எண்ணியிருந்தது ஈடேற -190

190 "தடக்.. தடக்.. தடக்.. க்கூ.. சிக்கு.. புக்கு.. சிக்கு.. புக்கு.." மங்களூர் எக்ஸ்பிரஸ் கோழிக்கோடை விட்டு நகர்ந்தது.....


190


"தடக்.. தடக்.. தடக்.. க்கூ.. சிக்கு.. புக்கு.. சிக்கு.. புக்கு.."
மங்களூர் எக்ஸ்பிரஸ் கோழிக்கோடை விட்டு நகர்ந்தது.. உத்ராவும், வினித்தும் ஒருவர்மீது ஒருவர் அப்பியவர்களாக ஏஸி கோச்சின் வாசலில் நின்று எட்டிப் பார்த்துக் கையாட்டிக் கொண்டிருந்தார்கள்.. ரயில் மறைந்து புள்ளியாகும் வரை கையாட்டிக் கொண்டிருந்த நந்தினி.. ரயில் கண் பார்வையிலிருந்து மறைந்த பின்னாலும் கையாட்டுவதை நிறுத்தாமல் அப்படியே நின்றிருந்தாள்..
"ஹேய்.. பைத்தியம்.."
ரவிச்சந்திரன் அவளது தோள் தொட்டு அழைத்ததும் பிரமை பிடித்ததைப் போல அவனைப் பார்த்தவள்..
"உத்ரா சென்னைக்குப் போயிட்டாளா பாஸ்..?" என்று ஏக்கத்துடன் கேட்டாள்..
"நான் உன்னுடன்தான் இருக்கிறேன்.. எப்போதும் இருப்பேன்.."
கனிவுடன் அவளை அணைத்துக் கொண்டான் ரவிச்சந்திரன்.. தாய்மடியில் ஒன்றும் கன்றினைப் போல அவன் மார்பில் முகம் புதைத்துப் பிணைந்து நின்றவளின் கரங்கள் உரிமையுடன் அவனது இடுப்பை வளைத்துக் கொண்டதில் அவனுக்குள் திருப்தி பரவியது.
அவனிடம் காதல் சொல்வதற்கு முன் இப்படியொரு நெருக்கத்தை அவள் காட்டியதேயில்லை..
"நந்தினி.."
அவளது உச்சந்தலையில் முகம் புதைத்து முத்தம் பதித்தான்.. அவளுக்குள் ஓடிய சிலிர்ப்பலைகளை அவனது உடல் உணர்ந்தது.. தோழியின் பிரிவால் அவள் மனதில் குடி கொண்டிருந்த துயரை உணர்ந்தவன் அதிலிருந்து அவளை வெளியே கொண்டுவர யத்தனித்தவனாய் அவள் காதுகளில் கிசுகிசுத்தான்..
"உங்க ஊர் செண்பகப் பாண்டியன் தன்னோட மகாராணியின் கூந்தலை இப்படித்தானே முகர்ந்திருப்பான்..?"
உச்சந்தலையிலிருந்து இறங்கி அவளது கூந்தல் காட்டில் முகம் புதைத்துப் புரட்டியவன்..
"ம்ஹா.." என்று வாசம் பிடித்தான்..
"பாஸ்.." நந்தினி அவனுக்குள் இன்னமும் அதிகமாகப் புதைந்தாள்..
அவன் மீதிருந்து வந்த இதமான நறுமணம் அவளை கிறங்க வைத்து ஏதோ ஓர் நதியில் மூழ்கும் உணர்வை ஏற்படுத்தியது..
'செண்பகப் பாண்டிய மன்னனின் மகாராணி இதுபோல வாசனையை உணரவில்லையா..?' தனக்குள் கேட்டுக் கொண்டாள்..
காலம் காலமாக பெண்களின் அழகை மட்டுமே பிரத்யேகமாய் புகழும் கவிஞர்களும் காவியம் படைத்தவர்களும் ஆண்களின் அழகைக் குறித்து எதுவுமே சொல்வதில்லையே.. அது ஏன்..? அப்படியே வர்ணித்தாலும் அவர்களின் வீரம் குறித்தும் வலிமை குறித்துமே வர்ணிக்கிறார்கள்..
ஆண்களுக்கு வீரம் அழகு.. பெண்களுக்கு அவர்களின் தோற்றம்தான் அழகு என்ற நியதியை வகுத்தவர் யார்..?
அடுத்த ரயில் வந்து நின்றதில் கூட்டம் குவிந்தது.. தனிமை கலைக்கப்பட்டதில் ஒட்டித் தழுவி நின்ற ரவிச்சந்திரனும் நந்தினியும் பிரிந்து எட்ட நின்றார்கள்.. நந்தனியின் வெட்கச் சிவப்பை பூசிய முகத்தில் உத்ராவைக் குறித்த ஏக்கம் சிறிதும் இல்லை.. அவள் ரவிச்சந்திரனின் காதலியாக.. அவனைக் காதலிப்பவளாக நாணி நின்றாள்..
சில நொடிகளில் அவளைத் தோழியை மறக்க வைத்து விட்ட கர்வத்துடன் அவளது தோளில் கை போட்டு இறுக்கியபடி நடக்கத் தொடங்கினான் ரவிச்சந்திரன்.. நந்தினியின் கை அவனது இடுப்பைத் தானாக வளைத்துக் கொண்டதில் அவனுக்குள் சந்தோசம் உண்டானது..
காரில் ஏறுவதற்காகப் பிரிந்தவள் அவன் காரில் ஏறி அமர்ந்ததும் அதற்காகவே காத்திருந்ததைப் போல அவன் தோளில் தலை சாய்த்துக் கண்களை மூடிக் கொண்டாள்..
ரவிச்சந்திரனுக்கு அது பிடித்திருந்தது.. அவன் கேட்காமலே அவள் காட்டிய நெருக்கத்தில் அவன் மனம் நிறைந்திருந்தது.. அவனிடம் அவள் எடுத்துக் கொண்ட உரிமையில் அவனது உடல் தகிக் ஆரம்பித்தது.. அவளை எட்ட நிறுத்திப் பேசிப் பழக முடியாத நிலையில் அவனிருந்தான்..
அவன் தோளில் தலைசாய்த்திருந்த நந்தினியின் இதழ்கள் மயக்கத்துடன் பாட ஆரம்பித்தன.. காரை ஓட்டிக் கொண்டிருந்த ரவிச்சந்திரன் செவிகள் அப்பாடலின் கிறக்கத்தையும் காதலையும் உள்வாங்கிக் கொண்டன..
 "விழியில் உன் விழியில்
             வந்து விழுந்தேன்..
    அந்த நொடியில் என் எதிர்காலம்
             நீதான் என்று உயிர் சொன்னதே.."
காரை ஒடித்து மலைப் பாதையில் திருப்பிய ரவிச்சந்திரனின் மனதும் உடலும் அவளது அண்மையில் குளிர் காய்ந்து கொண்டிருந்தன..
"வழியில் உன் வழியில்..
             வந்து நடந்தேன்..
    அந்த நொடியில் என் வழித்துணை
             நீதான் என்று என்நிழல் சொன்னதே.."
நந்தினியின் தலைமீது தலை மோதினான் ரவிச்சந்திரன்.. அவனுக்கும் அவளுக்கும் மட்டும் உரித்தான அந்தத் தனிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற தீவிரம் அவன் நெஞ்சில் பரவியது.. வயநாட்டு அரண்மனைக்கு உடனடியாகத் திரும்பிப் போக அவன் விரும்பவில்லை.. அவளும் அவனும் மட்டுமாக சுகித்திருக்கும் இந்தத் தனிமை கலையக் கூடாது.. நீடித்திருக்க வேண்டும்..
"உன்னோடு வாழ்ந்திடத்தானே வாழ்கிறேன்..
             உன்கையில் என்னைத் தந்து தோளில்
                              சாய்கிறேன்.."
நந்தினி பாடல் வரிகளை உணர்ந்து உருகிப் பாடினாள்.. அவளது காதலில் நனைந்து கரைந்து அந்த அற்புதமான நொடிகளை அனுபவித்து ரசித்துக் கொண்டிருந்தான் அவன்..
நந்தினி அவனிடம் காதல் சொல்லியபோது உத்ராவும் வினித்தும் உடனிருந்தார்கள்.. அவ்வபோது கிடைத்த தனிமையில் ஒட்டி உரசிக் கொண்டாலும்.. அவன் மனதில் பற்றியெரிந்து கொண்டிருந்த போகத்தீயை அந்தத் தழுவல்களால் குளிர வைக்க முடியவில்லை.. கனல் வீசும் காதலின் ஜ்வாலையை நந்தினியால் மட்டுமே அருவி நீராய் அணைக்க முடியும் என்ற நிலையில் அவன் தகித்துக் கொண்டிருந்த போது அவர்கள் வயநாட்டுக்குத் திரும்பி விட்டார்கள்..
அரண்மனையின் பூசல்கள்... குடும்ப அங்கத்தினர்கள்.. பொறுப்புள்ள குடும்பத் தலைவனாய்.. எஸ்டேட்டின் நிர்வாகியாய் பார்க்க வேண்டிய அலுவல்கள் என்று காதலிக்க நேரமும் சூழலும் கிட்டாமல் அவன் அல்லாடிக் கொண்டிருந்தான்..
இதோ.. உத்ராவும் வினித்தும் சென்னைக்கு திரும்பி விட்டார்கள்.. ரவிச்சந்திரனும் நந்தினியும் வயநாட்டு அரண்மனையிலிருந்து வெளியே வந்து அற்புதத் தனிமையின் ஆளுகையில் சுகித்திருக்கிறார்கள்..
இந்த சுகம் நீடிக்க வேண்டும்.. நந்தினி அவனுக்காக  எப்படியெல்லாம் உருகுகிறாள் என்பதை அவன் உணர்வுபூர்வமாக உணர்ந்து விட வேண்டும்..
"இதுவரை என் இருதயம்..
             இந்த உணர்வினில் தடுமாறவில்லை..
    முதல்முறை இந்த இளமையின் சுகம்
             உணர்ந்ததில் நான் தூங்கவில்லை.."
நந்தினியின் குரல் உணர்வின் வேகம் தாளாமல் நடுங்கியது.. முதன் முதலாய் காதலை உணர்ந்த காரிகையின் மனதில் எழும் உணர்வுகளை அப்பாடலில் அவள் பிரதிபலித்துக் கொண்டிருந்தாள்..
"குடையோடு நான் போனேன்..
             மழையினில் ஏனோ நனைகின்றேன்..
    கடிகாரம் இருந்தாலும்..
             காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்.."
நெகிழ்ந்த குரலுடன் தலையுயர்த்தி அவனைப் பார்த்தவள்.. தழதழத்த குரலுடன்..
"என் தனிமைக்கு தனிமை
             நீ வந்து கொடுத்தாய்.."
என்று அவர்களுக்கு மட்டும் சொந்தமான அந்தத் தனிமையில் தனிமைக்கான அர்த்தத்தை கவித்துவமாக எடுத்துரைத்தாள்..
ரவிச்சந்திரன் கிண்டலாக எதையோ கூறியதில் கலகலத்து அவள் சிரித்தாள்.. அவளது சிரிப்பினில் உண்டான உயிர்ப்பலைகளில் கரை சேர விரும்பாமல் நீந்திக் களித்தான் அவன்.. அவளது சிரிப்பை ரசித்துச் சிரித்த அவன் சிரிப்பில் மயங்கிப் போனவளாக அவனையே பிய்த்துத் தின்று விடுவதைப் போல ஆசையாசையாய் பார்த்து வைத்தாள் அவள்.. அவன் என்னவென்று வினவும் பாவனையில் இமைகளை உயர்த்தி விழிகளைச் சிமிட்டியதில் அவளுக்குள் 'ஜிவ்' வென்ற ஒர் உணர்வு கிளம்பி இன்பமாக இம்சை செய்தது..
"சிரிப்பிலே.. உன் சிரிப்பிலே..
           சிறையிலடைக்கிறாய் நான் மீளவில்லை..
    உறவுகள் ஒன்று சேர்கையில்
       என்ன ஆகின்றேன் என தெரியவில்லை.."
நந்தினி நகர்ந்து அவனுடன் பசை போட்டு ஒட்டிக் கொண்டதைப் போல ஒட்டிக் கொண்டாள்.. அவன் மீதான  அவளது அதீத காதலின் வெளிப்பாடுகளில் அவனது எல்லைகள் தகர்ந்தன.. காரை வேகம் கூட்டினான்.. அதைக் கவனிக்கும் மனநிலையில் அவள் இல்லை.. அவளது உலகில் அவன் மட்டுமே இருந்தான்.. அவளுடைய ரவிச்சந்திரன்.. அவளின் காதலன்.. அவளைக் காதலிப்பவன்..
அர்த்தமில்லாத உரையாடல்கள்.. எதைச் சொன்னாள் என்று அவளுக்கும் நினைவில்லை..
எதைக் கேட்டான் என்று அவனுக்கும் நினைவில்லை..
ஆழ்ந்த காதலில் அர்த்தமில்லாத உரையாடல்கள் கூட ஓர்விதச் சுகமானவைதான்..
"உன்னோடு நான் பேசும்
              ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே..
    உரையாடல் தொடர்ந்தாலும்
          காலங்கள் கூடப் பிடிக்கிறதே..
    என் கனவுக்கு கனவு
          நீ வந்து கொடுத்தாள்.."
கனவில் மிதப்பவளாய் கண் மூடிச் சொக்கினாள் நந்தினி.. அவனது அருகாமை சுகம் நிறைந்ததாக இருந்தது.. அவளுக்கும் அவனுக்குமான தனிமை இதம் நிரம்பியதாக இருந்தது..
அவளின் அவன்.. இந்த உணர்வுடன் விழிமூடி அவன் தோளில் சாய்ந்திருந்தவள் இன்னமுமா வயநாட்டுக்கு வந்து சேரவில்லை.. என்ற கேள்வியோடு விழி திறந்தாள்.. எதிரே தெரிந்த சாலை வயநாட்டுக்குச் செல்லும் சாலையாக இல்லாததில் திகைத்தாள்..
"பாஸ்.."
"நான் உனக்கு பாஸா..?"
"பின்னே இல்லையா..? என்னைக்குமே நீங்கதானே என்னோட பாஸ்.."
"அசத்தறடி.. இந்தப் பேச்சையெல்லாம் இத்தனை நாளாய் எங்கே ஒளித்து வைத்திருந்த..?"
"என் மனசுக்குள்ள.."
"அடுத்த அசத்தல்..! நந்தினி..!"
"ம்ம்ம்.."
"ஐ லவ் யு.."
போதையுடன் சொன்ன ரவிச்சந்திரனின் குரல் கரகரத்தது.. காதல் அதிகமானால் அவனது குரல் கரகரத்து விடுகிறது என்பதில் நந்தினி அவனது தோள் வளைவில் முகம் புதைத்து முத்தம் கொடுத்தாள்..
"ஏய்ய்ய்.."
அவன் காரை ஓரம் கட்டி நிறுத்தி விட்டான்.. பனி தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவின் இயற்கை எழில் கொஞ்சும் அழகில் மனம் லயிக்காதவளாய் அவளைத் தேடிக் குனிந்த அவனது முக வசீகரத்தில் மனம் லயித்தாள் நந்தினி..
இளம்பச்சை செடிகளும் ஓங்கி வளர்ந்த மரங்களுமாக ஓர்புறம் இருக்க.. மறுபுறம் சரிவாக இறங்கி பள்ளத்தாக்கில் முடிந்தது..
மலையோரக் காடோரமாக காரை நிறுத்தி விட்டு அவளை இழுத்து வேட்கையுடன் தழுவிக் கொண்ட ரவிச்சந்திரனின் இறுக்கமான அணைப்பில் நந்தினிக்கு மூச்சுத் திணறியது.. அடக்கி வைத்திருந்த ஆவேசத்தை முத்த மழைகளால் பொழிந்து கொண்டிருந்தான் ரவிச்சந்திரன்..
"பாஸ்.."
"சொல்லுடி.."
"இது வயநாட்டுக்குப் போகிற பாதையில்லை.."
"இல்லை.. அதுக்கு இப்ப என்னாங்கிற..?"
அவளைப் போலவே கேள்வி கேட்டு அவளை மயக்கினான் அந்த வசீகரன்.. ஹை டெக் தொழிலதிபன் அவளுக்காக பேசும் முறையை மாற்றிப் பேசியதில் அவள் கள் நிரம்பிய பூவானாள்..
"எங்கே போகிறோம் பாஸ்..?"
"அங்கே போனதும் உனக்கே தெரியும்.."
எங்கே அழைத்துக் கொண்ட போகிறான் என்று தெரியாமலே அவனுடன் பயணிக்க ஆரம்பித்தாள் நந்தினி..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -190
எண்ணியிருந்தது ஈடேற -190
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-190.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-190.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy