எண்ணியிருந்தது ஈடேற -187

187 "வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்கிறப்ப எப்படிப் பேசனும் என்கிற மேனர்ஸ் இருக்க வேண்டாமா.. ? இப்படியா கத்துவ.. ? உன் எதிரில்தானே...


187


"வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்கிறப்ப எப்படிப் பேசனும் என்கிற மேனர்ஸ் இருக்க வேண்டாமா..? இப்படியா கத்துவ..? உன் எதிரில்தானே இருக்கிறேன்.. வயநாட்டோட எல்லையில இருக்கிறதைப் போல மாமான்னு அலருகிற..? மேரேஜாகி இன்னொரு வீட்டுக்கு வாழப் போகிற பெண்.. எப்படி ஸாப்ட்டாப் பேசிப் பழகனும்ங்கிற அறிவு இருக்க வேண்டாமா..? ரம்யமாலினியைப் பார்.. உன்னைப் போல ஓர் நாளாவது சத்தமாய் பேசியிருப்பாளா..? வீணா அப்படி மகளை வளர்த்து வைத்திருக்கிறாள்.. அவந்திகாவின் வளர்ப்பு இப்படியிருக்கிறது.."
அஜந்தா திணறி விட்டாள்.. பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக மாறி விட்ட கதையைப் பற்றித்தான் அவள் கேள்விப்பட்டிருக்கிறாள்.. குரங்கைப் பிடிக்கப் போனவளையே குரங்காய் மாற்றி விட்ட கதையைப் பற்றித்தான் அவள் கேள்விப்பட்டிருக்கிறாள்.. குரங்கைப் பிடிக்கப் போனவளையே குரங்காய் மாற்றி விட்ட கதையை இப்போதுதான் அனுபவிக்கிறாள்..
புதுமனிதர்களின் முன்னிலையில் ரவிவர்மன் காய்ச்சிய காய்ச்சலில் விக்கித்துப் போன அவந்திகா..
"சேட்டா.." என்றாள்..
"கேட்டோ.." என்றார் ரவிவர்மன்..
"அஜந்தாவை ஷெமிக்கனும் சேட்டா.. வெப்பராளம் கொள்ளாண்டாம்.. ஞான் அவளிண்ட பறஞ்ஞு.."
"எதையோ செய்.. உன் மகள் பேச ஆரம்பித்தாலே கோபம்தான் வருகிறது.. இவளை வாயை மூடிக் கொண்டு இருக்கச் சொல் அவந்திகா.. அதுதான் உனக்கும், உன் குடும்பத்திற்கும் நல்லது.. கேட்டோ.."
ரவிவர்மனின் வார்த்தைகளில் இருந்த மறைமுகப் பொருளை உணர்ந்து கொண்டாள் அவந்திகா.. மற்ற தருணங்களில் அஜந்தா விளையாடும் சாகச விளையாட்டை விருந்தினர் வந்திருக்கும் போது விளையாடிப் பார்க்கலாம் என்று நினைத்து விடக் கூடாது.. அப்படி அவள் விளையாட நினைத்தால் பின் விளைவுகள் விபரீதமாக இருக்கும்..
"ஆகட்டும் சேட்டா.."
அதுபோல எதுவும் நடந்து விடக் கூடாது என்ற பதட்டத்தில் தன் மகளிடம் சொல்லி வைப்பதாக உத்திரவாதம் அளித்தாள் அவந்திகா.. தாய் தழைந்து பேசுவதை விரும்பாத அஜந்தா..
"எந்தா அம்மே.. அம்மாவனிண்ட இங்ஙன பறஞ்ஞு..? அவரு நிண்ட சேட்டனல்லோ.." என்று ஆட்சேபித்தாள்..
அருள்மொழிவர்மன் வழியைப் பின்பற்றித் தன் மகளிடம் தாழ்ந்த குரலில் முணுமுணுத்து தான் அருள் மொழிவர்மனின் மகள் என்பதை நிரூபித்தாள் அவந்திகா..
"அஜந்தா..! எண்ட மோளே..! நினக்கு கோடி புண்ணியம் கிட்டுமல்லோ.."
"எங்ஙன அம்மே.."
"நிண்ட திருவாயை திறக்காலிருந்தா போதும் மோளே.. கேட்டோ.."
"எந்துக்கு அம்மே..?"
"நானும், நீயும், நம்மட குடும்பமும் ஈ கொட்டாரத்தில ஜீவிக்கனுமல்லோ..? அதுக்கோசரம்தான் மோளே.."
அவந்திகா பல்லைக் கடித்தபடி சொன்னாள்.. என்ன சாசக்காரியாய் இருந்து என்ன செய்ய..? எந்த நேரம் பதுங்க வேண்டும்.. எந்த நேரம் பாய வேண்டும் என்ற புத்தி இருக்க வேண்டாமா..? கோபத்துக்கு இடம் கொடுத்து உள்ளதையும் கெடுத்துக் கொள்வது கெட்டிக்காரத்தனமா..? வன்மத்தை மனதில் புதைத்துக் கொண்டு காலம் வரும்வரைக் காத்திருந்து செயல்படும் புத்தியை அஜந்தா எவரிடம் கடன் கொடுத்தாள்..?
"உத்ராவும் இதைத்தான் சொன்னாள் ரம்யா.. நான் சண்டைக்குப் போனேனா.. உன் அண்ணாவும் வினித் அண்ணாவும் உத்ராகூடக் கூட்டுச் சேர்ந்துக்கிட்டு என்னைக் கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்கப்பா.."
கலகலத்துச் சிரித்த நந்தினியை வெறித்துப் பார்த்தாள் அவந்திகா.. அவளது சிரிப்பில் அஜந்தாவின் முகம் பயங்கரமாக கோணுவதைக் கவனித்தாள்.. அஜந்தாவின் கைவிரல்கள் நடுங்கின.. அவள் தன் சுயகட்டுப்பாட்டை இழந்து எந்த நேரமும் நந்தினியிடம் சண்டைக்குக் கிளம்பி விடுவாள் எபோல தோன்றியதில் அவந்திகா நீண்ட பெருமூச்சுக்களை விட்டுத் தன்னைச் சமனப் படுத்திக் கொண்டாள்..
அஜந்தாவைப் பற்றி அவந்திகாவுக்குத் தெரியும்.. அவள் எதற்கும் அசைந்து கொடுக்காதவள்.. இடி விழுந்தாலும் எதுவுமே நடக்காததைப் போல உணர்வுகள் துடைக்கப்பட்ட முகத்துடன் இருப்பவள்.. அபராஜிதனைப் போல எதிலும் மாட்டிக் கொள்ளாமல் அவனைவிட கோடி மடங்கு வில்லத்தனத்தைச் செய்து கொண்டிருப்பவள்..
அப்படிப்பட்ட அஜந்தா தன் சுயகட்டுப்பாட்டை இழக்கிறாள் என்றால் அது சாதாரணமான ஒன்றல்ல.. அஜந்தாதான் அவந்திகாவின் மிகப் பெரிய பலம்..
அவள் பலவீனமடைவது அவந்திகாவின் குடும்பத்திற்கு நல்லதல்ல..
'எப்பேற்பட்ட சாகசக்காரி எண்ட மோள்..'
அப்பேற்பட்டவளைப் பலவீனப் படுத்திக் கொண்டிருப்பது நந்தினி என்ற சின்னப்பெண் என்பதை அவந்திகாவினல் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை..
"ஆ மனுஷி ஈ கொட்டாரத்தில காலடி பதிச்ச பின்னாலதான் ரவி மாறிப் போயி.."
யாழினி வன்மம் கொள்வதில் அர்த்தமுள்ளதோ.. நந்தினியால் என்ன செய்துவிட முடியும் என்று அவந்திகா நினைத்தாளே.. எதுவும் செய்ய முடியும் என்று நந்தினி காட்டிக் கொண்டிருக்கிறாளே..
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டும் புத்தரைப் போலவும் சித்தரைப் போலவும் வாய் பேசாமல் மௌன யோகினியாய் வளைய வந்த வீணா மாமனாரின் முன்னிலையிலேயே மாமியாரை முறைக்கிறாள்.. நறுக்கென்ற நான்கு கேள்விகளைக் கேட்கிறாள்.. யாராலே..? நந்தினியாலே..
தாயிற் சிறந்த கோவிலுமில்லை.. தந்தை சொல் மிக்க மந்திரமில்லையென்று அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வமென பூப்போட்டு வணங்கி பாதபூஜை செய்து கொண்டிருந்த ரவிவர்மன்.. அந்த அன்னை, தந்தையை வேற்று மனிதர்கள் என்று அவர் பெற்றெடுத்த மகன் ரவிச்சந்திரன் குறிப்பிட்டபோது வாய் பேசாமல் மௌனம் சாதித்தாரே.. இது யாரால் நிகழ்ந்த நிகழ்வு..? நந்தினியால் நிகழ்ந்த நிகழ்வு..!
சிரிப்பைத் தொலைத்து விட்டு பேச மறந்த மௌனச் சுரங்கமாக தாயின் முந்தானைக்குள் பதுங்கி அவந்திகாவின் குடும்பத்தைக் கண்டாலே ஒதுங்கிப் போகும் ரம்யமாலினி.. இன்று அபராஜிதனையே எள்ளி நகையாடிச் சிரிக்கும் அளவிற்கு தைரியம் பெற்றிருக்கிறாள் என்றால் அந்த தைரியம் எங்கிருந்து வந்தது..? நந்தினியிடமிருந்து வந்தது..
ரவிச்சந்திரனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.. அவன் என்றுமே அவந்திகாவிற்கும் அவளுடைய குடும்பத்திற்கும் சிம்ம சொப்பனந்தான்.. எந்த நொடியிலும் அவன் அவந்திகாவின் குடும்பத்தை கூண்டோடு வயநாட்டு அரண்மனையை விட்டு வெளியேற்றித் துரத்தியடித்து விடுவான் என்ற பயத்துடன் அவந்திகாவின் குடும்பத்தை நடுங்க வைத்துக் கொண்டிருப்பவன்தான்.. அந்த நொடிகள் அடிக்கடி அவந்திகாவின் குடும்பத்திற்கு அருகில் வந்து வந்து போய் கொண்டிருந்ததைதான்..
நந்தினி வந்த பின்னால் அந்த நிழல்கள் அத்தனையும் நிஜமாக நடந்து விடும் போல இருக்கின்றதே..
'ஈ மனுஷி அபாயமானவளல்லோ..'
இதை அவந்திகா நினைத்ததுதான் கொடுமை.. கள்ளம் கபடமற்ற நந்தினியைப் பற்றி அபாயமே உருவான அவந்திகா, அவளைவிட அபாயகரமான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து வைத்திருக்கும் அவந்திகா நினைத்ததுதான் கொடுமையிலும் பெரிய வன்கொடுமை..!
"வெப்பராளம் வேண்டாம் மோளே.. சாந்தம் கொள்.." மகளுக்கு அறிவுறுத்தினாள் அவந்திகா..
"எங்ஙன அம்மே..? ஈ நந்தினிப் பிசாச ஈ வயநாட்டுக் கொட்டாரத்த விட்டு விரட்டியடிச்சாலல்வோ எனிக்கு நிம்மதி கிட்டும்.." புலம்பினாள் அஜந்தா..
"சம்சாரிக்கிறது எண்ட மோளா..? நிண்ட மதி எங்ஙன போயி..? ஈ திவசம் நாம வெப்பராளம் கொள்ள வேண்டிய திவசமல்ல மோளே.. கேட்டோ.. நமக்கின்னு ஓர் திவசம் வரும்.. ஆ திவசத்தில ஈ நந்தினிப் பிசாச நாம ஓட ஓட விரட்டி.." சமாதானம் சொன்னாள் அவந்திகா..
"ஆ திவசம் எப்ப வரும்..?"
"வரும் போது வரும்.."
"ஞான் என்ன சூப்பர் ஸ்டாரோ.. வரும் போது வருமெண்டு பறயறதுக்கு..?"
"எண்ட மோள் லேடி சூப்பர் ஸ்டாரல்லோ.."
"அம்மே.. பகடி வேண்டாமல்லோ.."
"ஞான் அறிஞ்ஞு அஜந்தா.. பட்ஷே.. ஈ திவசம் நமக்கான திவசமில்லா.. இனி எண்ட மோள் ஆலோசிக்கனுமல்லோ.. ஆலோசிச்சு பொறுமை காக்கனுமல்லோ.."
அவந்திகாவின் இறைஞ்சுதலில் பல்லைக் கடித்தபடி தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள முயன்றாள் அஜந்தா.. நந்தினி, உத்ராவிடம் ரம்யமாலினி காட்டிய நெருக்கமும், அவர்கள் மூவரும் சேர்ந்து பேசி சிரித்த சிரிப்புக்களும் அமில வெள்ளமாக அஜந்தாவின் காதுகளில் பாய்ந்தது.. அதை வீணாவும், ரவிவர்மனும் பிரியம் கொட்டும் விழிகளில் பார்த்துப் பரவசப்பட்டதில் அவளது உடலெங்கும் எரிச்சலை உண்டாக்கியது.. அஜந்தா வயிறெரிந்தாள்..
ரவிச்சந்திரன் வினித்திடம் காட்டிய நட்பிலும், கனிவிலும் யாழினி மனதுக்குள் பொங்கிப் பொசுங்கினாள்.. இதுபோன்ற மரியாதையையும், நட்பையும், பிரியத்தையும் ஓர் நாளும் அபராஜிதனிடம் ரவிச்சந்திரன் காட்டியதில்லை என்பதில் அவள் மனம் குரோதம் கொண்டது.. ரவிச்சந்திரனின் நன் மதிப்பையும் பிரியத்தையும் பெற்றுக் கொள்ளும் அளவில் அபராஜிதன் நடந்து கொள்ளவில்லை என்பதை யாழினி வசதியாக மறந்து போனாள்.. மகள் சார்ந்த அனைத்துக் குற்றங்களையும் மறந்து விடுவதுதான் அவளது குணம்.. அதுவே மகன் சார்ந்த சிறு விவரத்தையும் பூதக்கண்ணாடியில் பார்த்து பூதாகரமாக்குவதும் அவளது குணம்தான்..
என்ன செய்வது..? எதையாவது பேசி வந்திருக்கும் விருந்தினர்களுடன் வம்பிழுக்க வேண்டுமென்றுதான் அவளும் நினைத்தாள்.. அஜந்தாவும் நினைத்தாள்.. பாட்டி, பேத்தி இருவரின் திருவாய்களையும் முறையே அருள்மொழிவர்மனும் அவந்திகாவும் பூட்டுப் போட்டு மூட வைத்து விட்டார்களே..
இரண்டு கைகள் நான்காகி என்ன பிரயோசனம்.. இரண்டு வாய்களுக்கும் பூட்டுப் போடப்பட்ட பின்னால் எதையும் பேசிக் கலகம் மூட்ட முடியாமல் போய் விட்டதே..
காலை உணவிற்குப் பிறகு ரவிச்சந்திரன் எஸ்டேட் வரை போய் விட்டு வந்து விடுவதாகச் சொல்லிக் கிளம்பினான்.. உடன் கிளம்பாமல் தயங்கிய நந்தினி
அவள் உத்ராவுடன் பேசிக் கொண்டிருக்க விரும்புவதாகச் சொல்லி விண்ணப்பித்தாள்.. உத்ரா பக்கத்தில் இருந்ததால் எதையும் பேச முடியாமல் முறைத்தபடி
அவன் காரில் ஏறிக் கிளம்பி விட்டான்.. வினித் ஓய்வெடுக்கப் போவதாகச் சொல்லிவிட உத்ராவும், நந்தினியும் ரம்ய மாலினியுடன் அரட்டை அடித்தபடி தோட்டத்தைச் சுற்றி வந்தார்கள்..
"இந்தத் தோட்டமே பார்க்கை மிஞ்சின அழகோட இருக்குடி.." பிரமிப்புடன் நந்தினியிடம் சொன்னாள் உத்ரா..
"இவங்களும் உங்களைப் போல்தான் சொல்லுவாங்க உத்ரா.. தோட்டத்தில சுற்றுவதுன்னா அவ்வளவு இஷ்டம்.. நைட் டின்னருக்குப் பின்னாலே
மாடி ஹாலில உட்கார்ந்து தோட்டத்தை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருப்பாங்க.." தலை சாய்த்துச் சிரித்தாள் ரம்யமாலினி..
"இயற்கைன்னா இவளுக்கு அல்வா சாப்பிட்டது மாதிரி ரம்யா.."
"கோழிக்கோடன் அல்வா மாதிரின்னு சொல்லுங்க.."
"அதே.. அதே.."
"உவமை சொல்கிறதுக்குக் கூட ஸ்நாக்ஸ் அயிட்டமாச் சொல்கிறிங்க பாருங்க.. நந்தினியோட பெஸ்ட் பிரண்டா இருக்கிறதுக்கான முழுத் தகுதியும் உங்களுக்குத்தான் இருக்கு உத்ரா.."
"நீங்க மட்டும்தான் பாக்கின்னு நினைத்தேன்.. நீங்களும் சொல்லிட்டிங்க.. கேட்டுக்கடி நந்தினி.. உன்னோட சாப்பாட்டு ரசனையைப் பத்தி உலகமே பேசுது.. எங்கேயோ போயிட்டடி நீ.."
"எங்கேயும் போகலை.. வயநாட்டு அரண்மனைத் தோட்டத்திலதான் நின்றுக்கிட்டு இருக்கேன்.. சிநேகிதத் துரோகி..! சைக்கிள் கேப்பில சான்ஸ் கிடைச்சாக்கூட
நீ மிஸ் பண்ண மாட்டியே.. காலை வாரி விடறதில உனக்கு நிகர் நீதாண்டி.. இப்படியாப்பட்ட பிரண்ட் கிடைக்கப் புண்ணியம் பண்ணியிருக்கேண்டி.."
நந்தினி உத்ராவை மொத்தினாள்.. அவள் பதிலுக்கு மொத்த.. தோழிகளின் செல்லச் சண்டையை சுவராஸ்யமாக வேடிக்கை பார்த்தாள் ரம்யமாலினி.. இதுபோன்ற லேசான மனதுடன் இருந்து நீண்ட நாள்களாகி விட்டது என்ற உணர்வுடன்..
"தேங்க்ஸ்.." என்றாள்..
அடித்துக் கொண்டிருந்த தோழிகள் இருவரும் அதை நிறுத்திவிட்டு..
"எதுக்கு..?" என்று வியப்புடன் கேட்டார்கள்..
எதையோ சொல்லப் போன ரம்யமாலினி அங்கே வந்து கொண்டிருந்த அபராஜிதனைக் கண்டதும் சிரிப்பைத் துறந்தவளாக..
"எல்லாத்துக்கும்.." என்று சொல்லி விட்டு விரைந்து விட்டாள்..
அவளைத் துரத்தி விட்டு விட்ட அபராஜிதனை தோழிகள் இருவரும் வெறுப்புடன் பார்த்தார்கள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -187
எண்ணியிருந்தது ஈடேற -187
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-187.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-187.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy