எண்ணியிருந்தது ஈடேற -192

192 முடிவேயில்லாமல் அந்தக் கார்ப் பயணம் நீண்டு கொண்டே போக வேண்டும் என்று விரும்பினாள் நந்தினி.. அவளது விருப்பத்தை உணர்ந்தவனைப் போலக...


192


முடிவேயில்லாமல் அந்தக் கார்ப் பயணம் நீண்டு கொண்டே போக வேண்டும் என்று விரும்பினாள் நந்தினி.. அவளது விருப்பத்தை உணர்ந்தவனைப் போலக் காரை நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டே இருந்தான் ரவிச்சந்திரன்.. எங்கே போகிறோம் என்று அவளும் கேட்கவில்லை.. அவனும் சொல்லவில்லை.. அக்கம், பக்கம் யாருமில்லாத தனிமையிலே அவன் தோள் சாய்ந்திருந்தாலே போதும் என்றிருந்தது அவளுக்கு..
அவனுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.. அடிக்கடி முகம் திருப்பி அவளது உச்சந்தலையில் முத்தம் பதித்துக் கொண்டே இருந்தான்.. முத்தங்களின் ஸ்பரிசத்தில் மட்டும் இமைகளை மூடித் திறப்பாள் நந்தினி.. மற்ற தருணங்களில் இமை மூடாமல் மெல்லிய குரலில் அவனுடன் பேசிக் கொண்டே இருந்தாள்..
வாய் ஓயாத பேச்சு.. வாய் வலிக்கவில்லையா என்று அவன் கேட்கவேயில்லை.. அவனும் வாய் ஒயாமல் பேசிக் கொண்டுதான் இருந்தான்.. இருவரும் ஒருவர் மனதிலிருந்ததை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டார்கள்.. பகிர்ந்து கொள்ள இத்தனை விவரங்களை மனதில் பதுக்கி வைத்திருந்தோமா என்று மலைத்துப் போனார்கள்..
நந்தினிக்கு ரவிச்சந்திரனிடம் சொல்வதற்கு ஏராளமான விவரங்கள் கொட்டிக் கிடந்தன.. அவளது ஊர்.. பூர்விக கிராமம்.. அங்கே வீடுதோறும் குவிந்திருக்கும் உறவினர்கள்.. தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா என்று அவள் மனப்பாடம் பண்ணி மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு ஊர் முழுக்கப் பரந்திருக்கும் உறவினர் பட்டாளம்.. மேகநாதனின் பண்ணையார் அந்தஸ்து.. அங்கிருக்கும் தோப்பு, துரவுகள்.. காவிரியாறு.. கிராமத்து சிநேகிதிகள்.. தஞ்சையில் அக்கம் பக்கத்து வீடுகளில் இருக்கும் சிநேகிதிகள்.. சென்னையில் கல்லூரிக் காலத்து நினைவுகள்.. சிநேகிதிகள்.. உயிர்த் தோழியான உத்ரா.. தஞ்சையிலிருக்கும் அவளது தம்பி நந்தகுமார்.. அவனது அட்டூழியம்.. அடாவடி.. என்று பேச்சுச் சுரங்கமாய் கொட்டிக் கவிழ்த்துக் கொண்டிருந்தாள்..
அவள் பேசிய விவரங்களை விட.. அதை சுவராஸ்யமாக்கி அவள் பேசிய விதம்தான் அவனைக் கவர்ந்தது.. அவளுடன் இருக்கும் நொடிகளை அவள் உயிர்ப்பாக்கிக் கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான்.. அவள் மெல்லிளம் தென்றலாக இருந்தாள்.. பனி பொதிந்த கேரளத்தின் குளிர்ச்சி அனைத்தையும் தன்னுள் அடக்கியவளாக அவனுக்குள் மோகத்தீயை மூட்டி விட்டாள்.. குளிர் நிரம்பியவளை 'குளிர்காய வா..'
என அழைக்கும் தனைப்பாக மாறிக் கொண்டிருந்தான் ரவிச்சந்திரன்..
அவனுடைய சிறு பிராய்த்து நினைவுக் குவியல்களைக் கிளறியெடுத்து முத்து முத்தான சம்பவங்களைக் கோர்த்து இணைத்து அவளிடம் சொன்னான்.. எப்படி சுவராஸ்யமாக கதை சொன்னாளோ.. அதைப் போல படு சுவராஸ்யமாக அவள் கதை
கேட்டாள்..
'இவள் ஊக்க சக்தி..'
ரவிச்சந்திரனின் மனம் காதலில் திளைத்தது.. இருள் விலகி மெல்லிய வெளிச்சப் படலம் தெரிவதைக் கண்ட நந்தினி வியப்புடன்..
"விடியுது.." என்று சொன்னாள்..
"விடியாம என்ன செய்யும்..? நைட்டுன்னு இருந்தா டே டைம் வந்துதானே தீரும்..?"
பெரும் வாழ்க்கைத் தத்துவத்தை வெகு இயல்பாக சொல்லி வைத்தான் ரவிச்சந்திரன்..
பனிபடர்ந்த கேரளத்தில் இரவு முழுவதும் விழித்திருந்து விடியலை அருகில் பார்க்கும் பாக்கியம் பெற்ற தான் அதிர்ஷ்டசாலி என்று மகிழ்ந்து போனாள் நந்தினி..
'மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில் டிராவல் பண்ணி வந்த போதும் இப்படித்தான்.. ஜர்னி முழுக்க நான் தூங்கலை..'
அன்று அவள் தூங்காமலிருந்ததிற்கு காரணம் வேறு.. ரவிச்சந்திரனும் அவளும் மட்டுமே அந்த கூபேயில் இருந்தார்கள்.. புதிய மனிதன் என்ற பயத்திலும் வீட்டை விட்டு வெளியேறி விட்டாளே என்ற தவிப்பிலும் அவள் தூங்கவில்லை..
இன்னொன்றும் உண்ட.. அன்று.. அவள் மட்டும் தான் தூங்கவில்லை.. ரவிச்சந்திரன் தூங்கினான்.. இன்றோ அவன் தூங்காமல் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறான்.. நந்தினி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள்..
காரின் முன்பக்கக் கண்ணாடியின் வழி தெரிந்த கேரளத்தின் இயற்கை அவளைக் கவர்ந்தது.. எத்தனை முறை வியந்தாலும் அலுக்காத அழகு.. பனி பொழியும் மலை தேசம்.. கேரளத்தின் இயற்கை மிகப் பெரும் போதை என்பதை உணர்வு பூர்வமாக உணர்ந்தவள் நந்தினி.. நீலிமலைக் காட்டையும் மீன் முட்டி அருவிகளையும் மறந்து விட முடியுமா..? அவை தந்த போதையில் மயங்கிப் போய் ரவிச்சந்திரனின் அணைப்பில் அடங்கினாளே..
மாசில்லாத சுத்தமான காற்று மலைப் பகுதிக்கே உரிய வரம்.. மாசில்லாத அழகையும் தன்னகத்தே சேர்த்துக் கொண்டிருந்தத கேரள மலைநாடு.. எங்கு பார்த்தாலும் சிகப்புக் கம்பள வரவேற்பு என்பதைப் போல.. பச்சைக் கம்பள வரவேற்பு.. பச்சைப் பசேலென்ற செடி கொடிகள்.. மூங்கில் பினைத்த பாதைகள்.. கொடி வீடுகள் என மனதை மயக்கத்தில் ஆழ்த்தும் சக்தி கொண்டது கேரளத்தின் இயற்கை அழகு..
கேரளத்துச் செடிகளின் இளம் பச்சை நிறம் மனதுக்குள் உற்சாகத்தை விதைத்தது.. ஓங்கி வளர்ந்த மரங்களின் அடர்த்தி கதிரவனின் கதிர்களை மறைத்து பனியின் ஈரத்திலேயே வைத்துத் தரையைக் கதிரவனின் கதிர்களில் குளிர்காய விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.. பனிப் புகை சூழ்ந்த சாலையில், பனிப்புகையிலிருந்து வெளிச்ச கோடுகளாய் விளக்குகளின் ஒளி வெள்ளம் பாய்ச்சி வாகனங்கள் வெளிப்பட்டன..
"எங்கே வந்திருக்கோம்..?"
எங்கே போகிறோம் என்று கேட்டவள் அங்கே போனதும் உனக்கே தெரியும் என்ற பதிலில் எதுவும் கேட்காமல் அமைதியாகி விட்டு இரவுப் பயணம் முடிந்த விடியலில் எங்கே வந்திருக்கிறோம் என்று கேட்கிறாள்..
'இதுதான் காதலா..?'
அவளது பட்டுக் கன்னத்தில் மின்னல் வேகத்தில் முத்தமிட்டுப் பிரிந்தவன்..
"அங்ஙன நோக்கு.." என்றான்..
அண்ணலும் நோக்கினான்.. அவன் நோக்கிய பாதையில் அவளும் நோக்கினாள்.. '' வென வாய் பிளந்து, இகைளைச் சிமிட்ட முடியாமல் கண்முன் தெரிந்த காட்சியின் பேரழகில் பிரமித்துப் போனவளாக பேச முடியாமல் வாயடைத்துப் போய் உட்கார்ந்து விட்டாள்..
'வாவ்..!' குதூகலித்தது அவள் மனம்..
இமைகளைச் சிமிட்டினால் அந்தப் பேரழகு மறைந்து போய் விடுமோ என்று அஞ்சியவளைய் விழிகள் விரிய உட்கார்ந்திருந்தவளின் தோள் தொட்டு அசைத்தான் ரவிச்சந்திரன்..
"பாஸ்.."
அதற்கு மேல் பேச முடியாத பரவசத்தில் அவள் இருந்தாள்..
நீலிமலைக் காட்டின் மீன் முட்டி அருவிகளைப் பார்த்தபோது ஏற்பட்ட அதே பிரமிப்பு இப்போதும் ஏற்பட்டது.. எத்துனை மனnh ரம்யமான காட்சி..!
நீலிமலைக் காட்டில் மரவீட்டைப் பார்த்ததும் '' வென வாய் பிளந்து நின்றிருக்கிறாள்.. இங்கே கண்ணெதிரே அலையடிக்கும் நீர்ப்பரப்பின் மீது வரிசை கட்டி நின்றிருந்த படகு வீடுகளின் அணிவகுப்பில் சிலிர்த்து விட்டாள்..
"பாஸ்..! என்ன பாஸ் இது..!"
"ம்ம்ம்.. பார்த்தாத் தெரியலை..? படகு வீடு..!"
"அதைத்தான் கேட்கிறேன்.. நாம் என்ன காஷ்மீருக்கா வந்திருக்கிறோம்..?"
நந்தினியின் விழிகள் பனிக்கட்டிகளால் போர்த்தப்பட்ட மலைகளைத் தேடின.. அதில் சறுக்கி விளையாட வேண்டும்... அவளும், அவளுடைய அரவிந்தசாமியான கம்மாண்டரும் பனிக்கட்டிகளை அள்ளியள்ளி ஒருவர்மீது ஒருவர் வீசி மகிழ வேண்டும்..
எங்கே..? அதற்குமேல் கற்பனைச் சிறகை விரித்துப் பறக்க முடியாமல் அவன்..
"அறிவுக் கொழுந்து..!" என பட்டம் கொடுத்து விட்டானே..
'இது எதுக்காம்..?' அவள் மனம் சிணுங்கியது..
"அடிக்கடி உன் அறிவை புரூவ் பண்ணிக்கிட்டே இருக்கக் கூடாதுடி.."
வாரினாலும் காதலனாக 'டீ' சொல்லித்தான் வாருகிறான் என்பதில் ஓர் இன்பச் சிலிர்ப்பை உணர்ந்தவளாக..
"போங்க பாஸ்.." என்னோட அறிவின் லெவலை கோல்டு மெடல் வாங்கிப் 'புரூவ்'  பண்ணிட்டேனாக்கும்.." என்று பொய் கோபம் காட்டினாள் நந்தினி..
"அதைத்தான் எஜீகேசனல் மிராக்கிள்ன்னு நான் சொல்லிட்டேனே.."
"ஆமாமாம்.. இவர் கண்டாரு.."
"உன்னைக் கண்டுக்கிட்டு இருக்கேனே.. போதாதா..?"
"எந்தக் காதலனும் இப்படிக் கண்டுக்கிட்டு இருக்க மாட்டான்.. சான்ஸ் கிடைச்சாப் போதும்.. காலை வாரி தொபுக்கடிர்ன்னு மண்ணைக் கவ்வ வைச்சிடறீங்க.."
"பின்னே என்னடி..? லேட் நைட்டில காரில் புறப்பட்டு விடிகிறப்ப காஷ்மீரில் போய் நின்று விடுவியா..? கேட்டாலும் யோசித்துக் கேள்வி கேட்கனும்.. உனக்கு மேல்மாடி காலிங்கிறதை அடிக்கடி புரூவ் பண்ணக் கூடாது.."
"அப்ப இது காஷ்மீர் இல்லையா..?"
படகு வீடுகளை பார்த்தாள்.. பல வடிவங்களில் அவை நீரில் மிதந்து கொண்டிருந்தன..
"காஷ்மீர் தால் ஏரியிலதானே படகு வீடுகள் இருக்கும்..?"
"ஆலப்புழா வேம்பனாடு ஏரியிலயும் படகு வீடுகள் மிதந்துக்கிட்டு இருக்கும்.."
'ஆஹா..!'
ஆனந்தத்துடன் படகு வீடுகளைப் பார்த்தவளுக்கு இதுவல்லவோ ஆலோக சொர்க்கம் என்று தோன்றியது..
காயல் (கடல்)களின் மீது பயணம் செய்வது என்பது அற்புதமான பயணமல்லவா..?
"ஆலப்புழாவில இருந்து கொச்சிக்கு நீர்வழிப் பயணமா போயிருக்கியா..?"
"நல்லாக் கேட்டிங்க போங்க.. காவேரிக்கரையில பிறந்து வளர்ந்த செந்தமிழ்நாட்டுத் தமிழச்சிகிட்டக் கேட்கிற கேள்வியா இது..? எங்க ஊரு ஆத்தில
குதிச்சு இக்கரையில இருந்து நீந்தி அக்கரையைத் தொட்டிருக்கிறேன்.. அதுதான் என்னோட நீர் வழிப் பயணம்.. கடல்ன்னா எப்படியிருக்கும்ன்னு சென்னையில படிக்க வந்ததுக்கு அப்புறம் மெரினா பீச்சைப் பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன் பாஸ்.."
"கெட்டிக்காரிதான் போ.. ஸோ.. கடல்ன்னா எப்படியிருக்கும்ன்னு உனக்கு விளக்கத் தேவை யில்லைன்னு சொல்லு.."
'அந்த அளவுக்கு நான் தத்தியாயிருப்பேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கான்..'
இதற்காக அவள் வீடு கட்டி சண்டை போட்டிருக்க வேண்டும்.. அவள் செய்யவில்லை.. அவன் என்னவோ அவளுக்குப் புகழாரம் சூட்டி விட்டதைப் போலக் காதலுடன் அவனைப் பார்த்தாள்.. இரவு முழுவதும் காரை ஓட்டி வந்த களைப்புத் தெரியாமல் சுறுசுறுப்புடன் இருந்தவனின் அழகான முகத்தின் அதீத கவர்ச்சியில் அவள் மனம் அலைமேல் படகாக தடுமாறியது..
"என்னடி இப்படிப் பார்க்கிற..? என்னைக் கட்டிக்கனும்.. போல இருக்கா..?" அவனது புருவங்கள் உயர்ந்து இறங்கின..
அவளுக்கு அப்படித்தான் இருந்தது.. மனதைக் கட்டுப் படுத்த வேண்டும் என்ற பதட்டமின்றி அவள் மனம் போல மனம் மயங்கினாள்.. அவளுக்கு அவன் சொன்னதைப் போலதான் இருந்தது.. மனதை மறைக்காமல் 'ஆமாம்' என்பதைப் போல அவள் முகம் சிவக்கத் தலையை ஆட்டி விட்டதில் அவனது விழிகள் மின்னின..
"ஹேய்ய்.."
அவளது தோளில் கை போட்டு இழுத்துக் கொண்டான்..
"கட்டிக்கடி.." அவளது காதோரமாக முணுமுணுத்தான்..
"நான் உனக்குத்தான்.. இஷ்டம் போலப் பிய்த்துத் தின்னுக்க.."
நந்தினி இந்த உலகத்திலேயே இல்லை.. ஜிவ்வென்று ரத்தம் சூடேற.. இறக்கையின்றி வானில் பறந்தாள்.. எட்டாக்கனியென்று எட்டி நின்றவளின்
கையில் 'இந்தா வைத்துக் கொள்..' என்று அவன் தன்னையே தந்து விட்டானே.. அவளது செவி மடல்களில் உராய்ந்த அவனது மீசை முடிகளும், இதழ்களின் ஸ்பரிசமும் அவளை கிறங்க வைத்தன..
"ரவி.." தாள முடியாத தாபத்துடன் அவள் முணுமுணுத்தாள்..
"ரவிதாண்டி.. உன் ரவிதான்.. உனக்கு மட்டும் சொந்தமான ரவிதான்.. நான் உனக்கே உனக்குத்தான்.."
மந்திரம் போல அவன் உச்சரித்ததில் உத்வேகம் கொண்டவளாய் அவன் கழுத்தை வளைத்து வேகத்துடன் இழுத்தாள் நந்தினி.. விருப்பத்துடன் உடன்பட்டவனின் பிடறி முடியை அவளது கைகள் இறுக்கிப் பிடித்தது அவனுக்கு இம்சையாக இருக்கவில்லை.. இன்பமாக இருந்தது.. ஆவேசத்துடன் அவனது முகமெங்கும் முத்தங்களைப் பதித்தவளின் காதலின் வேகத்தில் தன்னை ஒப்புக் கொடுத்தான் ரவிச்சந்திரன்..
அழகான நொடிகள் அவை.. ஆலப்புழாவின் வேம்பனாடு ஏரியின் அருகே.. மனதை கொள்ளை கொள்ளும் படகு வீடுகளின் அணி வகுப்புகளுக்கு எதிரே.. அவனுக்காக அவள் உருகித்தவித்து ஒன்று சேரத் துடித்த நொடிகளை அவன் உணர்ந்து கொண்ட அற்புதமான தருணம் அது..
"நீங்க எனக்கே எனக்குத்தான..?" நம்ப முடியாமல் அவள் கேட்டாள்..
கேரளத்தின் ராஜகுமாரனனான அந்தப் பேரழகன் அவளுக்கு மட்டும் சொந்தமானவனா..? அது உண்மையா..?
உண்மைதான் என்று அவளது கன்னத்தில் முத்தமிட்டான் அவன்.. நான் உனக்கே உனக்குத்தான் என்று வாக்களித்தான்..
காதல்தான் எத்தனை இனிமையானது..! சக்தி வாய்ந்தது..! தஞ்சையில் பிறந்து வளர்ந்த நந்தினியை வயநாட்டில் கொண்டு வந்து நிறுத்தி வயநாட்டு ரவிச்சந்திரனைத் தன் முந்தானையில் கட்டிப் போட்டு விட்டதே..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,6,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,89,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,24,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,6,எண்ணியிருந்தது ஈடேற,229,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,20,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,5,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -192
எண்ணியிருந்தது ஈடேற -192
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-192.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-192.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy