எண்ணியிருந்தது ஈடேற -185

185 வாழ்க்கை பல கோணங்களை உள்ளடக்கியது.. ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு விதமான பரிணாமம் வெளிப்படும்.. அது பார்ப்பவர் எந்தக் கோணத்தில் ப...

185


வாழ்க்கை பல கோணங்களை உள்ளடக்கியது.. ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு விதமான பரிணாமம் வெளிப்படும்.. அது பார்ப்பவர் எந்தக் கோணத்தில் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தது..
வாழ்க்கையின் சூட்சுமம் வாழ்ந்து பார்த்தவர்களுக்கும் புரியும்.. வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் புரியும்.. விதி விட்டபடிதான் வாழ்க்கை என்பது உண்மைதான்.. அதற்காக கைகளைக் கட்டிக் கொண்டு விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தால் விதிக்கே காண்டு வந்து விடாதா..? விதி நம்மை ஆசீர்வதிக்க வேண்டுமானால் காலத்தின் ஓட்டத்தோடு நாம் சுறுசுறுப்பாக ஓடக் கற்றுக் கொள்ள வேண்டும்..
உத்ரா அதைத்தான் உபதேசித்தாள்.. சோர்ந்து விடாதே என்று பாடம் எடுத்தாள்.. வாழ்க்கைப் பயணத்தில் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும்.. இளைப்பாற ஒரு நேரம் கிடைக்கும்.. அப்போது இளைப்பாறிக் கொள்ளலாம்.. ஓட வேண்டிய நேரத்தில் ஓடா விட்டால் வாழ்க்கைப் பயணித்தில் குறிப்பிட்ட இலக்கை எட்டிப் பிடிப்பது கடினமாகி விடும்.
கண்முன் தெரியும் பாதையைக் காட்டி ஓடு என்றாள் உத்ரா.. தற்கொலை செய்து கொள்வதை விடத் தப்பித்து ஓடுவது சாலச் சிறந்தது என்று பாடம் எடுத்தாள்.. நந்தினியும் தோழி காட்டிய மார்க்கத்தில் ஓட ஆரம்பித்து வயநாடு வந்து சேர்ந்து விட்டாள்.. இப்போது ரவிச்சந்திரனுடனான காதல் பயணத்தில் சோர்ந்து விடாமல் போராடச் சொல்லி உபதேசிக்கிறாள்..
"ரவிசார் உனக்கு வேணும்ன்னா நீ போராடித்தான் ஆகனும் நந்தினி.. ரவிசார் உன்னைத் தனித்துப் போராடும்படி விட்டுவிட மாட்டார்.. என்னோட கெஸ்ஸிங் சரியா இருந்துச்சுன்னா அவர் உன்னை தாய்ப்பறவை போல அடை காத்திருக்கனும்.."
ஆமாம் எனும் விதமாக பெருமையுடன் தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள் நந்தினி..
"அப்புறம் என்ன..? உன்னை விட்டுக் கொடுக்காத லவ்வர் கிடைச்சிருக்கார்.. இதுகளால உன்னை என்ன செய்து விட முடியும்..?"
"அப்படி ஈஸியாச் சொல்லி விடாதே உத்ரா.. அஜந்தாவும் அவளோட குடும்பமும் ஆபத்தை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கிறவங்க.. அவங்க ஜெயிக்கனும்னா எந்த எல்லைக்கும் போவாங்க.. துணிஞ்சு எதை வேண்டும்னாலும் செய்வாங்க.."
"ஏன்னா.. இழக்கிறதுக்கு அவங்களிடம் எதுவுமே இருக்காது.. சரியா..?"
"சரியாச் சொன்னே உத்ரா.. அஜந்தாவோட அப்பா ஒரு ஊதாரி.. உங்க வீட்டு எங்க வீட்டு ஊதாரியில்ல.. உலகத்தையே வித்துச் செலவளிக்கிற அளவுக்கு ஊதாரி.."
"என்னடி இப்படிச் சொல்ற..?"
"ஒட்டு மொத்தக் கதையையும் கேட்டேன்னு வைய்யி.. நீ இதுக்கு மேலேயே சொல்வ.."
நந்தினி கதை சொல்ல வாகாக உத்ரா பக்கம் திரும்பி அமர்ந்து கதை சொல்ல ஆரம்பித்தாள்.. கண்களை அகல விரித்து படு ஆர்வமாக கதை கேட்ட உத்ராவின் முகத்தில் நவரசங்களும் வந்து சென்றன.. கதை முடிந்ததும் கன்னத்தில் கையை வைத்து..
"இப்படியாப்பட்ட அப்பனுக்கு மகளாப் பிறந்திட்டா இவ இந்த குதி குதிக்கிறா..?" என்று ஆற்றாற்றுப் போனாள் உத்ரா..
"அதனாலதான் அவளை டேனஜரஸ்ன்னு சொன்னேன் உத்ரா.. அங்கொன்னும் இங்கொன்னுமா மைனஸ் இருந்தாக் கூடப் பரவாயில்லை.. மைனஸ்களின் ஒட்டு மொத்தமா இவ குடும்பம் இருக்கு.. அப்பா உலகத்தையே வித்துச் செலவளிக்கிறவர்ன்னா.. இவளோட அண்ணன் பிரபஞ்சத்தையே ஸ்வாஹா பண்ண வழி இருக்கான்னு யோசிப்பான்.. அம்மா இவங்களோட தப்பையெல்லாம் இழுத்து மூடி மறைத்து அதுக்குத் துணையும் போய்க்கிட்டு இப்ப என்ன அதுக்குன்னு நிட்டாந்தரமாக் கேள்வி கேட்பாங்க.. இப்படியாப்பட்ட குடும்பத்தில பிறந்த ஒருத்திக்கு இத்தனை திமிரும் தெனாவெட்டும் இருக்குன்னா இவ எப்பேற்பட்ட டேன்ஜரஸ்ன்னு யோசித்துப் பாரு.."
"என்ன தேவைக்கு..? இவளைப் பத்தி யோசிச்சா எனக்கே இருக்கிற தைரியம் பறந்து போயிடும் போல இருக்கேடி.."
"இருக்கில்ல..? அதைத்தான் நானும் சொன்னேன்.. அஜந்தா அவளுடைய ஃபேமிலியின் மைனஸ் பாயிண்டுகளை நினைத்தே பார்க்க மாட்டா.. அது
அவ மனசை பலவீனப் படுத்திரும், இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸை உண்டு பண்ணிரும்ங்கிறதைத் தெள்ளத் தெளிவாப் புரிஞ்சு வைச்சிருக்கிற சாகசக்காரி இவ.. இதைவிட சாகசம் என்னன்னா.. மத்தவங்களையும் அந்த மைனஸ் பாயிண்டை நினைக்க விடாம அத்தனை மைனஸ் பாயிண்டுகளும் அவங்க மேலதான் இருக்கிறதைப் போல திசை திருப்பி விடுகிறதில படு கெட்டிக்காரி.."
"ஐய்யோடி.. அப்படியாடி இவ செய்வா..?"
"அதுக்கும் மேலேயும் செய்வா.. இவ செய்கிறதை யெல்லாம் நேரில் பார்த்துக்கிட்டு இருக்கிறவ நான்.. என்னை எப்படியெல்லாம் மாட்டி விட்டாத் தெரியுமா..?"
"யார்கிட்ட..?"
"ரவியோட பேரண்ட்ஸ் தங்கமானவங்க.. இவ பாச்சா அவங்களிடம் எடுபடாது.. ரம்யா இவகிட்ட பேச்சே வைச்சுக்க மாட்டாங்க.. தாத்தா பாட்டியைத்தான் தூண்டி விடுவா.."
"அவங்க இவ சொல்கிறதைக் கேட்டுக்குவாங்களா..?"
"அப்படியே கேட்டுக்குவாங்க.. மகள் மேல பாசம் அதிகம்ன்னு சொன்னேனில்ல... இவ மகள்வழி பேத்தியாச்சே.."
"அதுக்காக மகன் குடும்பத்தை சிரமப் படுத்து வாங்களா..?"
"அதில தப்பில்லன்னு அஜந்தா குடும்பம் அவங்களை பிரெயின் வாஷ் பண்ணி வைத்திருக்கே.. ரவியோட அம்மா அமைதியானவங்க.. அப்பா பெத்தவங்களுக்கு அடங்கிப் போகிறவர்.. இதை தங்களுக்குச் சாதகமா அஜந்தாவோட குடும்பம் யூஸ் பண்ணிக்கிச்சு.. தாத்தா தன்னோட பவரை விட்டுக் கொடுக்காம மகள் குடும்பத்தை காபந்து பண்றதிலேயே தன்னோட அத்தனை சொத்துக்களையும் அழிச்சுட்டு ரவியோட அப்பா பங்கில கை வைக்க வந்தாராம்.."
"அஜந்தாவோட அம்மாவுக்கும் பங்கை பிரித்துக் கொடுத்துட்டாதாச் சொன்னியேடி.."
"அதெல்லாம் அவங்களுக்கு எந்த மூலைக்கு..?"
"அடிப்பாவி..! இப்படியும் ஒரு குடும்பம் இருக்குமா..?"
"இருக்குதே.."
"ரவியப்பா பங்கையும் வித்துத் தின்னுட்டாங்களா..?"
"ஊஹீம்.. அங்கேதான் எண்ட்ரி கொடுக்கிறான் நம் ஹீரோ..!"
நந்தினியின் முகம் ஜொலித்தது.. காதலில் விழுந்து விட்ட காதலியின் முகம் காதலனைப் பற்றிப் பேசும் போது உலகத்தில் உள்ள அத்தனை வெளிச்சத்தையும் தன் முகத்தில் ஏந்தி ஜொலிப்பதற்கான தாத்பர்யம் என்னவாக இருக்கக் கூடும் என்று கண்டு சொன்னவர் எவருமிலர்..
"யாரைச் சொல்கிற..? ரவி சாரையா..?"
"ஹீரோன்னு சொன்னா அது ரவியாத்தான் இருக்கும்ன்னு உன் மரமண்டைக்குத் தெரிந்திருக்க வேணாமோ.."
"ரவி உனக்கு மட்டும்தான் ஹீரோன்னு உன்னோட மர மண்டைக்குத் தெரிந்திருக்க வேணாமோ.. என்னோட ஹீரோ ரூமில தூங்கிக்கிட்டு இருக்கார்.. நீ ரவியை நம்ம ஹீரோன்னு என்னையும் கூட்டுச் சேர்த்துச் சொன்னது வினித் காதில விழுந்திருக்கனும்.. உன் பிரண்ட்ஷிப்பை டோட்டலாக் கட் பண்ணிட்டு இப்பவே ஊருக்குக் கிளம்புடின்னு சொல்லியிருப்பார்.."
"போடி.."
"போகிறதுக்கு முன்னாலே உன் ஹீரோ எண்ட்ரி கொடுத்து ஃபைட் பண்ணின சாகச சீனையெல்லாம் கேட்டுட்டுப் போறேன்.. சொல்லு.. என்ன செய்தாரு..?"
"தற்காத்துத் தன் குடும்பத்தைக் காத்து..
    சொற்காத்து நின்று விட்டான்.."
"நீயெல்லாம் குறள் சொல்ல ஆரம்பிச்சா நாடு என்னத்துக்கு ஆகிறது.. ஏற்கனெவே அது ஒரு சீரா இருக்கு.."
"உனக்குப் பொறாமைடி.."
"எதைப் பார்த்து.. உன் குறள் சொல்லும் வித்தகத்தைப் பார்த்தா..? வேணாம் நந்தினி.. நான் ஏற்கனெவே அஜந்தா குடும்பக் கதையைக் கேட்டு பேய்தடிச்சிருக்கேன்.."
"ம்ஹீம்.. நீ நாளைக்கு மறுநாள் தப்பிச்சு ஊருக்கு ஓடிப் போயிருவ.. நானில்ல மாட்டிக்கிட்டு முழிக்கனும்.."
"அதில உனக்கு வருத்தமாடி..?"
உத்ராவின் குரல் ஆழ்ந்து ஒலித்தது.. நந்தினி நிமிர்ந்து தோழியைப் பார்த்தாள்.. திடமான பார்வையுடன் இல்லை எனும் விதமாக இடம் வலமாக தலையை அசைத்தாள்..
"நான் ரவியைக் காதலிக்கிறேண்டி.. எப்படி என் மனசுக்குள்ள காதல் நுழைந்ததுன்னு தெரியலை.. இப்ப ரவியில்லாத வாழ்க்கையைக் கற்பனை செய்துகூடப்
பார்க்க முடியலைடி உத்ரா.."
"நந்தினி.."
"அவனுக்காக எதையும் செய்வேன்.. உயிரையும் குடுப்பேன்.. அஜந்தாவும் அவளுடைய குடும்பமும் டேன்ஜரஸ்தான்.. அவங்களோட போராடனும்தான்.. அதுக்குப் பயந்துக்கிட்டு என் காதலை விட்டுக் கொடுக்கவே மாட்டேன்.."
"குட்..! இதுதான் என்னோட நந்தினி.."
"ரவி என்னை விட பெரிய பணக்காரன்.. ஸ்டார் இமேஜ் இருக்கிற கோடிஸ்வரன்ங்கிறதுக்காக நான்
இப்படிச் சொல்லலை உத்ரா.. ஹி இஸ் எ சூப்பர் மேன்..! எனக்கு அவன் சூப்பர் ஸ்டார்..! என்னோட சூப்பர் ஹீரோ.. அவன் எப்படியாப்பட்டவன்னு உனக்குச் சொல்லிப்
புரிய வைக்க முடியாது உத்ரா.. அவனுடன் இருந்த இந்த நாள்களில் ஒவ்வொரு செகண்டிலும் ஏதோ ஒரு காரணத்துக்காக அவனை பார்த்து நான் பிரமிச்சிருக்கேன்.. எல்லாவகையிலும் என்னை அவன் ஆச்சரியப் படுத்தினான்.. ஒன்னை மட்டும் உறுதியாச் சொல்வேன் உத்ரா.. அவனைப் போல ஒருவனை என் வாழ்க்கையில் நான் பார்த்ததில்லை.. மயக்கறான்டி.."
"இதப்பாருடா.. அவன், அவன்னு உருகற.."
"அவன்தான்.. அது என்ன அவர்.. குட்டிச் சுவர்..! மரியாதை கொடுக்கனுமா என்ன..?"
"என்ன தேவைக்கு..?"
தோழிகள் இருவரும் கலகலத்துச் சிரித்தார்கள்.. ரவிச்சந்திரன் எப்படியெல்லாம் தன் குடும்பச் சொத்துக்களைப் பாதுகாத்தான் என்பதை நந்தினி விவரித்தாள்.. தீவிரமான முகபாவனையுடன் அதைக் கேட்டுக் கொண்ட உத்ரா..
"ம்ப்ச்.. ரவிசாரை நிம்மதியா இருக்க விடாம இவங்க பாடாய் படுத்தறாங்களேடி.." என்று ரவிச்சந்திரனுக்காக பரிதாபப்பட்டாள்..
"அவன் அப்படி ஃபீல் பண்ண மாட்டான்டி.. ஜஸ்ட் லைக் தட்ன்னு சொடக்குப் போடற நேரத்துக்குள்ள இவங்க பண்ற சதி வேலைகளைத் துவம்சம் பண்ணிட்டுப் போய்க்கிட்டே இருப்பான்.."
"பெரிய பெருமை பீற்றல் களஞ்சியம்தான் போ.."
"இல்லையா பின்னே..? நான் யாரு..?"
"ஏய்ய்.. நீ என்னோட பிரண்ட நந்தினிதானேடி.. அவளோட குளோனிங்கா..?"
"தி கிரேட் ரவிச்சந்திரனோட லவ்வராக்கும்.."
"ஹப்பா.. காது ஜவ்வு கிழிஞ்சிருச்சு போ.. சுத்திச் சுத்தி அத்தனை மாடுலேசனிலயும் இந்தப் பெருமையைத்தான் பீற்றிக்கிட்டு இருக்கே.. கொஞ்சம் சவுண்டைக் குறைடி.. தாங்கலை.."
நந்தினியைச் செல்லமாக முதுகில் அடித்தாள்.. கேரளாவுக்கு வந்த பின்பு நந்தினி என்னவெல்லாம் வாங்கினாள் என்பதை உத்ராவின் முன்னால் கடை பரப்பிக் காட்டினாள்.. உத்ராவுக்காக வாங்கி வைத்திருந்த உடைகளையும் பொருள்களையும் கொடுத்தாள்..
"நீ வர்றப்ப கொடுத்து விடலாம்ன்னு வைத்திருந்தேண்டி.." என்றாள்..
தோழியின் அன்பில் நெகிழ்ந்து போனாள் உத்ரா..
"பைத்தியம்.." அன்புடன் கடிந்து கொண்டாள்..
"நான் ஷாப்பிங் போறப்ப வாங்கிக் குவிச்சதே ஏராளமா இருக்கு.. நீயும் வாங்கி வைக்கனுமா..?"
"அது அண்ணா வாங்கிக் கொடுத்தது.. இது உனக்காகன்னு பார்த்துப் பார்த்து நான் வாங்கினது.."
நந்தினியைக் கட்டிக் கொண்டாள் உத்ரா.. இரண்டு நாள்கள்தான் அதற்குப் பின்னால் உத்ரா ஊருக்குப் போய் விடுவாள் என்பதில் துயர் கொண்டாள் நந்தினி..
"நீ என்கூடவே இருந்தா நல்லாயிருக்கும்டி உத்ரா.." ஏக்கத்துடன் சொன்னாள்..
"என் வாழ்க்கைன்னு ஒன்னு இருக்கில்ல நந்தினி.. வினித் எங்கேயோ.. அங்கேதானே நானும் இருந்தாகனும்..? உனக்கு என்னடி.. ரவிசார் உன் கூடவே இருப்பார்.."
"ம்ம்ம்.." அரை மனதாக முணுமுணுத்த நந்தினி..
"உத்ரா" என்றாள்..
அவள் எதையோ சொல்லத் தயங்குவதை புரிந்து கொண்ட உத்ரா..
"என்னடி..?" என்று ஆதரவாகக் கேட்டாள்..
"அம்மா, அப்பா, நந்துக்குன்னு டிரஸ் பர்ச்சேஸ் பண்ணினேன்டி.. நந்துக்கு இந்த வாட்ச் சூப்பரா இருக்கும்.. பட்.. இதையெல்லாம் அவங்களிடம் எப்பக் கொடுப்பேன்.. எப்படிக் கொடுப்பேன்னு இருக்கு.."
"நந்தினி.."
உத்ராவின் கண்கள் கலங்கின.. மணமாகி சில நாள்கள்தான் ஆகின்றன.. அவளால் பிறந்த வீட்டை மறக்க முடியவில்லை.. அவர்களின் நினைவாகவே இருக்கிறது.. நினைத்தவுடன் திண்டிவனத்திற்கு போய் வரும் தொலைவில் சென்னையில்தான் அவள் இருக்கிறாள்.. அவளுக்கே இப்படி எனும்போது.. பிடிக்காத திருமணத்திலிருந்து தப்பிக்க ஓடி ஒளிந்திருக்கும் நந்தினிக்கு எப்படி இருக்கும்..?
"வீட்டு நினைப்பாவே இருக்குடி உத்ரா.. அப்பா மனசு மாறவே மாட்டாரா..?" நந்தினி அழ ஆரம்பித்தாள்..
"போதும் நந்தினி.. அழுதுகிட்டே இருக்கக் கூடாது.. நீ இப்படிக் கண்ணீரும் கம்பலையுமா இருந்தா நான் எப்படி நிம்மதியாக் கிளம்பி சென்னைக்குப் போவேன்..?" உத்ரா அதட்டினாள்..
"ஓகே.. ஓகே.." நந்தினி கண்களைத் துடைத்துக் கொண்டாள்..
"உனக்கு என்ன..? நீ வாங்கி வைத்திருக்கிறதை உன் வீட்டில் சேர்க்கனும்.. அவ்வளவுதானே..? உன்னைப் பற்றி விசாரிக்க உன் அப்பாம்மாவும், நந்துவும் எங்க வீட்டுக்கு வருகிறதா இருக்காங்க.. கல்யாணப் பெண்ணை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு இத்தனை நாளா பேசாம இருந்தாங்களாம்.. அம்மாதான் உன்னைத் தஞ்சாவூருக்குப் பஸ் ஏற்றி அனுப்பிட்டோம்ன்னு சாதிச்சுட்டாங்களே.. உங்க பெண் வீட்டுக்கு வராததுக்கு நாங்க எப்படி பொறுப்பாக முடியும்.. எங்க வீட்டில பத்திரமாத்தானே பார்த்துக் கிட்டோம்ன்னு சொல்லிட்டாங்க.. உன் வீட்டில இருந்து வந்து போகிறப்ப நான் வாங்கி வைத்திருந்ததா சொல்லி இதையெல்லாம் அவங்களுக்குக் கொடுத்து விடுகிறேன்.. போதுமா..? பட்.. இதைப் போட்டுப் பார்க்கிற மன நிம்மதியோடவா அவங்க இருக்காங்க..?" உத்ராவின் கேள்வியில் நந்தினி மறுபடியும் அழ ஆரம்பித்தாள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -185
எண்ணியிருந்தது ஈடேற -185
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-185.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-185.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy