எண்ணியிருந்தது ஈடேற -191

191 எதுவும் பேசாமல் எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு என்று அவன் தோளில் தலை சாய்த்து கண் மூடியிருந்தவளின் ஒப்புக் கொடுத்தலில் உள்ளம் ...


191


எதுவும் பேசாமல் எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு என்று அவன் தோளில் தலை சாய்த்து கண் மூடியிருந்தவளின் ஒப்புக் கொடுத்தலில் உள்ளம் உருகிப் போயிருந்தான் ரவிச்சந்திரன்..
'நீயே சகலமும்..'
அடிக்கடி இதையே உணர்த்திக் கொண்டிருந்தாள் நந்தினி... அவனிடம் அடைக்கலமாகியிருந்தாள்... அவனுடைய காதலை நம்பாமல் சந்தேகித்தவள்.. காதலாகி கசிந்துருகிக் கொண்டிருந்தாள்..
கார் சீரான பாதையில் விரைந்து கொண்டிருந்தது.. காதலில் கண்மூடியிருந்தவளின் விழிகளில் துயில் வந்து துயில் கொண்டதில் அவள் மெல்லத் துயிலில் அமிழ ஆரம்பித்தாள்.. அவளது உறக்கத்தை உணர்ந்த ரவிச்சந்திரன் காரைக் குலுக்காமல் மிதமான வேகத்துடன் அலுங்காமல் குலுங்காமல் தேரைப் போல ஓட்டிச் சென்றான்.. துயில் கலைந்து நந்தினி கண் விழித்துப் பார்த்தபோது இருள் சூழ்ந்த பாதையில் நடுவே விளக்கின் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சியபடி கார் விரைந்து கொண்டிருந்தது..
"முழிச்சிட்டியா..?" கரிசனத்துடன் வினவினான் ரவிச்சந்திரன்..
"ம்ம்ம்.." அவன் தோளிலிருந்து தலையை விலக்காமல் பதில் சொன்னாள் நந்தினி..
"பசிக்கலை.."
"இதைச் சொல்கிறது நீதானா நந்தினி..? நம்ப முடியலை.."
"என்னன்னு தெரியலை பாஸ்.. உங்க பக்கத்தில இருக்கும் போது பசி, தூக்கம் மறந்து போயிருது.."
"மறந்து போயிருதா..? இல்லை.. பறந்து போயிருதா..?"
"ரெண்டும்தான்.."
"இப்பத் தூங்கினியே.."
"என்னை அறியாமத் தூங்கினதுதான்.. இப்படித் தூங்கினாத்தான் உண்டு பாஸ்.. தூங்கனும்னு தூங்க முடியறதில்லை.."
குழந்தையாகச் சொன்னாள் நந்தினி.. காதலின் வெளிப்பாடுகளை உணர முடியாத குழந்தைத்தனம் கொண்டவளின் மீது அவனுடைய பிரியம் அதிகரித்தது.. சாலையோரத்தில் வண்ண மயமான விளக்குகளுடன் மின்னிய உயர்தர உணவகம் ஒன்றின் முன்னால் காரை நிறுத்தினான்..
"வா.. சாப்பிடலாம்.."
"ம்ம்ம்.."
ரவிச்சந்திரனுடன் கை கோர்த்து உணவகத்தில் நுழைந்த போது அவளுக்கு சந்தோசமாக இருந்தது.. அவன்மீதான அவளுடைய காதலை ஒப்புக் கொண்ட பின்பு இப்போதுதான் அவர்கள் இருவரும் தனித்திருக்கிறார்கள்.. அதுவரை உத்ராவும் வினித்தும் உடன் இருந்தார்களே..
இவன் என்னுடையவன் என்ற கர்வத்துடன் அவன் விரல் பற்றி நடந்தவளுக்குப் பெருமையாக இருந்தது.. எதிரும் புதிருமாக உட்காரப் போனவளை அவன் விழிகளால் அதட்டித் தன்பக்கமாக இழுத்துக் கொண்டான்..
"ஏன்..? உத்ராவும் வினித்தும்தான் இல்லையே.." என்று சந்தேகம் கேட்டு விட்டு..
"தத்தி.. தத்தி.." என்ற திட்டுக்களை வாங்கிக் கட்டிக் கொண்டாள் நந்தினி..
"சும்மா சும்மா தத்தி, தத்தின்னு சொல்லாதீங்க பாஸ்.." மூக்கை உறிஞ்சினாள்..
"இப்படிக் கேள்வி கேட்டா வேற எப்படிச் சொல்கிறதாம்..?"
"என்னத்தைக் கேட்டேன்..? நீங்க சொன்னதைத் தானே கேட்டேன்.."
"என்ன சொன்னேன்..?"
"உத்ராவும் வினித் அண்ணாவும் நியுமேரிட் கப்புள்.. அவங்க பக்கத்தில பக்கத்தில உட்கார்ந்துக்கனும்.. அதனால நாம பக்கத்தில பக்கத்தில உட்கார்ந்துக்கனும்.. அப்படின்னு சொன்னீங்க.."
"ஓ.."
"என்னத்தை ''.. மலையாள தேசத்தில இதை யொன்னை கண்டு வைச்சிருக்கீங்க.. எதுக்கெடுத்தாலும் '' தான்.."
"நான் '' போடறதில உனக்கென்னடி வருத்தம்..?"
"ஒரு வருத்தமுமில்லை.. மாறி மாறிப் பேசிட்டு என்னைத் 'தத்தி'ங்கிறிங்க பாருங்க.. அதிலதான் வருத்தம்.."
"தத்தியை தத்தின்னுதான் சொல்ல முடியும்.. மக்கு, மக்கு.."
"இந்தப் பட்டம் வேறயா..?"
"அடேங்கப்பா.. நீ பட்டம் கொடுக்காத ஆள்தான்.. எனக்குக் 'கம்மாண்டர்'ன்னு நிக்நேம் வைத்தவதானடி நீ.. இப்ப என்ன பெயர் வைத்திருக்க..?"
இமை சிமிட்டி அவன் கேட்டான்.. எங்கிருந்தோ வெட்கம் வந்து நந்தினியின் முகத்தில் அப்பிக் கொள்ள அவள் முகம் சிவந்தாள்.. ரவிச்சந்திரன் அதை ரசனையுடன் பார்த்தான்..
"சொல்ல மாட்டேன்.." உதட்டைக் கடித்தபடி அவள் தலையை அசைத்தாள்..
"சொல்லாம நான் விட மாட்டேன்.."
"என்னத்தை செய்வீங்களாம்.."
"எதுவும் செய்வேன்.."
"ஃபார் எக்ஸாம்பிள்..?"
"காதைக் கொடு.."
அவளது காதோரமாக சரிந்து செவிமடல்களில் அவனது மீசை உராய கிசுகிசுத்தான் அவன்.. முகத்தில் ரத்தம் பாய..
"ச்சீய்.." என்று அவன் கையைக் கிள்ளினாள் அவள்..
"ஹா.. ஹா.."
"என்னவெல்லாம் பேசறிங்க.."
"இதுக்கு மேலேயும் பேசுவேன்.. பேசவா..?"
"வேண்டாம், வேண்டாம்.."
"அந்த பயம் இருந்தா எனக்கான நிக் நேம் என்ன என்கிறதை நீ சொல்லியாகனுமே.."
நந்தினி உதட்டைக் கடித்தபடி தலை சாய்ந்து அவனைக் காதலுடன் பார்த்தாள்.. ஈரம் படிந்த அவளது செம்பவள இதழ்களில் முத்தமிடும் ஆசை அவனுக்கு வந்தது.. இதுபோன்ற காதலுடன் எந்தப் பெண்ணும் அவனைப் பார்த்ததில்லை.. அவர்களின் காதலே வேறு விதமானது.. ரவிச்சந்திரன் என்ற கோடிஸ்வர ராஜகுமாரனின் கடைக்கண் பார்வை கிடைத்தால் கிடைக்கப் போகும் பெயரையும், புகழையும் மனதில் இருந்திய காதல் பார்வைகள் அவை..
"கலாபத் காதலன்..!"
கிறக்கத்துடன் சொன்னாள் நந்தினி.. மயக்கத்துடன் அவள் பார்த்த பார்வை அவனை வலை போட்டு இழுத்தது.. சொக்கனிடம் சொக்கிப் போன மீனாட்சியாக அவனிடம் சொக்கிப் போயிருந்தாள் அவள்..
"ஏய்ய்ய்.."
ரவிச்சந்திரன் தாபத்துடன் அவளை நெருங்கினான்.. அவள் எதிர்பார்க்காத தருணத்தில் அவளது கன்னத்தில் முத்தமிட்டான்..
"ஸ்ஸ்.. ஹோட்டல்.."
அவன் மார்பில் கை வைத்துத் தள்ளி விட்டாள் நந்தினி..
"இதுக்குத்தான் என் பக்கத்தில் உட்காரச் சொன்னேன்.. நான் சொல்லாமலே என் பக்கத்தில் நீ உட்கார்ந்திருக்க வேண்டாமா..? உத்ராவும் வினித்தும
நியு மேரிட் கப்புள்ன்னா.. நீயும், நானும் லவ்வர்ஸ்..! மனசிலாயி.."
"மனசில வைச்சுக்கறேன் பாஸ்.."
"எதை..?"
"உங்களை.."
ஒற்றை வார்த்தையில் அவனை சிறை பிடித்தான் நந்தினி.. இவள் இப்படிக்கூடப் பேசுவாளா என்று அவன் ஆச்சரியப்பட்டுப் போனான்..
"என்னை மனதில் வைத்திருக்கிறவ எதற்காக எதிரில் உட்காரப் போனாளாம்..?"
"அதுக்குத்தான் 'தத்தி' பட்டம் கொடுத்தாச்சே.."
நந்தினி கோபம் போலச் சொன்னாள்.. ரவிச்சந்திரன் குழைந்தான்..
"கோபமாடி..?"
"இல்லேன்னு பொய் சொல்லச் சொல்கிறீங்களா..?"
"என் மேல கோபப் படுவியா..?"
"படுவேன்.."
"ஆர் யு ஷ்யூர்..?"
"யெஸ் பாஸ்.. ஐ ஆம் ஷ்யூர்.."
"எங்கே.. கோபப்படு.. பார்க்கலாம்.."
நந்தினி கோபப்பட முயன்றாள்.. உர்ரென முகத்தை வைத்துக் கொண்டவளின் முகத்தோடு முகம் வைத்து அவன் ஈஷியதில் அவளது பொய் கோபம் புறமுதுகு காட்டி ஓடி விட்டது.. ஆசையுடன் அவனைப் பார்த்தவளைப் பார்த்தவனின் கண்கள் மின்னி..
"இதுதான் கோபமா..?" புருவங்களை உயர்த்தினான்..
"பாஸ்.." மயக்கத்துடன் அவன் கையில் முகம் புதைத்தாள்..
"ஆர்டர் ப்ளீஸ்.." சர்வர் வந்து நின்றான்..
பேருக்கு என்று தள்ளி உட்காருவதைப் போல அவள் பாவனை செய்தாள்.. அவன் அதையும் செய்யவில்லை.. அவள் மீது கவிழ்ந்தபடி மெனுகார்டை எடுத்தான்.. அவள் மீது சாய்ந்தபடி எது எது வேண்டும் என்று கேட்டான்.. அவள் மீது உராய்ந்தபடி உணவு வகைகளின் பெயர்களைக் காட்டினான்..
'செம நைட் ஷோ..' இளம் வயது பேரர் ஆர்டர் எடுப்பதை மறந்து '' வென பார்க்க ஆரம்பித்தான்..
இது வேண்டும், அது வேண்டாம் என்று இருவரும் ஈஷிக் கொண்டு வழக்கடித்தார்கள்.. கட்டக் கடைசியில் உங்களுக்குப் பிடித்த உணவு வகைகளையே கொண்டு வரச் சொல்லுங்கள் என்று நந்தினி சொன்னதுதான் ஹைலைட்..
'இதுக்கு எதுக்கு அப்பிக்கனும்..?' பேரரின் சந்தேகத்தை தீர்க்க எவருமில்லை..
அந்த பேரர் சில நாள்களுக்கு முன்னர்தான் அங்கே வேலைக்குச் சேர்ந்திருந்தான்.. இது போன்ற அப்புதலை இப்போதுதான் முதன் முறையாக பார்க்கிறான்.. சமையல் அறைக்குச் சென்றவன்.. அவன் கண்ட காட்சியைப் பற்றி அங்கே பிரஸ்தாபிக்க..
"ஓ..! இதி வல்லிய காட்சியோ..? இதி விட வல்லிய காட்சிகள் பலதை ஞான் நோக்கி.." என்றான் அங்கிருந்த சீனியர் பேரர்..
பேரர் உணவுவகைகள் பரப்பிய தட்டுக்களைச் சுமந்து கொண்டு போன போது ரவிச்சந்திரனும்
நந்தினியும் முகத்தோடு முகம் வைத்து ரகசியம் பேசிக் கொண்டிருந்தார்கள்.. அதி முக்கிய ரகசியம் போல என்று நினைத்துக் கொண்டான் அந்த பேரர்.. கிட்ட நெருங்கும் போது..
"யு ஆர் ஸோ ஸ்வீட்.."
"உங்களை விடவா..?"
என்ற பேச்சுக்கள் காதில் விழுந்ததில் இதுதான் அந்த அதி முக்கிய ரகசியமா என்று நொந்து போனான் பேரர்..
உணவுத் தட்டுக்களை அவன் டேபிளில் கடை பரப்பிக் கொண்டிருக்க.. அவற்றுக்கும் தங்களுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்பதைப் போல ரவிச்சந்திரனும் நந்தினியும் கொஞ்சிக் கொண்டிருந்த வார்கள்.. பேரருக்கு பொறாமையாக இருந்தது.. அவனும்தான் ஆன மட்டும் முயற்சி செய்து பார்த்து விட்டான்.. ஒரு காதலிகூட அகப்படவில்லை..
'இந்தாளுக்கு மட்டும் எப்படி படிஞ்சிருக்குன்னு பாரு...'
நந்தினியை அவன் நோட்டம் விட்டதை நல்ல வேளையாக ரவிச்சந்திரன் 'நோட்' பண்ணவில்லை.. அதனால் தப்பிப் பிழைத்திருப்பதை உணராதவனாக பெருமூச்சுடன் அங்கிருந்து அகன்றான் பேரர்.. அவன் தமிழ்நாட்டிலிருந்து வந்தவன்..
"ஈ மலையாள நாட்டு மக்கள் டீக்கடை வைத்துப் பிழைக்க தமிழ்நாட்டுக்குப் போயி.. நீ எந்துக்கு சர்வர் ஜோலி பாக்க ஈ மலையாள நாட்டுக்கு வந்து..?" என்ற கேள்விக்கு..
"எனிக்கு எங்க ஊரில எந்த ஜோலியும் கிட்டலை.." என்று பொய் சொல்லியிருந்தான்..
"எண்ட ஊரில இருக்கிற சுந்தரிகள் எவரும் என்னைத் திரும்பிப் பார்க்கலையல்லோ.. அதினால நிங்க மலையாள தேசத்து சுந்தரிகளில எவளையாது நோக்கி நூல் விட்டுக் கணக்குப் பண்ணனும்னு இங்ஙன ஜோலி பார்க்க வந்திருக்கிறேனல்லோ.."  என்ற உணமையை அவன் சொல்லியிருந்தால்..
"இங்ஙன உனிக்கு எந்த ஜோலியும் இல்லையல்லோ.." என்று முதுகில் டின் கட்டித் துரத்தியடித்திருப்பார்கள்..
அவ்வாறு மலையாள சுந்தரியை மடிக்க நினைத்திருந்தவனுக்கு மலையாள சுந்தரிகளை விடப் பேரழகியான ஒருத்தியை ஒருவன் மடித்துத் தன் கைபிடிக்குள் பொட்டலம் கட்டி வைத்திருந்ததில் பொறாமை வராதா..?
நந்தினிக்கு மட்டும் அவள் மலையாள சுந்தரிகளைவிட வல்லிய (பெரிய) சுந்தரியென்று
அந்த பேரர் நினைத்திருந்ததைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.. அவனுக்குப் பிராந்தை (பைத்தியம்) தான் என்று முடிவு கட்டியிருப்பாள்..
"ஞான் சுந்தரி யென்பதிலேயே எனிக்கு வல்லிய சம்சயம் (சந்தேகம்) உண்டு.. இதில ஞான் வல்லிய சுந்தரியோ..?" என்று எகிறிக் குதித்திருப்பாள்..
தன் அழகைக் குறித்த பிரக்ஞை சிறிதும் இல்லாதவளாக ரவிச்சந்திரனையே பருகு, பருகு எனப் பார்த்தபடி இருந்த நந்தினியின் மாசு மருவில்லாத பேரழகில் மயங்கிப் போயிருந்தான் ரவிச்சந்திரன்.. இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக் கொள்ளாத குறையாக சாப்பிட்டு முடித்தார்கள்.. கை கழுவிய ரவிச்சந்திரன் டிஷ்யூ பேப்பரைப் புறக்கணித்து விட்டு நந்தினியின் துப்பட்டாவில் கை துடைத்தான்.. அது போதாது என்று நந்தினி தன் துப்பட்டாவினால் அவனுடைய வாய் துடைத்து விட்டாள்..
இவர்கள் அடித்த லூட்டியைப் பார்த்தபடி தட்டுக்களை எடுத்த பணியாள் அதை நழுவ விட இருந்த கடைசியில் 'கேட்ச்' எனக் கைப்பற்றித் தப்பித்தான்..
இப்படியாகத்தானே ஓட்டலில் வேலை செய்பவர்களுக்கு சோதனை மேல் சோதனையைக் கொடுத்து விட்டுக் காரில் ஏறிக் கிளப்பிய ரவிச்சந்திரனின் தோள் மீது தலை சாய்த்துக் கொண்டாள் நந்தினி..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -191
எண்ணியிருந்தது ஈடேற -191
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-191.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-191.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy