எண்ணியிருந்தது ஈடேற -183

183 கோழிக்கோடுக்கு கொண்டு சென்றிருந்த பைகளைப் பிரித்துத் துணிகளை சுவர் அலமாரியில் அடுக்கிக் கொண்டிருந்தாள் நந்தினி.. காலிங்பெல் ஒலி...


183


கோழிக்கோடுக்கு கொண்டு சென்றிருந்த பைகளைப் பிரித்துத் துணிகளை சுவர் அலமாரியில் அடுக்கிக் கொண்டிருந்தாள் நந்தினி.. காலிங்பெல் ஒலித்தது.. கதவைத் திறந்தாள்.. உத்ரா நின்றிருந்தாள்..
"ஹேய்.. வாடி.. வா.."
உத்ராவின் கை பற்றி உள்ளே இழுத்துக் கொண்ட நந்தினி கதவை மூடித் தாழிட்டாள்..
"ஏண்டி..?" புரியாமல் கேட்டாள் உத்ரா..
"டிஸ்டர்ப் இல்லாமப் பேசலாமே.." நந்தினி துணிகளை அடுக்குவதைத் தொடர்ந்தாள்..
உத்ரா நந்தினியின் அறையைச் சுற்றிப் பார்த்து விட்டு..
"யாழ் ஹோட்டல் ரூமைத் தூக்கிச் சாப்பிடுதில்ல.? எங்களுக்கு கொடுத்திருக்கிற ரூமும் இப்படித்தான் இருக்கு.. ஹப்பா.. கண்ணைக் கட்டுதுடி நந்தினி.. கனவு போல இருக்கு.. ரவி சார் கோடிஸ்வரர்ன்னு தெரியும்.. இவ்வளவு பெரிய கோடிஸ்வரர்ன்னு இப்பத்தான் தெரியும்.." என்று விழி விரித்தாள்..
"பர்ஸ்ட் டைம் பார்க்கிறப்ப எனக்கும் இப்படித்தான் இருந்தது.."
துணிகளை அடுக்கி முடித்து விட்டு சோபாவில் உட்கார்ந்தபடி சொன்னாள் நந்தினி.. அவளிடம் தனித்துப் பேச உத்ரா அவளைத் தேடி வந்திருப்பது அவருக்கு ஆறுதலைத் தந்தது..
"பணமிருந்தா உலகத்தையே விலைக்கு வாங்கி விடலாம்ங்கிறது உண்மைதான் போல.." உத்ரா நந்தினியின் பக்கத்தில் உட்கார்ந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டாள்..
தோழியின் பரிவில் நந்தினிக்கு கண்கலங்கி விட்டது.. இந்த பதினைந்து நாள்களும் இருவரும் பக்கம் பக்கமாகத்தான் இருந்தார்கள்.. ஆனால் வெகு தொலைவில் விலகி இருப்பதைப் போலல்லவா இருந்தது.. இந்தத் தனிமை அந்த நாள்களில் கிடைக்கவில்லை..
"நாளை மறுநாள் நான் சென்னைக்குக் கிளம்பனும் நந்தினி.." மெல்லிய குரலில் சொன்னாள் உத்ரா..
நந்தினியைப் பிரிவுத் துயர் வாட்டியது.. தொண்டையில் எதுவோ அடைப்பதைப் போல இருந்தது.. உத்ராவுடன் தானும் கிளம்பிப் போய்விடக் கூடாதா என்ற ஏக்கம் அவள் மனதைப் பிழிந்தது..
"அப்பா மனசு மாறவே மாறாதாடி..?" என்று அழுதுவிட்டாள்..
"ஊஹீம்.. அழக்கூடாது.. தைரியமா இருக்கனும்.." தோழியின் கண்ணீரைத் துடைத்து விட்ட உத்ரா ஆதரவாக அவளை அணைத்துக் கொண்டாள்.. அடக்கி வைத்திருந்த துக்கம் பீறிட்டு எழ நந்தினி விம்மியழுதாள்.. அவளது கேவல் ஒலி அடங்கும் வரை அவளைத் தட்டிக் கொடுத்து அமைதிப் படுத்திய உத்ரா அவள் அழுது முடித்ததும்..
"இப்படியே காலம் போயிராது நந்தினி.. உன் அப்பா மனசு கட்டாயம் மாறும்.. உன்னைத் தேடி வயநாட்டுக்கே வருவார்.. பாரேன்.." என்று உற்சாகப் படுத்தினாள்..
"வருகிறவர் அந்த பெல்ட் மன்னனைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்ங்கிற மிரட்டலோடு வந்து விட்டால் நான் என்னடி செய்வேன்..?" நந்தினி பயந்தாள்..
"சீச்சீ.. அப்படியெல்லாம் சொல்ல மாட்டார்.. அப்படியே சொன்னாலும் வேறு ஏதாவது மாப்பிள்ளையைத்தான் கை காட்டுவார்.. பெல்ட் மன்னனை கை காட்ட மாட்டார்.." தோழிக்கு தேறுதல் கூறிய உத்ரா..
"நீ சொல்லிச் சொல்லி.. எனக்கும் பெல்ட் மன்னன்னே வாயில வருது பாரேன்.." என்று நாக்கைக் கடித்துக் கொண்டாள்..
"உத்ரா.. அப்பா வேற எந்த மாப்பிள்ளையையும் கை காட்டி விடக் கூடாது.." நந்தினி தடுமாறினாள்..
"ஏண்டி..? உனக்குப் பெல்ட் மன்னன் மேல்தானே பயம்..?"
"அன்னைக்கு அது மட்டும்தான் பிராப்ளம் உத்ரா.."
"இன்னைக்கு என்னவாம்..?"
"அது வந்து.. வந்து.. வந்து.."
"அதான் வயநாட்டுக்கு வந்திட்டயே.. என்னதாண்டி உன் பிரச்னை..? வாயைத் திறந்து சொல்லேண்டி.."
"நான்.. நான்.."
"நீயாடி இது..?"
உத்ரா ஆச்சரியமாகக் கேட்டாள்.. அவளறிந்த நந்தினிக்கு வாயைத் திறந்தால் வார்த்தைகள் கொட்டும்.. தங்கு தடையில்லாமல் சரளமாகப் பேசுவாள்.. எதற்காகவும் தடுமாற மாட்டாள்..
"மனசைத் திறந்து பேசுடி.. கோழிக்கோடில ஊரைச் சுத்திக்கிட்டே இருந்தோம்.. ஓரிடத்தில நிலைச்சு நிற்கல.. வினித் ஹனிமூனுக்கு வேற பிளேஸ் போகனும்னு பிளான் போட்டிருந்தார்.. நான்தான் பிடிவாதமாக வயநாட்டுக்கு வந்தே ஆகனும்னு இழுத்துக்கிட்டு வந்துட்டேன்.. லைபில ஒரு டைம்.. ஹனிமூன் டைம் அவருக்கான லைபை அவருக்குக் கொடுக்கனுமில்லையா..? வாழ்க்கை பூராவும் நினைத்துப் பார்க்கும் நாள்கள் இல்லையா இந்த ஹனிமூன் டேஸ்..? அதனாலதான் அவரை விட்டு நகராம கூடவே இருந்தேன் நந்தினி.. உனக்கு இது இப்பப் புரியாது.."
'எனக்கா புரியாது..?'
ரவிச்சந்திரனின் நினைவில் கன்னம் சிவந்தாள் நந்தினி.. அவனும் இப்படித்தானே.. அவளுடன் அட்டை போல ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்று அடம் பிடிப்பவன்தானே..
"இன்னைக்கு அலுப்புத் தீர ரெஸ்ட் எடுக்கனும்னு சொல்லியிருக்கிறார் நந்தினி... இப்பக் கூட குளிக்கப் போகாம பெட்டில விழுந்து தூங்க ஆரம்பிச்சிட்டார்... குட்டித் தூக்கம் போட்ட பின்னாடிதான் குளியலாம்.. ஸோ.. இன்னைக்கும் நாளைக்கும் நான் உன் கூடத்தான் இருப்பேன்.. வேண்டிய மட்டும் பேசிக்கலாம்.. ஓகே..?"
"ஓகே.."
மனம் விட்டுச் சிரித்தாள் நந்தினி.. உத்ராவுடன் இரண்டு நாள்கள் என்பதில் அவளது மனம் நிறைந்து விட்டிருந்தது.. ரவிச்சந்திரன் அவளுடன் இருந்தாலும் அவள் மனதில் ஓர் மூலையில் தனிமையின் நிழல் படிந்திருந்தது.. உத்ராவின் அருகாமை அதை விரட்டி விடக் கூடும்..
"இப்பச் சொல்லு பார்க்கலாம்.."
"எதை..?"
"உன் மனதில் ஒளித்து வைத்திருக்கும் மர்மத்தை.."
நந்தினியின் ஓர நெற்றியில் ஒற்றை விரலால் தட்டிக் காண்பித்தாள் உத்ரா.. உதட்டைக் கடித்த நந்தினி..
"எதை மறைத்து வைத்திருக்கேனாம்..?" என்றாள்..
அவள் விழிகளில் கள்ளத்தனம் மின்னியது..
"கள்ளி.." என்றாள் உத்ரா..
"உத்ரா.."
"ம்ம்ம்.."
"நீ சொன்னது நடந்திருச்சுடி.."
முகம் சிவந்தாள் நந்தினி.. தோழியின் முகச் சிகப்பை ரசித்தபடி..
"எதைச் சொல்கிற..?" என்று அறியாதவளைப் போலக் கேட்டாள் உத்ரா..
"நான்.."
"நீ..?"
"ரவியை.."
"யு மின்.. ரவிசார்..?"
"யெஸ்.."
"அவர் உன் பாஸ்.."
"அது அப்ப.."
"இப்ப..?"
"ஐ திங்க் ஐ லவ் ஹிம்டி.."
"ஏய்ய்.. திங்க் பண்றியா.. இல்லை லவ் பண்றியா..? தெளிவாச் சொல்லு.. ரெண்டு நாளா ரெண்டு பேரும் கம் போட்டு அப்பிக்கிட்டப்பவே நினைச்சேண்டி.. ஹனிமூன் கப்புள் நாங்களா.. இல்லை நீங்களான்னு டவுட்டா இருந்துச்சு.. கடைசியில் பூனைக்குட்டி வெளியில வந்திருச்சா..?"
"போடி.."
நந்தினி வெட்கத்துடன் உத்ராவின் கையைக் கிள்ளிக் கொண்டிருந்த போது காலிங் பெல் ஒலித்தது..
"ஓமனாவா இருக்கும்.."
நந்தினி எழுந்து போய் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள்.. அங்கே உதாசீனப் பார்வையுடன் நின்றிருந்தாள் அஜந்தா..
'இவளா..?'
நந்தினி தன்னிச்சையாக உத்ராவைப் பார்த்து வைக்க உத்ராவின் புருவங்கள் முடிச்சிட்டன..
'யாரைப் பார்த்து டென்சன் ஆகிறா..?'
ரம்யமாலினியும் வீணாவும் பெருந்தன்மையே உருவானவர்கள் மென்மை குணம் கொண்டவர்கள்.. அவர்களைக் கண்டு நந்தினி இப்படி விழிக்க மாட்டாள்.. ஓமனாக்குட்டி நந்தினியின் பிரியத்துக்குரிய வேலையாள்.. அவனைக் கண்டால் வம்பிழுப்பாள்.. வம்பைக் கண்டதைப் போல முகம் சுளிக்க மாட்டாள்..
'வேறு யாராக இருக்கும்..?'
உத்ரா எழுந்து கொள்ளப் போனாள்.. நீ இங்கே வர வேண்டாம் என்று அவசரமாக சைகை செய்தாள் நந்தினி.. உத்ராவின் சந்தேகம் அதிகரித்தது..
"உனக்கு என்ன வேண்டும்..?"
உத்ரா அறைக்குள் இருக்கும் நினைவில் பல்லைக் கடித்தபடி கேட்டாள் நந்தினி..
"யாரிடம் என்ன கேள்வியைக் கேட்கிறோம்ன்னு யோசித்துக் கேட்க மாட்டியா..? எனக்கு வேண்டியதைக் கொடுக்கிற அளவுக்கு நீ பெரிய ஆளா..? ஆப்டர் ஆல்.. ஒரு பெர்சனல் செக்கரட்டரி..! வயநாட்டு அரண்மனையின் வாரிசிடம் என்ன வேண்டும்ன்னு கேட்கறியே.. என்ன தைரியம்..!"
அஜந்தா எது நடக்க வேண்டும் என்று எதிர் பார்த்தாளோ அது நன்றாகவே நடந்தது.. நந்தினி எது நடக்கக் கூடாது என்று பயந்தாளோ அதுவும் மோசமாகவே நடந்து விட்டது.. அஜந்தா பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அட்சர சுத்தமாக உத்ராவின் காதுகளில் விழுந்து விட்டன.. அவள் வேகத்துடன் எழுந்து அறைவாசலுக்கு வந்து விட்டாள்..
"உத்ரா.. நீ போ.." நந்தினி அவளை அஜந்தாவின் கண் பார்வையிலிருந்து அகற்ற முயன்றாள்..
இரண்டு நாள்கள்.. இரண்டே நாள்கள் அஜந்தாவின் பார்வை படாமல் உத்ராவைக் காப்பாற்றி ஊருக்கு அனுப்பி வைத்து விட்டால் போதும்.. அதன் பின்னால் நந்தினியுடன் அவள் மோதுவதைப் பற்றி யாதொரு கவலையும் இல்லை.. வந்து பார் வட்டப் பாறைக்கு என்று நந்தினி இரண்டில் ஒன்றைப் பார்த்து விடுவாள்..
"யாரை விரட்டற..?" உத்ராவைப் பார்த்து விட்டாள் அஜந்தா..
"ஓ.." என்று உதட்டைக் குவித்தவள்..
"இதுதான் உன் பிரண்டா..? நீயே இங்கே தேவையில்லாம ஒண்டிக்கிட்டு இருக்கிற.. இதில் உன்னைப் பார்க்க ஒரு விருந்தாளி உனக்கே இது
ஓவர்ன்னு தோணலை..?" என்று ஏளனமாக கேட்டாள்..
"தோணலை.." பல்லைக் கடித்தாள் நந்தினி..
முழுக்க நனைந்தாகி விட்டது.. இனி முக்காடு தேவையில்லை.. உத்ராவின் முன்னிலையில் அஜந்தாவுடன் மோதிப் பார்த்து விட வேண்டியதுதான்..
"ஆப்டர் ஆல்ன்னு உன்னைப் பார்த்துக் சொல்கிறா.. யார் இவ நந்தினி..?" உத்ரா கோபமாக கேட்டாள்..
அவளுக்கு அஜந்தாவைப் பற்றித் தெரியாது.. திருமணப் பெண்ணாக இருந்ததினால் அவளால் நந்தினியுடன் அடிக்கடி பேச முடிந்ததில்லை.. கிடைக்கும் ஓரிரண்டு நிமிடங்கள் நலம் விசாரித்தலிலேயே கழிந்து விட்டன.. நந்தினி எங்கேயிருக்கிறாள் என்று மட்டும்தான் உத்ராவுக்குத் தெரியும்.. அங்கே யார், யார் இருக்கிறார்கள் என்ற விவரமெல்லாம் தெரியவே தெரியாது.. ரவிச்சந்திரன் சந்தேகங்களக்கு அப்பாற்பட்டவன்.. வாக்குக் கொடுத்து விட்டால் மறுக்காமல் அதை நிறைவேற்றுபவன்.. நந்தினியைப் பாதுகாக்கும் பொறுப்பை அவன் ஏற்றுக் கொண்டிருக்கிறான்.. கவலை வேண்டாம் என்று வினித் சொல்லியிருந்தான்.. அதற்கு மேல் நந்தினியைப் பற்றிக் கவலைப்பட்டால் அது ரவிச்சந்திரனைச் சந்தேகிப்பதாக ஆகி விடாது.. வினித்தை சந்தேகிப்பதாக.. அவன் சொல்லை உத்ரா நம்பாததாக ஆகி விடும்.. எனவே உத்ரா நந்தினியைப் பற்றிய தன் கவலையை வெளிப் படுத்தாமல் மௌனமாக இருந்தாள்.. வெளித் தோற்றத்துக்கு அவள் கவலையில்லாமல் இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டாள்.. மனதெல்லாம் நந்தினியைப் பற்றிய கவலையே மண்டியிருந்தது.. அவள் எப்படி இருக்கிறாள்..? ரவிச்சந்திரன் எப்படிப்பட்டவன்..? வினித் சொன்னதைப் போல அவன் வாக்குத் தவறாதவனா..? சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவனா..? அவனுக்கும் நந்தினிக்கும் இடையில் என்ன உறவுமுறை நிலவுகிறது..? அவன் நந்தினியின் காவலனா.. இல்லை காதலனா..?
இத்தனை விவரங்களையும் அறிந்து கொள்ள உத்ராவுக்கு இப்போதுதான் நேரம் கிடைத்திருக்கிறது.. அவள் சொன்ன வார்த்தைக்குக் கட்டுப்பட்டு முன்பின் தெரியாத மலைதேசத்துக்கு நந்தினி வந்திருக்கிறாள்.. அவளின் பாதுகாப்பை உறுதிப் படுத்திக் கொள்ளாமல் உத்ரா வயநாட்டை விட்டு நகரவே மாட்டாள்.. இதை வினித்தும் ஆட்சேபிக்க மாட்டான்..
இந்த பதினைந்து நாள்களில் அவள் அறிந்தவரை ரவிச்சந்திரன் நல்லவன்தான்.. வினித் சொன்ன வார்த்தைகள் அட்சர சுத்தமாக அவனுக்குப் பொருந்தியதுதான்.. இருந்தாலும் நந்தினியின் வாய்மொழியில் அவள் அதை அறிந்து கொள்ள வேண்டியிருந்தது..
நந்தினி பணக்காரியாக இருக்கலாம்.. ரவிச்சந்திரன் அவளால் நினைத்துப் பார்க்க முடியாத உயரத்தில் இருக்கும் பணக்காரன்.. திரையுலக சூப்பர் ஸ்டார்களை மிஞ்சிய புகழையுடையவன்.. அவன் நின்றாலும், நடந்தாலும் அது ஊடகங்களில் செய்தியாக வரும்..
அப்பேற்பட்டவன் நந்தினியை உண்மையாகவே காதலிக்கிறானா..? அவனுடைய காதலை அவனுடைய குடும்பத்தார் ஏற்றுக் கொள்வார்களா..? அவன்
ராஜ வம்சத்தைச் சேர்ந்தவன்.. நந்தினியை அவன் மணப்பானா..? அவனுடைய பெற்றோர் பெருந்தன்மையான தயாள குணம் படைத்தவர்களாக இருக்கலாம்... வீட்டிற்கு வரும் விருந்தாளிக்கு வைர அட்டிகையைப் பரிசளிப்பவர்களாக இருக்கலாம்.. இவையெல்லாம்
ராஜ பரம்பரைக்கே உரிய குணாதிசியங்கள்.. இதை மட்டும் வைத்து அவர்கள் நந்தினியை மருமகளாக ஏற்றுக் கொள்பார்கள் என்ற முடிவுக்கு வர முடியாதே..
இத்தனை விவரங்களை இரண்டேநாள்களில் பேசி முடிக்க வேண்டிய நிலையில் உத்ரா இல்லை.. கிடப்பதெல்லாம் கிடக்கட்டும்.. கிழவியைத் தூக்கி மனையில் வை என்ற அஜந்தா வம்பிழுக்க வந்து விட்டாள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -183
எண்ணியிருந்தது ஈடேற -183
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-183.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-183.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy