எண்ணியிருந்தது ஈடேற -188

188 "இவன் எதுக்குடி இங்கே வர்றான்.. ?" எரிச்சலுடன் கேட்டாள் உத்ரா.. "ம்ம்ம்.. கடலை போட வர்றான்.." அவளைவிட எரி...


188


"இவன் எதுக்குடி இங்கே வர்றான்..?" எரிச்சலுடன் கேட்டாள் உத்ரா..
"ம்ம்ம்.. கடலை போட வர்றான்.." அவளைவிட எரிச்சலுடன் சொன்னாள் நந்தினி..
"ஆல்ரெடி உனக்கும் எனக்கும் தான் ஆளிருக்குதே.. அப்புறம் எதுக்காக இவன் வேஸ்ட்டா கடலை பொறுக்க வர்றான்..?"
"எனக்கு ஆளிருக்கிறது இவனுக்குத் தெரியாதுடி உத்ரா.."
"உனக்கெல்லாம் காதலே வராதுன்னு முடிவு கட்டியிருப்பான்.."
"லொள்ளு..?"
"இவனே ஜொள்ளு.. இவனைக் கண்டா 'லொள்ளு' தான் வரும்.. அது சரிடி நந்தினி.. உனக்கு ஆளிருக்கிறது இவனுக்குத் தெரியாதுங்கிறது ஓகே.. பட்.. எனக்கு ஆளிருக்கிறது இவனுக்குத் தெரியும்தானே.. என் கழுத்தில மஞ்சள் கயிறைக் கட்டி ஹனிமூன் கொண்டாட என் புருசன் வந்திருக்கிறார்.. அவரை இவன் பார்த்தான்தானே.. அப்புறமும் வழிய வர்றான் பாரு.. கல்யாணமான லேடிஸ்கிட்ட வழியக் கூடாதுங்கிற காட்டசி கூட இவனுக்கு இல்லையேடி.."
"அஜந்தாவோட அண்ணன் எப்படியிருப்பான்..?"
"ம்ஹீம்.. இவன் அஜந்தாவின் அண்ணனா இங்கே என்ட்ரி கொடுத்திருப்பான்னு நான் நினைத்தே பார்க்கலைடி.. ஷாக்கா இருக்கு.. செஞ்சியில இருந்து உன்னை ஃபாலோ பண்ணி வயநாடு வரைக்கும் வந்து நிற்கிறான் பாரு.."
"இது இவனோட ஊராம்.."
"வீடுதான் இவனோட வீடில்ல போல.."
"அதை இவனும் ஒப்புக்க மாட்டான்.. இவனோட குடும்பமும் ஒப்புக்காது... நமக்கேன்டி இவங்க
பிரச்னை..? இவங்களாச்சு.. இவங்களோட குடும்பப் பிரச்னையாச்சு.."
"ஊஹீம்.. அப்படிச் சொல்லி ஒதுங்கி விடக் கூடாதுடி நந்தினி.. ரம்யாவை பார்த்தேல்ல.. சிரிச்சுப் பேசிக்கிட்டு இருந்தவ இவனைக் கண்டதும் ஓடறா.. இந்த அரண்மனையில் பிறந்து வளர்ந்த பெண்ணுக்கு நிம்மதியா தோட்டத்தில நின்று பேசிக்கிட்டிருக்கக் கூட சுதந்திரமில்லை.. இதைப் பார்த்த பின்னாடியும் ஒதுங்கிப் போவியா..?"
எப்படி ஒதுங்கிப் போவாள்...? நந்தினி ரவிச்சந்திரனை உயிரினும் மேலாக காதலிப்பவள்.. அவள் மனதில் காதல் எனும் உணர்வை உணராத போதே வீணாவையும் ரம்ய மாலினியையும் நேசித்தாள்.. பாசம் காட்டினாள்.. இப்போதோ ரவிச்சந்திரன் வேறு, நந்தினி வேறு என்ற நினைவில்லாமல் அவன்மீது பித்தாகி விட்டாள்.. வீணாவின் மீதும் ரம்யமாலினியின் மீதும் கொண்டிருந்த நேரமும், பாசமும் வலுப் பெற்று விட்டதே..
"என்னால என்னடி பண்ண முடியும்..?"
"உன்னாலே எதுவும் பண்ண முடியாதுன்னா உன் ஆளிடம் சொல்லு.. அவர் பிளந்து கட்டிற மாட்டாரா..?"
"நான் சொல்லனும்னு இல்லை உத்ரா.. அவருக்கே எல்லாமும் தெரியும்.."
"அவருக்கும் தெரியாதது உனக்குத் தெரிய வந்தா..?"
"அப்போப் பார்த்துக்கலாம்.."
நந்தினி பிடி கொடுக்கவில்லை... அவள் கலகலப்பானவள்தான்.. மனதில் நினைப்பதை மறைக்காமல் பேசிவிடக் கூடியவள்தான்.. ஆனால் சண்டைக்காரியல்ல.. அடுத்தவரின் விவகாரங்களில் மூக்கை நுழைக்காமல் விலகிச் செல்பவள்.. துஷ்டனைக் கண்டால் தூர ஒதுங்கி விடுபவள்..
'அவந்திகாவின் குடும்பமே துஷ்டத்தனம் நிறைந்தது.. அவர்களைக் கண்டு இவள் ஒதுங்கி ஓடினால் ரவிச்சந்திரனை விட்டும் ஒதுங்கி ஓட வேண்டியதாகி விடுமே..'
உத்ராவுக்கு கவலையாக இருந்தது.. நந்தினியைப் பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியும்.. ஒன்றை நினைத்து விட மாட்டாள்.. நினைத்து விட்டால் அந்த நினைவிலிருந்து கடைசிவரை மாறவே மாட்டாள்.. அதே சமயத்தில் அந்த ஒன்றை வேண்டாமென்று வெறுத்து விட்டால் விலகிச் சென்று விடுவாள்.. இறுதிவரை திரும்பிப் பார்க்க மாட்டாள்..
முரண்பாடுகளைக் கொண்டதுதானே மனித இயல்பு..! நந்தினி முரண்படுவதைப் போலத் தோன்றினாலும் அதுதான் அவளது இயல்பு.. அந்த நந்தினி இப்போது ரவிச்சந்திரனைக் காதலிக்கிறாள்.. அவன் முள்களால் சூழப்பட்டிருக்கும் ரோஜா என்பதை அவளே உணர்ந்து சொல்கிறாள்..
நந்தினி முள்களால் காயமடையாமல் ரவிச்சந்திரன் என்ற ரோஜாவை அடைந்து விட வேண்டுமே என்றிருந்தது உத்ராவுக்கு.. அது அவ்வளவு எளிதான ஒன்றாக இருக்கக்கூடும்.. என்று அவளுக்குத் தோன்றவில்லை.. ரவிச்சந்திரன் இரும்பு மனிதனாக இருக்கலாம்.. நந்தினி இரும்பு மனுஷியல்ல.. பூப்போன்ற இதயம் கொண்டவள்..
அந்த பூவிதயம் கொண்டவளின் காதல் நிறைவேற வேண்டுமே என்ற கவலையுடன் நின்றிருந்த உத்ராவை உல்லாசப் பார்வை பார்த்தபடி பக்கத்தில் வந்து நின்ற அபராஜிதன்.. அதைவிட உல்லாசமான குரலில்..
"ஹல்லோவ்... என்னங்க... கண்டுக்க மாட்டேங்கறிங்க.." என்று காலம் காலமாக பழகியவனைப் போலக் கேட்டு வைத்தான்..
உத்ராவுக்குத் தூக்கிவாரிப் போட்டது.. அபராஜிதன் எக்குத் தப்பாக பேசி வைப்பான் என்று அவள் எதிர்பார்த்தாள்தான்.. இப்படி பேசி வைப்பான் என்று எதிர்பார்க்கவில்லை.. அவனது பார்வையும், பேச்சும் உத்ராவையே கலவரப் படுத்தின..
"என்னடி இப்படி உரிமை கொண்டாடறான்..?" நந்தினியிடம் முணுமுணுத்தாள்..
"இதுக்கு மேலேயே உரிமை கொண்டாடுவான்.. இதெல்லாம் ஜீஜீபி.." பதிலுக்கு முணுமுணுத்தாள் நந்தினி.
"உங்களுக்குள்ளேயே ரகசியம் பேசிக்கிட்டா எப்படி..? இங்கே நானும் நிற்கிறேனில்ல.. என்னையும் சேர்த்துக்கலாமே.."
அவன் 'சேர்த்துக்கலமே' என்ற வார்த்தையில் கொடுத்த அழுத்தம் ரசிக்கும்படி இல்லை.. உத்ரா அதை ரசிக்கவும் இல்லை.. முகம் சுளித்தாள்..
"நாங்க பிரண்ட்ஸ்.. ரகசியம் பேசிக்கிறோம்.." சிடுசித்தாள்..
நீ யார் என்ற கேள்வி அதில் தொக்கி நின்றதைப் புரிந்து கொள்ளாததைப் போல அவன் கவர்ச்சியாக சிரித்து வைத்தான்.. அவனது அழகின் மீது அவனுக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது என்று நந்தினி கிசுகிசுத்தாள்.. அவன் பேசிக் கொண்டிருப்பதை வினித் பார்த்து விடாமலிருக்க வேண்டுமே என்று உத்ராவுக்கு பதட்டமாக இருந்தது.. பார்த்து விட்டால் உத்ராவைச் சும்மா விட மாட்டான்.. உலுக்கி எடுத்து விடுவான்.. ஏற்கனெவே டைனிங் ஹாலில் அபராஜிதன் இருப்பதைப் பார்த்து விட்டு..
"இவன் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசனில நாம பார்த்த ரோமியோதானே..?" என்று முகம் மாறினான்..
"அப்படித்தான் தெரியுது.." அவனை அப்போதுதான் பார்த்திருந்ததால் எரிச்சலடைந்த உத்ரா.. நந்தினியின் கையைக் கிள்ளினாள்..
"என்னடி நந்தினி.. இவன் இங்கே உட்கார்ந்திருக்கான்..?"
"இது அவனோட தாய்வழித் தாத்தாவோட வீடு.."
"ரவிசார் வீடுன்னு கேள்விப்பட்டேனே.."
"அதை நாம ஏண்டி சொல்லனும்..? சொன்னா ரவி இவனோட தாய்மாமன் மகன்ம்பான்.. தேவையா நமக்கு.."
"பாருடா.. இவன் ரவிசாரோட அத்தை மகனா..?"
"ம்ம்ம்.. அஜந்தாவோட அண்ணன்.."
"இதைத்தான் இந்த அஜந்தா வம்புக்கு வந்தப்ப சொன்னியா..? இவளோட அண்ணனா இவன்..?"
"கழுதையில.. எனக்கும் இப்படித்தான் இருந்தது.."
தோழியிடம் சேகரித்த விவரங்களை வினித்தின் காதுகளுக்குள் கடத்தினாள் உத்ரா.. தலையைத் தலையை ஆட்டிக் கேட்டுக் கொண்ட வினித் யோசனையாகி விட்டான்.. அது டைனிங் ஹால் என்பதால் உத்ரா தப்பித்தாள்.. அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தனியறையாக இருந்திருந்தால் வினித் கேள்விகளைக் கேட்டுத் துளைத்தெடுத்திருப்பான்..
"என்னடி.. இவன் இப்படி சிரித்து வைக்கிறான்..?" உத்ரா நந்தினியிடம் சன்னக் குரலில் புலம்பினாள்..
"உன்னை இப்படித் தோட்டத்தில் கார்னர் பண்றானேன்னு சந்தோசப்பட்டுக்க.. என்னை டைனிங் ஹாலில் வைத்து இப்படிக் கண்டுக்க மாட்டேங்கறியேன்னு கேள்வி கேட்டு கலங்கடிச்சான்.. நான் அதுக்கான விளக்கத்தைச் சொல்லி ஓய்ஞ்சு ஒருவழியா ஆனேன்.. அதில இவனோட தங்கச்சி வேற குட்டையைக் குழப்பி இவனுக்கும் எனக்கும் காவியக் காதலிருக்குங்கிறதைப் போல சீன் கிரியேட் பண்ண ஆரம்பிச்சுட்டா.."
"அடிப்பாவி..! அப்படியா செஞ்சா..?"
"அவ அதுக்கு மேலேயும் செய்வா.. எதுக்கும் அஞ்சாத கேட்டகிரி.. அவ பேச்சை விடு.. இவன் பேச்சுக்கு வா.."
"தலையெழுத்துடி.. இவனெல்லாம் ஒரு ஆள்.. இவன் பேச்சை நாம பேச வேண்டியிருக்கு.. நல்லவேளை..! டைனிங் ஹாலில் வைச்சு என்னைக் கண்டுக்க மாட்டேங்கறியேன்னு கேள்வி கேட்காம விட்டு வைச்சான்.. அங்கே கேட்டிருந்தா என்ன ஆகிறது..?"
உத்ரா பல்லைக் கடித்துக் கொண்டிருக்க.. அபராஜிதன் உல்லாசமாக..
"பார்த்தீங்களா.. இன்னமும் நீங்களாவே ரகசியம் பேசிக்கிட்டு இருக்கீங்க.. என்னையும் சேர்த்துக்க மாட்டேங்கறிங்களே.." என்று கண்ணைச் சிமிட்டினான்..
உத்ராவின் பொறுமை பறந்து போனது.. அபராஜிதனிடம் தயவு தாட்சண்யம் பார்க்கக் கூடாது என்ற கோபம் வந்தது..
"மைண்ட் யுவர் ஆக்டிவிட்டிஸ் மிஸ்டர் அபராஜிதன்.. ஐ டோன்ட் லைக் திஸ் டைப் ஆஃப் ஆக்ட்டிவிட்டிஸ்.." கண்டிப்புடன் குரலை உயர்த்தினாள்..
அந்த நேரம் பார்த்து ரவிவர்மன் தோட்டத்தை ஒட்டிய பாதையில் வேலையாளிடம் எதையோ பேசியபடி நடந்து செல்ல இங்கே அபராஜிதன் பம்மினான்..
"மெல்லப் பேசுங்க.. நான் உங்க பக்கத்திலேதானே நிற்கிறேன்..? இந்த சவுண்ட் வாய்ஸ் எதற்கு..?" சரசமாக வினவினான்..
"ஷட் அப்..! என்னை யாருன்னு நினைத்தீங்க..?" சகிக்க மாட்டாமல் சீறினாள் உத்ரா..
"உத்ராதானேங்க நீங்க.. என்னுடன் செஞ்சியிலே ஃபிரண்ட்லியாப் பேசிப் பழகினவங்க இப்ப அன்நோன் பெர்சனிடம் பேசுவதைப் போல ஃபிலிம் காட்டறிங்களே.."
"நீங்க அன்நோன் பெர்சனில்லாம வெல் நோன் பெர்சனா..?"
"ஆமாங்க.. நான் உங்களுக்கு வெல் நோன் பெர்சன்தான்.."
"வேண்டாம் அபராஜிதன்.. விளையாட்டுப் பேச்சு வினையில் முடிந்து விடும்.. இதை யாராவது கேட்டு வைத்தால் நீங்கள் சொல்வதில் உண்மை இருக்குமோன்னு நினைத்து விடுவாங்க.. அடுத்த வீட்டுப் பெண்களிடம் பேசுகிறப்ப பார்த்துப் பேசனும்.. இல்லேன்னா முதுகில டின் கட்டிருவாங்க.."
"வாட்..?"
உத்ராவின் எச்சரிக்கையில் முகம் மாறினான் அபராஜிதன்.. உத்ராவும் நந்தினியும் ஒன்று சேர்ந்து தன்னைக் 'கேரோ' செய்தார்கள் என்று அஜந்தா அவனிடம் புலம்பித் தள்ளியிருந்தாள்.. ரவிச்சந்திரனின் விருந்தினர் என்ற திமிர் உத்ராவுக்கு என்று பொருமியிருந்தாள்.. அத்தனை தைரியமா.. எங்கே வந்து யார், யாரை 'கேரோ' செய்வது என்ற கோபத்துடன் உத்ராவை 'உரசி'ப் பார்க்க முடிவு செய்துதான் அபராஜிதன் தோட்டத்திற்கு வந்திருந்தான்.. உத்ராவோ அவள் 'தீக்குச்சி..' என்பதை நிரூபணம் செய்து நெருப்புப் பொறியை பறக்க விட்டு விட்டாள்..
'வத்திக்குச்சி பத்திகாதுடா..
             யாரும் வந்து
    உரசற வரையிலே..'
அபராஜிதனின் மனதில் பாடல் ஒலித்தது... சரசம் பேசுவதைக் கைவிட்டவனாய் குரூரமாக பார்த்து வைத்தான்..
"இதுதான் இவன்..! இந்த போஸ்தான் இவனுக்கு ஷீட் ஆகுது.." நந்தினியிடம் முணுமுணுத்தாள் உத்ரா..
"இனிப் புதிதாகத்தான் யாரும் கேட்கனுமா..?" கழுகுப் பார்வையுடன் அவன் கேட்ட கேள்வியில் உத்ராவுக்கு மறுபடியும் தூக்கி வாரிப் போட்டது..
தேநிலவுக்கு வந்த இடத்தில் அந்த கேடு கெட்டவனால் விவாகரத்து வரைக்கும் விவகாரம் போய் விடுமோ என்ற பயம் அவளைப் பிடித்து ஆட்டியது..
"ரப்பிஷ்..! என்னமேன்.. என்ன உளருகிறிங்க..?"
"உளறலா..? நானா..? ஹா.. ஹா.. உங்களுக்கும் எனக்கும் செஞ்சியிலேயே பழக்கம் ஆரம்பிச்சிருச்சுன்னு சொன்னது நானில்லை.."
"வேற யார் சொன்னது..?"
"வேற யாரா..? உங்க உயிருக்குயிரான பிரண்ட்ன்னு உருகறிங்களே.. இந்த நந்தினிதான் சொன்னாங்க.. யாரிடம் சொன்னாங்க.. தெரியுமா..? எங்க தாத்தாவிடம் சொன்னாங்க.. எங்கே சொன்னாங்க தெரியுமா..? டைனிங் ஹாலில் எல்லோரும் இருக்கிறப்ப சொன்னாங்க.. ஸோ.. இந்த அரண்மனையில இருக்கிற அத்தனை பேருக்கும் உங்களுக்கு என்னைத் தெரியும் என்கிற விவரம் தெரியும்.. தெரியப் படுத்தினது நானில்லை.. உங்க பிரண்ட்.. நந்தினி.."
நந்தினிக்குள் குளிர் பரவியது.. உத்ரா திரும்பி அவளைப் பார்த்த மௌனப் பார்வையிலிருந்த அதிர்ச்சியும், குற்றச்சாட்டும் அவளைக் கொன்று தின்றன.. தோழிகளின் உணர்வு போராட்டத்தைத் திருப்தியுடன் பார்த்தான் அபராஜிதன்..
'ஒன்றாய் இருந்தால்தானே எங்கள் வம்புக்கு வருவீங்க..? துண்டாகிப் போனா என்ன செய்வீங்க..?'
அவன் மனம் வெற்றிக் களிப்பில் கெக்கலி கொட்டியது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -188
எண்ணியிருந்தது ஈடேற -188
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-188.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-188.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy