எண்ணியிருந்தது ஈடேற -189

189 நந்தினி சிநேகித துரோகியாகி விட்டாளா.. ? அப்படியொரு பெயர் ஏற்பட்டு விட்டால் வயநாட்டு மலையுச்சியிலிருந்து தலைகீழாக பாய்ந்து தன் உ...


189


நந்தினி சிநேகித துரோகியாகி விட்டாளா..? அப்படியொரு பெயர் ஏற்பட்டு விட்டால் வயநாட்டு மலையுச்சியிலிருந்து தலைகீழாக பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டாள் நந்தினி..
அவள் அருள்மொழிவர்மனிடம் என்ன சொன்னாள்..? அவள் ஒன்றும் அபராஜிதனிடம் பேசவில்லை.. அவன் உத்ராவிடம்தான் பேசிக் கொண்டிருந்தான் என்று சொன்னாள்.. அதை அப்போதே குதர்க்கப் படுத்த முயன்ற அஜந்தா தோற்றுப் போனாள்.. தங்கை செய்ய முயன்றதை இப்போது அபராஜிதன் செய்து விட்டானே.. உத்ராவைத் தவறாகச் சொல்லவில்லை என்பதை நந்தினி எப்படி நிரூபிப்பாள்..? விசாரனை என்று ஆரம்பித்தால் அது வினித்தின் காதுகளுக்குப் போய் விடும்.. அமைதியாக விட்டு விட்டால் உத்ரா ஆயுளுக்கும் நந்தினியை மன்னிக்க மாட்டாள்.. சிநேகித துரோகி யென்று நினைத்து விடுவாள்..
'என்ன செய்வது..?'
பொறியில் மாட்டிக் கொண்ட எலியாக தவித்தாள் நந்தினி... அவளை இடுங்கிய கண்களுடன் பார்த்த அபராஜிதன்..
"என்னங்க.. இரண்டு பேரும் கூடிக்கூடி ரகசியம் பேசிக்கிட்டிங்க.. இப்ப எதுவும் பேசாம எதிரும், புதிருமா நிற்கறிங்க..? என்ன ஆனது..? நீங்க இரண்டு பேரும் 'திக்க்க்..' பிரண்டாச்சே.." என்று நக்கலாகக் கேட்டான்..
நந்தினிக்கு வேகு, வேகு என வந்தது..
"நந்தினி.." ரவிச்சந்திரனின் குரலில் திரும்பிப் பார்த்தாள்..
ரவிச்சந்திரனும், வினித்தும் தோட்டத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள்.. அவர்களைப் பார்த்த அபராஜிதன்..
"என் அம்மாவன் மோனோட இவங்க ஹஸ்பெண்டும் வருகிறார் போல இருக்கே.. ஏன் நீங்க இரண்டு பேரும் இப்படி நிற்கறிங்கன்னு அவரிடமே கேட்டு விடலாமா..?" என்று உத்ராவையே உன்னிப்பாக பார்த்தபடி புருவங்களை உயர்த்தினான்..
உத்ராவின் முகம் வெளிரியதில் நந்தினியின் மனம் பதறியது.. அஞ்சாமையை அவருக்குப் போதித்த அவளின் தோழி அபராஜிதனிடம் அஞ்சி நிற்பதா..?
"நீங்க இங்கேதான் இருப்பீங்கன்னு வினித்திடம் சொன்னேன்... கரெக்டாக் சொல்லிட்டிங்களேன்னு ஆச்சரியப் படறார்.. நந்தினிக்கு எங்க அரண்மனைத் தோட்டம்ன்னா அப்படியொரு பித்து... பகலில் தோட்டத்தில்தான் குடியிருப்பாள்... நைட் டயத்தில மாடி ஹாலிலோ.. இல்லை அவளோட ரூமிலோ உட்கார்ந்துக்கிட்டுத் தோட்டத்தை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருப்பா.." ரவிச்சந்திரனின் பார்வை உரிமையுடன் நந்தினியை வருடியது..
பதிலுக்கு காதலுடன் காதலனைப் பார்க்க முடியாமல் கண்கலங்கி விட்டாள் நந்தினி.. ரவிச்சந்திரனின் புருவங்கள் சுருங்கின.. அபராஜிதனும் அங்கே நிற்பதை அப்போதுதான் கவனித்தவனாக..
"பெண்கள் பேசிக்கொண்டிருக்கும் இடத்தில் உனக்கென்ன வேலை..?" என்று கடுமை காட்டினான்..
'ஆமாண்டா.. பொண்ணுக பேசற இடத்தில எனக்கு வேலையிருக்கக் கூடாது.. உனக்கு மட்டும் வேலையிருக்கனும்.. அதிகாரமாடா பண்ற..? உன்னோட இந்த அதிகாரத்தை உடைத்துத் தூள் தூளா ஆக்கலேன்னா நான்.. நான்.. நான்..'
அத்துடன் நிறுத்திக் கொண்டான் அபராஜிதன்.. நான் அபராஜிதன் இல்லைடா என்று ரவிச்சந்திரனுக்கு எதிராக மனதுக்குள் கூடச் சூளுரைக்கும் தைரியம் அவனுக்கு வரவில்லை..
'இவன் மைண்ட் வாய்ஸைக் கூடப் படிச்சுத் தொலைப்பான்..'
அபராஜிதனின் மனதைப் படித்து விட்டு ரவிச்சந்திரன் அபராஜிதனை இல்லாமலே ஆக்கிவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் அவன் அத்துடன் நிறுத்திக் கொண்டான்..
உத்ராவுக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.. அபராஜிதன் என்ன பேசி வைப்பானோ என்று அவள் பயந்தாள்..
"பாஸ்.." நந்தினியின் குரல் தழதழத்ததில் வினித்தும் ரவிச்சந்திரனும் உத்ராவைப் பார்க்காமல் நந்தினியைக் கவனித்தார்கள்..
"வாட் ஹேப்பன்..?" ரவிச்சந்திரன் அதட்டினான்..
"இவன்.. இவன்.." நந்தினி திக்கித் திணறினாள்..
'பேசாதேடி..' உத்ரா பார்வையில் இறைஞ்சினாள்..
அபராஜிதனைப் பற்றி வழக்கு வைத்துத் தொலைத்தால்  வினித்தின் பலத்த கண்டனம் நிறைந்த விசாரணைக்கு அவள் ஆளாக வேண்டியிருக்கும்..
'வேண்டாம் நந்தினி.. வாயை மூடிக் கொண்டிரு..'
உத்ராவின் பதட்டத்தையும் பயத்தையும் ரவிச்சந்திரனும் வினித்தும் கண்டு விடாமலிருக்க நந்தினி மளமளவென்று கண்ணீர் விட்டு அவர்களின் மொத்தக் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டாள்..
"சொல்லு நந்தினி.. இவன் என்ன செய்தான்..?"
ரவிச்சந்திரன் உறுமிய உறுமலில் அபராஜிதனின் சர்வாங்கமும் நடுங்கித் தொலைத்தன.. இருந்தாலும் அவன் திடமாக நின்றான்.. நந்தினியிடம் அவனை என்ன செய்து விட முடியும் என்ற இறுமாப்பு அவனுக்கு.. அவனால் உத்ராவின் கணவனின் மனதில் சந்தேகத்தை விதைத்து விட முடியும்..? அந்த இரு பெண்களால் அவனை என்ன செய்து விட முடியும்..?
"இவன்.. இவன்..?"
"இவன்..?"
"நான் இவனை சைட் அடித்ததாவும் .. காதலித்ததாவும் உத்ராவிடம் கதை கட்டறான் பாஸ்.."
நந்தினி பிளேட்டைத் தன் பக்கமாக திருப்பி விட்டு அழ ஆரம்பித்து விட்டாள்.. ஒருவகையில் அபராஜிதன் அதைச் செய்ய முயன்றவன்தான் என்பதில் அவள் மனதில் பொய் சொல்லும் உணர்வே வரவில்லை... உத்ராவை அவன் மிரட்டியதில் அவள் கொதித்துப் போயிருந்தாள்.. அபராஜிதன் இரக்கப் பட வேண்டியவனல்ல என்ற முடிவுக்கு வந்திருந்தாள்..
நந்தினியின் மீதான ரவிச்சந்திரனின் தீவிரமான காதல் எத்தனை சக்தி வாய்ந்தது என்பதை நந்தினி அறிவாள்.. அதை அபராஜிதனும் அறிந்து கொள்ள வேண்டாமா..? நந்தினியை ஓர் பார்வை பார்த்தாலே ரவிச்சந்திரன் அவனைக் கொன்று புதைத்து விடுவான்.. இதில் நந்தினி அபராஜிதனைப் பார்ப்பதாக அவன் கதை கட்டுகிறான் என்றால் விட்டு வைப்பானா..?
"அப்படியா சொன்னான்..? ராஸ்கல்..!"
வினித்துக்கு கோபம் வந்து விட்டது.. அவனுக்கு அபராஜிதனின் மீது நல்ல அபிப்ராயம் கிடையாது.. நந்தினியிடம் அவன் ரோமியோத்தனம் காட்ட முயன்றதை வினித் நினைவில் வைத்திருந்தான்.. ரவிச்சந்திரனுக்கு நந்தினியின் மீது காதல் உண்டாகியிருக்கிறது.. நந்தினியும் அவனைக் காதலிக்கிறாள் என்று சாப்பிட வருவதற்கு முன்னால் உத்ரா வினித்திடம் சொல்லியிருந்தாள்.. தங்கையைப் போலப் பாசம் காட்டும் நந்தினியின் வாழ்வைக் காப்பாற்றும் பொறுப்புள்ள அண்ணனாக அவன் மாறிவிட்டான்..
"ரவிசார்.. இவன் உங்க ரிலேட்டிவ்ங்கிறதினால கை வைக்காம இருக்கிறேன்.. இல்லேன்னா நடக்கிறதே வேற.. நந்தினியை வயநாட்டுக்கு அனுப்பி வைக்க நானும் உத்ராவும் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசனுக்கு வந்தப்ப இவன் நந்தினியிடம் பேச டிரை பண்ணினான்.. நான் பார்த்துட்டுக் கண்டிச்சேன்.. செஞ்சியிலே உத்ராவும் நந்தினியும் அவுட்டிங் போனப்ப இவனைப் பார்த்தாங்களாம்.. அப்ப.. உத்ராவும் இவன் செஞ்சிக் கோட்டையைப்பற்றி உயர்வாய் பேசவும் அதில இம்ப்ரெஸ் ஆகி.. அவவோட ஊர்க் கோட்டையைப் பற்றின பெருமையில கோட்டையைப் பத்தித்தான் இவனிடம் பேசியிருக்கிறா.. அப்ப செஞ்சிக் கோட்டையோட ஃபுல் ஹிஸ்டரியையும் இவன் சொன்னானாம்.."
"இவன் அப்படித்தான் வினித்.. எந்த இடத்துக்குப் போக வேண்டி வந்தாலும் அந்த இடத்தோட ஃபுல் டீடெயிலையும் கலெக்ட் பண்ணி வைத்துக்குவான்.. அதைப் பற்றித் தெரிந்ததைப் போலப் பேசுவான்.. இந்த புத்தியையெல்லாம் பிஸினெஸ்ஸில் காண்பிக்க மாட்டான்.. அப்படியே இவனோட அப்பாவோட குணம் இவன் ரத்தத்திலே ஊறியிருக்கு... உருப்படாதவன்.."
"இவன் சொன்னதை வைத்து உத்ரா நாலு வார்த்தை இவனிடம் பேசியிருக்கிறா.. இந்த நாய் அதை யூஸ் பண்ணிக்கிட்டு ரயில்வே ஸ்டேசன் வரைக்கும் வந்திருச்சு.. நான் அடிக்காத குறையா சண்டை போட்டு விரட்டி விட்டுட்டேன்.."
"ஊஹீம்.. நீங்க விரட்டி விட்டதிலே இவன் ஓடிப் போயிடலை வினித்.. நீங்களும் உத்ராவும் நந்தினியை அவளோட சீட்டில் உட்கார வைத்துட்டுப் போனதும் இவன் என்னோட சீட்டில வந்து உட்கார்ந்துக்கிட்டு இவன்தான் ரவிச்சந்திரன்னு சொன்னானாம்.."
"அயோக்கிய ராஸ்கல்.. அப்படியா சொன்னான்..?" 
வினித் நந்தினியிடம் கேட்க.. அவள்..
"ஆமாம் அண்ணா.." என்று பூம் பூம் மாடானாள்..
"அப்புறம் நான் வந்ததும் இவன் ஓடிட்டானாம்.. இதை நந்தினி டைனிங் ஹாலில் வைத்துத் தாத்தாவிடம் சொன்னாள்.. அரண்மனையில இருக்கிற வேலையாள்கள் உட்பட அத்தனை பேரும் கேட்டாங்க.. அப்படியிருந்தும் இவன் உத்ராவிடம் பொய் சொல்லிக்கிட்டு இருக்கான் வினித்.."
'கேட்டாயா..' என்பதைப் போல உத்ராவைப் பார்த்தாள் நந்தினி.. அவளது கண்ணீரில் மனம் இளகிய உத்ரா தோழியை அணைத்துக் கொண்டாள்.. தோழிக்கு ஆறதல் சொல்லத்தான் உத்ரா அணைத்துக் கொள்கிறாள் என்றுதான் ரவிச்சந்திரனும், வினித்தும் நினைத்தார்கள்.. தோழியின் மனம் திரும்பி அணைத்துக் கொள்கிறாள் என்பதை நந்தினியும், அபராஜிதனும் மட்டுமே அறிந்திருந்தார்கள்.. விரிசல் கண்ட நட்பு சரியாகி இன்னும் அதிகமாக இறுகிப் போய் விட்டதில் நந்தினி நிம்மதியாக அபராஜிதன் காண்டானான்..
ரவிச்சந்திரனின் கோபத்துக்கு ஆளாகி நிற்பவனின் கோபம் யாரை என்ன செய்து விடும்..?
ரவிச்சந்திரனின் காதலில் மீது அவதூறு சொல்லி விட்டு அபராஜிதனால் தப்பிப் பிழைத்து விட முடியுமா..?
"இவன் வயநாட்டுக்கு வந்தவுடனே காலை முறிச்சு ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணியிருக்கனும்.. விட்டு வைத்ததுக்கு வேலையைக் காட்டறான்... இவனைக் குடும்பத்திலே சேர்க்கவே கூடாது... அதற்கான தகுதி இவனுக்கில்லைன்னு தான் மும்பைக்கு விரட்டியிருந்தேன்... மறுபடியும் எண்ட்ரி கொடுத்து கடுப்பைக் கிளப்பறான்.. இவன் வந்த அன்றைக்கே நந்தினியிடம் தெரிந்தவனைப் போலப் பேசினான்..
தாத்தா நந்தினிக்கும் இவனுக்கும் பிரண்ட்ஷிப் இருக்கிறதோன்னு சந்தேகப்படறதைப் போல சீன் கிரியேட் பண்ணினான்.. நந்தினி நேருக்கு நேர் அதை ஃபேஸ் பண்ணி இவன் சொன்னதெல்லாம் பொய்யின்னு
புரூப் பண்ணினா.. இன்னும் இவன் அடங்கலை.. பார்த்தீங்களா..?"
ரவிச்சந்திரன் வினித்திடம் பேசிக் கொண்டிருக் கிறான் என்ற நம்பிக்கையில் நின்று விட்டான் அபராஜிதன்.. ரவிச்சந்திரன் விசாரித்துக் கொண்டிருக்கும் போது அவன் ஓடிவிட முடியாது என்பது வேறு விசயம்.. அபராஜிதன் அங்கு நின்றுதான் ஆக வேண்டும்.. என்ன ஒன்று.. ரவிச்சந்திரனின் கைகளுக்கு அகப்படாமல் எட்டி நின்றிருக்க வேண்டும்... அப்படிச் செய்யாமல் அவனது கைகளுக்கு எட்டும் தொலைவில் நின்றிருந்ததால் ரவிச்சந்திரன் எட்டி அபராஜிதனின் சட்டையை கொத்தாகப் பிடித்து சாத்து சாத்து எனச் சாத்தித் தீர்த்து விட்டான்..
'இனி இவன் என்ன பொய் சொன்னாலும் எடுபடாது..'
உத்ராவின் சுவாசம் சீரானது.. ஓர் நொடியில் சிக்கலைத் தீர்த்து விட்ட நந்தினியை அவள் வியப்புடன் பார்த்தாள்.. எத்துனை சாதுர்யமாக அவள் நிலைமையைக் கையாண்டிருக்கிறாள் என்பது அவளுக்குத் தெரியுமா என்றிருந்தது உத்ராவுக்கு.. நந்தினியா இது..? அபராஜிதன் போன்ற அயோக்கினை நொடிப் பொழுதில் மண்ணைக் கவ்வ வைத்து விட்டாளே.. இனி அவள் வாழ்க்கையை அவள் பார்த்துக் கொள்வாள்.. உத்ரா கவலைப்பட வேண்டியதில்லை..
"யாரும் வாயைத் திறக்கக் கூடாது தாத்தா.. இந்த செகண்டிலேயே அபராஜிதன்
 வயநாட்டை விட்டு வெளியேறியாகனும்.. இல்லேன்னா இவனைச் சேர்ந்த அத்தனை பேரையும் இந்த அரண்மனையை விட்டு நான் வெளியேற்றி விடுவேன்.."
ரவிச்சந்திரனின் கட்டளைக்கு அருள்மொழிவர்மன் அடிபணிந்தார்.. அபராஜிதனுக்காக என்று பார்த்தால் அவந்திகாவும் அவளுடைய குடும்பமும் வயநாட்டு அரண்மனையைத் துறக்க வேண்டி வருமே என்ற முன்யோசனையில் யாழினியும், அவந்திகாவும் அறிவார்ந்த மௌனத்தை சாதிக்க.. அபராஜிதன் வயநாட்டை விட்டுத் துரத்தப் பட்டான்..





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,7,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,90,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,25,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,7,எண்ணியிருந்தது ஈடேற,230,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,21,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,6,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -189
எண்ணியிருந்தது ஈடேற -189
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-189.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-189.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy