எண்ணியிருந்தது ஈடேற -184

184 "என்ன சொன்ன.. ?" அஜந்தாவுக்கு நெஞ்சு வலியே வந்து விட்டது.. அவளையா நந்தினியின் தோழி ' எவ.. இவ.. ?' என்ற ரீத...


184


"என்ன சொன்ன..?"
அஜந்தாவுக்கு நெஞ்சு வலியே வந்து விட்டது.. அவளையா நந்தினியின் தோழி 'எவ.. இவ..?' என்ற ரீதியில் 'யார் இவ..?' என்று கேட்டாள்..
"யு.. யு.. யு..."
அந்த ஒற்றை எழுத்தைத் தாண்ட முடியாமல் திக்கித் திணறியவளை வெகு திருப்தியுடன் பார்த்தாள் நந்தினி..
'வேண்டும் இவளுக்கு.. தேவையில்லாம வாயைக் கொடுத்தா வாங்கிக் கட்டிக்கத்தான் வேணும்..'
"நான்.. நான்தான்.. நீயென்ன பெரிய இவளா..? யாரா இருந்தாலும் மரியாதை கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும்.. அது என்ன ஆப்டர் ஆல்ன்னு சொல்கிறது..?"
"ஓ.. உன் பிரண்டை ஆப்டர் ஆல்ன்னு சொன்னதில உனக்கு ரோசம் வந்திருச்சோ..?"
"பின்னே..? வராதா..?"
"எங்களிடம் ஜோலி பார்க்க வந்தவளை ஆப்டர் ஆல்ன்னு சொல்லாம வேற எப்படிச் சொல்கிறதாம்..?"
"அவ.. இவன்னு சொன்னா நடக்கிறதே வேற.."
"ஓ.. நீ மட்டும் அவ, இவன்னு சொல்லலாமோ..?"
"உன்கிட்ட வேற எப்படிப் பேசச் சொல்ற..? ஜோலி பார்க்க வந்தா ஆப்டர் ஆல்ன்னு சொல்லுவியா..? உன்னிடமா இவ ஜோலி பார்க்கிறா..?"
"எண்ட அத்தானிடம் ஜோலி பார்க்கிறாளாக்கும்.."
"அத்தானா..?" கேள்வியுடன் நந்தினியைப் பார்த்த உத்ரா..
"யாருடி இவ..?" என்று ஏற்கனெவே கேட்டு அஜந்தாவுக்கு ரத்தக் கொதிப்பை வர வைத்த கேள்வியை மீண்டும் கேட்டாள்..
"இவளா..?" நந்தினி சொன்னதையே திருப்பிச் சொன்ன அஜந்தாவின் முகம் பயங்கரமாகக் கோணியது..
'ஈ அழகு சுந்தரிய இப்ப யாராச்சும் பார்க்கனும்.. கேரளத்து சொப்பன சுந்தரி இவளான்னு பயந்து போய் பின்னங்கால் பிடறியில பட விழுந்தடிச்சு ஓடிப் போயிடுவாங்க..'
நந்தினி அஜந்தாவின் முக பாவத்தை ரசித்தாள்..
"ஆப்டர் ஆல் யு ஆர் எ செக்கரட்டரி.. ஞான் ஈ தரவாடோட தம்புராட்டி.. என்னிய இவன்னு விளிச்சு..?" அஜந்தாவுக்கு மூச்சிரைத்தது..
"மறுபடியும் ஆப்டர் ஆல்ன்னு என் பிரண்டைப் பார்த்துச் சொன்ன.. பல்லைக் கழட்டிருவேன்.. பார்த்துப் பேசு.. இவளை யாருன்னு நினைச்ச..?" அஜந்தாவை விட அதிகமாக கொதித்த உத்ரா நந்தினியைப் பார்த்து..
"என்னடி சொல்றா இவ..? தமிழ் நல்லாத்தானே வருது..? அப்புறமும் எதுக்காக மலையாளத்தில பேசி வைக்கிறா..?" என்று கேட்டாள்..
"அது அப்படித்தான்.. அம்மணி திடிர்ன்னு மலையாளத்தில சம்சாரிப்பாங்க.. திடிர்ன்னு செந்தமிழில பேசுவாங்க.."
"தெழுங்கை மட்டும் ஏண்டி மிச்சம் வைச்சிருக்கா..? அதிலயும் மாட்டாட வேண்டியதுதானே..?"
"கன்னடத்தை விட்டுட்டயே உத்ரா.."
"கன்னடக்காரங்களுக்கும் நமக்கும் ஏற்கனெவே காவேரி பிரச்னையில சண்டை நாறிக்கிட்டு இருக்குது.. புதுசா ஒன்னையும் இழுத்து விட்டுக்கனுமா..?"
"வேணவே வேணாம்.."
"இப்பச் சொல்லு.. இவ யாரு.."
"பாஸோட அத்தை மகள்.."
"அட..! அவருக்குப் போய் இப்படியொரு அத்தை மகாள..? பாவம்டி அவரு.. ஸோ சேட்.."
"ப்ம்ச்.. விதி..! என்னத்தைச் சொல்ல..?"
தோழிகள் இருவரும் ரவிச்சந்திரனுக்காக பரிதாபப் படுவதைப் போல அஜந்தாவைக் கலாய்த்ததில் அவளது முகம் இன்னும் அதிகமாக கோணியது..
"உங்களைச் சொல்லிக் குற்றமில்லைடி.. உங்களை இந்த வயநாட்டு அரண்மனைக்குள் வர விட்டிருக்கிறாரே.. என் அத்தான்.. அவரைச் சொல்லனும்.." நிஷ்டூரமாக முறைத்தாள் அஜந்தா..
"சொல்லிப் பாரேன்.." நந்தினி யோசனை சொன்னாள்..
"அந்தத் திமிர்தானேடி உனக்கு..? உன்னையெல்லாம் வைக்கிற இடத்தில வைத்திருக்கனும்.. வயநாட்டு அரண்மனையில கால் வைக்க விட்டா இப்படித்தான்.." அஜந்தா துச்சமாக அவர்களை வெறித்தாள்..
"ஏன்..? வயநாட்டு அரண்மனையில நந்தினி கால் வைத்ததில என்ன ஆகிப் போச்சு..?" உத்ரா சண்டைக்கு வந்தாள்..
"இந்த அரண்மனையில கால் வைக்கத் தகுதியிருக்கனும்.."
"இவ தகுதிக்கென்ன குறைச்சல்...? இது வேண்டும்ன்னா அரண்மனையா இருக்கலாம்.. பட்.. நந்தினி ஒன்றும் குடிசையில் குடியிருக்கிறவளில்லை.. பங்களாவில், பணக்காரக் குடும்பத்தில், கோடிஸ்வர தாய் தகப்பனுக்கு, மகளாக, பிறக்கும் போதே தங்க ஸ்பூனுடன் பிறந்து வளர்ந்தவள்.. இவங்கப்பா பெரிய ஜவுளிக்கடை முதலாளி.. தோப்பு, துரவு ஆள் படைன்னு இளவரசியாய் வாழ்கிறவ.. ஒரு இக்கட்டான சூழ்நிலையில உன் அத்தானிடம் வேலை பார்க்க வந்தா நீ இளக்காரமா பேசுவியா..?"
"இக்கட்டான சூழ்நிலையா..? அது என்ன இக்கட்டு..?"
"உன்னிடம் சொல்லனும்ங்கிற அவசியமில்லை.. உனக்கெல்லாம் இவ்வளவு சொல்லியதே போதும்.. வேலை மெனக்கெட்டு கதவைத் தட்டி வம்பு வளர்க்கறியே.. ஏன் நந்தினி.. இவளுக்கு வேலை வெட்டியே இல்லையா..?"
"சரியாச் சொன்ன உத்ரா.. மத்தவங்களிடம் வம்பிழுப்பது மட்டும்தான் இவளோட ஃபுல் டே ஜாப்.."
"அட..! இது வேறயா... விளங்கிரும்... இவளுக்குத்தான் பொழுது போகலை.. நமக்கு அப்படியா..? பொழுது பத்தலை.. நீ உள்ளே வாடி.. வெட்டியா இவகிட்டப் பேசிக்கிட்டு.. இருந்தா நம்ம நேரம்தான் வீணாகும்.. காலத்தைப் பார்த்துச் செலவளிக்கனும்.."
"நீ வேற.. இவங்க குடும்பம் பணத்தையே பார்த்துச் செலவளிக்காது.. இவங்கள்ளாம் டோட்டலாவே வேற கேட்டகிரிடி உத்ரா.. ஒரு மைண்ட் செட்டிலே இருக்க மாட்டாங்க.."
"இவ குடும்பமா..? சாரோட அத்தை மகள்ன்னு சொன்ன.. இவ மட்டும்தானே விருந்தாளியாய் வந்திருப்பா..?"
"விருந்தாளியா..? இவ குடும்பமே இங்கேதான் டேரா.. கேட்டா என் தாத்தா வீடும்ப்பா.."
"இது சாரோட வீடாச்சே.."
"ஆமாம் உத்ரா.. இவ அதைச் சொல்லவே மாட்டா.."
"இவளோட அம்மா, அப்பாவும் இங்கேதான் இருக்காங்களா..?"
"ம்ம்ம்.. கூடவே இவளோட அண்ணனும் இருக்கான்.. அவன் யாருன்னு நினைக்கிற.."
அஜந்தா என்ற ஒருத்தி அங்கே இருக்கிறாள் என்ற பிரக்ஞையே இல்லாதவர்களாய் தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பதைப் போல நந்தினியும், உத்ராவும் பேசிக் கொண்டிருந்தார்கள்.. அஜந்தாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.. பொதுவாய் இதுபோன்ற வேலைகளை அவள்தான் செய்வாள்.. அவந்திகாவை அருகில் வைத்துக் கொண்டு வீணாவையும், ரம்ய மாலினியையும் பற்றி அவர்களின் மனம் புண்படும்படி பேசுவாள்..
"அம்மே.. ஈ தரவாடில நிங்களோட அம்மாச்சி மகள்தான் வாழ வந்திருக்கனும்.. அம்மாவன் புத்தி பேதலிச்சதில எவர் எவரோ இங்கே வாழ வந்து.."  வீணாவைப் பார்த்துக் சொல்வாள்..
"அம்மே.. அபராஜிதன் அழகுக்கும் அறிவுக்கும் ஈ கேரள தேசத்தில வல்லிய சுந்தரிகள் எல்லாம் அவனை விவாகம் கழிக்க நான், நீன்னு போட்டி போடறாங்கள்லோ.. அவன்தான் பாவம் நம்ம அம்மாவன் மோள்ன்னு கருணை காட்டி ஈ அழுமூஞ்சி சுந்தரிய விவாகம் கழிக்கனும்னு விஜாரம் கொண்டு.. அபராஜிதனத் தவிர எவன் ஈ குரங்கு மூஞ்சியத் திருப்பி நோக்கும்..?" ரம்ய மாலினியின் காதுகளில் விழும்படி உரக்க கேள்வி கேட்பாள்..
அவள் செய்த அட்டூழியங்களைப் போல அவளுக்கே நிகழும் என்று அவள் சொப்பனத்திலும் விஜாரம் (நினைவு) கொண்டதில்லையே..
"அவன், இவன்னு பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன்.."
ரம்யமாலினியே அபராஜிதனை அவன், இவன் என்று முகத்திற்கு நேராகச் சொன்னதில்லை.. மறைவாக அவள் மட்டத்திலும் மட்டமாக பேசுவாள் என்பது நிச்சயம்தான் என்றாலும் அதைப்பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்பாள் அஜந்தா..
நேருக்கு நேர் பேச பயப்படுகிறார்கள் அல்லவா.. அது.. அந்த பயம்தான் நமக்கு வேண்டும் என்பாள்..
நந்தினிக்கு அந்த பயமற்றுப் போனதைத்தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை... அபராஜிதனைச் சந்தித்த முதல் நாளிலேயே அவனைப் பற்றி அருள்மொழிவர்மனிடம் போட்டுக் கொடுத்த புண்ணியவதிதான் நந்தினி.. அவளின் அந்த அசாத்திய மனோ தைரியத்தை அஜந்தா என்றுமே விரும்பியதில்லை.. வீணாவிடம் அந்த மனோ தைரியம் உண்டென்றாலும் அவள் சாத்வீகமானவள்... கணவன்மீது காதல் கொண்டவள்... அவளுக்காக குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் செயல்பாடுகளை சகித்துப் போகிறவள்.. யாழினியை இப்போதுதான் எதிர்த்துப் பேசுகிறாள்..
அதுவும்  நந்தினியின் வரவிற்குப் பின்னர்தான் என்பதில் யாழினிக்கும் 'அஜந்தா அண்ட் கோ'விற்கும் பெருத்த கோபம் உண்டு..
நந்தினி வீணாவைப் போல அமைதியானவள் இல்லை என்பதுதான் அஜந்தாவுக்குப் பெருத்த தலைவலியாக இருந்தது... அவள் நினைத்ததைப் பேசினாள்.. பிடித்ததைச் சாப்பிட்டாள்.. கட்டுக்கடங்காத அருவியைப் போன்ற குதூகலத்துடன் இருந்தாள்.. ஓமனா முதல் ரவிவர்மன் வரை வயநாட்டு அரண்மனையில் இருந்த அனைவரையும் தனது துறுதுறுப்பினாலும்.. சுட்டித்தனமான பேச்சினாலும் காந்தமென கவர்ந்திழுத்துக் கட்டியப் போட்டாள்.. அந்தக் கட்டில் அருள்மொழிவர்மன் அடங்கியிருப்பார்தான்.. யாழினி அதற்கு விடவில்லை..
"சும்மா இருக்க முடியலைன்னா ஆடு.. ஐ ஹேவ் நோ அப்ஜெக்சன்.. உனக்கு ஏதும் அப்ஜெக்சன் இருக்கா உத்ரா..?"
"நீயே நோ அப்ஜெக்சன் செர்டிபிகேட் கொடுத்துட்ட பின்னாலே நான் அப்ஜெக்ட் பண்ணவா போகிறேன்..?"
"இந்தா.. உத்ராவும் நோ அப்ஜெக்சன் செர்டிபி கேட்டைக் கொடுத்துட்டா.. நீ ஆடு அஜந்தா.. ஆடு பார்க்கலாம்.. ஆடு.."
இப்படி ஒரு கலாய்த்தலை எதிர் நோக்க வேண்டியிருக்கும் என்று தெரிந்திருந்தால் நந்தினியின் அறைப்பக்கமே அஜந்தா வந்திருக்க மாட்டாள்... தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டு முழித்தவள் இது ஜகா வாங்க வேண்டிய நேரம் என்ற முடிவிற்கு வந்தாள்..
முடிவெடுப்பது சுலபம்.. அதை செயல்படுத்துவது தான் சிரமம்.. வயநாட்டு அரண்மனைக்குள் அஜந்தா புறமுதுகு காட்டி ஓடினாள் என்ற செய்தி பரவினால் அஜந்தாவின் நிலைமை படு மோசமாகி விடும்.. வேலையாள்கள் தங்களுக்குள் இனிப்பையும் செய்தியையும் ஒருசேர பறிமாறி அதை வானலையில் பறக்க வட்டு வயநாட்டையும் தாண்டி கேரள தேசம் முழுவதும் பரப்பி விட்டுத்தான் வேறு வேலையையே பார்ப்பார்கள்..
அப்பேற்பட்ட இனிய வாய்ப்பை அவர்களுக்கக் கொடுப்பதா..?
'எப்படி நழுவுவது..?'
அஜந்தாவின் பார்வை அவளது கையிலிருந்த செல்போனின் மீது படிந்தது.. விழிகள் பளிச்சிட்டன.. தப்பிக்கும் மார்க்கம் அவளுக்குப் புலப்பட்டு விட்டது..
இதுபோன்ற சூழலில் இருந்து தப்பிக்க செல்போனை விடச் சிறந்த உபகரணம் வேறேதும் உண்டா..?
"சுஷ்மா.."
அஜந்தா செல்போனை காதுக்குக் கொடுத்து சுஷ்மாவுடன் பேசியபடி நகர்ந்து விட்டாள்..
"யாருடி அந்த சுஷ்மா..?" சிரிப்பை அடக்கியபடி கேட்டாள் உத்ரா..
"அது அவளுக்கே தெரியாது.. எனக்கு மட்டும் தெரிஞ்சிருமா..?" சிரிக்காமல் கேட்டாள் நந்தினி..
"ஹா.. ஹா.. செம காமெடி போ.."
உத்ராவின் சிரிப்பில் கலந்து கொள்ளாமல் சிந்தனையுடன் உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்தாள் நந்தினி..
"என்னடி.. மூட்-அவுட் ஆகிட்ட..?" பக்கத்தில் உட்கார்ந்த உத்ரா கேட்டாள்..
"இவ காமெடி பீஸில்லை உத்ரா.. டேன்ஜரஸ் பீஸ்.."
"ஸோ வாட்..? நீ பயப்படறியா..?"
நந்தனி பதில் சொல்லவில்லை.. கை விரல்களைக் கோர்த்துப் பிரித்தபடி சிந்தனையுடன் இருந்தாள்..
"இது போல போஸ் கொடுக்க எங்கேடி கத்துக்கிட்ட..? வயநாடு உனக்கு என்னவெல்லாம் டிரெயினிங் கொடுத்து வைச்சிருக்கு..?"
"பயம்ன்னு இல்லை உத்ரா.. பட்.. அஜந்தா ஆபத்தானவள்.. இந்த வீட்டில அத்தையும், ரம்யாவுமே அவளைக் கண்டா ஒதுங்கித்தான் போகிறாங்க.."
"அப்ப.. நீ ஒதுங்கிப் போகக் கூடாது நந்தினி.."
"என்னடி சொல்கிற..? அவங்களை விட நான் பெரிய ஆளா..?"
"நிச்சயமா.. அவங்க ரவிசாரோட அம்மாவும், தங்கையும்தான்.. நீ ரவிசாரோட பெட்டர் ஆஃப்.. அவரில் பாதி.. அவரோட அம்மா, தங்கையை பாதுகாக்கிற கடமை உனக்கும் இருக்கனுமில்ல..?"
'ஓ.. இதில் இப்படியொரு ஆங்கிள் இருக்கா..?'
"சாரோட அத்தை மகள்ன்னு சொல்கிற.. இவளோட ஒட்டு மொத்தக் குடும்பமே இங்கேதான் டேரா போட்டிருக்காங்கன்னு வேற சொல்கிற.. உனக்கு டிரபிள்ஸ்  அதிகமாத்தான் இருக்கும்.. நீதான் அதையெல்லாம் எதிர்த்து நின்று ஜெயித்துக் காட்டனும்.. இங்கேன்னு இல்லை நந்தினி.. எங்கேயும் வாழ்க்கை நமக்கு போராட்டக் களத்தைத்தான் கொடுக்கிறது.. போராட அஞ்சி நின்னா நமக்கு வேண்டியதை எடுத்துக்க முடியாது.. உனக்கு ரவி சார் வேண்டுமா.. வேண்டாமா..?"
இந்த ஒற்றைக் கேள்விதான் நந்தினியின் அனைத்து பயங்களையும் அடித்து விரட்டியது..
உனக்கு அது வேண்டுமா வேண்டாமா என்று தீர்மானி.. வேண்டுமென்றால் போராடு.. வேண்டா மென்றால் விலகிச் செல்..
வாழ்வில் இதுதான் தாரக மந்திரம்..!




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -184
எண்ணியிருந்தது ஈடேற -184
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-184.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-184.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy