் புருவங்களை உயர்த்தி அவளை வசீகரிக்க யத்தனிக்க..
"யெஸ் பாஸ்.." என்று மயக்கத்துடன் சொல்லி அந்த வசீகரனை வசீகரித்து விட்டாள் அந்த வசீகரி..
"ஏய்ய்.." விழிகள் மின்ன அவன் நின்று விட்டான்..
"எல்லோரும் நம்மையே பார்க்கிறாங்க பாஸ்.." அவள் கெஞ்சோ கெஞ்செனக் கெஞ்சி அவனை நகர வைக்க வேண்டியிருந்தது..
"எல்லாமே கமர்ஷியல் பர்ப்போஸ்தான் நந்தினி.. நீலிமலைக் காட்டின் வுட்-ஹவுஸ், என் கம்பெனியோட கெஸ்ட்-ஹவுஸ்.. அதில வந்து தங்கிப் போகிறவங்க
என் பிஸினெஸ் டீலிங்கை மறுக்கவே மாட்டாங்க.. அக்கிமெண்ட்டைப் பத்திப் பேச வருகிறவங்க, சைன் பண்ணிட்டுப் போயிடுவாங்க.. எப்பவும் என் பிஸினெஸ் டீலிங்கை முறிச்சுக்க மாட்டாங்க.."
"கிரேட் பாஸ்.."
அனைத்தையும் வியாபார நுணுக்கத்தோடு அவன் அணுகியதில் அவளுக்கு அவன் மீதான ஆதர்சம் அதிகரித்தது..
'எல்லாத்தையும் இவன் பிஸினெஸ்ஸாக்கிர்றான்..'
"ஆலப்புழா படகு வீடும் அப்படித்தான்.. வாடகை பர்ப்போஸிக்காக இதை உருவாக்கினேன்.. இங்கே படகு வீடுகளின் தரத்தை வைத்து வாடகையை பிக்ஸ் பண்ணுவாங்க.. நாள் ஒன்றுக்கு பத்தாயிரத்தில் இருந்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை வாடகைக்கு படகுகள் கிடைக்கும்."
"உங்க படகை ஐம்பதாயிரம் ரூபாய்க்குத்தானே வாடகைக்கு விடறங்க..?"
"கரெக்ட்.."
'எதிலயும் இவனோடது பர்ஸ்ட் அண்ட் பெஸ்ட்டாவும் காஸ்ட்லியாவும்தான் இருக்கும்..'
நந்தினிக்குப் பெருமையாக இருந்தது.. அவளது உள்ளம் கவர்ந்த கள்வன் ஒரு அசகாய சூரன் என்பதில் அவள் இறுமாப்புக் கொண்டாள்..
"என் படகு வீட்டில மூன்று எம்ப்ளாயிஸ் வொர்க் பண்றாங்க.. மூன்று பேருக்குமே படகு வீடு சம்பந்தமான எல்லா வொர்க்ஸீம் தெரியும்.."
"படகு வீட்டில் என்ன வொர்க் இருக்கப் போகுது பாஸ்..? படகை ஓட்டனும்.. அவ்வளவுதானே..?"
"இப்படி மத்தவங்க கேட்கலாம்.. ரவிச்சந்திரனோட வொய்ப் கேட்கக் கூடாதுடி.. உனக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டாமா..?"
'நான் இவனுடைய பெண்டாட்டியாம்..'
அவன் தன்னை அவளுடைய புருசன் என்று சொல்லிக் கொண்டதில் எப்படிக் கிறங்கிப் போனாளோ.. அதைவிட அதிகமாக.. அவளைத் தன்னுடைய பெண்டாட்டி என்று சொல்லிக் கொண்டதில் கிறங்கிப் போனாள் நந்தினி..
'புருசன்தான்.. இவன் என்
             புருசன்தான்..'
அவளது மனம் கூவியது.. பதிலுக்கு அவன் வேம்பனாடு ஏரிக்கரையோரம் நின்று..
'பெண்டாட்டி.. இவ என்
             என் பெண்டாட்டி..'
என்று கூவுவதைப் போல மனதில் கற்பனைக் காட்சி விரிந்தது..
ஆணுக்கும் பெண்ணுக்குமான ஆழ்ந்த காதல் மயக்கத்தை உருவாக்கி வைத்த இயற்கையின் நியதி விந்தையானதுதான்.. சிலதினங்களுக்கு முன்வரை யாரோ எவரோ என்றிருந்த அந்த இருவரும் இன்று நீயின்றி நானில்லை என்ற மாறிப் போயிருப்பது விந்தையிலும் விந்தையான ஒன்றுதானே..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -193
எண்ணியிருந்தது ஈடேற -193
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-193.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-193.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy